கவிதை!
சிறகடித்துப் பறக்கும்தானா?!
என்!
கவிதை ஏடொன்று!
காணாமல் போனது.!
தேடாத இடமெல்லாம்!
தேடிமனம் ஓய்ந்தபோது!
அது!
தேடிய இடத்திற்கே வந்தது.!
கவிதை!
சிறகடித்துப்பறக்கும்தானா?!
பூக்கள்!
பறந்துபின் கிளைக்கே வர!
கிளிகளில்லை!
பாடிய என் கவிதைகளை!
படித்துவிட்டு வைத்தது யார்?!
என்!
கவிதைகளை கிளிகளென்று!
கனவுகாண வைத்தது யார்?!
மறைத்துத்தான் வைத்திருந்தேன்!
கவிதை என்பதால்!
மண்ணுக்கே பொதுவானதா!
மற்றவர்கை சேர்ந்ததா?!
எதற்கெடுத்தார் எதைப்படித்தார்?!
இந்த!
கவிதையின் அருகில்!
ஏதோ எழுதி!
அதை!
அடித்துவைத்தது யார்?!
இலைமறை காயாக!
எழுதப்பட்டதென்ன?!
இப்படி!
எழுதியடிப்பதும் இனிய கவிதையா?!
இலை காற்றிலசைந்தால்!
காய் கண்ணுக்குத் தெரியும்.!
காயாக எழுதி!
இலையாக அடித்தது யார்?!
வார்த்தையில்!
வைக்கமறந்த!
புள்ளியை வைத்து,!
பொருளுக்கு!
செல்லாத சொல்லை!
செல்லும்படி செய்தது யார்?!
இப்படி!
புள்ளிவைத்துக் கவிதையில்!
புதுக்கோலம்!
போட்டதுதான் யார்?!
புள்ளியை!
பொட்டுப்போல் வைத்ததில்!
கவிதை!
பொன்முகம் பூத்து!
புன்னகை புரிந்தது.!
மறுமுறை பார்க்க!
நிலவுபோலிருந்ததில்!
என் கவிதை!
வானத்தில் எழுதப்பட்டதாய்!
வரம் பெற்றது.!
யாரென்று அறிந்துக்கொண்டேன்!
அரங்கேற்றம்!
என் கவிதைக்கு மட்டுமல்ல!
உன் மனதுக்கும் தான்.!
நீரில்!
அலைவரிகளாய்!
காற்றோடு கவிதை எழுத!
உன்!
கைகளுக்கும் உரிமை உண்டு.!
நினைத்து நினைத்து!
எழுதி எழுதி!
மனசுக்குள்ளே வைத்திருந்தாலும்!
காதலைப்போல!
கவிதையையும் யாராலும்!
கட்டிப்போட முடியாது.!
கவிதை!
சிறகடித்துப்பறக்கும்தான்
பட்டுக்கோட்டை தமிழ்மதி