பொருளற்ற சில - மதியழகன் சுப்பையா

Photo by Tengyart on Unsplash

மதியழகன் சுப்பையா.. !
மும்பை. !
ஒன்று !
இது முட்டாள்களின் உலகம் !
முட்டாள்களை பின்பற்ற !
அற முட்டாள்கள் உண்டு . !
முட்டாள் அல்லாதவனின் !
பேச்சும் செய்கையும் !
மூடத்தனம் என்கிறார்கள் !
முட்டாளும் அறமுட்டாளும். !
அறமுட்டாள்களால் !
தேர்ந்தெடுக்கப்பட்ட !
முட்டாள்கள் தான் ஆளுகின்றனர். !
முட்டாள்த்தனமாய் முடிவெடுத்து !
அறமுட்டாளை இன்னும் !
முட்டாளாக்கி விடுகின்றனர் !
அறமுட்டாள்கள் !
முட்டாள்களை !
அறிவாளிகள் என !
நம்புகின்றனர் !
முட்டாள்களோ எல்லோரையும் !
அறமுட்டாள் எனவே !
நம்புகின்றனர். !
முட்டாளை முட்டாளென !
அறமுட்டாளும் !
அறமுட்டாளை அறமுட்டாளென !
முட்டாளும், கண்டு புடித்து !
விடுகின்றனரே !
இதில் யார் முட்டாள்?. !
!
இரண்டு !
!
ஆண்களின் கம்பீரத்தை !
வெளிப்படுத்தும் !
பெண்களுக்கு அழகு சேர்க்கலாம் !
அல்லது !
என்னது எப்பப் பார்த்தாலும் !
என்று அவப்பெயராகலாம். !
குழந்தைகள் பெரும்பாலும் !
உதைக்கப் படு வார்கள் !
பொது இடத்தில் !
கௌரவம் அல்லது கவர்ச்சி !
கடன் வாங்கும் போதும் !
திருமணத்தின் போதும் கட்டாயம். !
பசுக்களுக்கும் பட்சிகளுக்கும் !
எப்படியோ தெரியவில்லை. !
ஒரே பால் என்றால் !
ஒன்றுமில்லை. !
எதிர்பாலர் என்றால் !
இடைஞ்சல்தான். !
ஆயுதமாய் அதையே பொளப்பாய் பலரும் !
தெரியமலேயே சிலரும் !
வகைவகையாவும் !
இளிக்கின்றவர்கள் !
இருக்கின்றார்கள். !
மூன்று !
அந்த கருத்துப்போன !
கழுத்து மணி !
அது மிரண்டபோது அலறி !
நடந்தபோது இசைத்து !
இருந்த போதும் !
இடையிடையே இயங்கி !
உயிராய் இருந்தாய் !
அது இல்லை !
நீ இருக்கிறாய் !
அது கறியாகிப் போனது !
நீ கருப்பாகி போனாய் !
அதன் உயிர் பிரிந்தது !
உன் உயர்வான ஓசையும்தான் !
உயிரோடு சேரும் போது !
ஜடமும் ஜீவன் பெறுகிறது !
மரிக்கிறது.. !
மீண்டும் !
உயிர் பெறலாம் !
இன்னொரு உயிர் வந்தால். !
நான்கு !
!
ஏதோ ஒரு காரணத்திற்காக !
காரணமே இல்லாமலும் !
ஆனால் !
காண்கின்ற ஒவ்வொருவரும் !
ஒரு காரணம் சொல்லிவிட்டு !
சரியான காரணம் எதுவென கேட்பர் !
காரணம் இதுவென சொன்னால் !
இருக்காது !
இப்படித்தான் இருக்குமென மறுப்பர் !
காரணத்தை வைத்துக் காரியம் !
செய்ய வேண்டியதில்லை !
செய்கின்ற காரியத்திற்கெல்லாம் !
காரணமும் அவசியமில்லை
மதியழகன் சுப்பையா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.