மழையெல்லோரெம்பாவாய்
தேவஅபிரா
இங்கு பொழிகிறது மழை !
அங்கென் மண்ணிலும் பெய்யுமோ? !
கையேந்தா மனிதரின் கனவுகள் !
உலர்ந்த காலத்தின் மீதும் பெய்யுமோ? !
மழையின்றி நிமிராவெப்பயி£¤லும் பெய்யுமோ? !
வேரறுந்து விலகிய மனிதரின் விளைநிலம் !
சுவடிழந்து அழுகிறது. !
தேரசைந்த திருக்கோவில் கனவுகளை !
பாழடைந்த கோபுரம் பாடும் பாடலை !
பாடும் கிழவனின் கைத்தடியும் !
வழுவி நனையுமோ? !
ஊர் முடிந்த வெளியில் !
பொன்னிற மாலையில் !
மஞ்சள் குளிக்கும் !
என் தனியொரு வீடும் வேம்பும் நனையுமோ? !
ஏக்கம் மீதுற விண்ணின் துளிகள் !
பின்னிப் பெருமழையெனப் பொழிய !
என் பெண்ணின் விழிகளை மருவி !
இதழ்களைத் தழுவும் !
கனவில் இலயிக்கும் !
சாளரக் கரையின் சயனத்துடலில் !
படுமோ தூவானம்? !
மூசிப் பெய்தும் !
முழுநிலமும் கரையவோடியும் !
பின்னும் பெயரின்றி !
ஆழக்கடலில் கலந்து அழியும் மழையே !
தேடிப் பெய் என் தேசத்தை. !
ஏங்கித் தளர்ந்து இனிப்புகலே இல்லை !
எனத்தளம்பும் மனிதரை !
நெடுமரமடியின் நனையாக் குடிலில் இருத்திப் பின் பெய். !
இம்மழை மண்ணில் பெய்தது !
மரத்தில் பெய்தது !
மனதிலும் பெய்தது !
என்றுனக்கு அழியாப்புகழ் தருவேன். !
கார்த்திகை - 1996 !
தேவஅபிரா puvanendran@home.nl !
***** !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன