அலைபாயும் மனக்குதிரையை!
அடக்காமல் அதன்மேல் ஏறி!
அலைந்து திரிந்து கண்ணில்பட்டதெல்லாம் நுகர்ந்து!
அதீத இன்பம் கண்டு!
ஆயுள் முழுதும் சுதந்திரமாய்!
ஆனந்த உலா வர!
ஆவல் கொண்டு நிதம்!
ஆர்பரிக்கும் ஆசைதனை தட்டிவிட்டு!
இன்னல் எதிர் நோக்காது!
இன்பம் துய்ப்பதை நோக்காக்கி வன்ம!
இருள்தனை பெருக்கி!
இயன்றவரை ஆசை தீர்க்க காம!
ஈர்ப்பாகி மனிதம் மறந்த!
ஈனத்தனம் புரிந்திட இருபாலுக்கும்!
ஈங்கில்லை வேலையென புவி!
ஈர்ப்பு விசையில் பாதாளத்தில் வீழ்ந்து!
உறங்கிட நாள் குறிக்கும்!
உன்னத கால(ன்) தேவன்!
உடலோடு மனிதம் செத்த ஈனனாய்!
உயிரை பறித்து உள்வாங்கு தலோடு!
ஊழ்வினை பயனாய்!
ஊறும் ஏழ்பிறவிக்கும் தலைமுறைக்கும்!
ஊக்கமிலா மானிடனாய் உன்னத சந்ததியும்!
ஊதாரியாய் இகழும் இழி பிறவி சாபம்!
ஊட்டிடுவான்...மனசாட்சி நீதி தேவன்!
எண்ணம் உணர்ந்து அடக்கத்தில்!
எளிமை அணிந்து அதீத அறிவில்!
எட்டு திக்கும் விரிந்து பறந்தாலும்!
எட்டித் தாவும் ஆசைக்குதிரையை அடக்கி!
ஏற்றமிகு ஒழுக்கக்குதிரைமேல் பயணிக்க!
ஏற்றுக்கொள்ளும் இருபால் மனிதர்!
ஐயமின்றி ஈட்டுவர் வெற்றிக்கனி