ஒரு நாளேனும்.. கோரிக்கை..தப்பித்தல்
ப.மதியழகன்
ஒரு நாளேனும்..கோரிக்கை.. தப்பித்தல் எளிதல்ல !
01.!
ஒரு நாளேனும் !
----------------------!
இன்னொருவரின் வாழ்க்கையை!
நான் வாழ்ந்தால் என்ன!
அவர் மீது குற்றம் சுமத்தி!
சிறைக்கு அனுப்பியேனும்!
அவரது குழந்தைகளை கடத்திச் சென்று!
அவரது நிம்மதியைக் குலைத்தேனும்!
அவரது மனைவியை கவர்ந்து சென்று!
அவரை பைத்தியமாக்கியேனும்!
அவரது லீலைகளை அம்பலப்படுத்தி!
அவரை தலைகுனிய வைத்தேனும்!
அவரை நிழலாய்ப் பின்தொடர்ந்து!
அவரின் ரகசியங்களை அறிந்து கொண்டேனும்!
அவரை கொலை செய்துவிட்டு!
அவர் போலவே நடித்தேனும்!
நான் தற்கொலை செய்து கொண்டு!
அவர் உடலில் புகுந்தேனும். !
!
02.!
கோரிக்கை !
--------------------!
வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!
நாம் வைக்க இயலாது!
இன்னொருவரின் அடையாளத்தை!
நாம் பறிக்க இயலாது!
கடந்து சென்ற நிமிடத்தின் மீது!
நமது ஆளுமை எடுபடாது!
சுற்றி நடக்கும் விஷயங்களிலிருந்து!
தப்பிப் பிழைக்க முடியாது!
ஆசையால் துன்பம் என்றாலும்!
ஆனந்தத்தைத் தேடி ஓடாமலிருக்க முடியாது!
கொட்டிவிட்ட வார்த்தைகளை!
திரும்பப் பெற இயலாது!
நகரத்தின் நிர்வாணத்தைக் காண!
நடுநிசியில் வாய்ப்பு கிடைக்குமென்றால்!
ஓடாமலிருக்க முடியாது!
நாக்கின் ருசிக்கு அடிமையாகாமல்!
யாராலும் இருக்க இயலாது!
தயவுசெய்து!
கல்லறையில் தூங்கும் என்னை!
கடவுளைக் கண்டாயா எனக்!
கேட்காதீர்கள். !
!
03.!
தப்பித்தல் எளிதல்ல !
-------------------------!
இப்பூமியிலிருந்து!
வெளியேறும் வழியை!
தேடிக் கொண்டிருக்கிறேன்!
நீங்கள் எப்போதாவது!
வந்த வழியை!
ஞாபகப்படுத்தி பார்த்ததுண்டா!
கண்கள் அமானுஷ்யங்களைக்!
காண்கிறது!
காதுகள் சாத்தானின் குரலைக்!
கேட்கிறது!
எனக்கு மட்டும் ஏன் இப்படி!
என்று எண்ணாத நாளில்லை!
என்னை பகடை காயாக்கி!
என்ன பலனை அடையப் பார்க்கிறார்கள்!
பரமபத ஏணியில் ஏறுவதும்!
பாம்பு தீண்டி கீழே இறங்குவதுமாய்!
இருக்கிறது எனது வாழ்க்கை!
மரணப் புதைகுழியில்!
வலுக்கட்டாயமாக என்னைத்!
தள்ளப் பார்க்கிறார்கள்!
தட்டிக் கொண்டே இருக்கிறேன்!
எந்தக் கதவும் திறக்கப்படவில்லை!
கடவுளிடம் சரணடையும் முன்!
சாத்தானை ஒரு முறை!
சந்தித்துவிட்டு வருகிறேன்