செய்வதென்ன? கூறு!.. சலசலப்பு
கிரிகாசன்
01.!
செய்வதென்ன? கூறு!!
-------------------------------!
கங்கை குதித்தோடிக் கடலோடு சேர்ந்திடலாம்!
மங்கை மனம்நாடி மன்னவனைக் கூடிடலாம்!
தங்கம் பெண்விரும்பித் தன்கழுத்தில் சேர்த்திடலாம்!
சிங்கமுடன் புலியைச் சேர்ந்துவாழ் என்பதுவோ?!
தெங்கி னிளநீரும் சேர்வழுவல் உண்டிடலாம்!
நொங்கு விழமுக்கண் நோண்டிருசி கண்டிடலாம்!
தொங்கும் கனிவாழை தோலுரித்து உண்டிடலாம்!
சங்கத்தமிழ் இனத்தைச் சிங்களமும் தின்பதுவோ!
மங்கு மிருள்சூழ மறைந்தகதிர் தூங்கிடலாம்!
எங்கும் மானிடனே இரவென் றுறங்கிடலாம்!
வெங்கண் சினம்கொண்டேவினைபேசி எம்குலத்தை!
சிங்கத்திமிர் அழிக்கப் சீறாமல் தூங்குவதோ!
செங்கதிரோன் உச்சிவரத் தீயாய் எரிந்திடலாம்!
பொங்கி வெடித்தமலை புகைவந்து எரிந்திடலாம்!
சங்குதனும் வெண்மைதரச் சற்றே எரிந்திடலாம்!
எங்களது இனங்கொன்று எரிக்கநாம் விட்டிடவோ!
பொங்கும் அலை கடலில் புரண்டுவிழுந்திடலாம்!
எங்கோ மலையிருந்து எழுந்த நதி விழுந்திடலாம்!
மங்கு மிருள் மாலை மலர்கள் துவண்டிடலாம்!
தங்கத் தமிழீழத் தாய்க்குலமும் துவளுவதோ!
கொட்டும் நஞ்சரவம் கொத்தவந்து சீறிடலாம்!
பட்டுவிடக் கைகள் பத்தினியும் சீறிடலாம்!
கிட்ட எலிஓடக் கிழப்பூனை சீறிடலாம்!
வெட்ட உடல்வீழ வெங்குருதி சீறுவதோ!
தொட்டில்படுத்த பிள்ளை தோன்றும்பசிக் கழலாம்!
விட்ட கனி நாள்போக விழுந்து அழுகிடலாம்!
பட்டதொரு காதலுக்கு பாவையுமே அழுதிடலாம்!
சுட்டொழிக்க நாமோ சும்மா அழுதிடவோ!
ஒன்றாகச் சேர்வதற்கு உள்ளவையோ பிரிவினைகள்!
தின்றுமுடிக்கவுண்டு தோன்றுகின்ற துயரங்கள்!
நின்றுமனம் சீறுவதோ நீசர்தம் செயலெண்ணி!
வென்று முடிப்பதுவே வேலைஇனி எழுந்திடடா!
துவண்டுவிழுவதுவோ துயர்செய்யும் அரசபடை!
கவிழ்ந்து விழுவதுவோ கயவர்தம் ஆட்சிமுறை!
அவிழ்ந்து கருகுவது அன்னியவன் கொடுமாட்சி!
புகழ்ந்து எழுமெங்கள் புதியதொரு தமிழீழம்!
!
02.!
சலசலப்பு!
-----------------!
சலசல வென்று சலங்கை குலுங்க!
கலகல வென்றுமே குலுங்கி நகைத்து!
தளதள வென்றுடல் தாங்கிய கன்னி!
மழைபொழி நீரிடை மகிழ்ந்து குதித்தாள்!
விழவிழ துளிகள் வியன்தரு உடலில்!
பளபள வென்றுமே பருவம் மினுங்க!
மளமள வென்றுமே மனதினி லேக்கம்!
விளைவிளை என்றுமே விளைந்திட அவனோ!
எழஎழ நெஞ்சினில் இச்சையும்பெருகி!
குளுகுளுவென்றுமே புலனதுகுளிர!
அழகெழு மயிலென ஆடிடும் அவளை!
தொழுதெனும் அழகை துய்திடவிளைந்தான்!
சளசள வென்றுமே நீரிடைபாதம்!
வழவழ வென்றுமெ வழுக நடந்து!
பழமெழு நிறமும் பனியென விழியும்!
விளையிள வதனத் திருமகள்பார்த்தே!
துளிதுளி யெனவேஅச்சமும் விலக!
களிகளி என்றே காய்ந்திடும் மனத்தால்!
வழிவழி நடந்து வஞ்சியை அணுகி!
கிளைகிளை தோறும் தாவிடும் மந்தி!
கொளும் உணர்வோடு கொடியிடைமகளை!
சிலைகலை ஓவியச் சித்திரப் பாவை!
குலைகுலை வகையாய் கனிகளின் கூட்டம்!
பலபல கொண்டவள் பக்கம ணைந்து!
!
விலையிலை உனதே விந்தைகொள் அழகு!
அலைமகள்எழிலும் அஞ்சிய நடையும்!
வலைகளை வீசும் விழிகளும் கண்டேன்!
நிலைகுலைவாகி நெஞ்சமி ழந்தேன்!
அலையுலைந்தாடும் ஓடமும்போல!
வலைவிழுந் துளலும் விழிகயல்போலே!
பலதுயர் தந்தாய் பாவையே நீக்க!
இலதொரு வழிதான் இணைவது ஒன்றே!
சொலுமிள மகனோ சொல்வது இன்றி!
பலமுடன் கூறிப் பக்க மணைந்து!
வலதொரு கையால் வஞ்சியை அணைக்க!
விளைந்திட அவளோ விலகியே சற்று!
கடுகடு உரமும் காதலும் கண்ணில்!
விடுவிடு என்றே வேகமும் கொண்டோன்!
திடுதிடு வென்றுமே தேர்திடமுன்னே!
நடுதொரு நிலையை நினைவது இலையோ!
தொடுதொடு என்றெனைத் தொட்டுமே தாலி!
குடுகுடு என்றுமே கொட்டிட மேளம்!
சுடுசுடு தீயதும் எரிந்திட முன்னே!
விடுவிடு என்றுமே விரைந்தவர் கட்டி!
இடுமென தன்பை ஏற்றவர் அந்தோ!
சிடுசிடு என்றுமே சினந்திட எம்மை!
கொடுகொலை வாளுடன் நெருங்குவர் காண்க!
விடுவர்த னுயிரெனில் வருகபின் என்றாள்