1.மொழி... எது கவிதை?!
--------------------------!
நான்கு மொழிகள் எனக்கும்!
அதே நான்கு மொழிகள் உனக்கும்!
நாக்கின் நுனிவரை தெரியும்!
மொழிகளைக் கற்றுக்கொள்வதில்!
நாங்கள் வல்லவர்கள்.!
எந்த கேள்வியென்றாலும்!
ஊகிக்குமுதல் பதில்தர!
வல்லவர்கள்!!
சில வேளைகளில் கேட்காத!
கேள்விக்கும் காரமாய் பதில் கொடுக்கவும்!
உனது மொழி விளங்கவில்லை!
என்றபோது!
உனது மொழியை பரிகசித்ததாய்!
நீ நினைத்தாய்.!
உனது மொழிகளுக்கு நான்!
வேறு அர்த்தங்களை தீட்டிக்கொண்டேன்.!
எனது மொழிக்கு நீ!
செவி கொடுப்பதையே மறந்தாய்.. !
நான் உன்னுடன் மொழிவதையே துறந்தேன்.!
ஒருவரது கேள்வியை!
மற்றவர் வெல்வதும்.!
பதிலற்ற கேள்விகளை!
கேட்பதில் சுகம் பெறுவதும்.!
கேள்விகளுக்கு பதில் தெரிந்தும்!
அலட்டயமாய் ஊமைமொழி பேசுவதும்!
வாழ்க்கை பரீட்ச்சையில்!
சித்தியெய்திய கர்வம் தர!
நாங்கள் மொழி ஆளுமை பெற்றவர்கள்.!
என்று எமக்குள் நாமே விளம்பரப்படுத்திக் கொண்டோம்.!
இன்னும்!
சைகை மொழி!
மௌனமொழி!
என்று தெரியும்தான்..!
காற்றின் மொழி!
கவிதை மொழி!
இயற்கை மொழி!
மட்டுமல்ல!
நாம் உணராமல் போனது..!
காதல் மொழியும் தான்!
கற்றிருந்தால்!
புரிந்திருக்குமோ?!
எனது மொழி!
உனக்கும்.!
உனது மொழி !
எனக்கும்…!
2.எது கவிதை?!
விழியின் மொழி!
உயிருக்குள்!
மொழிபெயர்ந்தது!
கவிதை.!
காகித உடலில்!
காதல் மை கொண்டு !
எழுதுவதும் கவிதை.!
இப்படியெல்லாம்!
கவிதை எழுத!
வேண்டுமெனக்கு!
ஒரு பேனவும் காகிதமும்.!
நீ மட்டும்!
எப்படி உன் உதட்டில்? !
எத்தனை புத்தகம்,!
எத்தனை வலைப்பின்னல்!
கவிதைகளுக்கென்று.!
எப்படி இருந்தாலும்!
எனக்கு பிடித்ததேனோ!
உனது விழிதான்.!
கவிதைக்கு!
மொழி தேவையென்று!
எவன் சொன்னான்.!
அடி முட்டாள்.!
உன் விழி பாராத!
கவிஞன்.!
நான் படிக்காத கவிதைகூட!
இதோ...!
உந்தன் மௌனத்தில்.!
நீ அழைத்ததும்!
தொலைபேசிகூட !
கவிதை பேசும் அதிசயம்!
யாரும் அறியவில்லை.!
கண்ணா என்றழைப்பில்!
காணமல் போகும் என்னுலுகை!
கண்டுபிடித்தெதற்கு!
வீணாக...!
நெஞ்சுக்குள் அலைமோதும்!
உன் நினைவுகள், கனவுகள்,!
எல்லாம் கவிதைகளாகிப்;போன!
நிலையில்!
குழம்பித்தான் போனேன் நான்.!
எது கவிதையென்று தெரியவில்லை.!
இது காதலாக இருக்குமோ?!
இதற்கு மட்டிலுமேனும்!
மௌனம் கலைத்து!
ஒரு கவிதை சொல்லேன்!
காத்திருக்கிறேன்.!
!
-கவிதா நோர்வே
கவிதா. நோர்வே