முள்ளந்தண்டு முன் வளைந்த படிக்கு!
கையில் தடியோடும் கோணிப்பையோடும்.!
அப்பப்போ!
மண்ணள்ளி முகத்தில் பூசுவதும்!
அழுவதும் ஆடுவதும் பாடுவதும் சிரிப்பதுமாய்.!
புரிந்து கொள்ள முடியவில்லை.!
மாமரத்தின் கீழும்!
தென்னையின் கீழும்!
கிணற்றடி ஆடுகாலினுள்ளும்!
ஏலாத போது தனது வீட்டுத் திண்ணையிலுமாய்!
தன்னை காப்பாற்றிபடியே.!
இன்னும் சாகேலை ஆச்சி.!
ஆடிப்பாடி குதாகலித்து!
நிலாக்காட்டி சோறூட்டி!
மடியிலும் தோழிலுமாய் சுமந்து!
தூங்க வைத்து......!
பூட்டி பேரன்கள்!
யாருமில்லை அவளருகில்.!
பசியோடும்!
துன்ப துயரோடும்!
போரின் கொடுமையோடும்!
வெறுமை பொழுதை!
சுமந்தும் துடைத்தெறிந்தும்..!
வீரத்தோடும்!
இன்னும் பல மடங்கு வீரியத்தோடும்!
மகரந்தங்களையும்!
விதைகளையும் வேர்களையும்!
இன்னும் இன்னும் அதிகமாய்!
தன்னகத்தே சேமித்தபடிக்கு ஆச்சி.!
உரு சிதைந்து சிதிலமாகுமுன்!
நாமெல்லாம் தன் மடியில் வந்து வீழ்வோம்!
என்ற நம்பிக்கையோடு!
கோணிப்பையை இறுக அணைத்தபடி ஆச்சி.!
நளாயினி தாமரைச்செல்வன்.!
10-02-2007
நளாயினி