தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பனிக்கோர் ... கால விரயம்

சிபி பாபு
பனிக்கோர் எச்சரிக்கையாய்...கால விரயம்!
!
01.!
பனிக்கோர் எச்சரிக்கையாய்...!
-------------------------------!
புல்லின் மேல் நடக்காதிர்!
கதிரவனுக்கும்!
தமி்ழ் தெரிந்திருக்குமோ?!!
அதனால்தான் தினமும்!
காலைப்பொழுதில்!
வந்துவிடுகிறான்!!
புல்லின் மேல் உறங்கும்!
பனித்துளிகளை எழுப்ப?!.!
02.!
கால விரயம்...!
-------------------!
இரவு நேர!
படுக்கைக்கு முன்!
கவியெழுத நினைத்து...!
அதன் நிமி்த்தம்!
யோசித்த காலங்கள்!
வீணாகிப்போனதே தவிர!...!
இந்த காகிதங்களும்,!
பேனா மைய்யும்...!
வீணாகிவிடவில்லை!!
ஏனெனின்!
சிறு கிருக்கல் கூட!
செய்ய முடியாததின் விளைவுதான்.!
!
-சிபி பாபு.!
sathishbabu(CP.BABU)!
13,tuas avenue 6,!
singapore

எந்தமிழ் நாடு

மு.கந்தசாமி நாகராஜன்
செந்தமிழ் நாடிது!
எந்தமிழ் நாடென்று!
ஏட்டினில் எழுதுகையில்!
இனிக்குதடா செந்தமிழா!.!
எந்தமிழ் நாடிதனில்!
எனக்கில்லா சுதந்திரத்தை!
எண்ணிப் பார்க்கையிலே!
எரியுதடா என் நெஞ்சு!!
சுதந்திரமும் குடியரசும்!
சுட்டெரிந்து போனதனால்!
சுடரில்ல விளக்குகளால்!
இருண்டதடா தமிழகமே!!
பிறப்புச் சான்று முதல் நம்!
இறப்புச் சான்று வரை!
இலவசமாய்ப் பெற்றிடவே!
இல்லாத நிலைமையடா!!
அரசியலாரும் மெத்த!
அதிகாரியாரும் மக்கள்!
பணியாளர்களென்றே என்!
பள்ளியிலே சொன்னதுண்டு!!
எஜமானர் தானிங்கு!
எடுபிடிகளாகி விட்ட!
எழுதவொண்ணா நிலையிதனை!
எடுத்துச் சொல்வார் யாரோ?!
ஆகஸ்டு சுதந்திரத்தை!
அநியாயமாய்த் தொலைத்துவிட்ட!
அடிமைத் தமிழனே.... உன்னை!
அறிந்துகொள் தமிழனே....!
உண்மை!
தெரிந்துகொள் தமிழனே...!
மேடைபோட்டு உனக்குப்!
பாடைகட்டுவோரின் சொல்!
வேதமென்று துடித்திடும் நீ - அறியாது!
வேதனையில் துடித்திடுவாய்!!
உணர்ந்துகொள் தமிழா!
உனக்கு எல்லாவிடத்தும் உரிமை உண்டென்று!!
தெரிந்துகொள் தமிழா இத்!
தேசமே உனதென்று!!
செந்தமிழ் நாடிதனை!
எந்தமிழ் நாடென்றிட!
புறப்பட்டு வாராயோ!!!
புதுப் புரட்சியைத் தாராயோ!!!!
!
- மு. கந்தசாமி நாகராஜன்.!
சுப்பிரமணியபுரம்.!
--------------------------------!
பிறந்தது மறக் குலத்தில் - அவன்!
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;!
சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில!
செட்டிமக்க ளொடுமிகப் பழக்க முண்டு;!
நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்!
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!!
துறந்த நடைக ளுடையான் - உங்கள்!
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்

பூக்கள் விசித்தழும் மாலை

எம்.ரிஷான் ஷெரீப்
வானை எடுத்து வாவென!
காற்று வெளியெங்கும் !
பட்டத்தை அனுப்புகிறேன் பகலில் !
சூரியனோ பௌர்ணமியோ எதுவோ!
குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து!
என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது !
செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள்!
மொட்டுக்களாகிப் பூத்திடும்!
விடிகாலையில் !
மாலைகளாக்கப்படுபவற்றுக்கு!
தெரியாது!
எந்தச் சடங்குகளுக்காகக் கோர்க்கப்படுகிறோமென்று !
எனினும் மாலையிலுதிரும்!
பூக்கள் விசித்தழுகின்றன!
மேடை நிழல்களிலிருந்தும்!
பூத்த மரங்களின் கீழிருந்தும் !
காலையில் பனி சொட்டிக் கிடக்கிறது

உண்மையின் வாழ என்னை உள்ளிருந்(து) இயக்க வாரும்

எசேக்கியல் காளியப்பன்
முற்றுந்தான் பாவத்தை முனைந்தழித்த(து) உண்மையெனில்!
எற்றுக்கோ மனிதருளே எம்போன்றோர் பிறப்பதுவும்?!
பற்றுக்கொண்(டு) உம்முள்ளே பரிதவிப்பும் இல்லாமல்!
உற்றபிதா கட்டளையை உச்சிகொண்ட காரணமோ?!
இச்சிப்பும் பற்கடிப்பும் இழிகுணமும், உடலெனுமோர்!
‘தச்சுவைத்த சட்டை'யெனத் தந்தனுப்பும் காரணமேன்?!
மெச்சிவைத்துக் கொள்ளுமொரு விளையாட்டொ இது?சொல்லும்!!
அச்சுக்குள் பிழைவைத்தே அடித்தடித்துத் திருத்துவதேன்?!
எங்கணும் பொருளை ஈட்ட, ஏற்றநல் வழிகள் கண்டோம்;!
இங்கொரு வன்,மாற் றானை ஏற்கவும் இணைந்து கூடித் !
தங்கவும், தயவு காட்டித் தாங்கவும் ஏது செய்வோம்?!
மங்கிடும் மனிதம் என்றால், மற்றைய உயர்வும் யாதோ?!
உண்பதற்(கு) ஏங்கி டாமல் உடுத்தியே களித்தி டாமல்,!
கண்படக் கலங்கு வாரைக் கைநெகிழ்த்(து) ஒதுக்கி டாமல்,!
புண்படப் பேசி டாமல், பொய்யுரை நிகழ்த்தி டாமல்,!
உண்மையின் வாழ என்னை உள்ளிருந்(து) இயக்க வாரும் !!

அகதி

முல்லை அமுதன்
வெளிச்சம் செத்து!
இருள் உயிர்த்த பொழுதில்,!
வெள்ளைக்காகத்துடன்!
உரசிப் பார்த்தது கறுப்புக்குயில்….!
பூங்கா நாட்காலியில்-!
ஆயாசமாய் உட்கார்ந்திருந்த!
என்!
பிடரியிலும் வலித்து.!
‘எனக்கான நிலம் இதுவல்ல.’!
என் பொழுதுகள் விடியமுன்!
இயந்திரப் பேய்களால்!
துரத்தப்பட்டேன்.!
இந்த பொழுது!
எனக்கானதுமில்லை.!
குளிர் நெருப்பு சுடும்!
உஷ்ணக்குளிர் விறைக்கும்.!
நீ எனக்க சொந்தமாயில்லை.!
என் முன்னால் நின்று!
நீ அன்னியன்!
என அறைந்து சென்றது வெள்ளைக்காற்று.!
வேருடன் பிடுங்கி எறியப் பட்ட!
தேசத்தில்!
குரங்குகள் ஆக்கிரமித்த படி….!
யாரிடம் கேட்பது?!
என் தேசத்தை கண்டீரா என!
தூரத்தே!
நாய்களின் ஊளையிடலில்!
என் எதிர்காளம் அகதியாய் கழிகிறது!!
!
-முல்லை அமுதன்!
09-05-08

எனக்குப் புரியவில்லை

ஆல்பர்ட
படிப்பது !
இராமாயணம் !
இடிப்பது !
பெருமாள் கோயில் !
என்ற சொல்வழக்கு !
ஏன் வந்தது? !
- எனக்குப் புரியவில்லை!? !
படித்தது !
இராமாயணம் !
இடித்தது !
பாபர் மவதி !
என்று மாறியது ஏன்? !
- எனக்குப் புரியவில்லை!? !
கொலை செய்; !
பந்த் நடத்து; !
பஸ்ஸைக் கொளுத்து; !
பிறரைத் துன்புறுத்து; !
என்று போதித்தது !
எந்த மதம்? !
- எனக்குப் புரியவில்லை!? !
வேதங்கள் !
சொல்லாததை, !
மதங்கள் !
போதிக்காததை, !
ஆலயங்கள் !
அறிவிக்காததை !
செய்யத் துணிவு !
வந்தது !
யாரால்? எங்கிருந்து? !
- எனக்குப் புரியவில்லை!? !
நல்லதையே சிந்தியுங்கள்... !
நல்லதையே செய்யுங்கள்... !
இதைத்தானே !
புத்தர் போதித்தார்; !
இயேசு பிரசங்கித்தார்; !
நபிகள் நவின்றார்; !
காந்தி சொன்னார். !
இவர்கள் !
தெளிவாய்ச் சொன்னது !
மட்டும் !
ஏன் !
எவருக்குமே !
புரியாமல் போனது? !
- எனக்குப் புரியவில்லை!? !
-ஆல்பர்ட்

கவிதை பிறக்கும்

முருகடியான்
பாம்படித்தால் பாவமில்லை!!
பசுவடித்தல் பண்புமில்லை!!
காம்பறுக்க அஞ்சிடுவான்!
கனிசுவைக்கப் போவதில்லை!!
வேம்படியில் தேனிறைத்தால்!
விளாம்பழங்கள் காய்ப்பதில்லை!!
நாம்படிக்க வில்லையென்றால்!
நற்றமிழ்தாய் என்னசெய்வாள்?!
தேம்பனுவல் படித்திடுங்கள்!
தெள்ளுதமிழ்க் கவிதைவரும்!
-பாத்தென்றல்.முருகடியான்

மெல்லத்தட்டு

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
என்னிதயக் கதவுகளை மெல்லத்தட்டு !
ஓசையைக் கேட்கும் பலம் !
ஏனொ இதயச் சுவர்களின் !
கற்களுக்கு இல்லை !
உன் கேள்வி நன்றாகவே !
எனக்குப் புரிகிறது !
கைகோர்த்து நடந்து !
பழக்கமற்றவன் வாழ்க்கையெல்லாம் !
எப்படி தோழனாவாய் என்று !
சின்னப்பெண்ணே மெல்லத்தட்டு !
உன் கழுத்தில் நாணேற்றி !
நானுனக்கு கணவனாய் பதவியேற !
சந்தர்ப்பம் தா , அங்கே நான் நிகழ்விக்கும் !
சம்பவங்கள் என்னை உன் !
தோழனாக்கும் !
பலர் தட்டிய போதும் திறக்காத !
என்னிதயம் !
தட்டவென நீ கைகளை உயர்த்தியபோதே !
திறந்து கொண்டதே !
இதுதான் பூர்வஜென்மப் !
பலனென்பரோ !
பூங்காற்றே நான் மலரிதழ் !
மெல்லத்தட்டு இல்லையேல் !
உதிர்ந்து விடுவேன் !
தேன்வண்டே மெதுவாக !
சிறகை விரி !
அதன் சலசலப்பில் என் !
சப்த நாடியும் !
ஒடுங்கிவிடும் !
பொன்வண்டு வளர்க்கும் ஆசை உனக்கு !
பறக்கும் என்மனதைப் பிடித்து !
உன்னிதயக் கூட்டில் !
அடைத்து விட்டாய் !
பருவ மழையே நனைந்தால் !
ஜீரமேறி நலிந்துவிடுவேன் !
மெல்லத்தட்டு !
உள்ளத்தை !
உன்வீட்டு முற்றத்தில் !
தொலைத்து விட்டேன் !
உன் மனமெனும் பற்றைக்குள் !
விழுந்ததுவோ !
காதலை எனக்கு !
கல்லூரியின்றிக் !
கற்பித்தவளே !
காலமெல்லாம் நான் என் !
காதோடு ஒரு கவிதை சொல்லி எனைக் !
கைதாக்கி உனதாக்கி எனைத்தாக்கியது போதும் !
இனி வரும் வேளையிலே !
உன் பூமுகத்தின் மென்மைப்போல் !
என் இதயக் கதவுகளை !
மெல்லத்தட்டு மேகம் விலகும்

நண்பனுக்கொரு.. நெஞ்சுக்குள்ளே

சத்தி சக்திதாசன்
நண்பனுக்கொரு மடல்.. நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்!
01.!
நண்பனுக்கொரு மடல்!
---------------------------!
அன்பு நண்பா,!
கண்களுக்குள் உறக்கம் நுழைய!
மறுக்கின்ற வேளையடா!
நெஞ்சத்தின் ஓரங்களில்!
வேதனையின் கீற்றுக்கள்!
நம் தாய்மண்ணின் ஓலம்!
நமைச் சுற்றி ஓயாமல் ஒலிக்கின்றதே!
தீராத போர் என்னும் துன்பம்!
தீர்க்கின்ற உயிர்களின் பாரம்!
தாங்காமல் துவண்டிடும் உள்ளம்!
தூங்காமல் தவித்திடும் நெஞ்சம்!
அங்கொன்றும் இங்கொன்றுமாய்!
அரசியல் பேசிடும் கூட்டம்!
அதுவல்ல மக்களின் நாட்டம்!
அல்லல்கள் தீர்வதே ஈட்டம்!
எண்ணத்தின் பாதி இங்கே!
எழுத்தாக உனைத் தேடி ஓடும்!
சொல்லாத எண்ணங்கள் கோடி!
நெஞ்சுக்குள் புதைந்தேதான் போகும்!
நினைவுகளில் தேந்துளி சிந்தும்!
கனவுகளில் காட்சிகள் மாறும்!
நாம் வாழ்ந்த காலம் நெஞ்சில்!
வந்து வந்தேதான் போகுதடா!
வாலிப வயதில் நாம் கண்ட!
வசந்தங்கள் இன்றங்கில்லை!
கண்களில் நீரோடு ஏக்கத்தின்!
வாசலில் எத்தனை மழலைகள்!
வருத்துது நெஞ்சினை நான் தினம்!
கண்டிடும் கோலங்கள்!
போரில்லா வாழ்வொன்றினைத் தேடி!
கால்நூற்றாண்டுக்கு மேலாய்!
இன்னல்கள் மத்தியில் உழன்றிடும்!
இன்னுயிர் உறவுகளின் எண்ணங்கள்!
இதயத்தைச் சிதைக்குது ஏனோ!
ஈட்டியாய்த் தைக்குது!
சர்வமும் இழந்திட்ட மக்களை!
சர்வதேசமும் கைவிட்டதோ ? சொல்லு!
சந்தையில் விலைப்படும் பலிக்கடாக்களாய்!
சொந்தங்கள் துடித்திடும் பொழுதடா!
போரினி மறையட்டும் நாம் பூமியில்!
போன உயிர்கள் போனதாய் இருக்கட்டும்!
பொழுதொன்று விடியட்டும் எம் மண்ணில்!
புறப்படு தொடர்ந்து நாம் பிரார்த்திப்போம்!
!
02.!
நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்!
-----------------------------------!
நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்!
நேசத்தோடு கூடும் நேரம்!
நினைவலைகளில் பயணிக்கும்!
கனவுக்கப்பல் கரையேறும்!
தேன் சிந்தும் வானம் அங்கே!
தெளிவாகும் மெய் ஞானம்!
மலர் வீசும் சுகந்தவாடை!
மனம் கொள்ளும் ஆன்ம நிலை!
கணநேரம் மூடும் விழிகள்!
காணுவதோ அழியாக் கோலம்!
கண்கள் இருந்தும் காண்பதில்லை!
காலமிட்ட கோலம் தன்னை!
திரையரங்கில் அரங்கேறும்!
தினம் தினமும் நாடகங்கள்!
திரைச்சீலை விழுந்த பின்னும்!
தொடரும் கதை அறிவாரோ!
இதயமென்னும் காகிதக்கப்பல்!
ஏற்றுவதோ இரும்புச்சுமை!
மறுகரையைச் சேருமுன்னே!
மூழ்கிடுவதே உண்மையன்றோ!
வரும்போதும் எதுவுமில்லை!
விழும்போதும் ஏதுமில்லை!
இடையில் வரும் உடமைகள்!
இதுக்குத்தானா யுத்தங்கள்!
ரத்த ஓட்டம் தளர்ந்ததுமே!
புத்தி கொஞ்சம் விரியுதப்பா!
முத்தியடையும் வேளைதேடி!
சித்தமெல்லாம் தெளியுதப்பா

நடுநிசி, கைவிடப்பட்ட ஆலயம்

துர்கா பிரசாத் பாண்டே
இரவு தூரங்களை இழுத்து நீளமாக்குகிறது!
முடிவற்றதைப்போல்.!
இரவு மரணத்தைப் போல.!
ஒற்றைப் பறவையின் அழ்ந்த கவலை!
அமைதியாக வந்தமர்கிறது!
எனது தனிமையின்!
அடர்ந்த கிளைமீது.!
ஏதோ ஓர் இடத்தில்,!
ஒரு பயம் தன்னைத் திறந்துகொள்கிறது, அமைதியாக,!
சில பெயர்தெரியாத காட்டுப் பூவைப் போல.!
அதன் கருத்த இதழ்கள்!
நமது கடந்தகாலக் கல்லறையில் இருந்து!
ஒளிந்திருந்து தாக்குகிறது!
கைவிடப்பட்ட!
கருவறை மூலையில்!
விட்டு விட்டு எரியும் அகல் விளக்கு!
சண்டை போடுகிறது!
தனது சொந்த நிழலோடு.!
கைவிடப்பட்ட அந்த ஆலயத்தின் உள்ளே!
கருங்கல் தெய்வம்!
பலவீனமாக புன்னகைக்கிறது!
ஓர் அக்கறையற்ற குழந்தை!
தனது நூற்றாண்டு பழம்புராணங்களின்மீது!
செங்குத்தாக நின்றுகொண்டிருப்பதைப் போல