தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சத்தம்

வேதா. இலங்காதிலகம்
7-10-07.!
ஒன்றுடன் ஒன்று மோதுகையில் துளிர்க்கும்,!
ஒன்றுடன் ஒன்று இணைகையில் வளரும்,!
ஒன்றும் காற்றின் கூட்டிணைவு சத்தம்.!
சத்தம் அளவோடு பிறந்தால் இரசனை.!
சித்தம் கிறங்கிடும் தித்திப்பில் சுரணை.!
பித்தம், தித்தமும் மொத்தமாய்ப் பிரிவினை.!
வேரான அடிப்படைச் சத்தம் ஓங்காரம்.!
பேரான முத்துமொழி, சத்தத்தில் பிரசவம்.!
சீரான மொழி, பிழையுச்சரிப்பில் பாழாகும். !
பார்வையற்றோனுக்குச் சத்தம் அடையாளம்.!
ஆர்வப் பாடகனின் குரல் சத்தம் பொக்கிசம்.!
சோர்வைக் கலைக்கும் இனிய இசைச் சத்தம்.!
இதயத் துடிப்புச் சத்தம் உயிரிற்குத்தரவாதம்.!
கைதட்டற் சத்தம் பிரசங்கியின் ஊக்கம்.!
கைவச நித்திரையைக் குறட்டைச் சத்தமழிக்கும்.!
கத்தல் சத்தத்தில் இரத்தம் கொதிக்கும்.!
பித்தம் கொதிக்கும், மூத்தல் வேகமாகும்.!
சத்தங்கள் பலவகை, நவரசங்களாய் இழையும்.!
!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
----------------------------------------------!
( தித்தம் - கசப்பு.!
மூத்தல் - முதுமையுறுதல்.)

காதல் தோல்வி - II

சரவண வடிவேல்.வே
வழக்கம்போல்!
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்!
இந்த முறை!
சற்று ஜாக்கிரதையாகவே செயல்பட்டேன்.!
முதலில் அந்த காகிதங்களை கிழித்து!
பின், அவற்றை தீயில் எரித்துவிட்டேன்.!
நினைவு பொருள் என்று என்னிடம்!
இருந்த ஒரேஒரு பேனாவையும் உடைத்து!
கடல் நீரில் தூக்கி எறிந்துவிட்டேன்.!
இ-மெயில் உரையாடல்களை மொத்தமாக!
இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிட்டேன்.!
நினைவுகளை அழிக்க கையில்!
எப்பொழுதும் ஒரு ஸ்காட்சை!
வைத்து உள்ளேன்.!
இனி ஒரு தடயமும் இல்லை.!
யாராலும் சந்தேகிக்க முடியாது!
யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
யாராலும் நீருபிக்க முடியாது!
நீருபித்தாலும்!
எங்கள் பிரிவை உங்களால்!
தடுக்க முடியாது!
இந்த முறை சற்று உரக்கமாகவே!
சொல்கிறேன்!
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்

கொட்ட‌ப்ப‌டும் வார்த்தைக‌ள்

ராம்ப்ரசாத், சென்னை
கானல் நீர் காரணிகளால்!
உருவாகும் மேடு பள்ளங்களை!
சமன்படுத்தவே கொட்டப்படுகின்றன!
வார்த்தைகள்...!
உடைத்தெறியப்படும் மனச்சுவர்கள்!
மட்டுமே அறியும் வார்த்தைகளின்!
கூர்மை...!
மேடுப‌ள்ள‌ங்க‌ள் ச‌ம‌ன்ப‌ட்டாலும்!
உடைந்த‌ சுவ‌ர்க‌ளை!
பூச என்றுமே முடிவ‌தில்லை...!
உடைந்த‌வைக‌ள்!
உடைந்த‌வைக‌ளே...!
உடைந்த‌ சுவ‌ர்க‌ள்!
சித்திர‌ங்க‌ள் தாங்குவ‌து!
சிக்க‌லான‌ ஒன்று...!
கோடுக‌ளையும் வண்ண‌ங்க‌ளையும்!
துணைக்க‌ழைத்தே!
விரிச‌ல்க‌ளை ம‌றைக்க‌!
முடிகிற‌து...!
சுவ‌ர்க‌ள் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டால்!
விரிச‌ல்களும் தாங்கும்!
சித்திர‌ங்க‌ளும் தாங்கும்...!

நல்வதோர் வீணையாம், நந்தவனப் பூவாம்

வேதா. இலங்காதிலகம்
நல்லதோர் வீனண என்பார்! !
நந்தவனப் பூக்கள் என்பார்! !
பெண் விடுதலை என்பார்! !
பேச்சோடு நின்றிடுவார்! !
வல்லமை காட்டி நின்றால் !
வக்கரித்துக் கோணி நிற்பார்! !
பெண் பயம் விடுத்தாலும் !
பெண் நேர்மை பேசினாலும் !
பெண் கேள்வி கேட்டாலும் !
ஏன் பொங்குகிறது ஆணினம்? !
ஆண்டான் அடிமை வழிவந்த பழக்கமா? !
அடக்கு முறையில் அடங்கிய புழுக்கமா? !
காலமாற்றக் கருத்து விரிவை !
ஏற்று நடக்க ego தடையா?

சொல்லவே முடியாத ரகசியங்கள்

சிலம்பூர் யுகா துபாய்
தீயின் குணத்தை!
பூவுக்குள்!
புதைக்கும்முயற்சி.!
வானவில்லை!
சிறார்களின்!
விளையாட்டுக்களமாக்க!
அவிழ்ந்துகொள்ளும்!
இதயத்தை!
அருகிலிருந்துரசிக்க!
சுனாமிகளையெல்லாம்!
சொடுக்கி நிறுத்த!
பூக்களால்!
அணுகுண்டுசெய்யும்!
புது ஆராட்சி!
மனதுக்குள்!
ஒளிந்துகிடக்கும்!
வாழ்க்கையை!
விஞ்ஞானவிளிம்பில் தேடும்!
விவரீதத்தை பார்த்து!
வரும்!
வேதனை சிரிப்பு!
அன்னைகளையெல்லாம்!
தெரசாக்களாக்கிவிட!
ஆசிரமம்!
அமைக்கத்துடிக்கும்!
அடிமனது!
மானுடமார்க்கம்!
மதங்களல்ல!
அன்பேயென்று!
அறிவுருத்த!
ஒரு கவிதையை!
தன்னுளிருந்து!
கழற்றியெரிந்தபின்!
அடைகின்ற!
ஆசுவாசத்தை!
இப்படி!
ஒரு பொறி வேண்டி!
தன்மீதே!
தீ மூட்டிக்கொள்ளும்!
கவிஞனின் நிலையை!
சொல்லால்!
விளக்கிவிடமுடியாது தோழி

இளமையும் முதுமையும்

அகணி
பனைக்கூடலில்!
மெல்ல நடக்கின்றேன்!
துள்ளித் திரியும்!
துடிப்பான வயதல்ல!
அலைந்து திரியும்!
சுமை எனக்கும் உண்டு!
எதிரில் வந்த இளைஞன்!
ஏளனமாக சொல்கிறான்!
“என்ன பழசு!
ஆச்சிமார் தேடியோ”!
ஒரு காவோலை!
கீழே விழுகிறது!
குருத்துப் பனை ஓலை!
கெக்கட்டம் விட்டுச் சிரிக்கிறது!
அந்தப் பழமொழியை!
பனைக்கூடல் சொல்கிறது!
இந்த இளைஞனுக்கு!
எடுத்துச் சொல்கிறது

வெளிச்சத்தில் நின்ற உருவமாய்

மாலியன்
நிழல்கள் துப்பி திசைகள்தேடி !
விரிந்தும் நெழிந்தும் !
வெளிச்சத்தில் கரைந்துவிடாமல் !
இருப்பதற்காய் முயன்றுகொண்டிருந்தேன் !
முடியவில்லை !
உச்சியில் வெளிச்சம் அடித்துவிட்டால் !
கரைந்துவிடும் நிழல்கள் !
குடைக்குள் ஒளிந்துகொண்டேன் !
என்னை மீட்டெடுக்க நீங்கள் !
வராதீர்கள் !
உங்கள் குடை என் குடையுடன் !
முட்டிக்கொள்ளும்

உன்னைச் சேரத்துடிக்கிறது உயிர்

ஆர். நிர்ஷன்
அருகருகே வரையப்பட்டாலும்!
சேரமுடியாத சித்திரங்களாய்...!
சந்திக்கும் தூரத்தில்!
சந்திக்க முடியாமல் நாம்…!!
!
போகும் இடமெல்லாம்!
இங்கே இருப்பாயா?!
என தேடித்தவித்த பொழுதுகள்…!
பார்க்கும் வெளியில்!
நீ இருப்பாயென!
கண்ணுக்குள்ளே உன் படத்தை!
அசைபோட்ட நாட்கள்…!
எனையறியாத துடிப்பு!
இதயத்துடிப்பையும் தாண்டி!
வதைக்கிறது!
உன்னைப் பார்க்க!
என்னை விட்டு உயிர்மட்டும்!
போகநினைப்பதுபோல!!
உன் நினைவுகளைக்கொண்டே!
வெளி சமைத்து!
விளையாட்டுக்குக் கூட!
பிரிந்து பறக்கமுடியாத!
ஊனப்பறவையாய் நான்…!!
காலச்சுவடுகள் தந்த!
கண்ணீரெல்லாம்!
நீ பேசும்போது மட்டும்!
மாயமாகுவதன் மர்மம் என்ன?!
வெறும் பார்வைகளால் பேசுகையில்!
நீயும் நானும் ஒரேசமயத்தில்!
சிரிப்பது எந்த பந்தத்தில்?!
நான் தனித்த இரவுகளில்!
என்னை வந்து பார்!
அப்போதும் உன்னுடன்தான்!
பேசிக்கொண்டிருப்பேன்!!
எப்போதாவது நாம்!
சந்திக்கலாம்!
அப்போது நான்!
இறந்துவிடாமல் பார்த்துக்கொள்!
உயிர்!
உயிரோடு கலக்கத்!
துடித்துக்கொண்டிருக்கிறது!!
-ஆர்.நிர்ஷன்!
இறக்குவானை

ஏமாற்றங்களின் நெடும் பயணம்

நிந்தவூர் ஷிப்லி
தொடரும் ஏமாற்றங்களின்!
நெடும் பயணத்தை!
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்!
நீ………..!
விடு!
குட்டக்குட்ட!
குனியும்!
என்!
இயலாமையை சொல்ல வேண்டும்!
வரங்களை!
சாபங்களாக்கிய!
தேவதை!
உனக்காகவா நான்!
கடுந்தவம் புரிந்தேன்…?!
எனக்கு!
நிழல் தரும்!
என்றெண்ணிய!
உன் வார்த்தைகள்!
சுட்டெரிக்கும்!
சூரியனாய் பொசுக்குகிறது!
என்னையும்!
மனசையும்…..!
பௌர்ணமி வானில்!
நீ!
என்ன வேண்டுமானாலும் !
செய்..!
ஆனால்!
அமாவாசை வானின்!
நட்சத்திரங்களை மட்டும்!
பிடுங்கி விடாதே…………!
!
-நிந்தவூர் ஷிப்லி!
தென்கிழக்கு பல்கலை!
இலங்கை

குறைப்பிறவி

நிலாரசிகன்
உயிர்த்தெழுதல் சாத்தியமற்று!
தூசிக்குள் புதைந்துகிடக்கிறது!
அரங்கேறா கவிதைகள் சில..!
கவிதைகளின் மெல்லிய!
விசும்பல்சப்தம்!
செவிக்கருகில் ஒலித்து!
ஓய்கிறது தினமும்...!
ஓடித்திரியும் பிள்ளையைவிட!
ஊனப்பிள்ளைமீதே!
தாய்ப்பாசம் அதிகமென்று!
உணர்த்த இயலாமல்!
தோற்கிறேன் நான்.!
-நிலாரசிகன்.!
----------------------------------------------------!
அள்ளித்தர நட்புடன்,!
நிலாரசிகன்.!
தமிழுக்கு நிலவென்று பேர்