பயத்தை வெளிக்காட்டாமல்............சும்மா!
சிலிர்த்துக்கொண்டு நில்!
உன் கண்களை நேர் நோக்கவிடாதே!
எதிரி நீ ரௌத்ரம் கொண்டதாய் நினைக்கட்டும்!
கழி ஏதும் இருந்தால் தூர வீசிவிடு!
உன்னால் பிரயோகிக்கவே முடியாது!
இனிச்சர்வ ஜாக்கிரதை!
உம்முள் இடைவெளிவிடுதல் அபாயம்!
நீ கடிபட்டுக் குதறவோ பிராண்டவோ படலாம்!
ஆதலால்........!
எதிரி எதிர்பாராத ஒரு மின் கணத்தில்!
'லபக்'கெனப் பாய்ந்து கட்டிப்பிடி!
கிடுக்கிப்பிடிபோட்டு நெருக்கிப்பிடி!
இம்மியும் திணற அனுமதிக்காதே!
இன்னும் இன்னும் முழுவலுவுடனும்!
காற்றுவெளி இலாதபடி இறுக்கிப்பிடி!
மேன்மேலும் அமுக்கி அழுத்தி மெருகுகையில்!
ஜெயமும் சாந்தியும் பெருகும் காண்.!
முக்கிய முன் குறிப்பு:-!
மேற்படி உத்தியை யாரும் பெண்களிடம்!
பிரயோகித்தால் விளைவுகட்கு!
நான் ஜவாப்தாரி அல்ல
காருண்யன்