தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நல்லதோர் வீணை செய்தே

பாரதி ஜேர்மனி
அமைதி பார்த்த உன் முகத்தில் !
அள்ளித் தெளித்த சோகங்கள் !
அகத்தை மறைத்தாலும்..... !
அழகுக் கண்ணில் துயரங்கள். !
மயிலே உன் சிறகை ஒடித்தவர் யார்...? !
குயிலே உன் குரலை உடைத்தவர் யார்..? !
மௌனத்தின் மடியில் உன் முகம் புதைத்ததேன்..? !
மலரினும் மென்மை என்றுன் பலத்தை எரித்ததாலா..? !
தேன் நீ ! என்று சொல்லிச் சொல்லியே ... !
உனைத் தேளாய்க் கொட்டினாலும்... !
மான் நீயென வர்ணனை செய்ததால் மருண்டு நின்றாயோ..? !
விளக்கினை எடுத்து வை. வெளிச்சம் உன் வாழ்வில் என்பார். !
விட்டில் பூச்சியாய் நினைத்துனை விழுத்திடும்.... !
வேதனை பார்த்தாயா? !
மலராய் இருந்து கசங்கியே...நீயும்... !
மண்ணுக்குள் வீழ்வாயோ? !
மானாய்இருந்து நரிகளின் வாயிலே ... !
இரையாகி மாள்வாயோ? !
புயலாய் எழுந்து புரட்சிப் பூக்கள் தூவிடப்பறப்பாயா? !
புலியாய் எழுந்து புதுயுகம் படைத்திடும்... !
புதுமைகள் மறந்தாயா? !
விட்டில் பூச்சியாய் தினம் வீணாய்ப் போகும்உன் !
வாழ்வும் ஒரு வாழ்வா? !
கட்டிலும்தொட்டிலும் வாழ்க்கையல்ல... இனி !
கண்களைத் திறப்பாயா?. !
!
பாரதி ஜேர்மனி

மாயவனத்தின் வரிகளுக்குள் கடல்

ரசூல்
ஹெச்.ஜி.ரசூல்!
மழையாகவோ நதியாகவோ!
அருவி மாலையாகவோ!
பிரபஞ்சம் முழுதும் உருகிவழிய!
ஒரு மாயவனத்தின்!
வரிகளுக்குள் கடல்.!
* *!
உன் இசை நதியில் மிதந்துவந்ததொரு!
குழந்தை!
உடல்சுழி உயிர்தொட்டு!
கன்னத்தில் முத்தமிட்டு!
பின் திரும்பிச் செல்கிறது!
மற்றுமொரு பூவாய்.!
* *!
குரலைத் திருடியது யாரோ!
பாட மறுத்தது பொம்மை ஒன்று.!
* *!
வீட்டிற்குள் நடந்த பூகம்பத்தை!
அக்கறையோடு விசாரிக்கிறது!
முற்றத்தில் நட்டுவைத்த ரோஜாச் செடி

ஏன் எனக்கில்லை?.. தூய்மை.. எங்களுக்கு

சேயோன் யாழ்வேந்தன்
01.!
ஏன் எனக்கில்லை?!
-----------------------------------!
என் முன்னோருக்கு இருந்தது!
எனக்கு வால் இல்லை!
என் முன்னோருக்கு இருந்தது!
எனக்கு வாள் இல்லை!
என் முன்னோருக்கு இருந்தது!
எனக்கு வாழ்வில்லை!
02.!
தூய்மைப்படுத்துவதற்கு ஆயத்தமாகுமுன்!
----------------------------------------------!
ஒட்டடைக்குச்சியால்!
உங்கள் தலையில் படிந்துள்ள!
பூச்சிக்கூடுகளைத் துடைத்தெறியுங்கள்!
துடைப்பத்தால் பெருக்கி!
மனசின் குப்பைகளை!
வெளியே தள்ளுங்கள்!
ரத்த வாடை போகும்வரை!
கைகளை நன்றாகக்!
கழுவிக்கொள்ளுங்கள்!
ரத்தக்கறை படிந்த ஆடைகளை!
சவக்காரத்தில் ஊறவைத்துவிட்டு!
ஒருபொழுதாவது அம்மணமாய் நில்லுங்கள்!
03.!
எங்களுக்கு விடை தெரிந்த கேள்விகள்!
------------------------------------------------!
சரக்கு ரயில் என்பது!
மதுபானங்கள் ஏற்றி வரும்!
ரயிலல்ல!
ஆண்டிமனி என்றோர்!
உலோகம் இருந்தாலும்!
கோயில் மணி பித்தளையால்தான்!
செய்யப்படுகிறது!
!
மோடி மஸ்தானின் மாந்தரீகம் என்பதும்!
மோடி மேஜிக் என்பதும்!
வேறு வேறு!
இந்தியாவின் ‘கேபிட்டல்’!
வெளிநாடுகளில் இருந்தாலும்!
‘புதுடெல்லி’ என்பதுதான்!
சரியான விடை!
நாட்டைத் தூய்மையாக்க!
நாம் யாரும்!
சுத்தமானவர்களாக இருக்கவேண்டியதில்லை!
எங்களுக்கு விடை தெரிந்த!
இது போன்ற!
பொது அறிவுக் கேள்விகள்!
எந்தப் போட்டித் தேர்விலும் கேட்கப்படுவதில்லை

எழுதச் சொல்கிறது

நட்சத்திரன் செவ்விந்தியன்
மஞ்சட் பூக்காடுகளில் பூத்த மப்பில் !
கிழக்கிலிருந்து கொழும்புக்கு !
இந்தப் பிரிவுப் பயணம் !
மழை பெய்து ஓய்ந்து !
நான் மனசார இழைப்பாறிய கொஞ்சக் காலம் !
வாழ்வு கொடுத்த ஊர் !
உன்னைப் பிரிந்து கொண்டிருக்கிறேன் !
இந்தப் பயணம் தருகிற போதை !
எழுதச் சொல்கிறது !
இழந்த வாழ்வையும் வாழ்வின் கவிதையையும் !
கவிதையின் போதையையும் !
எழுதச் சொல்கிறது !
பிரிவில் பூக்கிற ஒரு துயரம் இதில் இல்லை !
வெண்மணல் கொடுக்கிற நதியும் !
காடுகளும் கூட !
என்னோடு தொடர்ந்து வருகிறது !
மீண்டும் மீண்டும் நகரங்களை நோக்கிப் போனாலும் !
நகரங்களை அவாவிய என் கனவுகள் போயிற்று !
நகர வாழ்வும் போயிற்று !
அழிந்துபோன நாகரீகங்களைப்போல !
அந்த வாழ்வு அப்படியே இருப்பினும் !
அங்கிருந்தபோது எனக்கு எழுத முடியவில்லை !
மனசார வாழவும் கிடைக்கவில்லை !
--நட்சத்திரன் செவ்விந்தியன் !
(1996) !
நன்றி: ’எப்போதாவது ஒருநாள்’ !
தாமரைச் செல்வி பதிப்பகம்

காத்திருந்த காதல்

ரிஷ்வன்
பார்த்த நாள் முதலாய்!
பேச துடித்தேன்!
பேசிய நாள் முதலாய்!
பழக தவித்தேன்!
பழகிய நாள் முதலாய்!
பார்வையில் ஏங்கினேன் !
உன் சம்மதம் பெற....!
ஒவ்வொரு முறையும் !
வெவ்வேறு விதமாய் வினவி!
உந்தன் மறுமொழி கேட்க!
எந்தன் உள்ளம்!
ஏங்கிய நாட்கள்!
எழுத்தில் எழுத முடியாத!
கண்ணீர் காவியங்கள்...!
மௌனமே உன் பதிலாய் !
பார்வையே என் வழியாய் !
பயணப்பட்டு.......!
காலத்தின் கோலமாய்!
காட்சிகள் மாறி!
சதியின் துணையோடு!
விதியின் மதியால்!
வெவ்வேறு திக்கில்!
விலகினோம்.....!
விடை தெரியாத விடுகதையாய் !
விளங்காமல் என் வாழ்வை!
திசை தெரியாத மையிருட்டில் !
தெளிவில்லா பாதையில்!
முடிவில்லா பயணமாய்...!
காலசுழச்சியில் !
வாழ்வை தொலைத்த!
இருவரும் ஒருவழியாய் !
ஒருவிழாவில் !
ஒன்றாய் கலந்தொமே....!
திசை மாறிய பறைவைகளாய்!
திசை மாறி சென்று!
உருமாறி இப்பொழுது....!
அன்று பார்த்த !
அதே நிலவாய் !
இன்றும் நீ....!
பார்வைகள் கலந்தோம் !
யார்வரவையோ எதிர்பார்ப்பதாய்!
என்னை பார்த்தாய்....!
அதே பார்வை!
அதே மௌனம்!
என் கண்கள் பனித்தது....!
ஒருவழியாய் விழாமுடிய!
எதிரெதிர் திசையில் நடக்கையில்!
என் விழிகள் உன்மீது...!
உன் விழியில் நீர்த்துளி!
உன்னுள் இன்னும் நான்!
இருப்பதை உணர்த்துவதாய்

பிரிவு

லலிதாசுந்தர்
தேக அழகை விட!
உள்ளத்தின் அழகு சிறந்தது என!
- ரசிக்க வைப்பது!
கண்கள் பேசும் மொழியை விட!
உள்ளங்கள் உரசிக்கொள்ளும் மொழி!
இனிமையானது என!
- உணர வைப்பது!
உடலின் வேதியியல் மாற்றங்களை விட!
உள்ளங்களின் வேதியியல் மாற்றங்களை!
சுகமானது என!
- புரிய வைப்பது!
ஐம்புலன்களை அடக்குவது கடினம் என!
வள்ளுவன் வரிகளை ஞாபகபடுத்துவது!
உண்மை காதலின் பிரிவு.!
-- லலிதாசுந்தர்

கனவுகள் மெய்ப்படவேண்டும்

சத்தி சக்திதாசன்
நெஞ்சத்திலே துஞ்சாமலே!
நிதமும் தோகை விரித்தாடும்!
கனவுகள் ஆயிரமுண்டு தோழா!
காலம் மாறி அவை கைகூடிட .....!
கண்களிலே விரியும் பூக்கள்!
கண்ணீர்ப் பூக்களாய் தினமும்!
காற்றைப் புசித்து வாழுவோரின்!
காலம் மாறி புன்னகை பூத்திட ....!
தமிழ் நெஞ்சில் கொண்டு பாவம்!
தாளாத வறுமையுடன் போராடும்!
தீராத தாகம் கொண்டோர் வாழ்வில்!
தீராத ஏக்கங்கள் யாவுமே தீர்ந்திட .....!
அறிவென்னும் விளக்கை பற்றவைக்க!
அடையாமல் வசதி என்னும் திரியை!
ஆறாகப் பாயும் ஆவலைத் தீர்க்க!
அல்லாடும் சிறார்கள் வாழ்வு சிறந்திட ....!
நேற்றைய செல்வம் கொடுத்த நிழலில்!
இன்றைய வாழ்வைக் கழித்துக் கொண்டு!
நாளை இல்லாதோரைப் பார்த்துக் கொண்டே!
நடப்போர் இதயம் மாறி உள்ளம் விரிவடைந்திட.....!
உழைத்து உழைத்துச் சிவந்த கைகளை!
உயர்த்திப் பிடிக்க வலுவின்றிப் பாவம்!
உருக்குலைந்த உருவங்களின் வாழ்வு!
உயர்வடைந்து உள்ளத்தில் உவகை பூத்திட ....!
பேதங்களற்ற பூரண சமுதாயம் ஒன்றில்!
பிணிகளற்ற மக்கள் இணைந்து ஒன்றாகிப்!
பாசமலர்களால் இணைந்த பூமாலையாய்!
பூமி மாறும் காலம் தோழனே! வந்திட ...!
கனவு மெய்ப்பட வேண்டும் என்று!
கரங்களைக் கூப்பி நான் எம்மைக்!
காத்திடும் பொதுவான இறை நோக்கி!
கண்ணை மூடிக் கனவுலகில் நீந்திட...!
-சக்தி சக்திதாசன்

வாழ்வு

ஜீவன்
2. !
வாழ்வு !
!
வீசும் காற்றின் !
சுகம் தொலைந்து !
போயிற்று !
மெல்லிய !
பூவின் சுகந்தம் !
நினைவிலின்றிப் !
போகிறது !
ஓர் !
இனிய இசையை !
கேட்கமறுத்து !
மறுநாள் !
வேலைக்கென்றானது !
இன்றைய தூக்கம் !
பார்த்துப்புன்னகைக்கும் !
சிறு குழந்தையின் !
கையசைப்பை !
தழுவமறுத்து !
செல்லுகிறது !
காலம் !
அலாரம் வைத்து !
புணர்ந்தாயிற்று !
இன்னுமென்ன ? !
நேரத்தில் தொலைத்து !
பெரும் நகரத்து !
இயந்திரச்சகதிக்குள் !
சிக்கி !
குடல் தெறிக்க !
ஓடும் வேகத்தில் !
தேய்கிறது !
மிச்சமிருக்கும் !
வாழ்வு

மாவீரங்களைப் பாடுங்கள்

இளவரசன்
கார்த்திகைப் பூக்கள் மலர்ந்த பூமி !
மெல்ல மெல்ல உங்கள் காலடிகளை !
இங்கே வையுங்கள் !
கார்த்திகைப் பூக்கள் இங்கே !
கண்ணயர்ந்து உறங்குகின்றனர். !
காடு, மேடு களனிகளில் !
காலநேரம் பாராது !
கண்ணயர்ந்து தூங்காது !
கண்ணி வெடி வயல் கடந்து !
தமிழ் நிலம் காத்தவர் !
எம் மண் மானமதை மீட்டவர் !
கண்ணயர்ந்து உறங்குகின்றனர் !
மலர்தனை நிறைத்து !
இரு கை குவித்து !
கண்மணிகள் கல்லறையில் னவுங்கள் !
உடல் வலி, நோய் துன்பம் !
எண்ணியே பாராது !
களம்தனில் பகைதனை எரித்து !
நிலம்தனை மீட்ட மறவர் !
இதமாய் இங்கே னங்க !
மலரது னவி !
மாவீரங்களைப் பாடுங்கள் !
!
கனடாவிலிருந்து இளவரசன்

மறைந்தவள் அவள் நிறைந்தவள்

வே .பத்மாவதி
முதன்முதலில் பார்த்தபோது மகிழ்ச்சி !
மனம்முடிந்த பின்புஏதோ கிளர்ச்சி!
கைபிடித்த கல்யாணநாள் -பின்!
காதலில் பலநாள் மோதலில் சிலநாள்!
அடுக்களையில் அன்றொரு நாள் -நீ!
அறியாமல் அவசரம் கொண்ட நாள்!
அலறினாய் தீ கொஞ்சம் பட்டதால்!
அதிர்ந்தேன் உன் கை சற்றே சுட்டதால்!
அதனால் உன்னை நானும் எரிக்காமல்!
அலுங்காமல் உன்னுடல் குலுங்காமல்!
அனுப்பி வைக்கிறேன் மனம் பொறுக்காமல்!
முதல் நாள் கிடைத்த ஊதிய உயர்வு!
மூக்குத்தி வாங்கலாம் என்ற உன் கனவு!
மூடிவைத்தானா எமன் அவன் வரவு!
முடிந்தே போனதே எந்தன் நினைவு!
மின்சார மயானத்திற்க்கே அந்த செலவு!
சேலை வாங்கச் சென்றால் சீறுவேன்!
சிக்கனம் கொள் என்றே சினமுறுவேன்!
சிரித்தாலும் சிலநேரம் முறைப்பேன்!
சேலை வாங்கி வந்து விட்டேன்!
பிடிக்கிறது என்றே சொல்வாயா!
சொல்லாமல் சொர்க்கம் சென்றதற்கு!
மன்னிப்புக் கொள்வாயா!
ஒருவேளை நான் மடிந்திருந்தால்!
ஒவ்வொன்றாய் வளையல் உடைத்திருப்பாய்!
கட்டிய தாலி தனை கழட்டி இருப்பாய்!
பூவும் பொட்டும் இழந்திருப்பாய்!
இவ்வுலக வாழ்வையே துறந்திருப்பாய்!
வாழ்விலும் சாவிலும் உடன் இருப்பேன்!
வார்த்தை சொல்லியே வலம் வந்தேன்!
உன்னை பிரிக்கத் திட்டம் இட்டான்!
உடன்கட்டை தடுக்க சட்டம் இட்டான்!
உன்னுடன் வந்தால் உயர்ந்தவன் பட்டம் இடுவான்!
வந்த நாட்கள் முடிந்தது வாழ்வில்!
வரும் நாட்கள் கலந்திருப்போம் சாவில்