மொழிதலால் வெளியிடாத - ஜதி

Photo by Shyam on Unsplash

மொழிதலால் வெளியிடாத வார்த்தைகள்!
---------------------------------------------------!
பேசும் வார்த்தைகளெல்லாம் !
பேசவேண்டிய வார்த்தைகளுக்குத்!
தூது வருகின்றனவோ!
என்கிற ஐயத்தைத் !
தூண்டிய வண்ணமே உள்ளன!
யாதொரு பேதமுமின்றி!
யாவரின் மனங்களிலும்!
எண்ணிலடங்காமல்!
குவிந்து கிடக்கின்றன!
மொழிதலால் வெளியிடாத வார்த்தைகள்!
கண்ணீராகவோ!
புன்னகையாகவோ!
கேள்விகளாகவோ!
பதில்களாகவோ!
உரைக்கப்படவேண்டிய இவ்வார்த்தைகள்...!
மௌனங்களாகவோ!
தயக்கங்களாகவோ!
மாற்று வார்த்தைகளாகவோ!
மறைக்கப்படுகின்றன!
பதுக்கப்பட்ட நிலையிலானதொரு!
கண்ணிவெடியின் கலக்கத்தை!
மொழியாதவரிடமும் கேட்காதவரிடமும் !
நித்தமும் உண்டுபண்ணியபடியே!
உள்ளன இவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும்!
இருப்பினும்...!
இவ்வார்த்தைகளைச் சேகரிப்பதே!
இவ்வாழ்வின் கடமையென்றும்!
இவற்றை வெளியிடாமலிருப்பதே!
இவ்வாழ்வின் தன்மைகளைப் பாதுகாப்பதாயும் !
மறுக்காமல் ஏகமனதுடன் நம்பப்படுகின்றன!
யார் கண்டார்கள்??!
இவ்வார்த்தைகள் யாவும்!
ஒருநாள் மொழியப்படுமெனின்!
அடுத்த நாள்முதல் நாமெல்லாம்!
ஊமைகளாகிவிடுவோமோ என்னவோ...!
-ஜதி!
[22-04-2008]
ஜதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.