தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

முதலாய்க் கண்டேன்!

கோகுலன்
மனிதனும் மனிதன் சார்ந்த !
சப்தங்கள் எதுவுமற்ற !
ஒரு பின்முற்றத்தின் முன்னிரவில்தான்!
முதலாய்க் கண்டேன் அவனை!!
காய்ந்து தரைபார்க்கும் இதே!
தென்னைமரத்து மட்டையில்தான்!
தொங்கிக்கொண்டிருந்தது!
அவனது நீண்ட அங்கி!
நேற்றைய மழை முற்றத்தில் !
மண்புழுக்கள் வரைந்துபோன !
கோலத்தை விரல்களால் !
வர்ணம்பூசி ரசித்தான் வெகுநேரமாய்!
இன்று உதிர்ந்த பூக்களுக்கும்!
நாளை மலரும் மொட்டுகளுக்குமாய்!
பனைமரத்தின் சரசரக்கும் தாளத்துடன்!
கவிதை படித்தான் சிறிதுநேரம் !
தூக்கம் தழுவாது !
இமைகளைப் போர்த்திக்கொண்டிருந்த !
என் கண்களின் மேல்!
ஒரு அமைதிப்பொதியை!
தூக்கி வைத்திருந்த அவன்,!
உயரப்பறந்ததொரு விமானத்தின் சத்தம் !
தூரமாய்க்கேட்ட அந்த !
முதல் நொடியில் தான்!
அந்த நிலவின் பின்னால் !
ஓடிச்சென்று ஒளிந்துகொண்டான்!
செல்லும் அவசரத்தில் தவற விட்ட!
அவன் புன்னகைகள் மாத்திரம்தான்!
யகங்களாய் இறைந்துகிடக்கிறது!
என் பின்முற்றத்தில்!!

காசா குழந்தையின் கடைசி வலி

அக்மல் ஜஹான்
அடித்து விட்டார்கள்..!!
வலிக்கிறது!
வாப்பா...!!!
கொத்து கொத்தாய்!
குலை குலையாய்..!
சந்தைக்குப் போகும் !
காய்கறி மாதிரி!
சிதைத்து விட்டார்கள் ...!
காரணம் ஏதும் சொல்லாமலே..!
கூட்டை !
கலைத்து விட்டார்கள்!
வாப்பா...!!
புழுதி கிளப்பி விளையாடும்!
என் தெருக்களிடம் சொல்லுங்கள்..!!
தலை வேறாய்!
துண்டுகளாக்கப்பட்ட!
சியோனிசத்தின் கொடூரம் பற்றி ...!
என் நண்பர்களிடம் சொல்லுங்கள்..!!
துடி துடிக்க!
என் தேசத்திலிருந்து!
துடைத்தழிக்கப்பட்ட!
துயரம் பற்றி...!
என் வகுப்பறையின்!
கதிரைகளிடம் சொல்லுங்கள்..!!
என் கனவுகள் பறிக்கப்பட்ட!
சிறகுகள் முறிக்கப்பட்ட!
வரலாற்றுத் துயரம் பற்றி ...!
உண்மையை மறைத்த!
ஊடகங்களிடம் !
உரத்து சொல்லுங்கள்..!!!!
சியோனிசத்தின் வலிய கரங்களில்!
உங்கள் மகன் !
சுவர்க்கத்திற்கு!
சென்று விட்டானென்று....!
உம்மாவின் !
அரவணைத்த சூடு!
இன்னும் ஆறவில்லை!
வாப்பா..!!
இடிந்து விழுந்த நகரங்களில்!
புழுதி படிந்த தெருக்களில்!
தொலைந்து போன மகனின் !
மைய்யித்தை!
தேடி அலையும்!
உம்மாவிடம் சொல்லுங்கள்..!!!
அவள் ஈரல்குலை!
இறக்கவில்லை என்று...!
வெறுமை நிறைந்த !
தொட்டிலை !
வெறித்துப்பார்க்கும் !
அவள் இரவுகளிடம் சொல்லுங்கள்..!!
எனக்காக அழவேண்டாமென்று..!
என்னை சுமந்த!
கர்ப்பப்பை!
வலிமை மிகுந்ததென்று !
சொல்லுங்கள் வாப்பா..!!!
எனக்கு தெரியும்..!!
இரத்தமும் சதையும் புதையுண்ட !
என் தேசம்!
அங்குலம் அங்குலமாய் !
மீட்கப்படும்..!
குருதி நனைத்த !
தாயிடம் சொல்லுங்கள்...!!
என்னை புதைத்த இடத்தில் !
தேசியக்கொடி !
முளைக்குமென்று..!
அடித்து விட்டார்கள்.!!
வலிக்கிறது!
வாப்பா...!!!!

இறுதிச் சடங்கு

ஜே.பிரோஸ்கான்
புதைக்கப்படும் அவ்வுடலை நினைப்பது!
எவ்வளவு பெரிய சஞ்சலம்.!
அங்குமிங்குமாக புரட்டி புரட்டி!
நீராட்டிய அந்தவுடலை,!
இறுதியாக பார்க்க எவ்வளவு ஆனந்தம்,!
கவலைகள் சுமந்த பொழுதென்றாலும்!
இறுதிப் பார்வை ஆனந்தம் தான்.!
இறுதிப் படுக்கை வரை!
எத்தனை சடங்கில்!
எத்தனை சண்டையில்!
எத்தனை விருந்தில் கலந்து!
இன்பப்பட்ட அந்தவுடல்,!
நோயில் விழுந்து தோய்ந்து!
இறந்து போன பின்!
மறுக்கவும் தடுக்கவும் முடியாமல்!
மண்ணில் புதையுண்டு போவது!
கட்டளையெனின்.!
புதைக்கப்பட்டவுடல் நண்பனாக!
அல்லது உறவாக இருந்து போனாலும்!
மண்ணில் புதையுண்டு போகும் போது!
பார்ப்பது கஷ்டம் தான்,!
அடக்கஸ்தளம் விட்டுப் போகும் வரையில்.!

பிரிந்தே இருக்கிறேன்

கண்ணபிரான்
நண்பர்களா நாம், !
நண்பர்களாய்ப் பிரிய.!
எதிரிகளா நாம், !
பகைமையில் புரள.!
நம்மில் எவரும் -!
கடவுளா,!
கல்லாய் சமைந்திட.!
மனிதரா, !
உள்ளதை மறைக்க.!
மிருகமா,!
மறைக்காமல் விட்டிட.!
நானுன் பாரத்தனா,!
பாதியாய் அமைந்திருக்க.!
உரிமையுற்றவனா, !
பெருமையில் பொங்கிட. !
உரிமையற்றவனா. !
பொறாமையில் புழுங்கிட. !
ஒன்றும் ஒன்றும், !
ஒன்றும்தான். !
ஒன்றல்ல.!
உன்னில் நான்!
என்னில் நீ !
உண்மையில் யார்?!
விக்கிரமனுக்கில்லா!
விடைதெரியாக் கேள்வி!
மீண்டும் வேண்டாம்..!
உன்னில்!
பிரிவே!
'பிரேமை' யெனில்!
பிரிந்தே!
இருக்கிறேன்.!
!
-கண்ணபிரான்

மற்றுமொரு விடியல்

அறிவுநிதி
செடியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட!
பூவாக சிரிக்கின்றான்.!
இரவு புலர்ந்த பின்னும் !
வழிநெடுக இருள் தொனிக்கிறது!
கண்கள் மூடி மூடி திறந்துகொண்டு!
இருள் மீது நடக்க !
பெரும் அச்சம் கொள்கிறான்!
வெளிச்சத்தல் நின்றுகொண்டு அவனால்!
இருளை மட்டுமே யாசிக்க முடிகிறது!
பகல் அவனது கனவாகிறது!
ஒரு முனைப்புடன் அடியெடுத்து வைக்கிறான்!
இருள் உடைய துவங்குகிறது!
எங்கிருந்தோ எழும் அலறல்கள் !
அவன் செல்லும் திசைகளை பயமுறுத்துகின்றன!
இருந்தும்!
திசைகள் விசாலமான அழைப்பை!
அவன் பாதங்களில் வைக்கின்றது !
அவன் ஆரவாரங்கள் திரண்டு தீப்பந்தமாகின்றான்!
தகிக்கும் இரவுக்கப்பால் !
அவனது உலகத்தை துவங்கிறது!
இன்னொரு வரியன்!
!
கவிதை: அறிவுநிதி

போர்முனை இரவுகள்

கவிதா. நோர்வே
வேதாளம் சொல்லும் கதைகளின்!
விடை தெரியாக் கேள்விகளால்!
சிதறுண்டு போகும்!
சில மனிதரைப் போல...!
புரியாத காட்டின்!
வழி தெரியாத போக்கனாய்...!
நான்!
அரசியல் குப்பை பொறுக்கி!
அதை எரிக்கும்!
முறை தெரியாமல்...!
எரிந்துதான் போவரோ!
என் சனமும்!
தெறித்து விழுந்த!
குழந்தையின் உரு!
உன் கனவிலும் அழுததுண்டா!
இடம் பெயரும் உறவுகளின் வலி!
விஷம் தோய்ந்த முனைகளாய்!
குத்துவதுண்டா!
பதினாங்கு வயதில்!
வீராச்சாவு எய்திய தம்பி!
உன் மூடிய கண்களுக்குள்!
புருவம் உயர நிற்பதுண்டா!
நாம் விளையாடிய வீதிப்புதரில்!
அக்காள் அம்மனமாய் கிடந்த!
அந்தநொடி!
வாழ்ந்து பாத்திருகிறாயா நீ?!
எல்லாம் உறிஞ்சித் தின்ற!
வேதாளங்கள் துணையொடு!
இன்னும் எத்தனை வருட!
பயணமிது!
நம்பிக்கையில் தள்ளிப்போடப்பட்ட!
மரணங்கள்!
இன்னும் எத்தனை நாள்!
உயிரோடிருக்கும் சொல்!
கொன்று குவிந்த என் சனத்தில்!
ஒருவனுக்காவது!
கருவறை கட்ட முடியுமா உன்னால்!
எடுபட்ட பயமவனே!
எந்தப் புண்ணாக்குப் பதிலும் வேண்டாம்!
புரிந்துகொள்ளேன்!
உயிர் பற்றியாவது

சத்தம்

வேதா. இலங்காதிலகம்
7-10-07.!
ஒன்றுடன் ஒன்று மோதுகையில் துளிர்க்கும்,!
ஒன்றுடன் ஒன்று இணைகையில் வளரும்,!
ஒன்றும் காற்றின் கூட்டிணைவு சத்தம்.!
சத்தம் அளவோடு பிறந்தால் இரசனை.!
சித்தம் கிறங்கிடும் தித்திப்பில் சுரணை.!
பித்தம், தித்தமும் மொத்தமாய்ப் பிரிவினை.!
வேரான அடிப்படைச் சத்தம் ஓங்காரம்.!
பேரான முத்துமொழி, சத்தத்தில் பிரசவம்.!
சீரான மொழி, பிழையுச்சரிப்பில் பாழாகும். !
பார்வையற்றோனுக்குச் சத்தம் அடையாளம்.!
ஆர்வப் பாடகனின் குரல் சத்தம் பொக்கிசம்.!
சோர்வைக் கலைக்கும் இனிய இசைச் சத்தம்.!
இதயத் துடிப்புச் சத்தம் உயிரிற்குத்தரவாதம்.!
கைதட்டற் சத்தம் பிரசங்கியின் ஊக்கம்.!
கைவச நித்திரையைக் குறட்டைச் சத்தமழிக்கும்.!
கத்தல் சத்தத்தில் இரத்தம் கொதிக்கும்.!
பித்தம் கொதிக்கும், மூத்தல் வேகமாகும்.!
சத்தங்கள் பலவகை, நவரசங்களாய் இழையும்.!
!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
----------------------------------------------!
( தித்தம் - கசப்பு.!
மூத்தல் - முதுமையுறுதல்.)

காதல் தோல்வி - II

சரவண வடிவேல்.வே
வழக்கம்போல்!
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்!
இந்த முறை!
சற்று ஜாக்கிரதையாகவே செயல்பட்டேன்.!
முதலில் அந்த காகிதங்களை கிழித்து!
பின், அவற்றை தீயில் எரித்துவிட்டேன்.!
நினைவு பொருள் என்று என்னிடம்!
இருந்த ஒரேஒரு பேனாவையும் உடைத்து!
கடல் நீரில் தூக்கி எறிந்துவிட்டேன்.!
இ-மெயில் உரையாடல்களை மொத்தமாக!
இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிட்டேன்.!
நினைவுகளை அழிக்க கையில்!
எப்பொழுதும் ஒரு ஸ்காட்சை!
வைத்து உள்ளேன்.!
இனி ஒரு தடயமும் இல்லை.!
யாராலும் சந்தேகிக்க முடியாது!
யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
யாராலும் நீருபிக்க முடியாது!
நீருபித்தாலும்!
எங்கள் பிரிவை உங்களால்!
தடுக்க முடியாது!
இந்த முறை சற்று உரக்கமாகவே!
சொல்கிறேன்!
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்

கொட்ட‌ப்ப‌டும் வார்த்தைக‌ள்

ராம்ப்ரசாத், சென்னை
கானல் நீர் காரணிகளால்!
உருவாகும் மேடு பள்ளங்களை!
சமன்படுத்தவே கொட்டப்படுகின்றன!
வார்த்தைகள்...!
உடைத்தெறியப்படும் மனச்சுவர்கள்!
மட்டுமே அறியும் வார்த்தைகளின்!
கூர்மை...!
மேடுப‌ள்ள‌ங்க‌ள் ச‌ம‌ன்ப‌ட்டாலும்!
உடைந்த‌ சுவ‌ர்க‌ளை!
பூச என்றுமே முடிவ‌தில்லை...!
உடைந்த‌வைக‌ள்!
உடைந்த‌வைக‌ளே...!
உடைந்த‌ சுவ‌ர்க‌ள்!
சித்திர‌ங்க‌ள் தாங்குவ‌து!
சிக்க‌லான‌ ஒன்று...!
கோடுக‌ளையும் வண்ண‌ங்க‌ளையும்!
துணைக்க‌ழைத்தே!
விரிச‌ல்க‌ளை ம‌றைக்க‌!
முடிகிற‌து...!
சுவ‌ர்க‌ள் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டால்!
விரிச‌ல்களும் தாங்கும்!
சித்திர‌ங்க‌ளும் தாங்கும்...!

நல்வதோர் வீணையாம், நந்தவனப் பூவாம்

வேதா. இலங்காதிலகம்
நல்லதோர் வீனண என்பார்! !
நந்தவனப் பூக்கள் என்பார்! !
பெண் விடுதலை என்பார்! !
பேச்சோடு நின்றிடுவார்! !
வல்லமை காட்டி நின்றால் !
வக்கரித்துக் கோணி நிற்பார்! !
பெண் பயம் விடுத்தாலும் !
பெண் நேர்மை பேசினாலும் !
பெண் கேள்வி கேட்டாலும் !
ஏன் பொங்குகிறது ஆணினம்? !
ஆண்டான் அடிமை வழிவந்த பழக்கமா? !
அடக்கு முறையில் அடங்கிய புழுக்கமா? !
காலமாற்றக் கருத்து விரிவை !
ஏற்று நடக்க ego தடையா?