அலையும் கண்கள் …!
---------------------------------------------------!
சவரம் செய்துபலமாதங்கள்!
தாண்டிய முகம் …..!
சீருடை அணிந்திருக்கும் !
சற்றுவாகான உடல்…..!
காலணிகளையே கண்டிராத!
புழுதிபடிந்த கால்கள் …..!
சாலையில் அவன் வரும்போதெல்லாம்!
ஊரே முணுமுணுக்கும்!
அவனைப்பற்றி தவறாய் …. !
தன்னைத்தான் ஏசுகிறார்கள்!
எனத் தெரிந்தும் புன்னகை!
உதிர்த்துவிட்டு போவான் …..!
சில சமயம் தடித்தபுத்தகங்களை!
கையில் வைத்துக் கொண்டு!
தனியே அமர்ந்திருப்பான் …!
தேநீர்கடை மேசையில்!
அமர்ந்தபடி புகைத்துக்கொண்டே!
தேநீரை ருசிபார்ப்பான்…….. !
தனக்கு தவறெனப்பட்டவைகளை!
தட்டிக்கேட்க்கும் நோக்கில்!
தர்க்கம் செய்வான் ……!
புரியாத விசயங்களைக்கூட!
புரியும்படி விளங்கச் !
சொல்வான் …..!
என் பேராசிரியருக்கு கூட!
தெரியாத பதில்கள்!
அவனிடமிருந்து அடிக்கடி வரும் ….!
எல்லாக் கருத்துக்களையும் கூறிவிட்டு!
பகுத்துபார்த்து ஏற்றுக்கொள்!
தம்பி என்பான் ……!
அகத்திலும் புறத்திலும்!
நண்பர்கள் வந்து!
போவர் ….!
அவன் என்னுடன்!
பேசுவதை யாரவது!
பார்த்தல் அவ்வளவுதான் ….!
வாழ்வியல் மேதைகள்!
வரிசையாய் வந்து!
என்னை வசைபாடுவார் ….!
கூடா குற்றம்!
செய்ததை போல!
என்னையும் பார்பர் ….!
அவன் புலம்பி நான்!
பார்த்ததில்லை -மகிழ்ச்சியாய்!
திரிவான் …..!
போராளிக்கு மகிழ்ச்சியா?!
என்றால் மகிழ்ச்சி!
என்பது போராட்டம்!
என்பான் ……!
எது எப்படியோ …..!
ஊரின் பார்வையில்!
அவன் “பிழைக்கத்தெரியாதவன் “!
என் பார்வையிலோ!
அவன்” புரட்சிக்காரன் “!
உங்களுக்கு “முகம் தெரியாத புரட்சிக்காரன்”……..!
மனிதனாய் பிறந்து!
மனிதருக்குள் புதைந்த!
அவனை தொலைத்து!
விட்டு தேடிக்கொண்டு!
இருக்கிறேன் …!
புரியாத கேள்விகளுக்கு!
பதில் தருவான் என்ற!
நம்பிக்கையில் ……
மகி