என்னைத் தொலைத்த - சத்தி சக்திதாசன்

Photo by the blowup on Unsplash

என்னைத் தொலைத்த(தொலைக்கும்) கணங்கள் !
!
அந்த ஒரு கணத்தில் !
அரசமரத்துக் கிளைதனில் !
அன்றில் ஒன்று தாவிய !
அழகு கண்டு நான் !
அந்தக்கணம் எனைத் !
தொலைப்பேன் !
!
அழகுவிழி மலர் கொண்டு !
அம்பொன்று என்மீது !
அவளெய்த போதன்று !
அரைவினாடிப் பொழுதினிலே !
அவசரமாய் நான் எனைத் !
தொலைத்தேன் !
!
பூவிரியும் சோலையிலே !
பூந்தென்றல் வீசுகையில் !
பூவிலந்த வண்டமர்ந்து !
பொழியுமந்தத் தேனருந்தும் !
பொன்மாலையில் நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
கைநீட்டி காத்திருக்கும் சிறுவன் !
கண்களிலே ஏக்கத்துடன் !
கருணை எதிர்பார்க்கையில் !
கண்மூடித்திறக்குமுன்னே அவன் கையில் !
கச்சிதமாய் ஒரு நோட்டை !
கைகளினால் கொடுக்கையிலே !
கண்களை நம்பமுடியாமல் திகைத்து !
காற்றாய் அவன் பறக்கும் வேளையில் !
கண்நேரம் வாஞ்சையிலே நான் என்னைத் !
தொலைத்தேன் !
!
காற்றோடு காற்றாய் என் அன்னை !
கலந்து விட்ட பின்னாலும் !
கனவுலகில் சிலநேரம் காட்சியாகிக் !
கதைபேசி என்னோடு சேர்ந்து !
கவிதைகளை ரசித்திருக்கையில் !
கனவு எனும் கானகத்தில் நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
காதலினால் என்னைக் கட்டிப்போட்டு !
கலியாணம் என்னும் பந்தத்துள் அணைத்து !
கருணைமிகு மனதோடு கட்டுண்டு !
கடினமெனும் பாதையூடு கைபிடித்து !
கவலைதீர்ந்த ஊருக்கு அழைத்துச் சென்ற !
கண்மணி என் மனைவி தனை நினைக்கையில் !
காலமெல்லாம் நான் எனைத் !
தொலைப்பேன் !
!
தமிழ் என்னும் கன்னியொருத்தி !
தனைக்காட்டி எனை மயக்கி !
தரணியிலே வாழுமட்டும் மறக்காமல் !
தன்னோடு கலக்க வைத்து !
தாகம் தீருமட்டும் கவிதையென்னும் நீரூற்றி !
தகமதைத் தீர்க்கையிலெ நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
கண்ணதாசன் என்றொரு கவிஞனின் !
கவிதையெனும் கானகத்தினுள் !
கண்மூடி நான் நடந்து வேண்டுமென்றே !
காணமல் வழிதொலைந்து !
களைத்துக் கண்மூடும்வரை !
கட்டாயமாக நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
அன்புதனை பயிரிட்டு !
அன்பையே அறுவடை செய்து !
அன்புடன் தமிழ் வளர்க்கும் !
அன்புடன் குழுமத்துக்குள் !
அன்புடனே நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
கருவினிலே உருவாகி என் !
கைகளில் குழந்தையாய் !
கண்களில் ஒளியாகி !
கட்டிளம் காளையாக !
கடமையுடன் கல்விகற்கும் !
கண்ணான என் மகனின் !
கவரும் அந்தப் புன்னகையில் !
காற்றாகக் கலந்து நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
என்னைத் தொலைத்த கணங்கள் பல !
என்னைத் தொலைக்கும் கணங்கள் பல் !
எப்போதும் தொலைவதில் இன்பம் !
என்றும் கொடுப்பது தமிழும் கவிதையும் !
சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.