ஜெல்லிக் கணங்கள் - தேவமைந்தன்

Photo by Philippa Rose-Tite on Unsplash

தேவமைந்தன் !
காலையி லிருந்து !
கணினி இயக்கி !
சொடுக்கி பிடித்து !
அழுத்தி அழுத்தி !
விரல்நுனி, இடுக்கு !
முழங்கை வரையில் !
அரிப்பும் பிய்ப்பும்-- !
டாக்டர் சொன்னார்- !
இதுதெரி யாதா? !
கணினி அலுவல் !
பார்க்கும் பலர்க்கு !
வரும்பதி மூன்று !
நோய்க்குறி தம்முள் !
ஒன்றுதான் இது!என. !
அவர்க்குத் தெரியுமா !
என்றன் ஜெல்லிக் !
கணங்கள் நழுவி !
நழுவிப் போவது? !
அருகில் குறட்டை... !
ஆழ்ந்து தூங்கும்-என் !
அருமை மனைவியை !
எழுப்பி விடாமல் !
மீண்டும் கணினி. !
எனது தோழி !
என்றும் கைவிடா !
உரிமைத் தோழன் !
எல்லாம் அதுவே! !
முகத்தைச் சுழித்து !
மோவாய் இடித்துப் !
பார்த்ததே இல்லை, !
நான் அதை. !
திடீரென மூளையை !
ஜெல்லிக் கணங்கள் !
வழுக்கின. காலம் !
பின்புறம் நகர, !
இதுவரை யில்நான் !
வாழ்ந்த கணங்கள்-- !
என்-கண் ணிமைகளின் !
மேலே அமர்ந்துதம் !
கால்களைக் கீழே !
தொங்கப் போட்டுக் !
கொண்டே என்னை !
ஆட்டி வைத்தன. !
எல்லாம் கொஞ்சம் !
நேரம்தான்! !
ஜெல்லிக் கணங்கள் !
தோற்றுப் போக !
மூளை- வேகம் எடுத்தது... !
மூளையின் வேகம்-முன் !
எந்த ஒன்றின் வேகமும் !
எடுபடக் கூடுமோ? !
சொல்லி விட்டுப் !
போயே விட்டார் !
அருண கிரியார்--- !
சும்மா இரு, சொல் அற! வாம். !
சொல்லற்றுப் போனதன் !
சுமையால் தானோ !
அருணைக் கோபுரம் !
மேலே இருந்து !
வீழ்ந்து பெற்றார்-- !
முருகன் அருளை? !
சும்மா இருப்பதுவே !
சுகம். ஆம்! !
சும்மா இருந்து !
பாருங்கள். தெரியும்! !
சும்மா இருப்பது !
என்பது வேறு !
தம்பீ! புரியுதா? !
என்று உங்களில் !
தத்துவம் யோகம் !
தெரிந்தவர் கேட்பீர். !
புரியும். ஆனால் !
இயலுமா அதற்கு? !
வெறுமனே இருக்கும் !
மூளையுள் ஆயிரம் !
ஆயிரம் எண்ணக் !
குதிரைகள் தாவும்! !
நாமோ எங்கோ !
இழுத்துச் செல்லப் !
படுவோம் மறதியுள். !
ஜெல்லிக் கணங்கள் !
வந்து நம்மைக் !
காத்தால் பிழைப்போம்
தேவமைந்தன்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.