உறங்காத உண்மைகள் - சத்தி சக்திதாசன்

Photo by Tengyart on Unsplash

உண்மைகள் எப்போதும் மறைந்திருக்கும் - அவை!
உலகத்தில் ஏனோ புதைந்திருக்கும்!
நெஞ்சங்கள் அதனால் துடித்திருக்கும் - அவை!
வஞ்சங்கள் கண்டு தளர்ந்திருக்கும்!
பாசத்தை மதிக்கும் உயிர்கள் தானே - புவியில்!
நேசத்தால் உதைபடும் பந்துகள் ஆயின!
வேஷத்தால் மயக்கிடும் மனிதர்கள் - உலகில்!
கோஷத்தால் உயர்ந்திடும் நிகழ்வுகள்!
பொறுமையால் கட்டுண்ட சொந்தங்கள் - வாழ்வில்!
வெறுமையாய் தவித்திடும் பொழுதுகள்!
கருமையை விலக்கிடும் வேளைகள் - என்றும்!
வரும்வழி புரியாத ஜீவிதங்கள்!
இறைவனின் பாதங்கள் தொழுதிடும் - சில!
இதயங்கள் என்றுமே அழுதிடும்!
இதுகூட இயற்கையின் நியதியோ - அவனியில்!
இவர்வாழ்வில் இன்பம் இனிவருமோ ?!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.