தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பரதேசி

சின்னு (சிவப்பிரகாசம்)
தீயைத் தீண்டிவிட்டேன் !
தீப்புண்ணும் பெற்று விட்டேன் !
தனிமை என்னும் பெரும் பேயை !
தாரமாகப் கொண்டு விட்டேன் !
பிழைப்பைத் தேடும் பிணையக் கைதியாய் !
வாழ்வு முழுதும் ஓடிடும் ஆறாய்!
திக்கற்ற வாழ்வில் நானும் !
திசை மாறிய மானாய் !
விசைத்தறி வந்தபின் !
கைத்தறி கொண்ட !
மனிதனின் மனமாய் !
அலைபாயும் மனதுடன் !
பிறதேசம் வாழும் !
பரதேசி எனக்கு !
என் வீட்டு விழாக்கள் !
என்றும் எனதில்லையே!

கண்டதும் காதல்!

சின்னு (சிவப்பிரகாசம்)
இலை மீது இட்ட!
இருசொட்டு நீரை!
தழை முழுதும் பரப்பி!
தாமரையாய் மலரும்!
தாரகையே!
கரை மீது மோதும்!
அலை போல பார்வை!
கண்டு மீள்வதும்!
காண துடிப்பதும்!
கண்டுமா சிரிக்கிறாய்!
மலை மீது பிறந்து!
மடுவை மணந்து!
மகிழ்வோடு வாழும்!
நிலவாய்!
மாளிகையில் பிறந்து!
மல்லிகையாய் மலர்ந்த!
மரிக்கொழுந்தே எனை!
மணப்பாயோ!
சத்திரத்தில் சந்தித்து !
சடுதியில் முடிவெடுத்து !
காதலிக்க துவங்கிவிட்டேன் !
உண்ண வந்தவளே !
உலகம் அறிந்தவளே !
கணினி மொழி கற்றவளே !
மனதின் மொழி உணர்வையோ !
தடுமாறும் உள்ளத்தில்!
திசைமாறும் எண்ணமோ!
மனதில் வரும் சொல்லையெல்லாம்!
கவிதை என்றே சொல்கிறது!
ஓவியம் வரைந்தாலும்!
காவியம் எழுத!
கவிதை புனைந்தாலும்!
என் நாவில் சிதறும் சொற்களை!
சேர்த்து வைத்தாலும்!
அனைத்தும் சொல்லத் தலைப்படும்!
உன் அழகை மட்டுமே!
துள்ளும் மானும்!
துவண்ட செடியும்!
கோடை வெயிலும்!
கொடும் பனியும்!
பாவையர் கொஞ்சும்!
செல்லக் கிளியும்!
நிறைந்த குளமும்!
வறண்ட நிலமும்!
வாடைக்காற்றும்!
உன்னில் காண்கிறேன்!
உன் !
மோகனப் புன்னகைக்கு, பேசும்!
மொழிகளில் விளக்கம் இல்லை!
நீ !
மூன்று விரல் கொண்டு !
முகம் குனிந்து உண்ணுகையில் !
சிலிர்க்கும் சிந்தனைகள் !
சிதைய மறுக்குதடி !
காணும் முகத்தில் எல்லாம் கண்ணே !
உன் கண்கள் தெரியுதடி !
காரை தடத்தினிலும் !
உன் கால்தடம் தெரியுதடி !
வண்ண உடைகள் எல்லாம் !
நீ உடுத்த வெளிர்க்குமடி !
வாகனப் புகையும் கொஞ்சும்!
பனிபோல தெரியுதடி !
வண்ண தோகை கொண்டு !
வண்ணமயில் ஆடி வந்தால் !
உன் கண்கள் சுழற்றதே !
வண்ண மயில் நாணி !
தோகை உதிர்த்து விடும்!
கொக்கு பறக்கையிலே !
உன் விரல்கள் நீட்டாதே !
மீன்கள் மீன்கள் என்று !
விரல்கள் கொய்து விடும் !
ஆடும் சபைகளுக்கு !
அன்பே நீ போவதே .!
நீ கொஞ்சம் அசைந்தாலே ,!
ஆடும் நங்கையர்கள் !
அடங்கி ஒடுங்கிடுவர் .!
ஆடல் அரசி என்று !
பட்டமும் தந்திடுவார்!
ஆணாய் பிறந்து விட்ட !
ஆணவம் அழியுதடி!
உன் கடைக்கண் பார்வை தந்து !
என் வாழ்வுக்கு அர்த்தம் கொடு

நினைவுகள்

லியோ
தென்றலும் புயலுமாய்
மனம் தொடும் காற்று
நினைவுகள்

வாழ்க்கை

லியோ
ஒரே பத்திரிகையில்
பிறந்த நாள் வாழ்த்தும்
நினைவஞ்சலியும்
வாழ்க்கை...

வெறுமை

அக்மல் ஜஹான்
எப்போதும் முடிவதில்லை.....!
இயந்திரமாய் வாழ்ந்து முடித்த பின்பும்!
இதயம் நிரம்பாத!
செயற்கை வாழ்வின்!
வெறுமைகள்

பூக்களை மட்டுமே யாசிக்கிறது

அக்மல் ஜஹான்
பூக்களை பரிசளிக்கிறது!
வாழ்க்கை..!
சிலநேரம்!
பூக்களை பறித்தெடுக்கிறது!
பதறப் பதற..!
விதைகளாய் விழுந்து !
பூக்களாய் மலர்கிறது !
சொல்லாமல் கொள்ளாமல்...!
புயலுமின்றி !
மழையுமின்றி!
மரங்களை சாய்த்து!
மண்ணோடு மண்ணாக்குகிறது!
நந்தவனத்தின் கனவுகளை..!
என்றோ ஓர் நாள்!
எல்லாப்பூக்களும்!
உதிர்ந்து விழும்..!
ஒரு கோடி துயர் விதைத்து..!!
என்றாலும்!
பூக்களை மட்டுமே யாசிக்கிறது..!
எப்போதும்!
ஆசைப்பட மட்டுமே!
பழகிப்போன!
மனசு

மனைவி பற்றிய கவிதைகளில்

நாவிஷ் செந்தில்குமார்
நாய் பற்றிய!
கவிதையைப் படிக்கிறபோது!
எனக்குப் பிடித்த மாதிரியாக!
நாயொன்றை!
உருவகப்படுத்திக்கொள்கிறேன்...!
இவ்வாறே பிற!
கவிதைகளை வாசிக்கிற போதும்!
அவையொத்த பிம்பம்!
மனவெளியில்!
மிதந்து செல்கிறது!
'இந்தச் சாயல்!
இன்னொருவன் மனைவியுடையதாக!
இருக்கக் கூடுமோ?'!
என்ற கேள்வியால்!
மனது லயிப்பதில்லை!
மனைவி பற்றிய கவிதைகளில்

பௌர்ணமி

நாவிஷ் செந்தில்குமார்
அமாவாசை அன்று!
இறந்துபோன!
நிலாவின் உடல்!
பதினைந்து நாட்கள் கழித்து!
ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள!
கோயில் குளத்தில்!
மிதக்கிறது

தாய்மை

நாவிஷ் செந்தில்குமார்
நீண்ட நேரமாகத்!
துணி வாங்கும் தாயின்!
முந்தானையைப் பற்றி!
கதறி அழும் குழந்தையின்!
குரல் கேட்டு!
பொம்மையொன்றின் மார்பில்!
பால் சுரக்கிறது!!

பசி

நாவிஷ் செந்தில்குமார்
பொரி போடுவதற்குப் பதிலாக!
குளத்தைச் சுற்றிய!
கழுகொன்றிற்கு!
என் தொடை மாமிசம்!
கொடுத்திருந்தால்!
இன்னும் சில நாட்களுக்கு!
வாழ்ந்திருக்குமோ!
மீன்கள்?!