தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வா வசந்தமே வா

நிர்வாணி
வா !
வசந்தமே வா !
உனக்காகத்தான் இத்தனை நாள் !
காத்திருந்தேன் !
ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும் !
உன் புன்னகையால் அடிபட்டு !
மயங்கியவனை !
உன் வார்த்தைகளால் எழுப்பிவிடு !
உணவையும் உறக்கத்தையும் !
மறந்து மயங்கிக்கிடக்குமென்னை !
மரணம் அடித்துச்செல்லுமுன்

நண்பர்கள்

இரா.பழனி குமார்
பிறக்கும் போதே நண்பர்களாய் பிறப்பதில்லை!
பிறந்திட்ட எவரும் நண்பர்களாய் இருப்பதில்லை!
இறுதிவரை பலரும் நண்பர்களாய் இருந்ததில்லை!
உறுதியாய் உள்ளோர் என்றுமே பிரிவதில்லை !!
இன்சொல் இன்முகத்தால் ஈர்த்திடும் அன்பர்கள்!
இதயத்தால் இணைந்திடும் நாளைய நண்பர்கள் !!
பள்ளிப் பருவத்தே துள்ளி விளையாடும்!
கள்ளமில்லா உள்ளமுடன் பால்ய நண்பர்கள் !!
கல்லூரிக் காலத்தில் கற்பனை கனவுடன்!
உல்லாச பறவைகளாய் உலாவரும் நண்பர்கள் !!
அலுவல் பணிதன்னில் உளமகிழ உரையாடி!
அளவோடு பழகிடும் பகுதிநேர நண்பர்கள் !!
பயணிக்கும் நேரத்தில் சயனிக்கும் நேரம்வரை!
சிந்தையின் சிதறல்களை பகிர்ந்திடும் நண்பர்கள் !!
நலிவுற்ற நேரத்தில் பொலிவுடன் மீண்டிட!
உதிரத்தால் உதவிடும் உயிரான நண்பர்கள் !!
அகமும் புறமும் இருவேறு உருவங்களாய்!
வஞ்சமிகு நெஞ்சுடன் வலம்வரும் நண்பர்கள் !!
காரியம் நடந்திடும் காலம்வரை உறவாடி!
முடிந்தபின் நட்பினை முறித்திடும்* நண்பர்கள் !!
உதவிகள் செய்திட்டால் உறவாடும் உள்ளங்கள்!
உதவிஎனக் கேட்டால் உதறிடும் நண்பர்கள்!!
புண்பட்ட நெஞ்சினை பண்பட்ட உள்ளத்தால்!
ஆற்றிடும் மருந்தாய் அருமைமிகு நண்பர்கள்!!
பொன்னும் பொருளும் பணமும் பதவியும்!
நம்மிடம் இருந்தால் நாடிடும் நண்பர்கள் !!
இல்லாமல் இருந்து இருக்கும்நிலை உயர்ந்திட்டால்!
அறியா முகங்களாய் மாறிடும் நண்பர்கள் !!
காலம் முடியும்வரை களைந்திடுவோம் பகையுணர்வை!
காலன் அழையும்வரை அணிந்திடுவோம் நட்புணர்வை!
இன்பம் நிலைத்திட ஒன்றிடுவோம் நண்பர்களாய் !!
இதயம் நிற்கும்வரை நின்றிடுவோம் நண்பர்களாய் !!
-இரா.பழனி குமார் !
சென்னை

அங்கீகாரம்

கி.அற்புதராஜு
காவிரி டெல்டா!
பேருந்து பயணம்!
ஒரு புறம் காவிரி!
மறுபுறம் கொள்ளிடம்!
இடையில்...!
கரும்பு!
நெல்,!
உளுந்து,!
பச்சை பயிர்,!
முள்ளங்கி,!
எள்,!
பருத்தி,!
வேர் கடலை...!
என பயிர்கள்!
விளை நிலங்களில்!!
நடுவில்!
உறுத்தலாக!
விளம்பர பலகையில்!
அண்ணாமலையார் நகர்!
அரசு அங்கீகாரம் பெற்ற!
வீட்டு மனைகள்- விற்பனைக்கு

யாரிடம் போய்ச்சொல்லி அழ

நிந்தவூர் ஷிப்லி
யார் செய்த சூழ்ச்சியிது?!
யாரிடம் போய்ச்சொல்லுவது?!
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை!
யாரிடம் போய்ச்சொல்லுவது?!
!
கனவுகளை காணவில்லை!
கண்ணிரண்டில் கண்ணீர் மழை!
இடம்பெயர்ந்த நாள் முதலாய்!
இன்றுவரை உறக்கமில்லை!
!
உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்!
உயிர் சுமந்து உணர்விழந்தோம்!
உறவிழந்தோம் உணவிழந்தோம்!
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்!
!
புயலழித்த பூவனமாய்!
புலமபெயர்ந்தோர் நாமானோம்!
உதிர்ந்த விட்ட பூவினிலே!
உறைந்து போன தேனானோம்!
!
நிலம் வீடு பிளந்ததம்மா!
நூலகமும் எரிந்ததம்மா!
பள்ளிகளும் கோயில்களும்!
பாழ்நிலமாய்ப்போனதம்மா....!
!
காற்தடங்கள் பதிந்த இடம்!
கண்ணிவெடியில் புதைந்ததம்மா!
கனிமரங்கள் துளிர்த்த இடம்!
கல்லறையாய் போனதம்மா!
!
அங்கொன்றும் இங்கொன்றாய்!
உறவெல்லாம் தொலைந்ததம்மா!
நிம்மதியின் நிழல் இழந்து!
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...!
!
அகதி என்ற பெயர் எமக்கு!
அறிமுகமாய் ஆனதம்மா!
பனிமழையில் நனைந்த வாழ்க்கை!
எரிமலையாய்ப்போனதம்மா!
!
யார் செய்த சூழ்ச்சியிது?!
யாரிடம் போய்ச்சொல்லுவது?!
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை!
யாரிடம் போய்ச்சொல்லுவது?!
!
-நிந்தவூர் ஷிப்லி!
தென்கிழக்குப்பல்கலை!
இலங்கை

மழை, மழை மட்டுமல்ல

எம்.கோபி
அலுவலக கோப்புகளுக்குள் !
புதைந்திருந்த வேளை...!
யாரோ,சொல்லத் தெரிய வந்தது !
வெளியே நல்ல மழையாம்....!
கோப்புகளை மூடி வைத்து !
காகிதத்தை விரிக்கையில்!
கொட்டியது !
நினைவு மழை ...!
சாளரக் கம்பியில் கைவைத்து பருகியதும்...!
முழங்கால் நீரில் முழ்கி நீச்சல் பயின்றதும்...!
மின்னல் புகைப்படங்களும்... !
பொருள் விளங்காத !
அர்ஜுனா அலறல்களும்....!
!
காகித கப்பல் மூழ்கியதால் வந்த !
வெட்கங்களும் ,!
வேடிக்கை அவமானங்களும்.... !
எதிர் வீடு நண்பனின் !
கப்பல் மூழ்கியதால் !
ஏற்பட்ட களிப்பும்,!
செய்த கிண்டல்களும்..... !
அம்மாவின் !
சேலை துவட்டல்களும் !
செல்லத் திட்டுக்களும் !
பருவ வயது மழையில் ஆடிய!
மட்டைப்பந்தாட்டமும்.... !
நண்பனோடு நனைந்தே !
கடந்த சாலைகளும்...!
எதிர்ப்படும் கடைகளில் பருகும் !
எண்ணிலடங்கா தேநீர்களும்...!
வேளை கிடைத்து !
வெளியூர் வந்த வேளைகளில் !
பெய்த மழையின்!
ஏகாந்த நனைதல்களும் !
கரைத்து விட்ட கண்ணீர்களும்...!
இவ்வாறாக !
இணைந்து இருந்தவர்கள் !
இயந்திர வாழ்க்கைச் சக்கரத்தில் !
மிதி பட்டுப் போனதால்-எங்களை !
இன்று !
யார் யாரோ !
அறிமுகம் செய்கிறார்கள்

உன் கண்களுக்கு அப்படி என்ன சக்தி

நிர்வாணி
பார்த்தால் நொருங்கிப்போய்விடுகிறேன் !
வெட்கத்தால் கூனிக் குறுகி !
தலை சாய்வதெல்லாம் !
ஒரு நொடிப்பொழுதில் முடிந்துவிடும் !
நாளை நிச்சயம் உன் கண்களோடு !
என் கண்களை ஒட்டவைப்பேன் !
எத்தனை நாளைகள் பறந்தன !
இன்னமும் இதயத்துள் ஆர்ப்பரிப்பு !
இன்னமும் என்னையும் மீறி ஒரு புன் சிரிப்பு !
நீயும் நானும் இப்படியே காதலிப்போம் !
உணர்ந்து சொல்கிறேன் !
தயவுசெய்து என்னோடு உரச நினைக்காதே !
பின் எங்களின் காதலும் செத்துவிடும்

வீழ்தலின் நிழல்!

எம்.ரிஷான் ஷெரீப்
ஒரு கோட்டினைப் போலவும்!
பூதாகரமானதாகவும் மாறிமாறி!
எதிரில் விழுமது!
ஒளி சூழ்ந்த!
உயரத்திலிருந்து குதிக்கும்போது!
கூடவே வந்தது!
பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து!
ஒரு புள்ளியில் ஐக்கியமாகி!
ஒன்றாய்க் குவிந்ததும்!
உயிரைப் போல!
காணாமல்போன நிழலில்!
குருதியொட்டவே இல்ல!

நல்லவன் நீ

புஸ்பா கிறிஸ்ரி
நினைவுகள் தடம்மாறிப் போவதனால் !
தாலாட்டிச் செல்லும் எண்ணங்கள் !
துயரங்களாய் மாறி !
மீளாத சோகத்தில் !
ஆழ்த்திச் செல்கின்றன.. !
அக்காவாக, தங்கையாக !
தாயாக, கேட்கிறேன் !
விட்டு விடு !
இந்த நாசமான காரியத்தை.. !
கொட்டிவிடு உன் !
இதயத்தின் பாசத்தை !
குடிக்காதே வெறிக்காதே !
ஒளித்து ஓரமாய் நின்று !
மறைத்து மற்றவரை மதியாது !
குடித்து குட்டிச் சுவராவதில் தான் !
உனக்கென்ன லாபம்? !
உலகம் தேடுகிறது நல்லவனை !
மாறிவிடு நல்லவனே! !
நீ நல்லவன் என்று தான் !
நானும் சொல்கிறேன் !
நாடும் சொல்லும் உன்னை.. !
திருந்திவிடு தம்பியே! !
தனையனே! அண்ணனே! !
தந்தையே! !
--புஷ்பா கிறிஸ்ரி

பூரணம் மிளிரும்

சத்யஜீவா
பூரணம் மிளிரும்!
பள்ளக்கு தேவதையாய்!
நதியின் மீது பவனி வரும்!
பால் நிலா.!
நெடும்பயணத்தின் முடிவில்!
நீலம் தறிக்கும் யோகியென!
சுயமிழந்து கடலினில் உப்பாய்!
கரைகிறது ஜீவநதி.!
யுகங்களைத் திண்றும்!
நிரம்பாத ஆழ்கடல்!
சிறுவர்களின் மணல் வீடுகளை இடித்து!
விளையாடிக் கொண்டிருக்கிறது.!
கையிடுக்குகளில் ஒழுகும் நீலக்கடலை!
அள்ளிவந்து ஒவ்வொருத் துளியாய்!
என் பேனாவிற்குள்!
மை நிரப்புகிறேன்

காதல் திருட்டு... கல்லாய்ச் சமைந்து

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
1.காதல் திருட்டு!
-----------------------!
அவளைத் தொலைத்துவிட்டு!
அகிலமெலாம் தேடுகிறேன்.!
ஆசையாய்த் துடைத்து!
அன்பு முத்தமிட்டு!
அழகாய் வைத்திருந்தேன்!
அரைக்கைச் சட்டைக்குள்.!
அலுவலக உபயோகத்திற்காய்!
அவ்வப்போது பதிவுசெய்த!
ஆயிரம் இலக்கங்கள் - அவளை!
ஆக்கிரமிப்புச் செய்தன.!
நிஜக் காதலியின்!
நித்திரைச் செய்தியெல்லாம்!
அவளுள்தான் அமைதியாய்!
அடங்கிக் கிடந்தன.!
மகாபொலவில் புது!
மணத் தம்பதிகள்!
கைகோர்த்துச் சென்றதையும்!
கிளிக்செய்து வைத்திருந்தேன்.!
செல்லிடம் என்பதால்!
சென்றுவிட்டாயோ என்னிடம்!
சொல்லிக் கொள்ளாமல்!
செருக்குடன் நீ!!
தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்!
தொலைபேசிக் காதலியை!
தெரிந்தவர்கள் தயவுடன்!
திருப்பித் தந்திடுங்கள்.!
காதலைத் திருடுவது - உங்களுக்குக்!
களங்கமெனத் தெரியாதா? !
2.கல்லாய்ச் சமைந்து...!
---------------------------!
வாசல் தோறும் உன்வரவை!
எதிர்பார்த்துக் காத்து நிற்பேன்!
யாசகம் என்றெண்ணி எட்டிநிற்பாய்.!
அண்ணன் வருகை கண்டு!
அண்ணார்ந்து பார்க்கும் நீ!
அந்நியமாய் எனைக் காட்டிக்கொள்வாய்.!
மழையென்று மரத்தடி ஒதுங்கி!
தளையொன்றை உசுப்பி விட!
ஏளனமாய் எனைப் பார்ப்பாய்.!
கடலை வண்டிக் காரனிடமும்!
கச்சான் விற்கும் சிறுவனிடமும்!
கண்ணசைத்து ஜாடை காட்டிடுவாய்.!
உனை ஆவலாய் முத்தமிட!
நெருங்கும் போதெல்லாம் நீயென்னை!
அரைவேக்காடு அசிங்கம் என்பாய்.!
ஆசையாய் உன் கரம்பிடித்து!
அன்பு மொழி பேசி!
அழகழகாய் ஐந்தாறு பெற்றெடுத்து!
அரசாள எண்ணி யிருந்தேன்.!
சுனாமிப் பேயலை வில்லனாய்மாறி!
உனை சுருட்டிச் சென்றபோது!
கல்லாய்ச் சமைந்து நின்றேன்!
எல்லாக் காலமும் போல்