யாரிடம் போய்ச்சொல்லி அழ - நிந்தவூர் ஷிப்லி

Photo by Didssph on Unsplash

யார் செய்த சூழ்ச்சியிது?!
யாரிடம் போய்ச்சொல்லுவது?!
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை!
யாரிடம் போய்ச்சொல்லுவது?!
!
கனவுகளை காணவில்லை!
கண்ணிரண்டில் கண்ணீர் மழை!
இடம்பெயர்ந்த நாள் முதலாய்!
இன்றுவரை உறக்கமில்லை!
!
உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்!
உயிர் சுமந்து உணர்விழந்தோம்!
உறவிழந்தோம் உணவிழந்தோம்!
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்!
!
புயலழித்த பூவனமாய்!
புலமபெயர்ந்தோர் நாமானோம்!
உதிர்ந்த விட்ட பூவினிலே!
உறைந்து போன தேனானோம்!
!
நிலம் வீடு பிளந்ததம்மா!
நூலகமும் எரிந்ததம்மா!
பள்ளிகளும் கோயில்களும்!
பாழ்நிலமாய்ப்போனதம்மா....!
!
காற்தடங்கள் பதிந்த இடம்!
கண்ணிவெடியில் புதைந்ததம்மா!
கனிமரங்கள் துளிர்த்த இடம்!
கல்லறையாய் போனதம்மா!
!
அங்கொன்றும் இங்கொன்றாய்!
உறவெல்லாம் தொலைந்ததம்மா!
நிம்மதியின் நிழல் இழந்து!
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...!
!
அகதி என்ற பெயர் எமக்கு!
அறிமுகமாய் ஆனதம்மா!
பனிமழையில் நனைந்த வாழ்க்கை!
எரிமலையாய்ப்போனதம்மா!
!
யார் செய்த சூழ்ச்சியிது?!
யாரிடம் போய்ச்சொல்லுவது?!
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை!
யாரிடம் போய்ச்சொல்லுவது?!
!
-நிந்தவூர் ஷிப்லி!
தென்கிழக்குப்பல்கலை!
இலங்கை
நிந்தவூர் ஷிப்லி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.