தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மெழுகுவ‌ர்த்தி

ருத்ரா
(குறும்பாக்கள்)!
--------------------------------!
01.!
மெய்யெழுத்து உருகி!
உயிரெழுத்து எரியும்..ஒரு!
புதுக்க‌விதை.!
02.!
க‌ரையை காட்டிவிட்டு!
க‌ரைந்து போய்விடும்..ஒரு!
க‌ல‌ங்க‌ரைவிள‌க்க‌ம்.!
03.!
காத‌லும் மெழுவ‌ர்த்தியும்...அத‌ன் !
வெளிச்ச‌த்தில் எழுதுவ‌த‌ற்குள்!
க‌ரைந்து போய்விடும். !
04.!
ஊமை எரிம‌லை நீ !
உன் கால‌டியில்!
வெள்ளை லாவா!
05.!
ஒரு சுட‌ரேந்திப்புல‌வ‌ர்!
இருட்டில் உருகிப்பாடும்!
ஒளி வெண்பா.!
06.!
திரி ந‌ர‌ம்பு முனையில்!
மெழுகு வீணை உருகி..ஒரு!
ராக‌ம் எரிகின்ற‌து.!
07.!
நீண்ட த‌வ‌த்தில்!
வெள்ளைச் ச‌வ‌ம்!
க‌ர‌ண்ட் க‌ட்டில் உயிர் வ‌ந்த‌து.!
08.!
இருட்டின் க‌ன‌த்த‌ சிலுவை!
வெளிச்ச‌த்தின் வெள்ளை ர‌த்த‌ம்..!
மேஜையில் ஒரு க‌ல்வாரி.!
09.!
ஓவிய‌ம் எரிந்து!
ஓவிய‌ம் உருகும்.!
வெள்ளைத்தூரிகை இது.!
10.!
வெள்ளை இத‌ய‌ம் வ‌ழிந்து ஓடி !
இர‌வுக‌ள் எரிந்து வெளிச்ச‌க் காத‌லிக்கு!
உருகிய‌ தாஜ்ம‌கால் இது.!
!
-ருத்ரா!
(க‌ல்லைடைக்குறிச்சி இ.ப‌ர‌ம‌சிவ‌ன்)

நாற்பது நிலைக்க

இமாம்.கவுஸ் மொய்தீன்
நாள்தோறும் காலையில்!
ஊடகங்களைத் திறந்தாலே!
பிழைப்புக்காக வங்கக் கடலில்!
மீன் பிடிக்கச் சென்ற!
தமிழக மீனவரைச் !
சிறை பிடிப்பதும்!
உயிர் பறிப்பதும்!
தவறாமல் வரும் செய்திகள்!!
வானம் பொய்க்கலாம்!
பூமி பொய்க்கலாம்!
விண்மீன்கள் பொய்க்கலாம்!
விண்கோள்கள் பொய்க்கலாம்!
இந்நிகழ்வுகள் மட்டும்!
பொய்ப்பதே இல்லை!!
மத்தியில் ஆள!
முழுதாய் நாற்பதைத் தந்திட்ட!
தமிழகத்தின் அரசு!
மத்திய அரசுக்கு!
வேண்டுகோள் விடுப்பதும்!
இலங்கை அரசுக்கு!
கண்டனம் தெரிவிப்பதும்!
தொடர்ந்தாலும் !
அவர்களின் போக்கில் மாற்றம்.....?!
இந்தியத் தமிழர்கள் மீது!
நிகழும் அச்சுறுத்தல்கள்!
தடுக்கப்பட வேண்டும்!!
இலங்கைத் தமிழர்களின் உரிமைகள்!
காக்கப்பட வேண்டும்!!
பிரச்சினைகள் யாவும்!
தீர்க்கப்பட வேண்டும்!!
குறைகள் குற்றங்கள்!
களையப்பட வேண்டும்!!
நிறைகள் இன்னும்!
மிகைப்படுத்தல் வேண்டும்!!
ஆளும் அரசுகள்!
உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே!
இனிவரும் தேர்தலிலும்!
இனியவை நாற்பது!
இனிதே நிலைக்கும்!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

அன்னை பூபதிக்காக

பவித்திரா
கனடாவிலிருந்து பவித்திரா !
அகம்நிறை வாழ்கின்ற அன்புடைத் தெய்வமே! !
அகிம்சைவழி வாழ்ந்திட்ட அன்னை பூபதியே! !
இகமிங் குள்ளவரை என்றும் நிலைத்திடும் !
இணையிலாப் புகழ்பூத்த இன்னுயிர் மாதே! !
தகவுடை மங்கையர் திலகமே! தாயே! !
தக்கவோர் கவிபுனைந்து தாள்மீது படைத்திட !
மகள்நான் விருப்புற்றேன் மனத்துயர் வெளிப்படுத்தி!!
மறைவின்றி வடிக்கின்றேன்! மனமுவந்து விடைதருக!!
சிங்களத்தின் கொடுமையிற் சீற்றமுற்று நாமிருக்க !
சிந்திய இரத்தமது உலர்ந்து வற்றுமுன்னே !
வங்கக் கடல்கடந்து வந்தனர்வாழ் வளிக்கவென !
வஞ்சம்செய் உளத்தினராய் வலிந்தங்கு புகுந்தனர்! !
இங்குற்ற மாந்தரெலாம் இனிதே மகிழ்ந்திருக்க !
இனியெமக் குத்துயரில்லை யெனக்கூறி நிமிர்ந்திருக்கப் !
பொங்கிடும் மெய்யுணர்விற் கண்டனையோ அவர்குள்ளம்? !
பொறுத்திருந்து செயற்படுத்தக் கொண்டனையோ திருவுளம்? !
அமைதிபேண வந்தவரோ ஆக்கிரமிப் பாளரானார்!!
ஆண்பெண் கிழவரொடு குழவியெனப் பேதமின்றி !
எமையெண்ணிப் பார்த்திடா எரித்தும் புதைத்தும் !
அளவிட முடியாத் தீமைகள் புரிகையிலே !
தமையுணர்ந்து மட்டுநகர் மங்கையர் விழித்தெழத் !
தலைவியாய் முன்வந் துண்ணா நோன்பிருந்து !
இமயமே சரிந்திட இன்னுயிர் ஈய்ந்திட்ட !
எம்முயிர்த் தாயேஎன் வினாவிற்குப் பதிலென்ன? !
இன்றுநாம் உனக்கான விழாக்காணும் பொழுதினிலே!
இன்துயில் புரிகின்ற பூங்காவின் நடுவினிலே !
நன்றிலா விடயங்கள் நாடோறும் கண்டுமே !
நானிலமும் மனம்நொந்து நயனநீர் சொரிகிறதே! !
பன்றிகளாய் மனிதவினம் மாறுதல்தான் ஏன்தாயே? !
பகைவருடன் கரம்கோத்துப் பாலகரைக் கொல்லுதலும் !
ஒன்றிணைந்து பிரிவினைகள் மழலைகட்கு ஊட்டுதலும் !
உன்மனதை வருத்தலையோ? உண்மைதனை விளம்பம்மா! !
!
அன்னையே உன்நிலம் ஆண்டாண்டு காலமதாய் !
அரக்கரின் அழிவிற்குள் அடங்கியதும், ஆங்கே !
அந்நியரின் வரவதனால் அவர்பால் விளைநிலங்கள் !
ஆனதனால் உன்னினம் அபலைகளாய் மாறி !
இன்னுயிர்கள் துறந்தும் இடப்பெயர்வால் நலிந்தும் !
ஏழ்மையுறு வாழ்வுடனே ஏதிலிக ளாகிடத் !
தன்னின வரலாற்றைத் தெரிந்துமே சிலரங்கு !
சதியின் வசமானாரே! தாழ்வுற்றுப் போதற்கோ? !
வடக்கைமட்டும் ஏற்றிடுக! கிழக்கைநீர் மறந்திடுக! !
வளமான வாழ்வங்கு வழியமைத்துக் கொடுத்திடுவோம்! !
துடுக்குத் தனமாகத் தொடுத்தனர் சொல்லம்பு! !
துடித்தெழுந் தான்தம்பி துட்டரை நோக்கியங்கு !
திடமாகப் பதிலுரைத்தான்! தினவெடுத்த தோளுடனே! !
தனித்தமி ழீழமொன்றே தாரகமொழி யென்றான்! !
கடிதென மொழிந்தவுரை காத்ததுன் மண்தனை !
கயவர்க ளறிவாரோ தியாகத்தின் மேன்மைதனை? !
பருகிடும் தாய்ப்பாலின் சுவைதனிலே பிரிவுண்டோ?!
பாய்கின்ற குருதியிலும் நிறவேறு பாடுண்டோ? !
பிரபாகரன் என்னும் பெருந்தலைவன் மட்டுமன்றிப் !
பிணைந்து களம்புகுந்த புலிப்படை மறவரும் !
பிரதேசம் பேசவில்லை! பிறர்தமரென எண்ணவில்லை! !
பிறந்தமண் காத்திட ஒருமித்துக் களம்புகுந்தார்! !
பெருநிலத்தின் விடிவெண்ணி நீபுரிந்த தியாகமும் !
பயனற்றுப் போனதுவோ? பகர்ந்திடுவாய் தாயே! !
பண்கெட்டுப் போனதான பாடல்கள் போன்றும், !
பாதியாய்ப் பகிர்ந்தெடுத்த பளிங்குச் சிலைனெவும், !
மண்பிரிக்கப் புறப்பட்டார்! மாண்புறுமோ தாயே? !
மன்னுமுயிர்க் கழிவில்லை, மாநிலத்தே யாதலினாற் !
கண்திறந்து பாரம்மா! கல்லறைகள் விடுத்தெழுந்து !
கண்மணிகள் தனைச்சேர்த்துக் காத்திடப் புறப்படுக!!
எண்ணும் பொழுதிலென் இதயமே குமுறுதம்மா! !
ஈனரின்அறி வீனத்தால் உன்உள்ளமும் வெந்ததோ? !
முடிவான கருத்தொன்றை முன்வைக்க விரும்புகின்றேன்! !
மனத்தின்கண் மாசகற்றி மனிதத்துடன் வேண்டுகிறேன்! !
படித்தவர், பாமரர், பயிலுனர் யாராயினும் !
பிரதேச வாதமெனும் புற்றுநோய்க் கிருமிதனை !
நொடியினில் அகத்தினின்றும் நொருக்கிடுதல் வேண்டும்! !
நு£லளவு தங்கிடினும் நோய் பெரிதாகி !
விடிவுதனைத் தடுத்திடும்! வேதனையை அளித்திடும்!!
வளமான எதிர்காலம் அழிதற்குத் துணைபோகும்

தீரும் காலம்

வசந்த் கதிரவன்
இருள் தன்னோடு எடுத்து வந்து !
என்னுள் வைத்தது !
அழுத்தம் தாங்காமல் !
கனவுகள் கிழிந்து போய் அறை எங்கும் !
சுவாசிக்கப்பட்ட காற்றாய் !
நிரம்பிக் கிடக்கிறது !
நடு நிசி ஆந்தையின் !
அலறலாய் சுமை தாங்கா முனகலும் கொஞ்சம் கேட்கும் !
பெரு வெளியில் !
என் இருப்பை !
அதுவே !
உறுதிப்படுத்துகிறது !
தன்னைத் தானே தின்னும் !
சக்கரத்தின் !
ஒரு ஓரத்தில் நானும் !
தின்று முடியும் போது !
இதுவும் தீரும்

அந்த நாளும் வந்திடாதோ?

பாரதி ஜேர்மனி
புகைப்படம் காட்டி உறவுகள் சொல்லி !
வரைபடம் தேடி !
திரைப்படம் போட்டுக் கரும்புலிக் காவியம் சொல்லி !
மனப்பாடம் ஆக்கி மாவீரர் புகழ் பாடி !
தாய்மண்ணின் உறவுக்காய் பாலம்போட முயல்கின்றேன் !
தமிழ்மொழியின் உயர்வுக்காய் கோலமிட முனைகின்றேன் !
பாட்டி வீட்டுக்குப் போவோமா? எங்கள் நாட்டுக்குப் போவோமா? !
மண்ணின் வாசனை நுகர்ந்து கேட்டிடும் என் மகள் !
முகத்தைப்பார்த்துத் தவிக்கின்றேன். முடிவு சொல்லத் துடிக்கின்றேன். !
போர்ப்புயல் சூழ்ந்த எம்மண்ணில் அமைதிக்காற்று வீசாதா? !
அன்பு உறவுகள் அருகிருந்து ஆனந்த மழையில் சிலிர்க்கின்ற !
அந்த நாளும் வந்திடாதா? !
!
- பாரதி

எனது மலையுச்சி மனிதன்

ரவி (சுவிஸ்)
ஓர் அழகிய வண்ணத்துப் பூச்சியை!
நான் வரைகிறேன்-!
தாளிலிருந்து அது பறந்துபோகும்வரை.!
அதுவரை என்னை நான்!
ஓர் ஓவியனாக பிரகடனப்படுத்துவதாயில்லை.!
முகம்தொலைந்து!
சதையிறுகிப்போய்விட்ட!
மனிதக்கூடொன்றின் கையில்!
துப்பாக்கி மட்டும்!
பளபளக்கிறது.!
எனது தேசத்து மலையுச்சியில்!
தேங்கிப்போனதெல்லாம் இந்த மனிதனும்!
எரிந்துபோன முகில்களும் மட்டுமே.!
வெடிகுண்டில் பூவிரித்து!
சமாதானச் சிரிப்பொழுக!
முகத்தை சிரமப்படுத்தும்!
மனிதர்களே!!
வரையுங்கள் உங்கள் சமாதானத்தை,!
இந்த மனிதன் எழுந்து நடக்கட்டும்-!
விரல்நழுவி விழும் துப்பாக்கியுடன்.!
குழந்தை தன் முகத்தில் நிலாவை வரையட்டும்.!
நாயொன்று தன் வித்தியாசமான குரைப்பை நிறுத்தட்டும்.!
எமது வீதிகளைவிட்டு அகன்றுகொள்ள!
வேண்டியது!
அந்நியர்கள் மட்டுமல்ல,!
எனது இனத்து!
சமாதானப் பொதியின் பூச்சாண்டிக்காரர்களும்தான்.!
ஓர் அழகிய காலை!
எனது விழிவழியே துள்ளியோட!
முகம்கொள்ளா மகிழ்வுடன்!
எனது பொழுதை நான் தொடங்க வேண்டும்.!
பாடசாலைகள்!
வேலைவெட்டிகள்!
சனசந்தடிகள்!
தாங்கியபடி...!
மெல்லியதாய் மௌனப்படட்டும் எம் மாலைப்பொழுது.!
என் உடலின் பிடிநழுவி!
இருளில் மிதந்துசென்று,!
சேதிகண்டு ஓடிவந்து!
மீண்டும் வந்தமரும் விழிகளோடு!
எப்போ நான் நடப்பேன்?!
பொதிசொல்லும் குடுகுடுப்பைக்காரர்களே!
போய்வாருங்கள்!!
எனது மலையுச்சி மனிதன்!
தன் உயிர்ப்புக்காய்க் காத்திருக்கிறான்

ஈழத்தில் இழிவு நிலை

சித. அருணாசலம்
புலிகளை ஒழிப்பதாய்ச் சொல்லிப்!
பசுக்களை அல்லவா!
பாடாய்ப் படுத்துகிறார்கள்.!
நாடு கடத்துவதற்கு ஈடாக!
நகரம் கடத்துகின்ற !
நாகரீகமற்ற செயல் நடைமுறையில்.!
காட்டு தர்பாரின் உச்சத்தைக்!
காட்டுகின்ற நடவடிக்கைகள்!
வெறித்தனத்தை வெளிச்சமாக்குகிறது.!
காலம் செல்லச் செல்லக்!
காலனைக் கூடக் !
கைகூப்பி வரவேற்கக்!
காத்திருக்கிறான் ஈழத்தமிழன்.!
!
- சித. அருணாசலம்

நெப்போலியன் குறுகவிதைகள்

நெப்போலியன் சிங்கப்பூர்
3... ? !
கோயில்... !
மசூதி... !
ஆலயம்... !
குங்குமம்... !
குல்லாய்... !
சிலுவை... !
ஒருவனுக்காய்! !
---------------------------------- !
அடுக்குமாடி !
யன்னல்களில் !
வாழ்க்கையைத் !
துடைத்துவிட்டு !
செங்குத்தாய் !
கீழ்விழுந்து !
சிதறிக்கிடக்கிறாள்...... !
பணிப்பெண்? !
------------------------------- !
இன்றைக்கும் !
பட்டினியில்லை...... !
தலைவாழை வானம் !
மேகக்குழம்பு !
நட்சத்திரப் பொரியலுடன் !
நிலாச்சோறு !
------------------------------- !
வேதம் !
கோயில் மாடங்களிலும் !
மசூதி வளாகங்களிலும் !
ஆலய உச்சிகளிலும் !
மாறி மாறி !
பேதமின்றிப் !
பறந்தமர்ந்து !
வந்தடையும் !
புறாக்கள் !
முணுமுணுக்கும் !
உள்ளே !
வந்து போகும்...... !
மனிதர்களைப் பார்த்து

பால்ய வயதில் என் நண்பன்

அ. விஜயபாரதி
இனிப்புகளாலும்!
அணைப்புகளாலும்!
நிரம்பிய!
எதிர்பார்ப்புகளுடன் கூடியது!
குழந்தைகளின் உலகம்!
இந்த முறை!
ஊருக்குச் சென்றபோது!
மிட்டாய் வாங்க!
மறந்து விட்டதை!
சமாதானம் செய்ய!
முன்பே பரிச்சயமானதை!
அறியாத நான்!
தோளில் தூக்கி வைத்து!
அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன்!
தரையில் இறக்கிவிடச் சொல்லி!
சற்றே கழுத்தைத் திருப்பி!
சிறிது தூரம்!
தன்னோடு நிலவை!
அழைத்துச் சென்றவன்!
ஒரு பட்டத்தைப் போலவே!
கண் இமைகளால்!
வெட்டி வெட்டி இழுக்கிறான்!
பிறகு...!
புறப்பட்ட இடத்திற்கே!
அழைத்து வந்தான்!
இறுதியாய்!
வெறுங்கையை அசைத்து!
விடைபெற்றுத் திரும்புகையில்!
என்னோடு அனுப்பி வைத்தான்!
நிலாவையும் சேர்த்து!
- அ. விஜயபாரதி

பேசும் புவியும் ஊமை மனிதர்களும்

தோம்னிக், புலியகுளம்
எனது பிறப்பு!
புதிர் !!
எனது அகவை!
வினா !!
என்னுள் பஞ்சபூதத்தோடு!
மனித பூதமும்!
வாழ்கிறது .!
நான் வாழ!
கையேந்துகிறான்...?!
உங்கள் சுகம்!
எனக்கு சுமையாய்....!!
என்னை வெப்பமாக்கி!
நீங்கள் குளிர்காய்கிறீர்கள்!!
நான் அழிந்தால் ......!
உங்கள் நிலை ...?!
எனக்கு நீங்கள்!
இட்ட பெயர்!
புவி