தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கருவறையே கல்லறையாய்

தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி
தூளியிலிருந்து கொட்டின துளிகள்!!
தூக்கம் கலைந்து அழுதன தளிர்கள்!!
கொட்டியது சிறுநீர்த் துளிகளா? - அன்றி!
கொடிய சோகத்தால் விழிநீர்த் துளிகளா?!
பச்சை மண்ணுக்குப் புவிதந்த சரித்திரம்!!
பாழும் எய்ட்ஸால் வந்த தரித்திரம்!!
ஆட்கொல்லி நோயில்லா அன்னையாக!
அரவணைப்போம் ஓடி வா ஆருயிரே!!
விலைமாதரிடம் வாங்கிய வினையா?!
விதிவசத்தால் ஏற்றப்பட்ட குருதியா?!
சோற்றுக்கு வழியின்றி சோரம் போனாரோ?- உடற்!
சுகமே பெரிதென சுயநினைவிழந்தாரோ?!
பெற்றோரில் யார் செய்த குற்றம்?- எனப்!
புரியாது குழந்தை அழும் நித்தம்!!
கருவறை மழலைக்குக் கல்லறையா?!
கசியும் முலைப்பாலே கடும் நஞ்சா?!
யாரை எதுவெனக் குற்றஞ்சொல்ல?!
ஏதேனும் வழியுண்டோ எமனை வெல்ல?!
மலர்ந்ததுமே மடிகின்றோம் மழலை நாங்கள் - இனி!
மலடாகிப் போகட்டும் இம்மண்ணின் பெண்கள்!!
!
சிற்றின்ப உணர்வுகள் சிலிர்த்தெழும் நேரம்!
சீர்கெட்டு வழிமாறி சிதையாதீர் ஒருபோதும்!!
அற்ப சுகத்திற்கு வழிகாட்டி நண்பன் - தன்!
கற்பின் வழிநின்றுனைக் காப்பவள்தான் மனைவி!!
இனிவரும் காலமேனும் விடிந்திடுமோ? - அன்றி!
எப்போதும் இந்நிலைமை தொடர்ந்திடுமோ?!
எய்ட்ஸின் வைரஸே ஒழிந்துவிடு!!
எதிர்காலச் சந்ததியை வாழவிடு

தமிழர் திருநாள்

நீதீ
கவிஆக்கம்: நீ ‘‘தீ’’!
!
உலகம் முழுவதும்!
உற்றுப் பார்!
உழைப்பிற்குத் திருவிழா!
உழைத்தபின் வருகின்ற!
தனத்திற்கு ஒருவிழா!
எவன் எடுக்கிறான் இங்கே?!
பில்லி சூன்யம்!
பிசாசிற்கு ஒருவிழா!
பிழைக்கத் தெரியவில்லையெனில்!
அதற்கும் ஒருவிழா என!
பிரமாண்டமாய் எடுக்கும் விழா எல்லாம்!
ப்ரியமற்ற விழா!
பிடிவாதத்தின் உலா!
புனிதத்தின் விழாவாய்!
புரிந்துகொண்ட மனிதன்!
எடுக்கும் விழா!
இருள் நீக்கிய சூரியனுக்கு!
மனப்பிணி நீக்கிய வள்ளுவனுக்கு என!
வரிசையாய் விழா எடுத்தான்!
வீட்டினுள் சுபிஷம் பொங்க!
விஷேசமாய் விழா எடுத்தான்!
வாய்உள்ள ஜீவனுக்கு “மே” தினம்!
வாய்யில்லா ஜீவனுக்கு ?!
ஜந்து அறிவு ஜீவனையும் அரவனைத்து!
அகிலத்தில் உயர்ந்து நின்றான்!
உறவிற்குள் பழுது நீக்க!
உயர்வாக விழா எடுத்தான்!
காணும் பொங்கல் என!
வானும் உயர்ந்து நின்றான்!
உலகத்தின் உயர் குணம்!
உருவாக்கத்தின் முதல் இனம்!
இத்தரணியின் திருநாள்!
தமிழனின் முதல்நாளே!
தைத் திருநாள்!!
கவிஆக்கம்: நீ ‘‘தீ’’!
006598870725

கடிதம்

பத்மபிரியா
2, கடிதம் !
கவிஞன் என்றாய் !
“கவிதைகள் ஐம்பது ” என வெளியிட்டாய் !
இரண்டு கிடைத்தது, மற்றவை? !
புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும் !
புரட்சி தலைப்பிட்டிருந்தாய் !
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய் !
உணர்ச்சிபூர்வமானவன் கவிஞன் என !
உருவேறியிருந்த எங்களுக்கு - நீ !
ஒரு மின்சார தாக்குதல்!
சண்டையிடும் சகாக்கள் இருவரை !
சலனமின்றி கடந்து !
“ சமூக நீதி ” கவிதையை !
சமூகத்திற்கு அர்ப்பணித்தாய் !
முறுகக் காயும் வெயிலில் பிச்சை கேட்ட !
முதியவரை விரட்டி !
கார் கண்ணாடி உயர்த்தி !
“கருணைமழை” கவிதையை !
கண்பார்வையற்றோருக்காக என்றாய் !
வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை !
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை -பின்பு !
எப்படி கவிஞனாவாய்? !
அடிப்படையில் மனிதனாகு !
அதன்பிறகு கவிஞனாகலாம் !
அச்சக உரிமையாளரான நீ !
கவிதைத் தொகுப்பென ஒன்று !
தாராளமாய் வெளியிடலாம் !
யாராலும் தடுக்க இயலாது - ஆனால் !
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல் !
1.அட்டையின் மேல் “அபாயம்” என்றும் !
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் “ உபயம்” என்றும் !
அச்சிட வேண்டும். !
!
By ( M. Padmapriya )

குட்டிப் பிசாசு

ஜெ.நம்பிராஜன்
1.!
எல்லாப் பறவைகளையும்!
'கா..கா' என்றும்!
எல்லா விலங்குகளையும்!
'தோ..தோ' என்றும்!
எளிமைப்படுத்தி நீ அழைக்கையில்!
குழந்தையாய் மாறி நிற்கிறது!
சங்கத்தமிழ்.!
2.!
'...க்கம்' என்று நீ!
கை கூப்பி வணங்குகையில்!
வணக்கத்திற்கே 'வணக்கம்' போட்டதுபோல்!
பெருமை கொள்கிறது.!
3.!
எப்போது நினைத்தாலும்!
சிரிப்பாய் வருகிறது!
சிவன் கோவில் நந்தியை!
'..ம்பா' என்று நீ விளித்ததும்!
'சாமியை அப்படி சொல்லப்படாது'!
என்றபடி வந்த அய்யரின்!
குடுமியை இழுத்ததும்.!
4.!
உன்னைக் கொஞ்சும் பெண்கள்!
'அப்படியே அப்பா மாதிரி'!
என்கிற போது!
உன்னைக் காட்டிலும்!
வெட்கம் நேரிடுகிறது!
எனக்கு.!
-ஜெ.நம்பிராஜன்

த(ய)ங்கிய வேர்கள்

நேற்கொழுதாசன்
ஒற்றைப்பனை,!
வஞ்சகமில்லா நெடுவளர்த்தி!
காற்றுக்கு காவோலை கழண்டால்!
மாற்றமில்லாமல் தாண்டும் நூறடி !!
ஆடுமாட்டமும் கரியவுருவமுமாக !
மின்னலொளியில் பார்த்தால் ,!
மயிர்கூச்செறியும் மழையிரவுகளில்!
அதிகாலை அப்பாவியாய் நிற்கும் ,!
கூடுவிழுந்து காகம் போனபின்னே !
வீடாக்கி கொண்டது அணிலொன்று வட்டை !!
கரையான் தின்ன இறங்கிவரும் அணிலை ,!
இரையாக்க காத்திருக்கும் கடுவன்பூனை !
வெள்ளைதான் ,மனசெல்லாம் கள்ளமதுக்கு ,!
காத்திருப்பும் தப்பித்தலுமாக !
அணிலும் பூனையும் கொஞ்சகாலம்...!
பாணியதிகம் பழத்தில்,!
அணிலோ பருவத்தில் கோதிவிடும் _அம்மாவின் !
ஏச்சு சிலவேளை அணிலுக்கும் விழும்!!
பாணியெடுத்து பனாட்டு போடுவதைவிட !
பணியாரம் சுடுவதை வழக்கமாக்கியிருந்தாள்!!
கொக்காரை பன்னாடையென்று !
எதுவிழுந்தாலும் தொட அனுமதிப்பதில்லை !
புருனைசிலந்தியிருக்கும் என்று சொல்லி ,!
தட்டிதானெடுத்து வைப்பா !!
மாடு முதுகுதேய்க்கவும்_சிலகாலத்தில் !
கொடிகட்டி புகையிலை போடவும் ,!
எப்பவாவது சாய்ந்துகொள்ளவும்,_அவதிக்கு !
அப்பாடா என்றுஒன்னுக்கு அடிக்கவும் !
போனதைதவிர பலவேளைகளில் !
ஒற்றையாகவே .............!!
இப்போதெல்லாம் நினைவில் !
தினமும் வந்துதொலைக்கிறது!
அந்த ஒற்றைப்பனைமரம் .............!
ஓ வென்று அழவேண்டும் போலிருக்கிறது , !
தனிமையை எண்ணி

தூக்கு மேடையில் வைக்கப்பட்ட வாக்கு மூலம்

கருணாகரன்
எனக்கு !
சாட்சியங்களில்லை!
நிம்மியுமில்லை!
இதோ!
எனக்கான தூக்கு மேடை!
இதோ எனக்கான சவுக்கு!
நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும் !
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது!
இன்னும் நேரமிருக்கிறது!
இன்னும் நேரமிருக்கிறது!
உண்மையைக்கண்டறியுங்கள்!
தயவுசெய்து கண்டறியுங்கள்!
அதன்பிறகு !
என்னைப்பலியிடுங்கள்!
அதற்காக நான் மகிழ்வேன்!
உண்மைக்காக என்னைப்பலியிடத்தயாராக இருக்கிறேன்.!
!
அதுவரையில் நான் சாட்சியாக!
இருக்க விரும்புகிறேன்!
!
நல்ல நம்பிக்கைகளை!
உங்களிடம் சொல்வேன்!
எதுவும் பெரியதில்லை!
எதுவும் சிறியதுமில்லை!
!
நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை!
எந்த விசமும் படர்ந்ததில்லை !
என் நிழலில்!
!
உண்மையைக் கண்டவன் !
அதைச் சொல்லாதிருப்பது !
மாபெரும் பாவச் செயலாகுமல்லவா!
தண்டனைக்குரிய தல்லவா!
!
எனவேதான் உண்மையைச் சொன்னேன்!
பாவங்களும் தண்டனையும்சேராதிரக்கும்படியாக!
அதையே நான் செய்தேன்!
அதையே நான் செய்தேன்!
இதில் உங்களுக்குண்டா பேதங்கள்!
!
நான் உங்களில் ஒருவன்;!
அன்பின் கூக்குரலை!
நான் ஒலித்தேன்!
நாம் தோற்கடிக்கப்படலாமா!
என்னைக் கோவிக்காதே!
என்னைக்கோவிக்காதே !
!
நான் சொல்வதைக்கேளும்!
நான் சொல்வதையும் கேளும்!
!
உண்மைகளை நாம் ஒரு போதும்!
அழியவிடலாமா!
உண்மைக்குச் செய்யும் அவமானம் !
நம்மைத் தூக்கு மரததில் நிறுத்தும்!
!
நமது நாக்குக்கசக்கிறது!
நமது கால்கள் வலிக்கின்றன!
நமது வயிறு கொதிக்கிறது!
!
என்ன செய்ய முடியம்!
அவற்றுக்கு!
மன்னிப்பா!
ஆறுதலா!
தண்டனையா!
!
காலத்திடம் சொல்லு!
இன்னும் இன்னுமாய்!
--கருணாகரன்

மிஸ் யுனிவர்ஸ்

ஜான் பீ. பெனடிக்ட்
சிரித்த முகம் இவளுக்கு!
சிவந்த நிறம் இதழுக்கு!
மதம் இல்லை அவளுக்கு!
மணம் உண்டு கூந்தலுக்கு!
சிரித்திடும் ஒலியினில்!
சில்லறைகள் சிதறியோடும்!
சிலிர்த்திடும் பேச்சினில்!
செவிட்டுக் காதிலும் தேன்பாயும்!
அண்டம் முழுதும் ரசிகர்களை!
ஆட்டிப் படைக்கும்!
அளப்பரிய ஆற்றலை!
அக்குகளுக்குள் மறைத்தவள்!
ஆசியாவில் பிறந்தவளுக்கு!
ஆப்பிரிக்காவிலும் ரசிகர் மன்றம்!
ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை!
அவள் பெயரில் இணையதளம்!
அவள் பெயரில் விழா எடுத்தால்!
ஆட்கள் பல்லாயிரத்தை!
அரங்கத்தில் குவிக்கும்!
அதீத சக்தி பெற்றவள்!
நான் நீ என்று!
நங்கையர்கள் போட்டி போட்டு!
நடனமாடத் தூண்டும்!
நற்பெயரைப் பெற்றவள்!
அரைப் பாவாடை கட்டினாலும்!
அரைச் சீலை உடுத்தினாலும்!
திரைச் சீலை விலகும்போது!
திசைகள் எட்டும் எதிரொலிக்கும்!
அவள் பிறந்த நாளன்று!
ஆலயங்களில் கூட்டம் அலைமோதும்!
அர்ச்சனைத் தட்டு வாங்கி வாங்கி!
அசந்து போவாரு கோயில் பூசாரி!
வயசுல இவள் கிழவி!
வசீகரத் துலஇளங் குமரி!
உலகத் தமிழர் செய்தியிலே!
உய்யாரமாய் இடம் பிடிப்பாள்!
மிஸ் யினிவர்ஸ் பட்டம்!
மிடுக்கான பொருத்த மிவளுக்கு!
செம்மொழிப் பட்டம் வென்ற!
சீர் மிகுசெந் தமிழுக்கு!
சித்திரையில் முத்திரைகள் பதித்து!
தை முதலுக்குக் கை நழுவும் கன்னியே!
இறுதியாய் உனக்கு ஏப்ரலில்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்னையே!!
ஜான் பீ. பெனடிக்ட்,!
வாசிங்டன்

கிழக்கு மேற்கு அனுபவ ஒப்பீடு

வேதா. இலங்காதிலகம்
வெற்றுப் பாதங்கள் புதைந்தன வெண்மணலில்.!
பற்றும் மணலைத் தீவிரமாக பறிப்பதில்!
சுற்றிச் சுழலும் நுரையலை சுயமுயற்சியில்.!
ஓற்றியெடுத்துக் கால் கழுவும் அலை.!
அற்றைத் தென்றல் தழுவிய நிலை.!
ஆதவன் ஆட்சியில் நீலவான் நாணமிழந்து!
ஆதரவாயங்கே முத்தமிட்ட தங்கக் கடல்.!
ஆதாரமான தாய் நிலக் கடல் எழில்.!
பளிச்சிடாத மங்கல் வடகடற் கரையில்!
குளிர் காற்று வெறுப்பைச் சுமந்து வீசியது.!
மெல்லிய அலை வெண்மணற் கரை அணைய!
சில்லிடும் நீர் ஊடுருவா பாதணி காலில்.!
விளிம்பு நீரிலும் குளிரின் தாக்கம்.!
பளிங்கு நீர் கால் தழுவிய ஆதங்கம்.!
வானப் பெண் வெண்ணிற முக்காடிட்டு !
மோனமாய் அழகை மூடிக்கட்டிய கடற்கரை.!
இரு கடற்கரை அனுபவ ஒப்பீடு!
ஒரு எதிர் புதிரான நோக்கு மதிப்பீடு.!
ஓரக்கடல் தழுவும் என் ஏக்க விழியூடு!
தூரக் கடலின் மங்கல் வானக் கோடு.!
இந்து மகா சமுத்திரம் தழுவிய பாதங்கள் !
இந்த வடகடல் கரையில் றப்பர் பாதணியோடு!
எந்தன் தொழிலிடக் குழந்தைகளோடு சுற்றுலா.!
சுந்தரக் கடற் கரையில் சுழன்ற மதிப்பீடு.!
!
6-7-2004

இதுவும் ஒரு தாலாட்டு

சத்தி சக்திதாசன்
ஏனழுதாய் ? என் மகனே !
ஏனழுதாய் ? !
தீய இவ்வுலகத்திலே !
தோய்ந்து போன உள்ளத்துடன் !
காய்ந்து நானும் அழுததாலோ !
நீயழுதாய் ? !
நேற்றைய உலகத்தின் !
நாயகனாய் !
நாளைய உலகத்தின் !
விடிவுக்காய் !
உழைத்துத் தன் !
உயிரை விட்ட உன் தந்தையை !
உணர்வுகளில் தழுவி நான் !
உகுக்கின்ற கண்ணீரைக் கண்டோ !
நீயழுதாய் ? !
ஒரு வாய் சோற்றுக்காய் !
ஓராயிரம் பாதங்களில் !
தலைவைத்து மன்றாடும் இந்தத் !
தாயின் நிலை கண்டோ !
சேய் !
நீயழுதாய் ? !
நன்றாக வாழ்ந்தவர் தான் !
நயவஞ்சகர் சூழ்ச்சியினால் !
நடுத்தெருவில் இன்று !
நின்றாடிடும் காட்சி !
நேற்றுப் பூத்த ரோஜா உன் !
நெஞ்சினிலே நிகழ்வாய்த் தெரிவதாலோ !
நீயழுதாய் ? !
பூமாலை வாங்கவே பாவம் !
பூவையவள் கையில் பணமில்லா நிலையில் !
பூசாரி அர்ச்சனையில் அள்ளியெறிந்த !
பூக்கள் கொண்டு தொடுத்த !
வாசமிக்க மலர்மாலை கூந்தலில் சூடி !
வாராத எதிர்காலம் தனை !
வாசலில் நின்றே பார்த்து !
விழிகள் பூத்து !
ஏங்கும் உந்தன் சக உதிரி !
ஏக்கம் கண்டதாலோ !
என் மகனே !
நீயழுதாய் !
ஊரெல்லாம் கொண்டாட்டம் !
உன் வீட்டில் திண்டாட்டம் !
உழைத்தும் வாழ்வு காணா !
உள்ளங்கள் தான் நம் சொந்தம் !
உன் துயர் துடைக்க வழியின்றி !
உள்ளம் நோக வருந்தும் அன்னையின் !
உடைந்த உள்ளம் கண்டோ !
நியழுதாய் !
கண்ணுறங்கு என் மைந்தா !
காலம் மாறும் என்றொரு !
கனவு நெஞ்சினிலே ஏனோ !
கனிந்து நிழலாடுது !
கைகள் ஒன்றையே நம்பி வாழும் !
காலத்தின் தோழர் ஏழையர் நாம் !
கண்மூட வேண்டுமென்றால் !
கண்ணே கனவுகளை நம்பித்தான் !
கட்டாயம் வாழ வேண்டும் !
-- சத்தி சக்திதாசன்

விலைமாது விடுத்த கோரிக்கை

தமிழ்தாசன்
ராமன் வேசமிட்டிருக்கும்!
பல ராட்சசனுக்கு!
என்னை தெரியும்.!
பெண் விடுதலைக்காக போராடும்!
பெரிய மனிதர்கள் கூட!
தன் விருந்தினர் பங்களா!
விலாசத்தை தந்ததுண்டு.!
என்னிடம்!
கடன் சொல்லிப் போன!
கந்து வட்டிக்காரகளும் உண்டு.!
சாதி சாதி என சாகும்!
எவரும் என்னிடம்!
சாதிப் பார்ப்பதில்லை.!
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்!
என்னை தீண்டியவர்கள் யாரும்!
திரும்பவிட்டதில்லை.!
பத்திரிக்கையாளர்களே!!
விபச்சாரிகள் கைது என்றுதானே!
விற்பனையாகிறது..!
விலங்கிடப்பட்ட ஆண்களின்!
விபரம் வெளியிடாது ஏன்...?!
பெண்களின் புனிதத்தை விட!
ஆண்களின் புனிதம்!
அவ்வளவு பெரிதா?!
காயிந்த வயிற்றுக்கு!
காட்டில் இரை தேடும்!
குருவியைப் போல்!
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.!
கட்டில் மேல் கிடக்கும்!
இன்னொரு கருவியைப் போலத் தான்!
என்னை கையாளுகிறார்கள்.!
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்!
பகலில் அது பணமாக மாறும்.!
பின்தான்!
என் குடும்பத்தின் பசியாறும்.!
நிர்வாணமே என்!
நிரந்தர உடையானல்தால்!
சேலை எதற்கென்று!
நினைத்ததுண்டு.!
சரி!
காயங்களை மறைப்பதற்கு!
கட்டுவோம் என்று!
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.!
என் மேனியில் இருக்கும்!
தழும்புகளைப் பார்த்தால்!
வரி குதிரைகள் கூட!
வருத்தம் தெரிவிக்கும்.!
எதையும் வாங்க வசதியில்லாத!
எனக்கு!
விற்பதற்க்காவது இந்த!
உடம்பு இருக்கிறதே!!
நாணையமற்றவர் நகங்கள்!
கீறி கீறி என்!
நரம்பு வெடிக்கிறதே!!
வாய்திறக்க முடியாமல்!
நான் துடித்த இரவுகள் உண்டு!
எலும்புகள் உடையும் வரை!
என்னை கொடுமைப் படுத்திய!
கொள்கையாளர்களும் உண்டு.!
ஆண்கள்!
வெளியில் சிந்தும் வேர்வையை!
என்னிடம் ரத்தமாய்!
எடுத்து கொள்கிறார்கள்.!
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.!
கீறல் படாத வேசி தேகமில்லை.!
என்னை வேசி என்று!
ஏசும் எவரைப் பற்றியும்!
கவலைப் பட்டதே இல்லை..!
ஏனெனில்!
விதவை - விபச்சாரி!
முதிர்கன்னி - மலடி!
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்!
இதில் ஏதேனும்!
ஒரு பட்டம்!
அநேக பெண்களுக்கு!
அமைந்திருக்கும்.!
இது இல்லாமல் பெண்கள் இல்லை.!
எப்போதும்!
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.!
முதுமை என்னை!
முத்தமிடுவதற்க்குள்!
என் மகளை மருத்துவராய்!
ஆக்கிவிட வேண்டும்.!
என் மீது படிந்த தூசிகளை!
அவளை கொண்டு!
நீக்கி விட வேண்டும்.!
இருப்பினும்!
இந்த சமூகம்!
இவள்!
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு!
மாதவியின் மகள் என்பதை மட்டுமே!
ஞாபகம் வைத்திருக்கும்.!
இறுதியாக!
இரு கோரிக்கை.!
என்னை!
மென்று தின்ற ஆண்களே!!
மனைவிடமாவது கொஞ்சம்!
மென்மையாக இருங்கள்.!
எங்களுக்கு இருப்பது!
உடம்பு தான்!
இரும்பல்ல.!
என் வீதி வரை!
விரட்டிவரும் ஆண்களே!!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.!
நான் விபச்சாரி என்பது!
என் வீட்டுக்கு தெரியாது