தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வேண்டுகோள்

முருகடியான்
அக்கினிக் குஞ்சுதான் !
என்றிருக்காதே!
அடர்கா டழிக்கும் !
மறக்காதே!!
!
எக்கனி பறிக்கலாம் !
என்றறியாமல்!
எட்டியைப் பறித்திட !
எண்ணாதே!!
!
பாலொடு நீரைக் !
கலப்பதனால்,எப்!
பழுதுறும் என்று !
கேட்பார்கள்!!
!
வாலறி வில்லாப் !
பறவைஅதனை!
வகைபிரித் துண்ணும்! !
வழுவெண்ணும்!!
!
தெரியா திருப்போர் !
செய்பிழை பொறுப்போம்!
தெரிந்தே செய்மனம் !
எதையெண்ணும்?!
!
நாளொரு சொல்லை !
நாமிழக் கின்றோம்!
நாடகம் ஊடகம் !
தமிழில்லை!!
!
நாலடி ஏறினால் !
ஐந்தடி சறுக்கி!
நலிவடை வோம்மொழி !
எலும்புறுக்கி!!
!
வகைவகைக் குருதி !
வாழ்வதிவ் வுடலி!
புகமுடி யாப்பிற !
அணுப்பகுதி!!
!
தொகைமிகுந் தமிழ்த்தேன் !
தொட்டிலிற் பிறசொற்!
புகப்புகப் போகும் !
தமிழுயிரி!!
!
வெற்றிலைப் பாக்கும் !
சுண்ணமும் சேர்த்தால்!
மற்றொரு நிறமாய் !
மாறிவிடும்!!
!
உற்றிதை நோக்கு !
உன்றமிழ் மொழியும்!
மற்றொரு கலப்பால் !
வேருங்கெடும்!!
!
அருகிப் போச்சு !
அருந்தமிழ்ப் பெயர்கள்!
அன்புடன் எண்ணிட !
வேண்டுகிறேன்!!
!
பெருகிப் போகும் !
பிறசொல் நீக்கிப்!
பேசிட எழுதிடத் !
தூண்டுகிறேன்!!
பாத்தென்றல்.முருகடியான்

ஓ.....இதுதான் காதலா

சந்திரவதனா
அன்பே!
உனக்கும் எனக்கும் என்ன சொந்தம்!
உன்னோடு எனக்கென்ன பந்தம்!
அலைஅலையாய் உன் நினைவு வந்து!
என் மனமலையில் மோதுகையில்!
சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன்!
ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.!
தொலை தூரம் நீ வாழ்ந்தாலும்!
உன் நினைவுகளோடுதான் நான்!
தினம் வாழ்கிறேன்.!
குளிரிலே இதமான போர்வையாய்!
வியர்க்கையில் குளிர் தென்றலாய்!
மழையிலே ஒரு குடையாய்!
வெயிலிலே நிழல் தரு மரமாய்!
தனிமையில் கூடவே துணையாய்!
கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்--!!
உன் நினைவுகள் எப்போதும் என்னோடுதான்!
ஓ------- இது தான் காதலா!!
இது காதலெனும் பந்தத்தில்!
வந்த சொந்தமா?!
உனக்கு ஒன்று தொ¤யுமா?!
திருமணத்திலும் உடல் இணைவதிலும்தான்!
காதல் வாழுமென்றில்லை!
அன்பு நூலின் அதிசயப் பிணைப்பில்!
நெஞ்சில் வாழ்வதும் காதல்!
நினைவுகளின் தொடுகையிலே!
உயிர்ப் பூக்கள் சிலிர்க்கின்ற!
என் மனமென்னும் தோட்டத்தில்!
உனக்காகத் துளிர்த்த காதல்!
இன்று!
எனக்குள்ளே விருட்சமாய் வியாபித்து!
பூக்களாய் பூத்துக் குலுங்கி!
அழகாய்!
கனி தரும் இனிமையாய்-----------!
இது நீளமான காலத்தின்!
வேகமான ஓட்டத்திலும்!
அன்பு வேரின் ஆழமான ஊன்றலில்!
நின்று வாழும் உண்மைக்காதல

கண்கெட்டபிறகு

றஹீமா-கல்முனை
நேரம் கெட்ட;!
நேரத்திலெல்லாம்!
வந்தமர்த்கிறாய்....!
நேருக்குநேராய்!!!
வேறேதென் மீதும்!
பிடிமானம் அற்று!
என்னையே எரிக்கிறாய்!!!!!
ஊரிடிந்து!
தலையில் விழுந்தாலும்!
விளங்காதுனக்கு!
என்மீதே!
ஊறிக்கிடக்கிறாய்!!!!!
கண்கெட்டுப்போகும் உனக்கு!
பார்வையோடு மட்டும்!
முடித்துவிட்டுப்போவதில்லை!
நீ......!
நடந்த சம்பாஷனைகளை!
ஊராரிடமும்!
வகுப்புத்தோழிகளிடமுமாய்......!
ஊரெல்லாம்!
உளரித்திரிகிறாய்!!!!!
ஹாக்....!
ப்தூ.........!
முகத்தின் மீது!
காறி உமிழும்-உன்!
பள்ளிக்கூடப்புதகங்கள்!!!!!
சட்டென்று ஒரு நாள்!
என் மீதான -உன்!
பார்வை அடங்கிற்று!
பரீட்சைப் பெறுபேறுகள்!
வந்திருந்தன......!!
நீ அழுதாய்...!!
சீரியல் பார்த்தபடி!
சீரியஸாய் அழுவாயே....!
அதைவிட அடிதிகமாய்!
அழுது வடித்தாய்!
யாரும் இல்லை!
ஆறுதல்சொல்ல!
நானும்வரவில்லை.....!
!
தொலைக்காட்சிப்பெட்டி!
என்கிற - என்!
பெயரைகூட!
மாற்றாமல்!
இன்னொரு சந்ததி!
மீதான -என்!
ஆக்கிரமிப்புத் தொடர்ந்திற்று.......!
நீ இன்னும் அழுது!
வடித்தபடி

கழிவுநீரில்.. சிட்டுக்குருவி..நாம் அலை

வித்யாசாகர்
கழிவுநீரில் களவுபோன மனிதம்..சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்.. நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை !
01.!
கழிவுநீரில் களவுபோன மனிதம்..!
------------------------------------------!
அந்தத் தெருவை கடக்கும்போதெல்லாம்!
அந்தக் கழிவுநீர் தொட்டியும் கண்ணில் படுகிறது!
கால்களங்கே தானே நகர்கிறது!
உடல்கூசும் கழிவுநீர் நாற்றம் - நாசியை!
துளைக்கிறது,!
குடல் புரண்டுவிடுமளவின் வாடையில்!
மூக்கை!
மோவாயய்!
மூடிக்கொண்டவனாய் எட்டி அந்த தொட்டிக்குள்!
பார்ப்பேன்;!
தலைநனையக் குனிந்து!
அலுமினியச் சட்டியில்!
தண்ணீர் மோந்து வெளியே ஊற்றும்!
உள்ளேயிறங்கி அடைப்பெடுக்குமந்த!
வயதானவர்!
இருக்கிறாராயென்று பார்ப்பேன்;!
இன்று வேறொருவர் தெரிந்தார்!
ஐயோ பாவம் 'சிறுவனாயிற்றே!!' என்று மனசுப் பதறியது!
முகத்தை வெளிவாங்கிக் கொண்டு!
தூரம் ஒதுங்கிக் கொண்டதும்!
அந்த சிறுவன் எழுந்து வெளியே வந்தான்!
நான் சற்று தூரம் ஒதுங்கிப் போக!
அவன் என்னருகே வந்து என்ன ஐயா என்றான்!
அவர் எங்கே அந்த பெரியவரென்றேன்!
அவர் போனமுறை!
வேறொரு பழந் தொட்டியில்!
இறங்கி அடைப்பெடுத்தபோது விஷவாயு அடித்து!
இறந்துப் போனாரென்றான்!
'கடவுளே!!!
அப்போ உனக்குப் பட்டால் என்னாகும் ?!
நீயென்ன செய்வாய்.. ?' என்றேன்!
'எங்கள் உயிருக்கு இந்நாட்டில் ஏதையா விலை,!
பட்டாலென்ன இறந்துப்போவேன்!
வேறென்ன' என்றான்!
எனக்குத் தலை சுற்றியது!
நான் விருட்டென்று நடந்து!
வீடுநோக்கி வந்தேன்!
கால்கழுவிக்கொள்ள!
முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது!
என் மனைவி நான் சப்தமின்றி!
வேகமாக உள்நுழைந்ததன்பொருட்டு!
வெளியே ஓடிவந்து -!
'என்னங்க!
ஏதேனும் பிரச்சனையா..' என்றாள்!
'இல்லை இல்லை அ...'!
'என்னாச்சுங்க ஏன் முகமிப்படி... (?)'!
'இல்லைம்மா அவன் செத்துட்டானாம்' என்றுசொல்ல!
என்னால் முடியவில்லை!
'எவன் யார்!
எத்தனைப் பேரோ (?) ஐயோ கடவுளே!!!!!!'!
'என்னங்க என்னாச்சுங்க சொல்லுங்க..'!
'அதலாம் ஒன்னுமில்லை!
நீ போ போய் ஒரு குச்சி கொண்டுவா' என்றேன்!
அவள் நீள குச்சொன்றைக்!
கொண்டுவந்தாள்!
நான் வேட்டியைக் கழற்றி யெறிந்துவிட்டு!
கால்சட்டையோடு தெருவிற்கு வந்தேன்!
மனைவி கைப்பிடித்துத் தடுக்க!
கையைத் தட்டிவிட்டேன்!
சற்றுநேரத்தில் சாக்கடைக்குள் இறங்கி!
அடைப்பையெடுக்க நானும்!
என் மனைவியும் தயாரானோம்!
மூக்கைப் பிடித்துக்கொண்டு!
உள்ளே இறங்கினேன்!
கழிவுநீருள் மூழ்கியதும்!
தீண்டாமையின் பாவங்கள் பெருக்கெடுத்து!
நாற்றமாக!
நெஞ்சையடைத்தது!
அடக்கிக் கொண்டு!
அடைப்பைத் துழாவியதும்!
சாக்கடையிலேயே மாய்ந்த தலைமுறையொன்றின்!
உயிர்கள் வந்து!
புழுக்களாக உடம்பைச் சீண்டின!
அடைப்பினைக் குச்சிவைத்து குத்தி!
இழுத்ததும்!
பீறிட்டு வந்த சாக்கடையின் வேகத்திற்கு!
நானும் மேலேறி!
மேல்மூச்சு கீழ்மூச்சி விட!
'ஐயோ போதும் வாங்க' என்று!
மனைவி பதைபதைத்தாள்!
'எப்பையும் நீயே இறங்கி எடுப்பியா ?'!
அருகிலிருந்த குரல்கள் பிறர் வாயிலிருந்து!
வந்துவிழ,!
'உள்ளிறங்கும் பயத்தில்!
அடைந்துப்போகாதவண்ணம்!
பார்த்துக் கொள்வோமில்லையா' என்றேன்!
'எத்தனைநாளைக்குன்னு பார்ப்போம்' என்றனர்!
நம் சனம் அந்த சாக்கடையிலிருந்து!
வெளிவரும் வரையென நான் சொல்லிக்கொள்ளவில்லை!
தலைவழியே கழிவுகள் வழிந்து!
எச்சினுள் கலந்தது!
காரி தூ தூ வென வெளியே உமிழ்ந்தேன்!
ஒரு கறைபடிந்த!
மனிதச் சாலை அந்த உளிழ்நீரில்!
நனைந்து சுத்தப் பட்டுப் போகட்டுமென எண்ணி எண்ணி!
உமிழ்ந்தேன்!
'யோவ் எதிர்க்க ஆள் வரது தெரியலையா!
மூதேவி' என்று திட்டிக் கொண்டுப் போனார்!
ஒருவர்!
'ஆமாய்யா!
இதுதான் மிச்சமா இருந்தது!
இதிலும் கைவெச்சிட்டீங்களா (?)!
நாங்கல்லாம் எப்படிய்யா பொழைக்கிறது?' என்றார்!
இன்னொருவர்!
நான் மூடியிருந்த கண்களை!
அழுந்த வழித்துப் போட்டுக்கொண்டு!
என் மனைவியைப் பார்த்து 'மனிதம்!
எப்படி களவுபோயிருக்கிறது பார்த்தாயா' என்றேன்!
அவள் 'வீட்டினுள் போகலாம் வாங்க' என்று!
கைபிடித்து இழுத்தாள்!
நானும் நகர அவளும் நகர!
இருவரும்!
வீட்டினுள் போனோம்!
'உடம்பெல்லாம் பதறுதேங்க!
ஏதேனும் ஆகப்போகுதோ தெரியலையே,!
அவுங்கல்லாம் விஷயம் தெரிந்தவங்கங்க!
நம்மளால..'!
'விடும்மா..!
அவுங்களுக்குத் தெரியவேண்டிய விஷயமின்னும்!
வேறென்னென்னவோ நிறையயிருக்கு,!
அதை யவர்கள் தெரிந்துகொள்ளட்டும்,!
நீ வா.. வந்து தண்ணியெடுத்து ஊத்து!
இந்த ஜென்மத்தின்!
பலிகொடுத்த பாவத்தை எல்லாம் கழுவனும்' என்றேன்!
அவள் தண்ணீரெடுத்து!
பித்தளை வாளியில் ஊற்றிக் கொண்டிருந்தாள்!
உடம்பெல்லாம் ஒட்டியத் துணி உடம்புச் சூட்டில்!
காய்ந்துகொண்டிருக்க!
நான் அசையாமல்!
மனிதவாடை பட்டும் இறவாது -!
என் மீது நிண்டிக் கொண்டிருக்கும் சில!
சாக்கடைப் பூச்சிகளை பார்த்துகொண்டிருந்தேன்!
உடம்பெல்லாம் நடுநடுங்கியது!
அவள் சுடுநீர் கொண்டுவந்து!
வாளியில் மீண்டும் ஊற்ற!
அதன் நீராவி மேலெழுந்து குளியலறையெங்கும் பரவியது!
நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்!
'ஒருவேளை, அந்த பெரியவருடைய ஆத்மா!
இனியாவது சாந்தி அடையலாம்,!
அல்லது ஒருவேளை நாளையிந்த!
கழிவுநீர்த் தொட்டியில்!
மீண்டும் விஷவாயு சேருமெனில் அது!
என்னை மட்டுமே கொல்லலாம்!
அந்தச் சிறுவர்கள் இனி!
மெல்ல பிழைத்துக்கொள்வார்கள்..!
!
02.!
சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்.. !
-------------------------------------------------!
ஒவ்வொரு பனிக்காலத்திலும்!
கவிதைகளைச் சொரிகிறது!
வானம்,!
எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக்!
கொள்வதைப் போல!
ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும்!
ஒற்றுமை நிலைக்கையில்!
விடியலும் பிறக்கிறது.,!
அடுத்தடுத்து வரும் பனிக்காலப்!
பூக்களின் இதழ்களில்!
சொட்டிவடியும் நீர்முத்துக்களாய்!
ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில்!
அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன!
விடுதலையின் சிலிர்ப்பும்..!
மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்..!
!
புற்களின் நுனியிலிருந்து!
விடுபட்டு!
மண்ணில் விழுவதற்குள்!
மரத்தின் பனிச் சாரல்களில் சில!
காய்ந்துவிடுகிறது..!
பூமியில்!
வெடித்தும் ஏமாற்றமாய்!
சில உயிர்களை இழந்துவிட்டு!
அனாதைகளாய் நிற்கிறோம் நாமும்' நம்!
இயலாமைகளினாலும்!
சில அரசியல் அநீதிகளின்!
வெம்மை பொறுக்கமுடியாமல் போய்விழும்வரை;!
உணர்ந்து –!
கூடிநின்று!
ஒற்றைக் குரலை கொடுக்கையில்!
தரைவரை வென்று – காயாது!
பூமியை வந்துநனைக்கும் மற்ற பனித்துளிகளைப் போல!
நம் போராட்டங்களும்!
எதற்கும் அஞ்சாது நிற்கையில்!
வென்றுதான்கொள்ளும்..!
!
ஒவ்வொரு!
சிட்டுக்குருவியின் கிரீச் கிரீச்!
சப்தமும்!
ஐயோ என்னைக் காப்பாற்று!
காப்பாற்று என்று!
கத்துவதாகவே கேட்கிறது,!
அன்று எம்மினம்!
அழிக்கப் படுகையில்!
ஒவ்வொரு குழந்தையும் ஐயோ ஐயோ அம்மா!
காப்பாற்று காப்பாற்று!
என்றுதான் கத்தியது,!
உலகிற்குத் தான்!
அந்த கதறல்கள் எல்லாம் வெறும்!
கிரீச் கிரீச் என்று மட்டுமே கேட்டதுபோல்..!
!
03.!
நாம் அலைக்கும் பொட்டல்ல அவளது உரிமை !
-------------------------------------------------!
ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள்!
எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய்!
வந்துவிழுந்தது அவரின் மரணம்..!
மரணம்; பெரிய மரணம்!
இல்லாதுப் போவது மரணமா?!
பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர்!
அவர்களென்ன பிணமா?!
பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள்!
அவரின் மரணத்திற்குப் பின் அவளின்!
பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும்!
மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் ?!
உடன்கட்டையை மட்டும் உதறிவிட்டு!
இன்னும் உயிரோடு கொல்லும் விதவைக் கோலத்தை!
பூணும் இரவொன்று உண்டு; அது ஒரு கொடூர இரவு!
கணவன் போனதற்கு நிகராக!
பூவும் பொட்டும் போகும் கணம்!
இன்னொரு மரணமென்று எண்ணி!
அவளுக்காக நானுமழுதேன்;!
என் கண்ணீரும்!
அவளின் கண்ணீரும் இன்றில்லாவிட்டாலென்ன!
நாளையேனும் இச்சமூகத்தைச் சுடும்;!
சுடட்டும் சுடட்டும்!
சுட்டப்பின் தாலியறுப்பதை நிறுத்திக்கொள்ளட்டும் இச்சமூகம்!
அதன்பின் -!
விதவையில்லா மண்ணில் நடக்கும் அவள்!
அவளுக்கு வேண்டாமெனில் அவளாகவே அன்று!
பொட்டினைக் கலைத்துக்கொள்வாள்..!
பூவை அறுத்துக்கொள்வாள்..!
உயிரைக் கூட விட்டுமாய்ப்பாள்,!
அது அவளது உரிமை

தோழனின் செவிகளுக்கு

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன் !
!
நினைவுகளைத் தொலைத்து விட்டு !
நிஜவுலகில் தவித்துக் கொண்டு !
கனவுகளைக் கலைத்துக் கொண்டு !
திண்டாடும் என் தோழா ! !
அண்ணாந்து பார்த்து விடு !
அன்றாடம் இரவினிலே !
ஆயிரமாய் நட்சத்திரங்கள் !
ஒளிராமல் தவிர்ப்பதுண்டோ ? !
தானோடி வரும் பாதையில் !
தவித்து நிற்கும் மக்களுக்கு !
தண்ணீர் தர மறப்பதுண்டோ !
தியாகத் தீப நதி !
கண்களின் ஓரங்களில் !
காய்ந்து போன கண்ணீரை !
உறுதியுடன் துடைத்து விடு !
உயர்ந்த தோள்களை நிமிர்த்திடு !
பிச்சை கேட்டு வாங்க எதிர்காலம் !
பிறிதொருவர் சொந்தமல்ல !
தன் காலில் நிற்காத சமுதாயம் !
காலத்தில் வெல்வதில்லை !
சுதந்திரத்தின் விளிம்புவரை !
துடுப்பெடுத்து வந்தவன் நீ !
கரையினிலே மகிழ்ச்சிப்பூ !
கைகளில் எடுக்க ஏன் தயக்கம் ? !
ஏழைகள் என்றொரு வர்க்கமில்லை !
எல்லோரும் மன்னர்கள், பேதமில்லை !
கைகளிலே தீப்பந்தம் எடுத்து !
கருமைதனை எரித்து விடு !
நேற்றைய கருத்துக்களை மனதில் !
இன்றும் புதைத்துக் கொண்டு !
நாளையை மறுப்போரை ஆருயிர் !
நண்பா ! நீ மிதித்து விடு !
குழந்தைகளின் பசிக்குரல் கேட்க !
கன்னியரின் அழுகுரல் இசைக்க !
பெற்றவரின் மனக்குரல் ஏங்க !
பொன்னான உலகம் என பொய்யாக ஏன் ? !
கரங்களில் ஆயுதம் தேவையில்லை !
கருத்துக்குள் கனல் மூண்டால் போதும் !
கைகளை வலுவாக்கி, காலத்தை கயிறாக்கி !
புதுக்கதை படைத்திடுவாய் என் தோழா நீ

கடிதம்

செல்வா
ஆக்கம்: செல்வா!
கடல் தாண்டி!
பொருள் தேட சென்ற!
கணவனுக்காக.!
கொண்டவளின்!
எண்ணங்களையும்!
ஏக்கங்களையும்!
வார்த்தைகளாக!
சுமந்தபோதும்!
உதிர்ந்து விடாமல்!
ஊமையென!
நித்திரைகெட்டு!
நெடும் பயணம்!
தொடர்ந்து!
விசா இல்லாமல்!
விமானம் ஏறி!
பேணுகிறவன் கைகளால்!
பேரிடி தாக்கினாலும்!
கடமை தவறாது!
கொண்டபணியினை!
குறைவின்றி முடிக்க!
உரியவனிடம்!
ஓப்புவிக்கிறேன்!
ஓரம் கிழிக்கப்பட்டு!
“கடிதமென”!
!
ஆக்கம்: செல்வா

களவு கூட சந்தோஷம்தான்

செயவேலு வெங்கடேசன்
குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்!
சிமெண்ட் பெஞ்சில்!
தி ஜாவின் மோகமுள்!
உடனான தணிமை,!
முன் வராண்டா வேப்பமர!
முன்னிரவு தென்றலில்!
இளையராஜாவின் இசையுடன்!
ஜென்சியின் இனிமையுடனான!
எப் எம் அலைவரிசை.!
அலுவலகம் முடிந்து!
நண்பர்கள்!
பாய் கடை டீ பிஸ்குத்!
தம் அரட்டை,!
காலை செய்தித்தாள்,!
மாலை தொலைக்காட்சி,!
செய்திஇ மெகா சீரியல்,!
பின்னிரவு பால் பழம் தம்,!
மற்றும் எத்தனை எத்தனையோ?!!..!
களவு போயும்கூட!
கவலையில்லை,!
சந்தோஷமே!!..!
என்னுடனான என்!
குழந்தையின் திருடப்பட்ட!
சந்தோஷ தருணங்கள்!
களவு போனதில்..!
!
-க.செ.வெங்கடேசன்.. அபுதாபி

ஜோதிராமலிங்கம் கவிதைகள்

ஜோதிராமலிங்கம்
ஜோதிராமலிங்கம். !
-------------------------- !
முக்கியம் !
o !
வேண்டாத பகுதிகளின் !
மிச்சம் சிலை. !
வேண்டாத வார்த்தைகளின் !
மிச்சம் கவிதை. !
வேண்டாதவற்றின் !
மிச்சம் வாழ்க்கை. !
எனவே !
வேண்டியவை முக்கியம் !
வேண்டாதவை அதிமுக்கியம் !
000 !
!
----------------------------!
முனியாட்டம் !
o !
பள்ளிக்கு வந்ததும் !
காலை பய பரப்பு. !
குகை முனியப்பன் கோயில் !
பட்டாக்கத்தி டுதாம் வேகமாய். !
மதிய உணவு இடைவேளையில் !
வெய்யிலில் ஓடி !
நெஞ்சு படபடக்க !
கும்பலாய் நின்று !
பயத்துடன் பார்க்க !
காற்றில் அசைந்தது !
பட்டாக்கத்தி- !
கூடவே !
மீசை உயர விழிகள் பிதுங்க !
முறைத்தார் முனி. !
கத்தியில் உயரே குத்திய !
எலுமிச்சை பொதக்கென விழ !
பிடித்த ஓட்டம் !
பள்ளிக்கூட வாசலில். !
000

எச்சி ... அடுத்த நிறுத்தம் ... குறுக்குச் சுவர்

ரசிகவ் ஞானியார்
1.எச்சி!
காறி உமிழ்ந்த!
எனது எச்சில்!
புனிதம்தான்!
சட்டையில் வந்து!
தெறிக்கும்பொழுதுதான்!
அசிங்கம் உணருகிறேன்.!
தெறிப்பதை தடுக்க!
துப்புவதை நிறுத்துகிறேன்!
2.அடுத்த நிறுத்தம் மனிதநேயம்!
இருக்கவோ ? எழவோ?!
இருக்கையின் நுனியில் ....!
மனப்போராட்டம் !!
பெரியவரின் தள்ளாமை ...!
தர்மசங்கடப்படுத்துகிறது !!
இருக்கவோ ? எழவோ?!
எழுந்துவிட தீர்மானித்தேன்!
இரக்கத்திற்காக அல்ல ..!
இறக்கத்திற்காக !!
எனது நிறுத்தத்திலேயே ...!
மனிதநேயமும் இறங்கிப்போனது!!
3.குறுக்குச் சுவர்!
ஏறவிடாது வழிமறித்து!
பேருந்தின் படிக்கட்டில்!
தொங்கும் பயணிகளை!
சில சமயம்!
தள்ளிவிட்டுவிட்டுதான்!
மேல் ஏற வேண்டியதிருக்கிறது!
வாழ்க்கையிலும் அப்படித்தான்!
- ரசிகவ் ஞானியார்!
K.Gnaniyar,!
Software Developer,!
TransIT mPower Labs,!
Bangalore

தாலாட்டு

s.உமா
பட்டுத் துகிலெடுத்து!
தொட்டிலொன்று கட்டிவைத்தேன் !
கட்டிக் கனியமுதே!
கண்ணுரங்க வாராயோ!!
!
மலர்மேனி நான்அணைத்து!
மடிமீது வைத்திருந்து!
தட்டித் தூங்க வைப்பேன்!
தளிர்க் கொடியே தூங்காயோ!!
!
வண்ணத்து பூச்சியினம்!
வட்டமிட்டே தாவி வரும்!
பொன்மேனி தனைக் கண்டு !
பூ வெனவே மயங்கிவிடும்..!
!
கண்ணத்து கதுப்பெடுத்து!
கொத்தவரும் கிளிக்கூட்டம்!
விண்ணத்து மீன்களெல்லாம்!
விளையாடத் தேடிவரும்!
!
பாட்டெடுத்து பாடிடுவேன்!
பக்கத்தில் துணையிருப்பேன்!
இளங்காலைச் சூரியனே !
எட்டி நீ பார்க்காதே..!
!
படித்து பட்டம்பெற!
பாடுபடும் அண்ணனங்கே!
பிரித்த பக்கமெல்லாம்!
பேசா உன் சித்திரங்கள்!
கண்டு சினங் கொண்டு!
உன் எதிர் வந்து நின்ற்வனை!
சின்ன இதழ்விரித்து!
சிரித்து வலை வீசிவிட்டாய் !
தொட்டு உனை தூக்கவைத்தாய்!
துள்ளி விளையாடவைத்தாய்!
பாடமெல்லாம் போகட்டும் உன்!
பட்டு மேனி துவளாதோ?!
!
சிட்டாய் நீ ஓடிவந்து!
சீக்கிரமே தூங்கிவிடு!
காத்திருக்கு எதிர்காலம்!
கண்ணுரங்க நேரமில்லை..!
!
கலைகள் பல கற்றிடனும்!
கடமை யெல்லாம் செய்திடனும்!
பெரிய பெயர் பெற்றிடனும்!
புகழ்வானில் பறந்திடனும்..!
!
அன்புக் கொண்டு பிறரிடத்தில்!
அற்புதமாய் வாழ்ந்திடனும்!
தாய்தேசம் தழைக்கவைக்க!
தன்னலமே மறந்திடனும்.. !
!
மயக்கவரும் மாலையிலே!
மான்விழியாள் கண்டுவிட்டால்!
விழித்திருக்க வேண்டிவரும்!
விண்ணுலகம் இறங்கிவரும்..!
!
இப்போதே தூங்கிவிடு!
இருவிழிக்கு ஓய்வுகொடு!
எப்போதும் காத்திடுவான்!
எம்பெருமான் துனையிருப்பான்