தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மரண அழைப்பு

ப.மதியழகன்
வாழ்க்கைப் புதிர்!
அவிழ்கிறது!
சுவாரஸ்யமற்ற பக்கங்களைப்!
புரட்டியபடி!
திரைச்சீலை அகன்றது!
கட்புலனாகாத காட்சிகள்!
கனவில் விரிந்தது!
ஆற்றுப்படுத்த எவருமின்றி!
உள்ளம் பொங்கி எழுகிறது!
நேர்பட்ட நெஞ்சகத்துக்கு!
எதுவும் தவறாகவே தெரிகிறது!
விடியல் வரை!
முள்படுக்கை தனில்!
உறக்கம் வராமல்!
புரள்கிறேன்!
கசங்கிய ஆடையுடனும்!
குளித்து நாளானதால்!
கவுச்சி நாற்றத்துடன்!
சுற்றித் திரிகிறேன்!
துரதிஷ்டம் துரத்தியடிக்கிறது!
என்னை!
துன்பக் கேணியில்!
காப்பாற்ற எவருமின்றி!
முழுவதுமாக!
மூழ்கிக் கொண்டிருக்கிறேன். !

கூடை.. நினைவுகளே நீளுவதால்

பட்டுக்கோட்டை தமிழ்மதி
01.!
கூடை!
--------------!
ஏழெட்டு கூடைகளோடு!
என் மகன் .!
மண்ணள்ளி விளையாட!
ஒன்று !
தம்பிக்கென்றான்.!
அப்பாவிடம் ஒன்றை கொடுத்து !
கவிதை எழுதும் காகிதத்திற் கென்றான்.!
இது!
பிளாஸ்டிக்பைக்கு பதில் !
கடையில் பொருள் வாங்க வென்றான்!
ஆத்தா!
வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள !
ஒன்றை !
ஊருக்கு அனுப்பச் சொன்னான்!
குடத்தடி கொடிமல்லி பூப்பறிக்க !
இது அக்காவுக் கென்றான்!
கூடைகளுக்கெல்லாம் கொண்டாட்டம் !
குதித்து குதித்து !
குப்புற விழுந்து சிரித்தன.!
ஊரில் பார்த்த !
ஓலை குட்டான் !
கடவாய் பொட்டி!
சாணி அள்ளும் தட்டுக்கூடை !
ஈச்சமிளாறில் செய்த!
நெல் தூற்றும் கூடை!
அவித்த நெல்லை அள்ளும் கூடை!
நெல்லரைக்க போய்!
தவிடள்ளும் கூடை!
பனையோலை கிழித்து !
மூங்கில் சீவி!
முடைந்த கூடை!
ஞாபகம்.!
அழகு கூடையொன்றில்!
அள்ளி கொடுத்தான்!
அம்மாவுக்கு தன்!
முத்தங்களை.!
வரைய சொன்ன ஆசிரியையிடம் !
கூடை ஒன்றை கொடுத்து !
அதில்!
நட்சத்திரங்களை போட சொல்லி !
நின்றான்!
வெறுங் கூடை!
நிறைய நிறைய !
கனவுகள்.!
02.!
நினைவுகளே நீளுவதால்....!
--------------------------------------!
நினைவுகளே நீளுவதால்!
நேரமிருப்பதில்லை!
எழுத....!
நினைத்தே நினைவுகள் ஓட!
எழுதவேண்டிய கடிதமும்!
எழுதப்படாத காகிதமாய்.!
நலம் விசாரிக்காமலே!
நலமென்றே !
நம்பும் நினைவுகள்....!
நித்தம் !
ஆடி ஓடிய அசதிக்குப்பின்னும்!
அலுக்காத நினைவுகள்....!
நினைவொளி!
நிலவுநெஞ்சம் வழிய!
இரவும் விழியும் !
ஈரம்.!
நினைப்பதை நிறுத்தி!
நினைத்ததை எழுத நினைத்தால்!
நினைத்தது நினைத்து!
நீளும் நினைவு.!
நினைத்ததை எழுதாமல்தான்!
இருந்தேனென்றால்!
நினைத்ததைப் பேசாமல்கூட!
போய்விட்டேன்!
நேற்று உன்னை நேரில் பார்த்தும்.!
நீளும் நினைவுகள்

காத்திருத்தல்

மெஹாசெயின்ட்
அன்பே.... !
உனக்காகக் !
காத்திருக்கும் நேரங்களில் !
கொஞ்சம் கொஞ்சமாகச் !
செத்துக் கொண்டிருப்பது !
வினாடிகள் மட்டுமல்ல !... !
நானும் தான்......... !
பெயர் : மெஹாசெயின்ட் !
தேதி : 25.05.2006

எல்லைகள்

சகாராதென்றல்
வட்டத்துக்குள் இருக்கப்!
பழகிக் கொள்ளவில்லை!
இடைஞ்சலாயிருக்கிறது!
இச்சிறிய வட்டம்!
மூச்சு விட இயலவில்லை!
வெட்டவெளியெனினும்!
துரத்தி விளையாட முடியவில்லை!
செளகரியத்திற்காகவோ!
எல்லை தாண்டவில்லையென்ற!
மறைமுக உண‌ர்த்த‌லுக்காகவோ!
வரைந்து கொள்ளலாம் இவ்வட்டத்தை!
பெரிதாய்..!
*சற்றே பெரிதாய்..*!
*இன்னும் பெரியதாய்..*!
- சகாராதென்றல்!
-- -----------------------------------!
வித்தியாச‌மாய் வித்தியாச‌ப்ப‌டு

அணில் மரம் பூனை

கருணாகரன்
மாதுளைச் செடிக்கும்!
குறுக்கு வேலிக்குமிடையில்!
தாவித்திரியும்!
அணிலின் கனவில்!
தின்று முடித்த பழத்தின் ஞாபகங்களா!
தின்னப் போகும் கனிகளின் ருஷியா?!
அணிலின் கண்களில்!
தீராத் தவிப்பில் துடிக்கிறது!
அச்சத்தின் குரூர நிழல்!
அணிலின் காதலுக்கு!
இருக்கின்றன மரங்கள்!
காதல் முடிய!
மரத்தின் கனிகளும்!
மரத்தில் நின்றே!
மரப் பழத்தைத் தின்றாறிக்!
கொண்டாடும் அணில்.!
மரத்தின் கீழே!
வேட்டையின் நுட்பங்களோடு!
பாயும் முனைப்பில் பூனை!
யார் வாய்க்கு!
யாதோ.!
- கருணாகரன்

மனம்

அகரம் அமுதா
எண்ண வலையில் இரையைத் தேடி!
உண்டு களித்து மீளாப் பறவை...!
ஆறறி வென்னும் சாரதி சொல்லை!
மீறி நடந்து மீளும் குதிரை...!
கற்பனை யென்னும் சிற்பம் செதுக்க!
சிற்றுளி கொண்டே சனித்த பாறை...!
தைத்திடும் முள்ளெனத் தைத்திடும் வேளை!
பிய்த்தெறிந் திடினும் பிழைத்தெழும் கோரை...!
ஒன்றை விட்டே ஒன்றில் தாவி!
ஒன்றைப் பற்றி ஓடிடும் தேனீ...!
சஞ்சல மாம்அலை தாவி யெழுந்தால்!
கொஞ்சமும் நிலையின்றிக் குதித்திடும் தோணி...!
பண்போ டன்பு பாசம் பற்றெனும்!
பண்ணெழு திடவே படைத்த ஏடு...!
செய்தமுன் வினைக்காய் வினைப்பயன் பெற்றிட!
மெய்யெனும் கையது ஏந்திய ஓடு...!
ஆசை என்னும் வேசையை நாடிப்!
பூசை நடத்திப் புலம்பிடும் போகி...!
பற்றாம் தூசைப் பற்றி யெடுத்து!
முற்றும் அகற்றி முனகிடும் யோகி...!
மறதி யென்னும் மருந்தைப் பூசி!
விரைந்து ஆறிட விளைந்த காயம்...!
நினைவாம் கணைகள் நிமிடமும் பாய்ந்து!
கணத்தில் தைக்கக் கடவுளின் சாபம்...!!
-அகரம்.அமுதா

மாறாத வலிகள்

ஆனந்தத்தில் ஒரு அனல்
அமைதியாக இருந்த பொழுதுகள்!
அதிர்ந்து போனது -!
நிலத்தில் திடீரென மாற்றம்!
களத்தினில்!
கடும் சமராம்....!
நெஞ்சுக்குள் ஒரே!
ஓயாத படபடப்பு!
நித்தம் குண்டுகளின் சத்தம்!
நிம்மதியை தொலைக்கும்!
உயிர்மையின் குரல்கள்!
விடிவை நோக்கி விரையும்!
பாய்ந்திடும் தோட்டா!
மாய்ந்திடும் உயிர்கள்!
துண்டாடும் உடல்கள்!
துர்நாற்றம் வீசும்!
வீதிகளில் இரத்த வெள்ளம்!
வெள்ளோட்டம் செய்யும்!
தூக்கங்களே இல்லாத!
துயரங்கள் வாட்டும்!
தற்சமயம் கண் அயர்ந்தால்!
கனவுகளுக்குள்ளும்!
குண்டுகள் வந்து வீழும்

தேடல்

ராமலக்ஷ்மி
என்னென்ன நம் தேவை!
என்கின்ற கோணத்திலேயே!
என்றைக்கும் சிந்தித்து!
எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..!
அதை அடைந்திடும் நோக்கம்!
ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்!
துடிப்புடன் நாளதும் பொழுதும்!
ஓயாமல் ஓடியாடி..!
ஒருவழியாய் ஆசையது!
நிறைவேறும் வேளைதனில்!
தேடத்தான் வேண்டியிருக்கிறது!
பலனாகக் கிடைத்ததா!
துளியேனும் பரவசமென்று!!
என்னென்ன தேவையில்லை!
எனத் தீர்மானித்து!
ஒருதெளிவாய் வாழ்கின்ற!
வகையினருக்கு மட்டுமின்றி..!
இதுயிதுவே தேவையென!
எல்லைகள்!
வகுத்துக் கொள்ளாமல்!
விடிகின்ற காலைகளை!
நன்றிப் புன்னகைசிந்தி!
எதிர்கொள்வது போலவே!
வருகின்ற வளர்ச்சிகளைச்!
சந்தித்தவராய்!
செய்யும் பணிகளிலே!
கவனத்தைக் குவித்துத்!
திறம்பட முடிப்பதையே!
பேரானந்தமாய்!
உணர்பவருக்கும்..!
தேடாமலேதான்!
கிடைத்து விடுகிறதோ!
நம்மில் பலருக்கும்!
தீராத் தேவையாகவே!
இருந்துவரும் அந்தப்!
பரிபூரண மனநிறைவு?!

காதல் என்றால் என்ன

கல்முனையான்
? !
----------------------------!
நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....!
நான் சொன்ன பதில் !
வெறுமையாய்க்கிடக்கும் இதய அறைகளில்!
வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம்!
மாதாந்த வாடகையாக ஓரத்தில் ஒரு சிணுங்கல்!
அச்சிணுங்கலின் ஈரலிப்பில் உப்பிப்போன இதயம்.!
சில வேளைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்!
அச்சிராய்ப்பினுள் கொதிக்கின்ற எண்ணெய்க் குதமாய் !
வெற்றுப் பையுடன் ஏங்கும்!
ஏழைகளின் அங்கலாய்ப்பு.!
காதலின் பின் உன் மூளைக்கும் !
உன் வீட்டு மூலைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா!
இரண்டிலுமே கவலைப் புழுதியால்!
படிந்த ஒட்டடைகளின் சாம்ராஜ்யம்.!
அடிக்கடி சிரித்துக்கொள்வாய்!
நீ காலைக் கடன் முடிக்கும் வேளை கூட!
ஏன் தெரியுமா!
உன்னால் இயன்ற கடன் ஒன்றை கழித்ததற்காக.!
சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்!
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்!
அதை சில பேர் தப்பாக நினைத்து!
உன்னிடம் தீட்சை பெற வருவர்!
அவர்களுக்கு தெரியாது போலும்!
அந்த ஒளியின் அடிப்படை மூலம் எதுவென்று!
அது தெரிந்தால் !
அவர்களும் ...!
வேண்டாம் எதற்கு இந்த வம்பு

உண்மை.. கொலுசொலி

ந.அன்புமொழி
01.!
உண்மை!
--------------!
மேகங்கள் மறைத்தாலும் !
மரங்கள் மறைத்தாலும் !
இரவுகள் மறைத்தாலும்!
இனிய வீடுகள் மறைத்தாலும் !
உடைகள் மறைத்தாலும்!
குடைகள் மறைத்தாலும் !
சூரியனை மறைப்பது தற்காலிகமே. !
அவ்வாறே ஒருநாளில் !
நிரந்தரமாய் மறைத்தாலும் !
கவசங்கள் பயந்துக்கொண்டே சொல்லும் !
'சூரியனிடமிருந்து நீ மறைந்துக்கொள்ளலாம் !
சூரியனை உன்னால் மறுக்கமுடியாது என்று.!
அதேபோல்!
இனங்கள் மறைத்தாலும் !
மொழிகள் மறைத்தாலும் !
மதங்கள் மறைத்தாலும் !
நாடுகள் மறைத்தாலும் !
செல்வங்கள் மறைத்தாலும்!
சாதிகள் மறைத்தாலும்!
உண்மையை மறைப்பதுவும் தற்காலிகமே.!
அவ்வாறே எதிர்காலத்தில் !
எதையெதையோ உருவாக்கி!
நிரந்தரமாய் மறைத்தாலும் !
அழிவுகள் பாய்ந்துக்கொண்டே சொல்லும் !
'உண்மையிடமிருந்து நீ மறைந்துக்கொள்ளலாம் !
உண்மையை உன்னால் மறுக்கமுடியாது என்று. !
சோம்பேறிகளின் பரிணாமங்களே!
நன்றாகப் பாருங்கள், !
சூரியன் நம் அன்புக்காக !
தான் எரிவதைப் பற்றி கவலைப்படாமல்!
ஏங்கிக்கொண்டே கதறுவதை. !
உழைக்காமல் உணவுண்ணும் !
பெருநோய் பரம்பரைகளே!
நன்றாக உற்றுப்பாருங்கள்,!
பூமி நம் அன்புக்காக !
தன் ஓய்வைப் பற்றி கவலைப்படாமல்!
ஏங்கிக்கொண்டே சுழலுவதை.!
பேராசை கொண்டு!
பொருள் சேர்த்துச் சாகும் !
பரிதாபத்துக்குறியவர்களே!
தயவுசெய்து!
நன்றாக உற்றுப்பாருங்கள்,!
எல்லாம் ஒன்றேயென்றும் !
அனைத்தும் நமதேயென்றும், !
வா !
விதவிதமாய் !
உழைத்து உழைத்து!
புதுவிதமான இன்பங்களை !
பலவிதமாய் கொண்டாடுவோமென்று, !
உண்மை !
மீண்டும் மீண்டும் கத்திக்;கொண்டு!
பித்துப்பிடித்தது போல் !
ஏங்கிக்கொண்டே,!
ஏன்!
நீயும் நானும் கூட ஒன்றுதான்!
என்று!
கண்ணீரோடு சிரிப்பதை.!
02.!
கொலுசொலி!
---------------------!
அதோ !
ஏழைத் தங்கையின் !
செருப்பில்லா !
கால்களைப் பார்த்து !
கண்ணீர் விட்டேன. !
அவள் காலாடை விளிம்பில் !
மறைந்திருந்த கொலுசு !
சத்தமாய் சிரித்தது, !
பைத்தியக்காரா என்று. !
ஐயோ !
என்ன கொடுமையிது !
எது முக்கியமென்பதே !
தவறாக போதிக்கப்பட்டுள்ளதே !
என் தங்கைகளுக்கு,!
கதறியழுதேன்.!
முட்டாளே !
போதும் நிறுத்து !
வாழக்கற்றுக்கொள் !
தூ.. !
துப்பினாள் தங்கை. !
புழுங்கி !
புழுங்கியழுதேன் !
மனதிற்குள். !
உண்மை !
என் !
ஒட்டுமொத்த கண்ணீரையும் !
விலைக்கு வாங்கிக்கொண்டது !
எனக்கெப்படி தெரியும்!! !
உணர்ந்து!
வாழ்த்தியது !
வெள்ளி கொலுசு.!
!
-ந.அன்புமொழி