தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காதல் திருட்டு... கல்லாய்ச் சமைந்து

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
1.காதல் திருட்டு!
-----------------------!
அவளைத் தொலைத்துவிட்டு!
அகிலமெலாம் தேடுகிறேன்.!
ஆசையாய்த் துடைத்து!
அன்பு முத்தமிட்டு!
அழகாய் வைத்திருந்தேன்!
அரைக்கைச் சட்டைக்குள்.!
அலுவலக உபயோகத்திற்காய்!
அவ்வப்போது பதிவுசெய்த!
ஆயிரம் இலக்கங்கள் - அவளை!
ஆக்கிரமிப்புச் செய்தன.!
நிஜக் காதலியின்!
நித்திரைச் செய்தியெல்லாம்!
அவளுள்தான் அமைதியாய்!
அடங்கிக் கிடந்தன.!
மகாபொலவில் புது!
மணத் தம்பதிகள்!
கைகோர்த்துச் சென்றதையும்!
கிளிக்செய்து வைத்திருந்தேன்.!
செல்லிடம் என்பதால்!
சென்றுவிட்டாயோ என்னிடம்!
சொல்லிக் கொள்ளாமல்!
செருக்குடன் நீ!!
தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்!
தொலைபேசிக் காதலியை!
தெரிந்தவர்கள் தயவுடன்!
திருப்பித் தந்திடுங்கள்.!
காதலைத் திருடுவது - உங்களுக்குக்!
களங்கமெனத் தெரியாதா? !
2.கல்லாய்ச் சமைந்து...!
---------------------------!
வாசல் தோறும் உன்வரவை!
எதிர்பார்த்துக் காத்து நிற்பேன்!
யாசகம் என்றெண்ணி எட்டிநிற்பாய்.!
அண்ணன் வருகை கண்டு!
அண்ணார்ந்து பார்க்கும் நீ!
அந்நியமாய் எனைக் காட்டிக்கொள்வாய்.!
மழையென்று மரத்தடி ஒதுங்கி!
தளையொன்றை உசுப்பி விட!
ஏளனமாய் எனைப் பார்ப்பாய்.!
கடலை வண்டிக் காரனிடமும்!
கச்சான் விற்கும் சிறுவனிடமும்!
கண்ணசைத்து ஜாடை காட்டிடுவாய்.!
உனை ஆவலாய் முத்தமிட!
நெருங்கும் போதெல்லாம் நீயென்னை!
அரைவேக்காடு அசிங்கம் என்பாய்.!
ஆசையாய் உன் கரம்பிடித்து!
அன்பு மொழி பேசி!
அழகழகாய் ஐந்தாறு பெற்றெடுத்து!
அரசாள எண்ணி யிருந்தேன்.!
சுனாமிப் பேயலை வில்லனாய்மாறி!
உனை சுருட்டிச் சென்றபோது!
கல்லாய்ச் சமைந்து நின்றேன்!
எல்லாக் காலமும் போல்

நீ இல்லாத பொழுதுகளில்

முனியாண்டி ராஜ்
நீ இல்லாத!
அந்தப் பொழுதுகளில்...!
வானம்!
கருமையைப் பூசிக் கொண்டு!
கண்ணீர் விடக் காத்திருக்கும்...!
வானவில்லை ஒடித்து!
வாசல் ஓரம் போட்டிருக்கும்!
காற்று...!
மனதோரம்!
ஒரு மெல்லிய இழையாய்!
ஏக்கம்!
சோகப் பாடலை!
முணுமுணுத்துக் கொண்டிருக்கும்!
காலண்டர் தாள்கள்!
வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும்!
தன்னைக் கிழித்துப் போட!
கரங்களை எதிர்பார்த்து...!
போர்வைக்குள்!
தூக்கம் திணறிக் கொண்டிருக்கும்!
உன் அணைப்பை எண்ணி..!
செல்போன் குறுந்தகவல்கள்!
எல்லாமே!
குற்றமாய்தான் போகும்!
உன் பெயர் இல்லாமல்!!
அழைக்கும் குரல்கள்!
உன் வாசம் இல்லாமல்!
வாடையை முகத்தில் வீசிவிட்டுப்!
போகும்!!
தொலைக்காட்சிகள்!
அலைகளை மாற்றி மாற்றி!
வெறுத்துப் போய் ....!
கண்களை மூடிக் கொள்ளும்....!
நீ இல்லாத பொழுதுகள்..!
தாய்வீட்டுக்கு போவதாய்!
நீ சொல்லில் செல்லும்!
போதெல்லாம்....!
நீ இல்லாத பொழுதுகள்!
என்னை நானே தொலைத்த!
வனாந்திரங்கள்!!!!
!
-முனியாண்டி ராஜ்

என்ன சொல்ல.. வாழ்க்கை

வி. பிச்சுமணி
என்ன சொல்ல போகிறாய்.. வாழ்க்கை பயணம்!
01.!
என்ன சொல்ல போகிறாய்!
-----------------------!
செல்போனுக்கு வலிக்காமல்!
பூனைநடை பேச்சில்!
இன்று கட்டாயம் கடற்கரை வா!
முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று சொல்லி!
போனை வைத்து விட்டாய்!
என்ன சொல்ல போகிறாய் எனும் எண்ணம்!
மீன்களாய் ஆழத்திலிருந்து அடிக்கடி!
நீர்மட்டம் வந்து சுவாசித்து செல்கின்றன!
அலையாய் முன்னால் வந்து!
பின்னால் வரும் அலையை!
கரையை தொடவிடாமல் மடக்கின்றன!
அலுவலக தோழியாய் வீட்டுக்கு செல்லும்!
அவசரத்தில் விட்டு சென்ற பொருளை!
விரைந்து வந்து எடுக்கின்றன!
பேரூந்து நிலையத்தில் காத்திருக்கையில்!
நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேரூந்துகள்!
நான் வந்து கொண்டு இருக்கிறேனெ!
உன்னிடம் வந்து கட்டியம் கூறும் தானே!
உணவு பொருளை கண்டவுடன்!
தோழர்களை விளிக்கும் காக்கை!
அவர்கள் வந்தவுடன் சண்டையில்!
இறங்குவது போல் காத்திருக்கும நீ!
தாமதமாய் வரும் என்னிடம்!
விஷயத்தை சொல்லுமுன்!
விலலங்கம் பண்ணாதே கண்ணே !
!
02.!
வாழ்க்கை பயணம்!
--------------------------!
செங்கல்பட்டு வந்துவிட்டதா என!
செல்போனில் பார்க்க!
அது அண்ணா நகர் காட்டியது!
வெளியே ஊர்கள் பயங்கர அமைதியில்!
தூங்கி கொண்டிருந்தன!
நெல்லை விரைவுவண்டியிலிருந்து இறங்கி!
பெருங்களத்தூரில் இறங்க!
நாலாவது நடைமேடையில் புறப்பட தயராக இருந்த!
கடற்கரை வண்டி பிடித்து!
குளிர்ந்து காற்று முகத்தில் அடிக்காத வண்ணம்!
இருக்கைகள் பார்த்து அமர்ந்தோம்!
வண்டி ஒட்டுமொத்தமாக காலியாக இருந்தது!
தலையில் லுங்கியை முக்காடிட்டு!
சிவப்பு துண்டு அதன்மீது முண்டாசு கட்டி!
அரபுநாட்டு சேக்காய் கால்ஊனமான பிச்சைகாரர்!
கைத்தடியுடன் வண்டியில் ஏறி!
கதவோரம் தரையில் அமர்ந்தார்!
வண்டி பயணத்தை தொடங்கியது !
!
03. !
இன்று வருந்தி.. !
------------------!
ஐந்தாம் வகுப்பு படிக்கையில்!
தனிபயிற்சி ஆசிரியை வீட்டில்!
சிவப்பு ஜார்ஜ்எட் கெளனில்!
அழகு தேவதையாய் அமர்ந்திருந்த!
என் வகுப்பு சகமாணவியின் அருகில் அமர!
என்னுடன் என் நண்பன் போட்டிக்கு!
வருவதாக நினைத்து அவனை வெறுக்க!
அவனோ ஆறாம் வகுப்பு படிக்கும்!
அவளது அக்காவை அவனுக்கு பிடிக்குமென!
சொல்ல அவள் என் ஆள்தான் என்று மனது!
அங்காங்கே சொல்லி திரிந்தது!
சின்ன பெருமாள் கோவிலில் அவள்!
சகபிள்ளைகளுடன் தூண் பிடித்து விளையாட!
காதல்மலர் கூட்டமொன்று பாடல் பாடி!
விரட்டி விளையாடியது ஒரு காலம்!
தனிபயிற்சிக்கு போக பிடிக்காமல் நிறுத்திய போதுகூட!
அவளுக்கு என்ளை பிடிக்குமா என்று கேட்கவில்லை!
நான் கல்லூரி படித்து கொண்டிருக்கையில்!
ஒரு நாள் அம்மாவின் வற்புறுத்தலினால்!
மரப்பொடி வாங்க மரஅறுக்கும் கடையில் காத்திருக்கையில்!
அவளும் அவளது தோழியும் என்னை பெயர் சொல்லி!
அழைத்தபோதும்கூட பேசாமல் இருந்துவிட்டதற்கு!
இன்று வருந்தி…!
என்ன பயன்

பிம்பம்

வி. பிச்சுமணி
வலசை பறவைகளாய்!
தாயகம் வந்திருக்கிறாயென!
எங்க வீட்டு அடுக்களை பேச்சு!
உன் கண்களை சந்திக்க!
இஷ்டமில்லா!
என் கண்கள் தலைகுனிந்து!
வாசல் வந்தது. !
உன்பிறை முதுகு!
என் வீட்டு வாசலை!
நோட்டமிட்டு கொண்டிருக்கிறது!
சாலை பள்ள நீரில்!
பிம்பமாய் பிரதிபலித்து!
என்னை பரிதவிக்க வைக்கிறது !
மலர்முகம் திரும்புவாயெனும்!
ஏக்க பெருமூச்சில்!
நீரும் ஆவியாகிவிடக்கூடும்!
நீ திரும்பும் பொழுது!
பள்ளத்து நீரில் விழுந்த!
மிதிவண்டியால்!
உன் பிம்பம் அலைஅலையாய்!
அலைகழிக்கிறது !
அந்த நீரில் என் பிம்பத்தை!
நீ பார்த்திருக்கலாம்!
பார்க்காதிருந்திருக்கலாம்!
அலைஅலையாய் நான்!
காணாது போயிருக்கலாம் !
முந்தைய நாளில் முதன்முதலாய்!
என்னை நீ பார்த்து சிரித்த போது!
இதே போல் ஏதோஒரு வாகனம்!
வந்து மறைத்திருந்திருக்கலாம்!
மறந்திருக்க அவசியமில்லாமல்

சித்திரைப் பெண்

மு.கந்தசாமி நாகராஜன்
மு.கந்தசாமி நாகராஜன் !
சித்திரையில் !
பிறந்த !
சித்திரப்பெண் !
என் தமிழன்னை. !
இவள் !
தையில் பிறந்த !
தையல் என்றும் !
தமிழருள் !
ஓர் !
கருத்துண்டு. !
தையோ !
சித்திரையோ !
அவள் !
என் அன்னை. !
அவள் !
ஈன்றெடுத்த !
தமிழர் குலம் !
தரணியெல்லாம் !
செழிக்கச் செய்யும் !
தரணியைத் !
தழைக்கச் செய்த !
தமிழர் குல நிலை...? !
பிரிவினை என்பதே !
தமிழரின் !
தலைவிதியாய் !
மாறிப்போன !
மாயமென்ன? !
தமிழன்னை !
ஈன்றெடுத்த !
தவப்புதல்வனே... !
நம் !
தாயகத்தை !
சற்றே !
நினைத்துப்பார். !
ஆரிய திராவிட மாயைகள் !
ஆதனால் பிறந்த கயவர்கள்... !
தமிழினத்தை !
மோதவிட்டு !
தம்மினத்தைக் !
கொழுக்கச் செய்த புல்லர்கள்... !
அன்னையின் !
பெயரைச் சொல்லி !
அடுக்கடுக்காய் !
கொள்ளையடித்த !
அரசியல் கூட்டம்... !
புறப்படு தமிழா !
புதியதோர் களம் காண. !
ஓன்று சேர் !
தமிழினமே. !
மாயைகள் செய்து !
உன்னை !
மாளச்செய்தோரைக் !
கவிழ்த்திடவே.. !
புதியதோர் !
இவ்வாண்டில் !
புரட்சியை விதைத்திடுவோம் !
புதியதோர் !
தமிழகம் காண !
புறப்பட்டு வா !
தமிழினமே

துளிப்பா

இரா.இரவி
ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை!
ஈவு இரக்கமற்ற கொடூரக் கொலை!
வாழ வழியின்றி முள்வேலி!
வாடி வதங்கினர் குழந்தைகள்!
இழவை கேட்க நாதியில்லை!
உலக மகா கொடூர கொலைக்காரன்!
உலக வலம் நாளும் வருகிறான்!
உலக நாடுகள் மன்றத்தான் வேடிக்கை பார்க்கிறான்!
ஒருவரும் தட்டி கேட்கவில்லை!
பலகாலம் ஏமாற்றி வாழ்கிறான்!
மூட நம்பிக்கைகளில் ஒன்றானது தேர்தல்!
மேதினியில் பணம் படைத்தவர்களே வேட்பாளர்கள்!
மடயர்கள் மலிந்து விட்டனர்!
மூளைக்கு வேலை இல்லை!
அட பணம் வாங்கி வாக்களிக்கிறார்கள்.!
போட்டி போட்டன தொலைக்காட்சிகள்!
பெண்களை அழ வைத்துப் பார்ப்பதில்!
ஏட்டிக்குப் போட்டி மாமியார்கள்!
ஏதிர் தாக்குதலில் மருமகள்கள்!
ஈட்டிக்காரனைத் தோற்கடித்தனர் சண்டையில்!
பட்டுச்சேலை ஆசையை விட்டு விடு!
பாவம் பட்டுப்பூச்சிகளை வாழ விடு!
பட்டு மேனியாளுக்கு தேவையில்லை பட்டு!
துட்டு அதிகம் முடங்கி விடுகின்றது!
கட்டு கைத்தறி சேலை தினம் கட்டு!
பொன் நகை மோகம் மலிந்தது!
பெண்கள் பலரது மனமும் அடிமையானது!
விண்ணை எட்டியது விலை உயர்ந்தது!
வஞ்சியர் இனம் கடையில் குவிந்தது!
ஆண்கள் இனம் அவதிப்பட்டது!
கோடிகளை உதியம் பெறுகிறான் நடிகன்!
கோடம்பாக்கத்து கோமகனாய் வலம் வருகிறான்!
கொடி கட்டி பொழுதுபோக்குகின்றான் ரசிகன்!
கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்கிறான்!
தடியால் அடி வாங்கி காயமும் படுகிறான்!
தமிழர்களின் கலைகளை பறைசாற்றிடும் சிலை!
பார்த்தவர்கள் வியப்பில் ஆகின்றனர் சிலை!
இமி அளவும் இல்லை அதில் செயற்கை!
இமைக்காமல் ரசித்து அடைந்தனர் இன்பம்!
சாமி நம்பாதவரும் வியப்படைந்த நிலை!
நடிகையை சேர்த்தனர் அரசியல் கட்சியில்!
நல்லவர்கள் விலகி விட்டனர் அரசியலில்!
கோடிகள் குவிக்க வாய்ப்பு வழங்கினார்கள்!
கட்சியில் மேல்சபை பதவியும் தருவார்கள்!
கேடிகள் பல்கிப் பெருகி விட்டார்கள்!
ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான்!
பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மான்!
இன்பக் காட்சி தமிழ் இலக்கியத்தில் காண்!
இணை பிரியாத ஜோடிகளின் காதல்!
எண்ணிலடங்காத இனிய உணர்வு தான்

இருளுள் வதைபட்டுச் சிதைகிற ஒளி

சித்தாந்தன்
ஓவியம்!
-------------------------------------------------!
யேசுவே!
நீர் சிலுவையில் அறையப்பட்டபோது!
துயரத்தாலும்!
அவமானத்தாலும் தலைகுனிந்தீர்!
உமது சிடர்களோ!
தாகத்தாலும்!
பசியாலும் தலை தாழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள்!
கல்வாரி மலைக்காற்றைப் பிளந்த!
உமது சொற்களில்!
இருளின் வலி படர்ந்திருந்தது!
சிலுவையில் வழிந்த பச்சைக்குருதியை!
நீர் அவர்களுக்கு வழங்கியிருக்கக் கூடாது!
பிறகுதானே!
இன்னுமின்னும் அதிகமாகியது இரத்தவெறி!
மனிதர்கள் மறந்துபோன சிரிப்பை!
ஏன் விலங்குகளிடம் விட்டுச்சென்றீர்!
அலைக்கழிக்கப்பட்ட ஆதாம் ஏவாளிடம்!
நின் தந்தையின் வனத்திலிருந்து!
சாத்தான் களவாடிக் கொடுத்த கனியில்!
உமது பற்களுமிருந்தனவாம்!
பார்த்தீரா!
காடுகளுக்கிடையில் மூடுண்ட!
சரித்திரங்களிலெல்லாம் காய மறுக்கும்!
உமது குருதியை!
யேசுவே!
மனிதர்களேயில்லாத உலகில்!
தீர்க்கதரிசனமிக்க!
உமது விழிகளை ஏன் ஒளியாக்கினீர்!
என்றுமே வற்றாத!
கண்ணீர் நதிகளை ஏன் பெருகவிட்டீர்!
எதுவுமே வேண்டாம்!
யேசுவே!
உமது பாவங்களைக் கழுவக்கூட!
ஒரு நதியையெனினும்!
அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்களா!
மனிதர்களின் மொத்தப் பாவங்களையும்!
முதுகுவளைய ஏன் சுமந்தீர்!
பாவங்கள் முடிந்து போயினவா!
உம்மைச் சூழ்ந்து துரத்துகிற!
மனிதர்களின் பாவவினைகளிலிருந்து!
நீர் ஒருபோதும்!
தப்பிச் செல்லவே முடியாது!
-சித்தாந்தன்

முதிர் கன்னி

கோகுலன். ஈழம்
உயிர் பெற்ற!
என் ஜன்னல் கம்பிகளே !
என்!
உணர்வு சுமக்கும்!
நாட்குறிப்பேடுகளே !
என்!
முக மஞ்சள் கரைத்த!
அடிவான மேகமே !
என்!
கண்ணீரை வெல்ல!
கரைந்தொழுகும்!
மழைத் துளிகளே !
எதிர் பார்த்தே!
நிரப்பப்பட்ட நாட்கள்!
இன்றும் வெறுமையாகவே !
என் மனதுக்குள் !
மட்டும் தென்னோலை!
ஊடே நீண்டு வரும்!
ஒளிக்கீற்றாய் !
ஆயிரம்!
ஏக்கக்கீற்றுக்கள் !
யாருக்கு புரியப்போகிறார்கள்!
முதிர் கன்னி மௌனத்தின்!
முதல் நரையை. !
-- கோகுலன்!
ஈழம்

இயைந்த நிலை

மௌனன்
அடுத்து வரப்போகும் !
குளிர்காலத்துக்கான எரிபொருளாக !
இப்போது உதிரும் இலைகளையே சேமிக்கிறேன். !
ஒடிந்து விழுந்த சின்னஞ்சிறு !
விறகுகள் தவிர்த்து !
மரங்களின் கிளைகளில் !
கத்தி வைத்துவிடாதவனாக என்னை !
இந்த இயற்கையின் முன் !
விசுவாசத்தோடு இருக்கவிடுகிற !
சாத்தியங்களை யாசிக்கிறேன். !
நிறைய மலர்களோடு வரவிருக்கும் !
வசந்த காலத்திற்கு !
கிளைகளுடன் கூடிய மரங்களை !
குளிர் பொறுத்தேனும் !
விட்டு வைத்திருக்க விரும்புகிறேன். !
இயற்கையின் முன் !
மண்டியிடுபவனாகவே இருந்துவிடுகிறேன். !
என் தலைமீது !
இயற்கையின் பாதமிருக்கட்டும்

ஜனனத்தில் தோன்றி மரணத்தில்

எதிக்கா
முடிவதுதான் வாழ்க்கை!
அதிலே காதல் ஒரு வானவில்!
எங்கோ ? எப்படியோ ?!
வெயிலும் மழையும் சந்திக்கும்போது!
தோன்றுகின்றது!
எனக்கு மட்டும் ஒரு நப்பாசை- ஆம்!
நம் காதல் மட்டும் வானவில்லாக!
இருக்கக்கூடாதென்று!
ஏனெனில் நானும் நீயும்!
வெயிலும் மழையும் போல!
வேறு வேறல்ல