தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கானலும் கண்ணீரும்

செம்மதி
அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்!
போகும் இடம்!
அவர்களுக்கே தெரியவில்லை!
நடந்த பாதையில் சுவடுகள்!
கேள்விக்குறிகளாய்க் கிடக்க!
கச்சைகளைக் களற்றி!
மகுடமாக்கிச் சூட்டப்போகிறார்கள்!
பயிர் வளர்க்கச் சென்றவர்கள்!
வேலியைப் பிரித்துவிட்டு!
பயிரையும் பிடுங்கி எறியப் போகிறார்கள்!
உடம்பிற்குள் கெட்ட ஆவி புகுந்ததுபோல!
ஆக்குரோசமாகப்பேசுகிறார்கள்!
பயிரை எப்படி அழிக்கலாம் என்பதுபற்றி!
உரமாகிப்போனவரின்!
உணர்வுகளை மிதித்து!
பகட்டையும் பணத்தையும்!
தேடிப்போகிறார்கள்!
நல்ல தீன் கிடைக்குமென்று!
முட்டைக் கோழியாகப் போகிறார்கள்!
இட்டுமுடிந்ததும்!
இறச்சிக் கோழியாவதற்கு!
பல்லக்கில் செல்வதாய்!
பாடையில் ஏறிவிட்டார்கள்!
உயிர் உள்ள பிணங்களாகி!
கானல் நீரில் நீச்சலடித்து!
கண்ணீரில் மூழ்கடிக்கப்போகிறார்கள்!
-செம்மதி

வரன்

அனாமிகா பிரித்திமா
வாடிக்கையாய் நடக்கிறது வீட்டில்...!
வரன் ஒன்று வந்திருக்கிறது...!
விவரம் சொல்கிறேன் கேள்...!
விஞ்ஞானி, பொறியாளர், !
வழக்கறிஞர், மருத்துவர்...!
வடநாடு அல்லது அயல்நாடு...!
நல்ல குணம், குடும்பம், படிப்பு...!
என்ன சொல்கிறாய்...?!
நேரம் கொடுங்கள்...!
யோசிக்கிறேன்...!
பின் மெளனம்... !
மெளனம்...!
மெளனம்...!
சம்மதத்திற்கு அறிகுறி அல்ல...!
பிடிக்கவில்லை என்பதற்கு...!
காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்...!
இப்படியாய்...!
எப்போது சம்மதிப்பேன்...!
என காத்துக் கொண்டிருக்கிறார்கள்...!
என்றும் இல்லை...!
என்பது என் மனதிற்குத் தெரியும்...!
ஏன்....?!
என்று உங்களுக்கு...!
புரியுமே...!

மாற்றங்கள் தேடி

ஸ்ரெபினி
இறந்து விடுவோம்!
என்று தெரிந்தும்!
மண்ணைத் தொடுகின்றன!
மழைத் துளிகள்!
மரணம் வரும்வரை!
விளக்கை!
சுற்றிக்கொண்டே இருக்கின்றன!
விட்டில் புச்சிகள்!
சில நிகழ்வுகள்!
இப்படித்தான்!
இருக்க வேண்டும்போல!
மாற்றங்கள் நிகழ!
வாய்ப்பில்லாத வாழ்க்கையில்!
இறந்துவிடும்!
என்று தெரிந்தும்!
சில ஆசைகள்!
தோன்றி சில!
நொடிகளிலேயே!
இறந்துவிடுகின்றன!
ஒரே மாதிரியாக!
ஓடிக்கொண்டிருக்கும்!
அருவிபோலில்லாது!
தென்றலாக புயலாக!
துறலாக வெள்ளமாக!
மாற்றங்களை!
தேடிக்கொண்டிருக்கிறது!
வாழ்க்கை!
இழப்பதற்கு!
இனி ஏதுமில்லை!
எனும் நிலை!
வரும்போது மட்டுமே!
மாற்றங்கள் வரும்போலும்!
கேள்விகள் மட்டுமே!
தேங்கிவிட்ட வாழ்க்கையில்!
இப்போது தேடல்களும்!
- ஸ்ரெபனி

காத்திருக்கிறேன்

கிரிஜா ம‌ணாள‌ன்
காத்திருக்கிறேன்!
கண்ணீர் வழிய!
கரைகடந்து உயிர்தப்ப முயலும்!
கன்னித்தமிழர்களை!
கரம் நீட்டி அழைத்துக் !
காத்திருக்கிறேன்!!
இனப்படுகொலைகளும்!
இடையறாச் சண்டைகளும்!
இலங்கைத் தீவில்!
இல்லாதொழியும் அந்த!
இனிய நாளை நோக்கிக்!
காத்திருக்கிறேன்!!
மனிதநேயம் மலர்ந்து!
மக்கள் துயர் நீங்கும்!
மகத்தான ஒரு!
விடியலை நோக்கிக்!
காத்திருக்கிறேன்!!
-கிரிஜா மணாளன்!
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

அவன் பயணம்

மனோகர் ஞானா, பஹ்ரைன்
சுடுமணலில் புதையும்!
பாதங்களுடன்!
நடந்துகொண்டிருந்தான்.!
சொற்ப நேரமே!
இப்பயணமாயிருக்குமென !
தேற்றியபடி!
கால்களுக்கு சமாதானம்!
சொல்லிக்கொண்டான்.!
வெக்கையின்!
பின்புலத்தில் வேக நடை!
பயின்றிருக்கவேண்டிய!
நாட்களை!
தவறவிட்டிருந்தான்!
முற்காலத்தில்.!
இப்போது!
ஒருகோப்பைக்!
கண்ணீர் சேமித்தவன்!
நனைத்து அழுதுவிடவோர்!
தோளைக் கற்பனைச் செய்ய!
பசுங்கிளையொன்று!
நிழல்கொடுக்கத்!
துவங்கியிருக்கிறது!
அவனுக்கு

தலைமுறைகள்

புதியமாதவி, மும்பை
>> புதியமாதவி, மும்பை !
எப்போதாவது வருவார் !
எங்கள் ஊர்த்தேடி !
எங்கள் அப்பா. !
எங்களைப் பார்க்கவே !
எப்போதும் வருவதாக- !
வந்ததாக- !
இப்போதும் !
சொல்லிக்கொண்டிருக்கிறாள் அம்மா. !
அப்பா.. !
வரும்போதெல்லாம் !
வந்து நிறையும் !
கார்களும் !
கரைவேட்டிகளும். !
அப்பா வாங்கிவந்தப் !
பொம்மைகள் !
பழசாகி உடைவதற்குள் !
புதிதாகக் கிடைக்கும் !
எங்கள் வீட்டில் !
குட்டிப் பாப்பா. !
----------------------- !
அப்பாவின் அருகிலமர்ந்து !
அரசியல் பேச !
ஆசைப்பட்டது நடக்கவில்லை.. !
அப்பாவின் தோள்களில் !
எப்போதும் தொங்கும் !
நீண்ட நேரியலை !
இழுத்துப் பிடித்து !
ஊஞ்சலாக்கிய !
கனவுகள் !
கனவுகளாகவே முடிந்துப் போனது.. !
அப்பாவின் சித்தாந்தங்களை !
என் கேள்விகளால் !
துளைத்து எடுத்து !
அப்பாவுக்கு வாரிசாக !
போராடியதெல்லாம் !
உறவுகளின் சிறையில் !
உடைந்துப்போனது. !
இப்போது- !
நானும் அப்பாவாகி !
எல்லாம் கொடுத்ததாய் !
ஆனந்தமடைவதில் !
அர்த்தமில்லை. !
என் பிள்ளைகளும் !
சொல்கிறார்கள்.. !
எங்களுக்குள் !
இருக்கிறதாம் !
தலைமுறை இடைவெளி! !
!
-------------------- !
பத்து மணிக்குள் !
அவர்கள் !
திரும்பாவிட்டால் !
பதைப் பதைக்கிறது !
எல்லா செய்திகளையும் !
வாசித்து தொலைக்கும் !
மனம். !
சத்தமில்லாமல் !
கைபேசியில் !
பேசுவது கண்டால் !
ரத்தம் கொதிக்கிறது !
எப்போதும் !
எதையாவது !
சாக்குவைத்து !
ஒழுங்குநடவடிக்கை எடுக்க !
ஆயத்தமாகிறது !
நாட்கள். !
இப்போதெல்லாம் !
என் முகத்தில் மட்டுமல்ல !
என் வசனத்திலும் !
வாழ்ந்து கொண்டிருக்கிறது !
என் அம்மாவின் சாயல்

மழைக்குப்பின்

வை. அண்ணாஸாமி
மழை பெய்து ஓய்ந்து விட!
மழலை நீர்க்குமிழின் !
மகிழ்ச்சி ஊஸலாட,!
அழும் குழந்தையும் !
அமைதி கூட்ட,!
பழுதிலா 'பன்னிறவில்' !
முகம் காட்டியதே.!
!
-வை. அண்ணாஸாமி

மௌனம்

முத்து கிருஸ்ணன்
சில சப்தங்கள்!
மௌனம்!
ஆம்...!
சில சப்தங்கள்!
மௌனம் !!
கண்களின் மொழி!
மௌனம் !!
காதல்!
மௌனம் !!
கனவுகள்!
மௌனம்!
உறவுகள்!
மௌனம்!
உயிர் மௌனம் !!
நெஞ்சிற்குள்!
அலை மோதும்!
நினைவுகள்!
மௌனம் !!
உணர்வுகளில் கேட்கும்!
சப்தம்!
ஒரு!
மெனப் பரிமாற்றம்!
மௌனம்!
செய்யும்!
சப்தம்!
மனித நடையை!
வாழக்கை விடையை!
எப்போதும்!
நாம் செய்யும்!
ஒரு!
பயணத்தின் முகவரிகளே!
நம்மை அழைத்து!
செல்லும்!
கேட்கும் செவிகளுக்கு!
மௌனம் பேசும்!
மொழியின் சப்தம்!
எப்போதும் இனிக்கும்!
ஆம்!
மௌனம் ஆச்சரியம்!
தரும் ஒரு!
விந்தை மொழி...!
நீ காதுகளை!
தீட்டு..!
மௌனத்தை கேள்...!
ஆம்!
சில சப்தங்கள்!
மௌனம்

பிரிவு...ஏ(மாற்றம்)

தென்றல்.இரா.சம்பத்
பிரிவு... !
~~~~~ !
1. !
சகியே..!
இயல்பாய் இருக்கப்!
பழகிக்கொள்கிறேன்!
நீ இல்லாத தருணங்களில்...!
ஆதுவரை !
உன் நினைவுகளையாவது!
விட்டுச்செல் என்னிடமே.....!
2. !
ஆடிக்கள்ளி...!
நீ வந்தபோது!
தெரியாமல் போனது...!
போகும்போது!
என் உயிரையும்!
எடுத்துச்செல்வாயென்று...!
!
ஏ(மாற்றம்)!
~~~~~!
1.!
சகியே....!
வழக்கமாய் நீ வரும்!
காலம் கடந்துவிட்டது!
கடிகாரமுள்ளும்!
பந்தையக்குதிரையாய்!
நிமிடங்களைக் கடக்கிறது....!
நீ வருவாயா... மாட்டாயா..?!
இதையே !
திரும்ப திரும்ப எத்துனைமுறைதான்!
என்னிடமே கேட்டுக்கொள்வேன்!
இனி வரமாட்டேன்!
எனச்சொன்னாலும் பரவாயில்லை...!
ஆதையாவது - வந்து!
சொல்லிவிட்டுப்போ

அழகாய் உடைதல்!

லதாமகன்
உடைந்து போகும் நீர்குமிழி ஒன்று!
புகைப்படங்களாய்!
அலைந்து கொண்டிருக்கிறது!
மின்னஞசல் பெட்டிகளில்!
சரி!!
அழகான ஒன்றை!
அழகாய் உடைத்தவன் யார்?!
அழகற்ற உடைப்பை!
அழகாய் எடுத்தவன் யார்?!
!
குருவிகளுக்கு நீர்வைக்கச் சொல்லி!
மின்னஞ்சல் செய்தான் ஒருவன்!
வைத்த நீரை எடுப்பதற்கு!
எந்த குருவியும் இல்லை!
என் ஊரில் என!
மறுமொழி அனுப்பினேன்!
பதில் இன்று வரை வரவில்லை!
!
மூன்று மாதங்களுக்கு முன்!
என் சகோதரிக்கு இரத்தம் கேட்டு!
நான் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று!
யாரிடமிருந்தோ!
இன்று எனக்கே வந்து சேர்ந்தது.!
அவள் இறந்துபோன விஷயத்தை!
எப்படி யாரிடம் சொல்வது?!
!
குறுஞ்செய்தியில்!
நண்பர்கள் தின!
வாழ்த்தனுப்பியவனின் !
பெயர்!
சந்தித்த இடம்!
எதுவும் நினைவில்லை!
எப்படிக் கேட்பது?!
அவனுக்காவது !
என் முகம்,!
நிகழ்வுகள் நினைவிருக்குமா?!
சரி Same to You!!
!
30 பேருக்கு !
பார்வார்ட் செய்தால்!
அதிர்ஷ்டம் அடிக்குமென்றபடி!
வந்துசேர்ந்தார் கடவுள்!
புன்னகைத்துவிட்டு கொன்று விட்டேன்!
சிரித்த்தபடி செத்துப்போனார்!
இல்லாத கடவுள்!