தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விதி வசத்தால்

அனாமிகா பிரித்திமா
உங்களை கைப்பிடிக்கும் வரை...!
தமிழ் தெரியாது...!
முழுமையாய்...!
பிடித்தபின் உங்களை...!
ரசித்ததாலேயே...!
தமிழைக் கற்றுக்கொண்டேன்...!
முழுதாய் கற்று...!
முடிக்கும் முன்னே...!
விதி வேறு விதமாக...!
இருவரையும் இழுத்துச்சென்றது...!
கவிதை எழுதுவேன் என்று...!
கனவிலும் நினைக்கவில்லை...!
கற்று கொடுத்த ஆசான் நீங்கள்...!
கண்ணீருடன் என் நன்றிகள்...!
பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்...!
நான் கவிதைக்காரி அல்ல...!
ஆனால் இன்று விதி வசத்தால்...!
எழுதுகிறேன்...!
எழுதுவேன்...!
!
-அனாமிகா பிரித்திமா!
()

ஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்

கவிதா. நோர்வே
ஓற்றைக்கதவும் ஒரு குழந்தையும்.. நோர்வே சில தூரம்!
01.!
ஓற்றைக்கதவும் ஒரு குழந்தையும்...!
------------------------------------------!
வடலி குலைந்து!
வானம் பார்த்தபடி!
ஒற்றைப்பனை!
அதன் மேல்!
அக்கினி உமிழத் தயாராக!
ஊர் நிலவு!
குருதி படிந்த!
வேலி இடுக்கில்!
தலை கிழிந்த!
ஒரு புகைப்படம்!
கிடுகின் பொந்தல்லூடு!
புன்னகை மறந்து!
பொசுங்கிப்போன!
ஒற்றைக்கை உருவம்!
தன்நிலை மறந்து!
கோவிலடி ஆலமரம்!
அம்மன் பாவம்!
ஒரு கண்ணுடனும்!
ஒற்றைக் காலுடனும்!
அதே...!
அப்பாவிச் சிரித்த முகம்!
காற்றில் அலைந்து!
களைத்து விழுகிறது!
ஒரு துளி மழை!
மழைத்துளி விழுந்தாலும்!
எதோ என்று!
பதறியடித்து!
பதுங்கிக்கொள்கிறது!
உடைந்த ஒற்றைக் கதவடியில்!
ஒரு குழந்தை!
ஏன் என்பதை!
முழுவதுமாய் யாராவது!
இனியேனும் உணரக்கூடும்...?!
02.!
நோர்வே சில தூரம்!
----------------------------!
சூரியனைக் கொன்று...!
விழுங்கிப் பிரசவிக்கும்!
கறுப்புப்பகலின் தியானத்திற்குள்!
முயங்கிக்கிடக்கிறது!
பனிகாலம்!
இரவுபகலாய்!
ஓய்வு தொலைத்த சூரியன்!
வீட்டு முற்றதைச்!
அமானுஷ்ய அமைதியில்!
ஆக்கிரமிப்புப் செய்கிறது!
இது கோடை!
மலைமுடிச்சுகளின் உச்சியில்!
தம்மை ஏற்றி!
எழுந்து நிற்கும்!
வெள்ளை முகங்களும்!
அதே!
மலைக்குவியல்களுக்குள்!
முகம் தொலைத்த!
கறுப்பு மனிதர்களும்!
கலந்து கரைவர்!
பனி மூடிய வீடுகளுள்!
தீ மூட்டி!
குளிர் காய்வதும்!
உயிர் வாழ்வதும் இங்கு!
சிலருக்குப் போதுமானது!
!
சில நாள் நாடுகடந்து!
மீண்டும் வந்து!
முகம் தொலைக்க!
பழகிவிட்டது சிலருக்கு.!
எனக்கும்...!
நாடு மலருமெனச்!
சபதஞ்செய்த!
ஓலங்கள்...!
புதிது புதிதாய்!
கண்டெடுக்கும்!
அன்றன்று விரிந்த!
மாயக்கூட்டினுள்!
மல்லாந்து கிடக்கிறது...!
கறுப்பைத் தவிர்ந்து!
எம்மில் அனைத்தும் களைந்து!
நிர்வாணமாய்!
எங்கள் ஒற்றுமை.!
மரணம் வாழும்!
எங்கள் மண்ணில்!
இன்று!
ஊர் போய் சேர!
யார்க்கும் தடையில்லை!
இங்கிருந்து எல்லாம்!
பொறுக்கவும் பெருக்கவுமே!
போதுமானதாய் இருப்பதால்...!
கறுத்தவிடியலிலும்!
வெள்ளையிரவுகளிலும்!
ஆழ்மன அலைகள் கரையேற்ற!
நிதான நிமிசங்களை!
சந்ததிக்கும் சேர்த்தே சிருஷ்டிக்க...!
பனி ஒழுகி!
பூ மலரும் ஒர்நாள்!
சொந்தங்களே உம்மையிங்கு!
சில பொழுதிலேனும்!
ஒருசேரக்!
காண விரும்புகிறேன்

அரங்கேற்றப்படும் அகவை

துர்கா
நினைவுகள்!
எனக்கு!
உரித்தாக்கப்பட்டுவிட்டன!
தயவு செய்து தஞ்சம் புகுந்துவிடு!
ஒவ்வொரு கணமும், நாளும்!
உனக்காகத் தான் பிறக்கின்றன!
சத்தமின்றி ஆரவாரிக்கும்!
எனதிதயம்,!
தடுமாறும் உனது நினைவேட்டில்!
ஏதேதோ!
பிதற்றுதல்கள்!
பொருளற்ற மொழியாகின்றன!
நித்தமும்!
ஓடிக்கொண்டே இருக்கும்!
நினைவுகள் இளைப்பாறும்!
நிழலாய் உனைத் தேடுகிறது!
ஏக்கமுடன்.....!!
!
-துர்கா

நம்பிக்கையை

முல்லை அமுதன்
நம்பிக்கையை !
தான் கைப்பிடித்து !
நடக்கிறேன்.!
அவர் பற்றி!
இவர்களும் அவர்களும்!
நடத்தும் பட்டிமன்றம் முடியவே இல்லை..!
தொடக்கத்தில்!
இருந்தே அவர் மீதான!
அன்பு!
நம்பிக்கையாக வளர்ந்தது..!
அவர் கை நீட்டி அழைத்ததில்லை...!
நானும் அவரிடம் நெருங்கியதில்லை.!
ஆனாலும்!
நம்பிக்கை வேர்கள் !
ஆழமாய் ஊடுருவி இருக்கிறது.!
என்னை அவ்ர் தேடியிருக்க வாய்ப்பில்லை..!
ஆனால் !
அவரை தேடியிருக்கிறேன்..!
நெருங்கமுடியாதவர் எனினும்..!
என்னுள் நெருங்கியே இருந்திருக்கிறார்!
என்பதை!
இப்போது உணர்கிறேன்..!
நம்பிக்கை வேர்களை அறுந்தெறிந்துவிட!
தயாராக இல்லை...!
வேண்டுமென்றால் உன் சேதியை!
சொல்லிவிட்டு!
சொல்லிவிட்டுப் போய்விடு..!
அவரின் வருகை பார்த்து..!
சன்னல் திறந்திருக்கிறது.!
வேர்கள் இன்னும் இன்னும் !
ஆழ்மாகவே வேர் விட்டு நிற்கிறது...!
நச்சுப்புகையை வீசிவிட்டுப்போகும் -!
நீ!
நினைத்துக்கொன்டிருக்கிறாய்..!
போடா போ..!
நஞ்சு புகமுடியாத ஆழத்தில்!
நம்பிக்கை கட்டி எழுப்பட்டுள்ளது

பொய் மரியாதை பூ

வி. பிச்சுமணி
அந்த பயணத்தின் போது!
நினைவு பறவைகள் பறந்து!
நிகழ்வு மரங்களில் மாறிமாறி அமர்ந்து!
என்னிருப்பை இழக்கசெய்தது!
முட்டு சந்தொன்றில்!
முட்டி நிற்பதன்ன!
“மாப்ள எப்படி இருக்க”!
ஆரம்பபள்ளி நண்பனின் அழைப்பு!
ஒருவருகொருவர் விசாரிப்புகள்!
அன்நாளைய இலங்கை வானொலி!
இரவின் மடியிலான!
இன்பத்தில் திளைத்திருக்கையில்!
அவரவர் வேலை விசாரிப்பில்!
பொய் மரியாதைகளை!
பார்தது பழகி அனுபவித்து வெறுத்து!
உண்மை நட்பிலான வார்த்தைகளில்!
பொய் மரியாதை பூ!
பூத்து விடக்கூடாதென நான்!
பொய் சொல்லிவிட்டேன்!

தமிழீழமென்பது அர்த்தமற்றது

நிர்வாணி
தீவான், சுன்னாகத்தான், !
பள்ளன், பறையன், கரையானென்ற !
உங்களின் அடைமொழிகள் !
நீங்காதவரை

ஆண் என்ன...பெண் என்ன

அனாமிகா பிரித்திமா
தாயாக இயலா !
காதல் மனைவிக்காய் !!
பத்து மாதம்!
சிசுவை சுமந்த !!
மனதளவிலும் உடலளவிலும்!
ஆணாய் மாறிய பெண் !!
மீண்டும் பெண்ணாய்!
மாறியது!
ஒரு பிஞ்சு முகத்தை காண !!
பூஞ்சிட்டு சிரிப்பை பார்க்க !!
பட்டு புதையலை கட்டி அனைக்க !!
கோடி கொடுத்தாலும் !!
கொட்டி கொடுத்தாலும் !!
தவம் இருந்தாலும் !!
கிடைக்காத வரமான!
மழலைச்செல்வத்தை !
பெற !!
ஆணாய் இருந்தால் என்ன ?!
பெண்ணாய் இருந்தால் என்ன ?!
“தாய்மை” என்ற!
உணர்வுக்கு!
மனம் போதும் !!
என்று!
பெருமை சேர்க்கும்!
பெண் குழந்தையை!
ஈன்றுள்ள!
தம்பதி செய்தது!
மருத்துவ-அறிவியல்!
புரட்சி மட்டுமல்ல !!
“தாய்மை” என்ற !
வேதியலில்!
ஒரு மாற்ற!
சுழற்சி !!
சரியா...தவறா ? !
என்பது!
அவரவர்!
திர்வு !!
(தாமஸ் பியட்டி என்கிற ஆணாய் மாறிய பெண்இ ஓரிகோன் மாகாணம், அமெரிகாவில் கடந்த ஜீன் 29-ஆம் தேதிஇ 2008 அன்று பெண் குழந்தை ஓன்றை ஈன்றார்)!
!
-அனாமிகா பிரித்திமா

அக்கறை நட்பு

பாண்டித்துரை
வளர வளர வெட்டுகிறான்!
என் நண்பன்!
ஒரு நிலையில் நான் முடிந்திடாதிட!
என் வளர்ச்சியை துரிதப்படுத்த!
அக்கறையின் வெளிப்பாட்டால்!
அடியோடு பிடிங்கிடாமல்!
அளவோடு வெட்டுகிறான்!
மலர்சியுடன்!
என் வளர்ச்சி வேண்டி!
நகமும் சதையுமாய்!
தொடர்கிறது !
எங்களின் நட்பு!!
கவிதை: பாண்டித்துரை

யாரோ போட்டு முடித்து

துவாரகன்
தானமாகக் கிடைத்த இரவுச் சட்டை!
--------------------------------------------------------------------------------!
ஒரு நாள்!
என் வீடு இருந்தது.!
வயல்வெளிக்கு நடுவே!
ஆலமர விருட்சம் போல்!
அரைக்காற்சட்டையோடு!
அண்ணா!
டிரக்டர் எடுத்து வயல் உழச்செல்வான்!
அப்பா!
விதைநெல் விசிற சின்னமாமாவைக் கூட்டிப் போவார்!
மாலை பட்டி திரும்பும் மாடுகளை அடைக்கவும்!
குளத்தில் வரால் மீன் பிடிக்கவும்!
சின்னத்தம்பி என்னுடன் வருவான்.!
தங்கையும் நானும் கதை பயில!
தேக்கமரமும் மலைவேம்பும்!
எம்மை ஊஞ்சலில் தாங்கிய நாட்கள்.!
மாலையானதும்!
மாடுகள் அசைபோடுவது போல்!
உறவுகள் சுற்றியிருந்து!
அன்பை அசைபோடுவோம்.!
அம்மாவும் பெரியக்காவும்!
சுவையாகச் செய்த சாப்பாடு.!
செய்திக்குப் பின்!
அப்பா என்னிடம் தரும் றேடியாவில்!
வழிந்து வரும் பாட்டு.!
காதில் கேட்கும் எருமைகளின் மேய்ச்சல்த்தூரம்!
எல்லாவற்றோடும் நானும் தூங்கிப் போவேன்.!
இப்போ!
இரண்டு காவலரனுக்கு நடுவில்!
மழை வெள்ளம் தரைதட்ட!
தொண்டு நிறுவனம் தந்த!
படங்கு காற்றில் அடிக்க!
எங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட புது நிலத்தில்!
அம்மாவின் காய்ந்த விழிகளோடு!
நானும் காத்திருக்கிறேன்.!
யாரோ போட்டு முடித்து!
முகாமொன்றில்!
தானமாகக் கிடைத்த!
ஒரு இரவுச் சட்டை!
என்னை மூடிக்கிடக்கிறது

முதிர் கன்னர்.. கொஞ்சம்..வாழ்க தமிழ்

வித்யாசாகர்
முதிர் கன்னர்கள்.. கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. வாழ்க தமிழ் பேசுவோர்..!
01.!
முதிர் கன்னர்கள்..!
--------------------------!
அவர்கள் முப்பதைக் கடந்தவர்கள்!
நாற்பதைத் தொட்டவர்கள்!
சாபமின்றி வாழ்க்கையை!
நாளும் தொலைத்தவர்கள்..!
மணக்கும் மல்லிகையின்!
வாசம் ரசிப்பவர்கள்,!
மணக்கா பெண்ணெண்ணி கனவினுள்!
வீழ்ந்தவர்கள்,!
கடவுளை கைதொழா!
காதலின் பக்தர்கள்!
காலில் உதைத்து கடவுளையும்!
சலிப்பவர்கள்;!
கோவிலே கதியென்று!
நாளும் திரிபவர்கள்!
காட்சிகளின் மாட்சியில்!
குடும்பத்தைப் பார்ப்பவர்கள்;!
வாழ வரும் பெண்ணுக்குக்கூட!
வரையறை வைத்திருப்பவர்கள்!
வாழும் வாழ்க்கையை!
விரையமாக்கி வாழும்போதே நொந்தவர்கள்;!
காலநேரம் ராசி பார்த்து!
சோடைபோன சங்குமலர்கள்!
அழகாய்ப்பூத்தும் கசங்கிப்போன!
தெருஓர பிஞ்சுமலர்கள்;!
தங்கைக்கும் தமக்கைக்கும்!
வாழ வழிவிட்டவர்கள்!
பின் அவள்பெற்றப் பிள்ளைக்கும்!
காவலிருந்தவர்கள்;!
வீட்டைக் காப்பதையே!
நாட்டிற்கு ஈடாக எண்ணிப் பயந்தவர்கள்!
படு தீவிரமாகக் கணக்குபோட்டு!
வாழ்க்கையின் பாதியைக் கடந்தவர்கள்;!
பாவம் ஆண்களிலும் உண்டிப்படி !
முப்பது நாற்பதிலும் முதிர்கன்னர்கள்'!
முயன்று கட்டும் தாலியில் உலகத்தீரே!
கொஞ்சம் ஆண்களையும் பாருங்கள்; நம்!
அண்ணன்தம்பிகளும் வாழட்டும்!!!
02.!
கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை..!
--------------------------------------------------------------!
சாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே!
தெரிகிறதந்த உலகம்;!
உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன்!
அங்கே தமிழை!
ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம்!
முதலாய்ச் சபிக்கிறேன்,!
சபித்த மனம் சற்று நடுநடுங்க -!
உணர்வூசி வைத்து!
இதையமெங்கும் குத்துகிறேன்,!
உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து!
என் முகத்தில் காரி உமிழ்கிறது’!
மானங்கெட்ட மனிதனே என்கிறது’!
சுயநலவாதி சாவேன்’ வாழ்ந்தென்ன சாதித்தாய் என்கிறது;!
ரத்தம் சொறியச் சொறிய –!
நெடிகூடிய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டு!
எனக்குள்ளிருக்கும்!
கொஞ்சமனிதத்தின் மெச்சுதலில்!
மார்பு புடைக்கிறேன்;!
“த்தூ,, அடிமை நாயே” என்றொரு குரல்!
யாரது என்று கேட்பதற்குள் –!
தண்ணீர் மறுப்பவனைத் தட்டிக்கேட்கமுடியாத!
அசுரக் கைகள்!
அரசின் சாய்ந்தத் தராசுக் கொண்டு!
தலையில் அடிக்கிறது!
அடியைத் தாளாது விளக்கம் கேட்டால்!
தீவிரவாதி என்கிறது சுற்றம்,!
யார் நானா ?!
தமிழரா தீவிரவாதி என்பதற்குள்!
“புறத்துப் போய்க்கோ” என்று நெட்டித்!
தள்ளியதின்னொரு கை,!
சமாளித்து எழுவதற்குள்!
ஜாதியை ஒரு புறமும்!
மதத்தையொரு புறமும் கொண்டுவந்து –!
எனது முதுகைப் பார்த்துக் குத்தியது என்னினம்,!
உரக்க’ அப்போதும் கத்துகிறேன் –!
“நான் யார் தெரியுமா(?)” என்கிறேன்!
ஹ.. ஹ என்று.. எல்லோரும் எனைச் சுற்றி நின்று!
கத்தியவாறே சிரிக்கிறார்கள்,!
அவர்களின் வாயையடைக்க!
எனக்கு இன்னொரு விதை தேவைப்பட்டது!
விதைத் தேடி அலைகிறேன்,!
நான் இதோ.. நான் இதோ.. என்கிறார்கள் யார் யாரோ..!
யாரைக் கேட்டாலும் மந்திரி!
யார் வேண்டுமானாலும் ராஜா!
நினைத்தவனெல்லாம் தலைவன்!
எது வேண்டுமோ கிடைக்கும் லஞ்சமிருக்கா (?)!
என்கிறார்கள்;!
லஞ்சமா (?)!!!
லஞ்சம் தீதென்கிறேன்!
நியாயம் பேசினால் ராஜா மந்திரியெல்லாம்!
எப்படி வரும் ?!
அரசியலில் எப்படி நிலைப்பது ?!
போ’ களவு, பொய், பொறாமையெல்லாம்!
கற்று வா என்கிறார்கள்;!
இல்லையில்லை நீ!
தவறாகப் பேசுகிறாய்!
பொய் தீது; பொறாமை விஷம்!
களவு செய்பவன் தலைவனானால்!
தேசம் மதிப்பாரற்றுப் போகும்’ எனக்கு அதலாம்!
வேண்டாம்!
ஒழுக்கம் போதும்!
உயர்ந்த தேசதிற்கு வழி சமைக்கும்!
ஒரு மனிதர் போதுமென்கிறேன்,!
அந்தச் சாவிதிறக்கும்!
சிறுதுவாரத்தின் வழியேயொரு!
மோதிரக் கைவந்து!
என் முகத்தில் ஓங்கிக் குத்துகிறது,!
உனக்கு ராஜா இல்லை!
மந்திரியுமில்லை!
நாசமாகப் போ’ என்கிறது அந்தக் கை;!
எனக்கு ராஜாக்கள் வேண்டாம்!
திருத்தம் போதாத மந்திரிகள் வேண்டாம்!
இனி – விதைகளே தேவையென்றேன்..,!
விதைகளிட்டால் விளைவதுபோல் பெருகும்!
என் இளைஞர்கள் வேண்டுமென்றேன்,!
அவர்களுக்கு அதலாம் கேட்டிருக்காது!
நானும் கேட்பதை நிறுத்துவதாயில்லை!
எனக்கு விதைகளே வேண்டும்;!
இன்னுமொரு விதை!
இன்னுமொரு விதையென!
எனக்கு எனை –!
நானாக அறிவிக்கும் அந்தவொரு விதை வேண்டும்!
எனது இனத்தை யாரென்று உணர்துமந்த!
விதை வேண்டும்;!
அந்த விதை ‘புரட்சியோ!
மாற்றமோ!
புதுமையோ!
எதனால் வேண்டுமோ கிடைக்கட்டும்,!
அது கிடைத்தப் பின்’ எனை யாரும்!
அடிமையென்று சொல்லாதிருந்தால் அதுப் போதும்..!
03.!
வாழ்க தமிழ் பேசுவோர்!
------------------------------!
வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத்!
துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை..!
அம்மா அப்பா மாறி!
மம்மி டாடியானது மட்டுமல்ல!
டிவி ரேடியோ கூட வெகுவாய்!
தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது;!
சுடுகாட்டுப் பிணத்தைக் கூட!
டெட்பாடி ஆக்கும் ஆசையை!
எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால்!
என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க!
தமிழாகித் தொலையுமோ... (?)!
எவனோ எடுத்தெமைப்!
புதைக்கும் குழிக்குள்!
தமிழ்தொலைத்து தொலைத்து!
விழும் மாந்தரை!
எந்த மொழி மனிதரெனயெண்ணி!
மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ?!
பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும்!
பேஸ்புக் பிசாவும் கூட!
மாற்றத்தின் புள்ளிகளுக்குள் அடங்கிய!
காலமாற்றத்தின் காட்சிகளாகிப் போகட்டும்!
பெயர்ச்சொல்லாய் வாழட்டும்!
மீறி மொழியைத் தொலைப்பதையோ – பாதி குறைத்து!
தங்க்லிஷ் எழுதுவதையோ!
நியாயமென்றுரைப்போர் நஞ்சினை –!
எந்த வாளிட்டு அறுப்பது?!
ஆங்கிலம் முக்கியம்!
அரபுமொழி முக்கியம்!
அந்நிய மொழிகள் முக்கியம்!
அதையெலாம் அதுவாகப் பேசுவதுபோல்!
தாய்மொழியும்!
தமிழர்க்கு அழகில்லையா ?!
மானம் போயின் தெருவில் பிணமான!
இனத்திற்கு!
தனதானமொழி தமிழது முகம் தொலைக்குமெனில்!
சினமின்றி எழுதும் கவிதையும் தீதன்றோ ?!
எனவே -!
எனவே உறவுகளே..!
அங்கமங்கமாக பிறமொழி கலந்து குழந்தைக்கு!
மில்கோடு ஹாட்கப்பில் தருவோரே,!
தமிழை தினம் தினம் பிளேட்டில்!
ரைசோடு போட்டுக் கொல்வோரே..!
இனி -!
கொஞ்சம் கொஞ்சமாக தனை மாற்றுங்கள்!
தமிழையினி யேனும்!
அழகு கொஞ்சப் பேசுங்கள்;!
மொழி நமக்கு உயிராக வேண்டாம்!
மொழியாகவே இருக்கட்டும்!
முழுதாகப் பேசமட்டும் முப்பொழுதும் கிடைக்கட்டும்!
வாழ்க தமிழ் பேசுவோர்