தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பயணங்கள் முடியட்டும்

கவிதா. நோர்வே
இரு பத்து வருடங்கள்!
முன்னாலே...!
சேறு மிதித்து!
ஏறிய கப்பலும்!
கொட்டும் மழையில்!
நனைந்து போன!
என் புட்டுப் பொட்டலமும்!
நூற்றில் ஒன்றாய்!
பாம்பு பயத்தி;ல் !
அத்தையொடு ஒட்டிப்படுத்த!
பழையதொரு மண்டபமும்!
நீண்டதொரு கடல் பயணமும்...!
நான் முதலில் !
இருக்க மறுத்த!
மண்குடிசையும்...!
ஒற்றைத் தண்டவாளம்!
பக்கமாய் நின்ற ஒற்றை மரமும்!
குத்தித் தின்ற!
பழத்தின் விதையும்!
எனக்கே எனக்காய் இருந்த!
அந்த நீலச் சட்டையும்!
பச்சைப் பாவாடையும்!
பெரிய மீசையோடு!
குடிசை வந்து போன !
போலீஸ் மாமாவும்.!
நினைவுகள் இன்னும்!
தொலைக்கவில்லை.!
பத்து பைசா இன்றி!
வாங்காத பரீட்சைக்குத்தாளுக்கு!
விழுந்த அறையும் -அந்த!
தாமரைச்செல்வி ரீச்சரும்!
சுற்றி இருந்த பக்கத்து!
அன்ரி அங்கிள் எல்லாரும்!
என்னை அகதி என்று சொன்னதையும்...!
அப்பா சவுதியில்!
என்றும் சொல்லும்!
அம்மாவின் பச்சைப் பொய்களும்!
அப்பாவின் மரணம் பற்றி!
அறிந்த ராத்திரிப் பொழுதும்!
கிணற்றுக்கட்டும். !
உண்மை சொன்ன!
சிவப்புச் சட்டை சினேகிதியும்!
இதயத்தில் விழுந்த அறையாய்!
இன்னும் ஈரம் இருக்கிறது !
அகத்திலும் புறத்திலும்.!
சின்னதொரு மனசோர்விலும்!
புடைத்துக் கொட்டும் மழையென!
அத்தனை ஞாபகங்களும்!
மெத்தென்ற இருக்கையில்!
இன்றும் !
முள்ளாய் குத்தும் நினைவுகள்..!
பயணங்கள் முடியட்டுமே...!
ஊரில் என் முற்றத்து ரோஜாவும்!
பூக்கட்டுமே.. !
!
-கவிதா. நோர்வே

பிஞ்சு வாழ்வு

கோகுலன். ஈழம்
இவர்களது!
உள்ளங்கையும்!
உள்ளங்காலும்!
பூக்கள் பழித்த!
மென்மைகள் தான்.!
இவர்களது!
உள்ளங்களும்!
உணர்வுகளும்!
பட்டாம் பூச்சியின்!
பாடித்திரிதல்கள்தான்.!
மரத்தடி மாளிகையும்!
மண் சோறும்!
இலைக்கறியும்!
வேப்ப மர!
வைரவரும்!
மணிநேர!
வாழ்வின்!
சந்தோசச் சிதறல்கள்.!
ஏங்கே தொலைந்தது?!
முற்றத்து வாசமும்!
கோடை வெயிலும்!
மாரிக் குளிரும்!
ஞாபகமிருக்கிறதா?!
-- கோகுலன்!
ஈழம்

தலைமுறை தாண்டிய உறவு

தமிழ் யாளி
நீ...!
உன் காதலியை விட!
அதிகம் முத்தமிட்டது!
என்னைத்தான்!
உன்!
கோபம் ... சோகம்!
சிரிப்பு ... எதுவாயினும்!
என்னோடுதான்!
அன்னை சொல்லியும்!
கேட்காமல்!
முதலிரவுக்கு முன்பு!
கூட என்னை!
முத்தமிட்டுச்!
சென்றவன் நீ!
மனைவியைப் பிரிந்து!
மூன்று நாட்கள்!
இருக்க முடிந்த உனக்கு என்னைப்!
பிரிந்து மூன்று மணிநேரம் முழுமையாய் இருக்க!
முடியாது!
இது கால் நூற்றாண்டை கடந்து!
விட்ட உறவு!
உன் இதயத்தை நீ!
யார்யார்க்கோ!
கொடுத்திருந்தாலும்!
உன் சுவாசம் முழுவதும்!
சுற்றிவருவது நான்!
மட்டுமே!
ஏனோ...!
சில நாட்களுக்கு முன்!
பேசிக்கொண்டிருக்கும்!
போதே என்னைவிட்டு!
பிரிந்து விட்டாய்!
இருந்தும் ...!
தலைமுறை தாண்டிய உறவாய் ...!
உன்னைப் பார்த்தே!
வளர்ந்த உன்!
மகனின் கையில்!
நான்... ... ...!
சிகரட்

அண்மை

அன்பாதவன்
லேசானத் தூறல் தொடர !
இதமான குளிர்ச் சூழல் !
முட்புதரின் சங்கீதமாய் !
'புல் புல்' சீழ்க்கை !
பறக்கும் ஹைக்கூவாய் !
தாவித்தாவி ' மணிப் பிளான்ட்டில்' !
அமர்ந்து கவிசொல்லும் தேன்சிட்டு !
எருக்கஞ்செடி கிளைகளில் !
குதூகலிக்கும் குயிலினை !
வீட்டெதிர்ச் சேற்றில் புரண்டுறுமும் !
பன்றிகளின் குரலிலும் இசையாய் !
சுகமாயிருக்கிறது !
கண்மூடி கைத் துழாவ !
இருக்கிறாய் நீ என்னருகில் !
- அன்பாதவன்

நிகழ்காலம்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
ஏறக்குறைய ஏற்றமானவர்களின் பாடும்!
இலவு காத்தி கிளிதான்!
நாளை அடுத்து வரும்!
அன்றைய அந்திப் பொழுதுகள்!
கண்டிப்பாய் வேரறுத்துச் செல்லும்!
கழிந்த மந்தப் பொழுதுகளை!
உராசி சிராய்த்து கீறிச் சென்ற!
கால காலன்களின் ரணங்களை!
வடுவோடு அறுத்தெறியும் சஞ்சீவ இலைகள்!
அந்தப் பொழுதுகள் வசம்!
இருள்கள் அள்ளி வீதியில் எறியும்!
சோகங்கள் கிள்ளி!
அகலப் பாதாளங்களில் கிடத்தும்!
இரும்பாய் இத்துப் போன இதயங்களில்!
வானவில் கொண்டு வர்ணம் பூசிடும்!
என் பெயர் உருவம் மாறா!
எனக்குள்ளான என்னிலக்கணம் மாறா!
என்னுள் புதியவனொன்றை!
ஏற்றம் மிக்கவனாய் ஜனிக்கச் செய்திடும்!
எனக்கான இன்னொரு ஆதாம்ஏவாள் அது!
கனவுகள் விரிய காத்துக் கிடப்பவர்களின்!
ஒவ்வொரு பிணிக்கான மருந்து ஒன்று!
அவரவர்கள் சட்டைப்பைகளில்!
காலாவதியாகிக் கொண்டிருப்பதை!
ஏற்றபாடில்லை எவரும்

கோள்களின் நிழல்கள்

அனிதா
நினைவிருக்கிறதா உனக்கு?!
பின்னோக்கிய யுகங்களின்!
ஒரு பிரபஞ்ச வெளியில்!
நம் முதல் சந்திப்பை...!
கிரகங்களின் இடுக்குகளில் அமர்ந்து!
நூற்றாண்டுகளாய் தொடர்ந்த பேச்சுக்களை!
இரண்டாவது பால் வீதி முனையின்!
விருப்பமில்லா விடைபெறுதல்களை!
தேகங்கள் மாறி மாறி நுழைந்தும்!
சலிக்காத கண்ணாமூச்சிகளை!
பிறந்ததுமே தேடத் துவங்குகிறேன்!
உன்னை ஒவ்வொரு முறையும். இம்முறையும்.!
ஜனனங்கள் பலவாகி ரேகைகள் மாறினும்!
இப்பொழுதும் அடயாளத்திற்கு உதவும்!
உன்னுள் படிந்த என் மோகங்களும்!
என்னுள் பரவிய உன் வெட்கங்களும்!
-அனிதா

என்ன குறை உன்னில் தமிழா?

இமாம்.கவுஸ் மொய்தீன்
என்ன குறை உன்னில் தமிழா?!
என்றேனும் சிந்தித்தாயா?!
சாரம் இல்லாதவனா? - நீ!
சோரம் போனவனா?!
உறக்கத்தில் இருக்கின்றாயா?!
உணர்வின்றி இருக்கின்றாயா?!
கல்வியில் உழைப்பில் திறமையில்!
சிறப்பாய் இருக்கின்ற நீ!!
மொழியில் இனஉணர்வில் மட்டும்!
மந்தமாய் இருக்கின்றாயே!!
அந்நிய மொழிகளையெல்லாம்!
அழகாய் உரைக்கின்றாய் நீ!!
உன்மொழி தமிழை மட்டும்!
கலந்தே கதைக்கின்றாய் நீ!!
கங்கை கொண்டான்!
கடாரம் வென்றான் என -முன்னர்!
எத்தனைப் பெருமைகள் உனக்கு!!
தமிழனின் வீரம் மானம்!
எல்லாமே ஏட்டில் இன்று!!
அண்டையில் ஈழத்தமிழன் !
அடிக்கப்படுகின்றான் ஒடுக்கப்படுகின்றான்!!
அகதியாய் நாட்டை விட்டே !
விரட்டப் படுகின்றான்!!
தமிழகம் மட்டுமின்றி!
மலேசியா சிங்கப்பூரிலும்!
நிறைவாய் இருக்கும் உனக்கு...!
ஈழத்தின் நிகழ்வுகள் கண்டுமோர்!
கண்டனக் கணை கூடவா!
தொடுக்க முடியவில்லை? ஏன்?!
அந்நியம் ஆட்கொண்டதாலா? - நீ!
அந்நியத்தை அரவணைத்துக் கொண்டதாலா?!
தாய்ப்பால் பருகாததாலா?!
புட்டிப்பால் பருகியதாலா?!
என்ன குறை உன்னில் தமிழா?!
இப் புத்தாண்டிலாவது சிந்திப்பாயா?!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

காதலே உன்னை என்ன செய்ய

றஞ்சினி
பகலா இரவா புரியாத காலநிலை!
எப்போதுமின்றி!
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது!
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது!
என்னை அந்தரத்தில்!
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது!
சில மணித்தியால சலனங்கள்!
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்!
ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது!
அன்பாய் உன்னை வருட முடியாது!
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது!
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்!
அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா!
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக!
என் உணர்வுகளே உங்களுக்கு !!
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை!
எப்போதும்!
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது!
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்!
போவதுமில்லை இப்போ.!
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக!
இன்னும் எத்தனை காலம்தான் நான்..!
வயது வரம்புகள்!
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்!
பார்க்காது!
வினோதமான உறவுகளை எப்போதும்!
விதைத்த படி நீ.!
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்!
என்னுடனே!
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்!
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய

விட்டில் பூச்சிகள் ..தவம்.. பொக்கிஷம்

ப.மதியழகன்
01.!
விட்டில் பூச்சிகள் !
------------------------!
நட்சத்திரங்களின்!
நகலா இருக்க!
ஏன் ஆசைப்படுகிறார்கள்!
உடல் மொழியைக் கூட!
காப்பியடிப்பது!
உங்கள் சுயத்தை!
அழிக்காதா!
உன் குரலை!
மிமிக்ரி பண்ணும் அளவுக்கு!
நீ வளர வேண்டாமா!
எத்தனை பேர்!
கூக்குரலிடுகிறார்கள்!
இயேசு இறங்கி வந்தாரா!
திரையரங்கிலேயே விட்டுவிட்டு!
வர வேண்டியதையெல்லாம்!
ஏன் சுமந்து கொண்டு திரிகிறாய்!
நிழலை நிஜமென்று!
நம்பியவர்களின் கதியெல்லாம்!
என்னவானது தெரியுமா!
கனவுக்குள் புகமுடியாது!
என்பதால் தானே!
அதற்கு கனவுலகம் என்று!
பெயர் வைத்திருக்கிறார்கள்!
கோடி என்றவுடன்!
ஏன் வாயைப் பிளந்து விடுகிறாய்!
தெய்வமே உன் வீட்டில் வந்து!
குடியிருக்கும் போது!
சில்லறை விஷயங்களுக்காக!
ஏன் வீணாய் அலைகிறாய்!
நீ சாதிக்கும் போது!
பார்த்துப் பெருமைபட!
குடும்பம் இருக்க!
வேண்டாமா!
பிறரது வாழ்க்கை மூலம்!
பாடம் கற்காவிட்டால்!
வாழ்க்கை நடுத்தெருவில்!
நிறுத்திவிடாதா. !
!
02.!
தவம் !
---------------!
கணினியின்!
கடவுச்சொல்லை மறந்தால்!
உறைந்து போக வேண்டாம்!
உள்ளே நுழைய!
ஆயிரம் வழிகள் உள்ளன!
பிச்சைக்காரனுக்காக!
சில்லறையைத் தேடி!
ஏமாற்றமடைய வேண்டாம்!
உனக்கும் சேர்த்து!
இரண்டு ரூபாயாக தட்டில்!
எவரேனும் போட்டுவிடுவர்!
மற்றவர்கள் செய்கையில்!
குறை காண வேண்டாம்!
படைப்பே குறையுடையது!
எனும் போது!
பந்தயத்தில் ஓடுவது போல!
நடந்து கொள்ள வேண்டாம்!
சின்ன சின்ன சந்தோஷங்களை!
தவறவிட்டுவிட நேரலாம்!
வரம் கொடுப்பவர் தலையில்!
கை வைப்பவர்களின் வலையில்!
வலியச் சென்று விழவேண்டாம்!
சிடுசிடுவென முகத்தை!
வைத்துக் கொள்ள வேண்டாம்!
குழந்தை உள்ளம்!
உடையவருக்கே!
சுவர்க்கத்தின் ராஜ்ஜியத்தில்!
இடமுண்டு என!
பைபிள் சொல்கிறது. !
03. !
பொக்கிஷம் !
--------------------!
சூரியனை நோக்கியே!
தலைசாய்க்கும் சூரியகாந்தி!
பழத்தை சுவைப்பவர்கள்!
எண்ணிப்பார்ப்பதில்லை!
மரத்தை வைத்தவர்!
எவரென்று!
இலை உதிர்த்த மரத்தை!
எவர் பார்க்க விரும்புவர்!
அவரவர் உலகத்தில்!
அவரவர் பத்திரமாய்!
பசியுடன் தூங்கும்!
பிச்சைக்காரனின் இரத்தத்தை!
குடிக்கும் கொசுக்கள்!
விதை எப்படி!
மண்ணைப் பிளக்கிறது!
எவரின் ஆணைப்படி!
கிழக்கு வெளுக்கிறது!
கோயில் உண்டியலில்!
போடும் காசை!
தர்மம் பண்ணினால்!
என்ன!
நாட்கணக்கில் வரிசையில் நின்று!
தரிசனம் செய்தால்!
வரம் கொடுத்துவிடுமா சாமி!
பாதாள அறைகளில்!
பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும்!
தட்டில் சில்லறை போட்டால் தான்!
சாமி கண்ணைத் திறக்கும்

வாடாமலர்

எம்.எஸ்.லோகநாதன்
நம் தோட்டத்தில்!
நேற்று பூத்த பூ!
இன்று வாடியது !!
இன்று பூத்த பூ!
நாளை வாடும் !!!
ஆனால்...!
என் மனதில்!
பூவாய் பூத்திருக்கும் நீ!
என்றும் வாடாமலர் !!!!
- எம்.எஸ்.லோகநாதன்