தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வாடாமலர்

எம்.எஸ்.லோகநாதன்
நம் தோட்டத்தில்!
நேற்று பூத்த பூ!
இன்று வாடியது !!
இன்று பூத்த பூ!
நாளை வாடும் !!!
ஆனால்...!
என் மனதில்!
பூவாய் பூத்திருக்கும் நீ!
என்றும் வாடாமலர் !!!!
- எம்.எஸ்.லோகநாதன்

சிலிர்ப்பு

அன்பாதவன்
சிலிர்த்தது பூமி முதல் துளியில்!
தொடரும் தூறலில் தணிந்தது வெக்கை!
எழுந்தது மண்மணம்!
பறவைகள் சிறகுகளுக்குள் ஒடுங்க !
இலைகளின் தளிர் முகத்திலோ !
ப்ரியமானவர்களைச் சந்திக்கும்!
சந்தோஷமினுப்பு!
உரத்த குரலெடுத்து நலம் விசாரிக்கும்!
இடியைப் பார்த்து பளிச்சென்று!
புன்னகைக்கும் மின்னல்!
அதுண்டுகளாய் மழைக்கம்பிகள்!
செங்குத்துப் பாலமாகின்றன!
விண்ணுக்கும் மண்ணுக்கும்.!
எல்லாக் கசடுகளையும் அடித்துச் செல்லத்!
தேவையாயிருக்கிறதொருப் புதுமழை

தீர்க்கதரிசனம்.. அரசிலையின்

மனோ.மோகன்
தீர்க்கதரிசனம்!
--------------------!
யாருமற்ற!
இதுபோன்றதொரு இரவின் தனிமையில்!
பத்து செண்டிமீட்டர் உயரமேயுள்ள!
பூனைக் குட்டியொன்றைப் பரிசளித்தாய்!
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்!
வார்த்தைகள் ஏதுமில்லை அன்று!
புகை படிந்த சாம்பல் நிறம் கொண்ட!
அந்தப் பூனையின் 'மியாவ்' வைத் தவிர!
நான் குடிக்கும் பால் அதற்கென்றானது!
என் தலையணை அது உறங்குவதற்கென்றானது!
கட்டிலில் அவிழ்த்துப் போட்ட என் உடைகள்!
அது மூத்திரமிடுவதற்கென்றானது!
வாரத்தைகள் அற்ற என்!
அறையின் தனிமையை நிறைத்த படியே!
பெரும் பசியை அறிவித்துக் கொண்டிருந்தது 'மியாவ்'!
பகல் பொழுதில்!
கபாலத்திற்குள் ஓடி விளையாடுவதும்!
படிக்கும் புத்தகத்தில் தாவிக் குதிப்பதுமென!
என் காலத்தைப் புசித்துக் கொண்டிருந்தது பூனை!
இன்றைய அந்தியில்!
ஓரிரு முறை உன் போர்விமானம் கடந்தபின்!
புகை படிந்து சாம்பல் நிறம் கொண்ட!
என் தெருவின் சிதிலங்களூடே!
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்!
வார்த்தைகள் ஏதுமில்லை!
'மியாவ்' வும் கூட இல்லை!
!
அரசிலையின் யுத்த தருமங்கள்!
----------------------------!
போதி மரத்திலிருந்து!
உதிர்ந்த அரசிலையொன்றில் புத்தனின் கறிக்கடை!
கிடைத்த குடல் துண்டுகளோடு!
பறந்து விட்டிருந்தன காக்கைகள்!
வேறேதேனும் எலும்புகள் சிதறியிருக்கிறதாவென!
மோப்பமிட்டபடியே எஞ்சிய சில நாய்கள்!
விற்பனை முடிந்த கணத்தில் கறிக்கட்டையில் ஏறி நின்று!
யுத்த தருமங்களை உபதேசித்தான் புத்தன்!
குருட்டுப் பைத்தியக்காரனைப் போல!
இலக்கற்று இருள் கவியும் கணத்தில்!
மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலின்!
கனவோடு கொல்லப்பட்டிருந்தான் மெசியா

செஞ்சோலைக் குஞ்சுகளே

கனிகை
மனம் நிறைய மலர்கள்!
நெஞ்சுருக அஞ்சலிகள்!
கண்ணிரண்டும் குளங்கள்!
குமுறுகின்ற உணர்வுகள்!
யாவும் இருந்தென்ன?!
நீங்கள் இன்றில்லை !
எம்மிளம் சிட்டுக்களே!!
பல்லி சொல்லவில்லை!
பூனை போகவில்லை!
ஆந்தை அலறவில்லை!
ஆட்காட்டியும் சத்தமில்லை!
காகம் கூட உணர்த்தவில்லை!
யார் நினைத்தார்-பேடிகள்!
பிஞ்சுகளைச் சிதைப்பாரென்று!
உறுதிமிக்க உறவுகளே-எம்!
பட்டாம்பூச்சிக்கனவுகளே !
உங்கள் வாழ்வினில்!
எத்தனை நினைப்பிருக்கும்!
விடுதலைத்துடிப்பிருக்கும்!
கல்வித்திறனிருக்கும்!
பாசக்கரமிருக்கும்!
அத்தனையும் ஒடித்தாரோ?!
ஆறுதல் என்பது எமக்குக் !
கற்பனையாய் போயிற்று !
மீண்டும் மீண்டும் முயல்கின்றோம்!
இழப்பின் சோகம்- நெஞ்சில்!
குற்றிய முள்ளாய் வலிக்கிறது!
மழலைகள் மாதர் வயோதிபர் ஏதிலிகள்!
பேணிச்செய்வதே போர்தர்மம்-இதுதானோ!
பாதகர் புத்ததர்மம்?!
கேவலம் பிள்ளைகளே!
உமைக் குதறியது அவர்க்குக்!
கேவலம் பிள்ளைகளே!
மௌனித்துப் போன ஐரோப்பிய நாடுகளே!!
உல்லாசப் பயணிகள் அங்கிருந்தால்!
அலறிக் கதைத்திருப்பீர்!
ஆதரவற்ற தழிழரென்றே!
புறம் தள்ள நினைத்தீரோ?!
உமையொத்தே உயிரழிக்கும்!
அரசென்று இணை சேர்ந்தீரோ?!
கதறித்தான் நிற்கின்றோம்-ஆனால்!
சாம்பலிலும் உயிர்க்கின்ற பூக்கள்நாம்!
தழுவி வரும் மென்காற்றில்-எம்!
அஞ்சலிகள் நிறைந்திருக்கும்!
சாந்தியடைக குஞ்சுகளே!!
நாட்கள் எப்போதும்- இப்படிக்!
கலங்காது.!
கனிகை

வெறுமையின் ஏக்கம்

கி.சார்லஸ்
அதிகாலையில்!
தெருவோரத்தில்!
கண் விழிக்காத!
நாய்க்குட்டிகள்!
தாயின் பால்காம்புகளில்!
முட்டி,முட்டி!
பால்குடித்துக்கொண்டும்!
குட்டிகளை!
நக்கி கொடுத்தபடியிருக்கும்!
தாய்நாயை பார்த்து!
ஆசையாய் ரசித்தபடி!
கோலமிட!
மனம் வராமல்!
பெருமூச்சு கலந்த!
ஏக்கமாய்!
நடுவிரலால் அடிவயிற்றை!
நிரடிப்பார்க்கிறாள்!
மலடி

மின் பின்னியதொரு பின்னலா ?

வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன்!
உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?!
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்!
உண்மையென்று!
எவ்விதம் நான் நம்புவது ?!
நீயே சொல்.!
நீ சொல்கின்றாய்!
நீ இருக்கிறாயென்று.!
உண்மையாக நீ இருக்கின்றாயென்று.!
என்னை விட்டுத் தனியாக!
எப்பொழுதுமே!
இருப்பதாக நீ கூறுகின்றாய்.!
எவ்விதம் நம்புவது.!
ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு!
அப்பாலிருந்து இருந்து வரும்!
ஒளிக்கதிர்களுக்கும்!
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்!
இடையிலென்ன வித்தியாசம் ?!
நேரத்தினைத் தவிர.!
உனக்கும்!
எனக்குமிடையில்!
எப்பொழுதுமே ஒரு தூரம்!
இருக்கத் தானேசெய்கிறது.!
அது எவ்வளவுதான் சிறியதாக!
இருந்த போதிலும்.!
எப்பொழுதுமே ஒரு நேரம்!
இருக்கத் தானே செய்கிறது!
கணத்தினொரு சிறுபகுதியாய்!
என்றாலும்.!
நீ இருப்பதாக!
நீ சொல்லுவதைக் கூட!
நான் அறிவதற்கும் புரிவதற்கும்!
எப்பொழுதுமே இங்கு நேரமுண்டு.!
தூரமுமுண்டு கண்ணே!!
காண்பதெதுவென்றாலும்!
கண்ணே! அதனை!
அப்பொழுதே காண்பதற்கு!
வழியென்றுண்டா ?!
காலத்தைக் கடந்தாலன்றி!
ஞாலத்தில் அது!
நம்மால் முடியாதன்றோ ?!
தூரமென்று ஒன்று உள்ளவரை!
நேரமொன்று இங்கு!
இருந்து தானே தீரும் ?!
அது எவ்வளவுதான்!
சிறியதாக இருந்த போதும்.!
வெளிக்குள்!
காலத்திற்குள்!
கட்டுண்டதொரு இருப்பு!
நம் இருப்பு கண்ணம்மா!!
காலத்தினொரு கூறாய்!
உன்னை நான் காண்பதெல்லாம் இங்கு!
உன்னை நான் அறிவதெல்லாம்!
மின்னலே!!
மின் பின்னியதொரு!
பின்னலா ? உன்னிருப்பும்!
இங்குமின் பின்னியதொரு!
பின்னலா ? என் கண்ணே!!
திண்ணை Tuesday September 24, 2002

நடைவண்டி

நாவிஷ் செந்தில்குமார்
அண்ணனுக்குப் பிறகு அக்காவை!
அவளுக்குப் பிறகு என்னையும்!
நடக்க வைத்ததை!
அண்ணனின் பிள்ளைக்குதவுமென!
வைத்திருந்தாள் அம்மா...!
அவனோ!
புதியதாய் ஒன்றை வாங்கிவிட!
யாருக்கும் தெரியாமல் ஒருநாள்!
விறகாக்கிவிட்டாள் அண்ணி!!
யாரேனும் இப்போது!
ஏற்றிவிட்ட ஏணி பற்றிப் பேசினால்!
நடக்க உதவிய நடைவண்டி!
நினைவுக்கு வருகிறது...!

மரநாய்

கற்சுறா
வேலிகளாய் நிமிர்ந்தெழுந்தது!
ஆமணக்கு.!
வெட்ட, பால் வடியும்!
வெட்டிய அடிக்கட்டை!
ஊ£¤ன் தரை முட்ட!
ஆமணக்கங் குஞ்சுகள்!
ஊருக்குத் தாய்த்திமிர்!
எல்லாம் பொய்யாக்கி!
புழுக்களை விதைத்தது,!
இரவொன்றில் நுழைந்த!
மரநாய்!
ராட்சதக் கவலை.!
அரிப்பெடுத்த புழுக்கள்,!
பிய்த்துக் கொடுத்த கம்புகளால்!
எங்கள் தசைகளை சிதைத்தது!
எச்சரித்தது மரநாய்!
கற்சுவர் எழுப்பிய புழுக்கள்!
ஆமணக்கு!
அழிந்து கருகிய!
இருப்பை மறைக்க,!
மகிழ்ச்சி - மரநாய்க்கு!
மரநாயின் ஆர்ப்பரிப்பில்!
ஆமணக்கின் நினைவைக்கூட!
வைத்திருக்க முடியவில்லை!
எம்மால்!
காய்ந்து!
போன சாக்கில் அள்ளிக் கொட்டும்!
மண் தூவிய காற்று!
நாட்சரிவில் ஒருமுறை!
வழி தவறியதாய்த் திரும்பும் பஸ்!
நாட்டிலா ? எங்கே ?!
எனக்கேட்கும் பெயருடன்!
இன்னும் என்!
பன்னாடை ஊர்.!
!
நன்றி :: இருள்வெளி, பாரிஸ் 15.05.1998

இதயவலி.. யாரையும்.. சில்லறை சப்தங்கள்

வித்யாசாகர்
இதயவலி, இலவச இணைப்பு.. !
நோகாத கனவுகள்.. சில்லறை சப்தங்கள்..!
01.!
இதயவலி, இலவச இணைப்பு!
---------------------------------!
காதல் மறுக்கப் பட்ட காதலியின்!
கால்கொலுசு சப்தங்கள்;!
இதயம் மரணத்தினால் துடிக்கும்!
துடிப்பு;!
துரோகத்தால் புடைக்கும்!
நரம்பு;!
பிரிவின் வலியின்!
அழுத்தம்;!
திருட்டு கொல்லைகளால் எழும்!
பயம்;!
குழந்தை கதறும் அலறலின்!
கொடூரம்;!
பெண் கற்பழிக்கப் படும்!
காட்சிகள் மற்றும் கதைகள்;!
கொட்டிக் கொடுக்கப் படும்!
வட்டியின் வேதனை;!
உறவுகளின்!
சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும்!
குடும்ப அரசியல்;!
அலுவலக மேலதிகாரி!
அரசியல்வாதி!
காவல்துறை மற்றும் ரவுடிகளின் மிரட்டல்கள்;!
சமுகம் சுற்றிக் கிடக்கும்!
பொறுக்கமுடியா!
அநீதிக் குப்பைகளென -!
எல்லாமுமாய் சேர்ந்துக் கொடுத்தது!
முப்பத்தைந்து நாற்பது வயதில் - ஒரு!
பிரெசர் மாத்திரையும் -!
இரண்டு வேலை உப்பில்லா சோறும்;!
இதயவலி உடன் இலவச இணைப்பும்!!!
!
02.!
யாரையும் நோகாத கனவுகள்..!
---------------------------------------!
வலிக்காமல்!
சலிக்காமல்!
நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்!
நிஜம் பூத்த மலர்களின் -!
வாசத்தொடும்,!
வரலாறாய் மட்டும் மிகாமலும்,!
முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த!
பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் -!
மல்லிகைப் பூக்க,!
ஒற்றை நிலாத் தெரிய,!
மரம் செடி கொடிகளின் அசைவில் -!
சுகந்தக் காற்று வீசும் -!
தென்றல் பொழுதுகளுக்கிடையே;!
வஞ்சனையின்றி -!
உயிர்கள் அனைத்தும் வாழ!
யாரையும் நோகாமல் ஒரு - கனவேனும் வேண்டும்!!!
!
03.!
சில்லறை சப்தங்கள்..!
-------------------------!
காலம் எட்டி உதைக்காத நாட்களில்லை!
விரலிடுக்கில் சொடுக்கினாற் போல் வருகிறது!
வலிகளும்.. துக்கங்களும்!!
சொல்லத் துணியா வார்த்தைகளுக்கிடையில்!
மறுக்கவும் மறக்கவும் முடிந்திடாத - ஏக்கங்களுக்கு நடுவே!
சிரிக்கத் துணிந்த வாழ்க்கையில் தான் -!
சொல்லி மீளாப் போராட்டாங்கள் எத்தனை...எத்தனை(?)!
நான் தான் மனிதனாயிற்றே என.... நெஞ்சு!
நிமிர்த்திய போதேல்லாம் - கர்வம் தலையில் தட்டி!
மார்பு உடைத்த நாட்கள் எண்ணிலடங்காதவை;!
விட்டுக் கொடுப்பது தானே - வாழ்க்கையென!
உணர்ந்து மன்னித்துவிடுகையில் 'கோழை, பயந்தாங்கொல்லியெனப்!
பெற்றப் பட்டங்களும் குறைவொன்ருமில்லை;!
இரண்டுக்கும் நடுவே - விட்டும் கொடுத்து!
கம்பீரமாய் எழுந்தும் நின்று வெற்றியென கர்ஜிக்கையில்!
எழும் போட்டிகளும் பொறாமைகளும் – காண்கையில்!
மிருங்கங்களுக்கு நடுவே வாழுதடா மனிதஜென்மமென!
பயின்ற - பாடங்கள் ஏராளம்;!
'போடா மனிதா' வென மனிதனை வெறுத்து!
'கடவுளே' என இறைவனை வேண்ட அமர்கையில்!
வேண்டுவதற்குக் கற்ற பாடங்களில் கூட -!
கண்ணில் பட்டும் படாமலுமிருக்கும் குறைகள் கணக்கிலடங்காதவை;!
ஆயிரம் கடவுள்கள்..!
ஆயிரம் வேதங்கள்..!
எல்லாம் உண்மையும் பொய்யுமாய் -!
மனிதம் கொள்ளவும் துணிகிறதே என்ற - உதாரண வலிகள்!
அறிவை உருத்தாமலில்லை;,!
காற்றினைப்போல் - நறுமணம் போல் - மின்சாரம் போல் -!
கண்ணில் படாது எங்கிருந்தோ - இயங்கும்!
ஒரு இறைமையின் உணர்வு -!
உள்ளே ஊடுருவி உயிரைத் துளைத்தெடுக்க;!
இடையே -!
எது உண்மை..? யார் சரி..?!
யாரை வேண்டுவது..? எப்படி வேண்டுவது?!
யாரை அறிவது? எப்படி நாடுவது?!
எங்கிருக்கிறேன்? என்ன செய்கிறேன்?!
எதற்கு பிறந்தேன்? ஏனிந்த வாழ்க்கை?!
என்ன நரகமிது இறைவா யென!
நெஞ்சு கணக்கையில் -!
ஜென்மம் செத்து செத்து பிழைப்பதின்னும் - எத்தனை காலத்திற்கோ???????!!!!!!!!!!!!!
நீள நெடுக்களிலெல்லாம் போராட்டம். மரணம். கொலை. கொள்ளை..!
இன்னும் எத்தனை இலங்கை(?) எத்தனை பாலஸ்தீனம் (?)!
எத்தனை காஸ்மீர் ?? எத்தனை மனிதர்கள்???!
எத்தனை மரணத்தை - மண் தின்று மிஞ்சுமோ உலகத்தீரே??????!!!!!!
நரம் தின்னத் தயங்கும் மனிதம்!
உயிர் குடித்து -வெற்றியென கர்ஜிகையில் -!
இன்னும் எத்தனை காலங்கள் - இப்படி!
இரத்தமாய் சொட்டித் தீருமோ(?)!!
வெறும் செத்து மடிவதும் –!
சாகப் பிறப்பதுமா!
வாழ்கை?!
எனில் – சாவதற்கும் வாழ்வதற்குமேடையே!
மரண வாசத்தில் நொடிகள் நகர்வதா - காலமாற்றம்????!
“ஏதோ ஒரு பயம் -!
எப்போதோ ஒரு சந்தோஷம்:!
ஏதோ ஒரு பதட்டம்-!
எங்கோ ஒரு நிம்மதி:!
எத்தனை எத்தனையோ தோல்வி -!
யாரோ இழந்த வெற்றி:!
எதற்கோ கவலை-!
எப்படியோ ஒரு சிரிப்பு;!
“எது பாதையென்றே தெரியாமல் பயணம் -!
எதையோ எட்டிவிட்டத் திமிர்;!
எதுவுமே நிலைமாறாத வேதனை!
மீண்டும் எல்லாம் பெற ஆசை - யென!
வெறும் சில்லறை சப்தங்களாக தான்!
நகர்கிறது வாழ்கை

பறவைகள் விட்டுச்சென்ற சுவடுகள்

இளங்கோ
1. !
அர்த்தம் புரியாத்தோத்திரங்களை !
அமைதி தழுவவேண்டிய ஆலயச்சுவர்களில் !
கொடூரமாய் அறைந்து செப்பி !
திசையெட்டிலிருமிருந்து அசுவமேதகுதிரைகளாகி !
உயர்குடியின் உறவுகள் கூடிவந்து !
யாகம்வளர்த்த நெருப்பின் துளிபட்டு !
அமுதப்பால் அருந்தாத !
ஞானசம்பந்தரானேன் !
நானும் ஓர்பொழுதில் !
பின்னர் !
அநாதைச் சிறுவர்களுக்காய் !
வாசல்களில் நிதிசேகரித்தவர்க்கு !
அதட்டிக் குரைக்கும் நாயானேன் !
படிதாண்டி !
கடவுளை நெருங்கப்பிரியப்பட்ட !
ஊனமற்ற பெண்ணிற்கு !
தாதாவாயும் விசுவரூபமெடுத்தேன் !
மேலாடையின்றி !
அக்குளில் பெருகிய !
வியர்வையைப் போல.. !
நிர்வாகத்துள் பரவிய !
தாழ்த்தப்பட்ட சாதியினனை !
காசைக் கொண்டே துரத்தியபடி !
நிதானமாய் விளம்பினேன் !
கடவுளின் சந்நிதானத்தில் !
அனைவரும் சமமென்று !
இவனைப் போல் !
இன்னொருத்தனைக் கண்டிலேனென !
வார்த்தைகள் இனிக்க !
வழமைபோல் நெருக்கமாயின !
புலம்பெயர்ந்த பெரிசுகள்!
உண்மைமுகம் அறியும் ஆவலற்று !
பிறகென்ன !
கூத்தும் கும்மாளமடிப்பும். !
பிரியப்பட்டபோது !
பட்டமளிப்பும் முதுகுசொரிதலும் !
2. !
எங்கே போயிற்று !
என் ஓர்மம்? !
நெஞ்சு திமிறத்திமிற !
நியாயம் கேட்டும் !
எதிரிகளும் துரோகிகளும் !
பெருகப் பெருக !
கரையாமல் எஃகுவாகிய சுயம் !
சிதறியதெப்போது? !
ஏரிக்கரைகளில் புல்வெளிகளில் !
காற்றில்கேசம் எதையெதையோ கிறுக்க !
தூரப்பறந்த பறவைகள்பார்த்து !
நாளைகள் பேசிய தோழியர் !
காணாமற்போனது எந்தநாழிகையில் !
எல்லோரும் இரசித்துச்சுவைக்க !
இன்றென் வாழ்க்கை. !
கூடுவிட்டுப் கூடுபாயவிரும்பும் !
திருமூலரின் காத்திருத்தலைப்போல !
உண்மை முகத்தினைதேடி !
காலங்கள் மீறியவோர் !
சாபம் !
எனக்கு இனி. !
!
2001.08.03