தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தனிமை

சு.துரைக்குமரன்
நினைவின் தாகந்தீர்க்கும் !
தண்ணீர்நதி !
திரும்பிப் பார்த்து திருந்த !
வாய்ப்பளிக்கும் கால யந்திரம் !
நினைவின் அலைகளில் !
நெஞ்சைச் சுகமாய் !
மிதக்கவிடக் கிடைத்த !
கால அவகாசம் !
சோகங்களின் ரணங்களை !
கண்ணீர் மயிலிறகால் !
வருட வாய்ப்பளிக்கும் வரம் !
இதய அறைமுழுதும் !
உணர்வுகளை மோதவிட்டு !
எதிரொலி கேட்டு !
அயர்ந்து கிடக்க !
மனம்பாடும் அபசுரம் !
துயரமது ஊற்றிய !
இதயக்கோப்பையை !
இறுதிவரை பருகி !
மயங்கிவிழக் கிடைத்த மடம் !
சூன்யத்தில் கண்கள் நிறுத்தி !
சுகமாய்க் கண்ணீர் சுரக்க !
சோகத்தைக் கழுவிடக் !
கிடைக்கும் கருணையின் கரம் !
நினைவுகளை அசைபோட்டு !
அசைபோடும் இசைகேட்கும் !
அமைதி நிறைந்த மயானம் !
உணர்வுகளின் உளறல்களுக்கு !
ஊக்கம் தந்தவன் !
உயிர்தரச் செய்த சமாதானம் !
அகலக்கால் வைத்தவன் !
அறிவைத் தீட்டி !
ஆக்கத்தில் நிலைக்கும் நிதானம். !
-- சு.துரைக்குமரன்

அம்மா

கவிதா. நோர்வே
தாயா? தாயகமா?!
முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில்!
நான் உன்னை!
முதன் முறையாகப் பிரிந்தேன்!
உரிமைகள் மீட்கப்!
புறப்பட்டோம்!
உடமைகளும் களவாடப்பட்டன!
இன்று எனது நாள்!!
இத்தனைநாள் பயிற்சிகளையும்!
என் விரல்களுக்குள்!
அடைத்துக் கொண்டு!
புறப்படுகிறேன்!
எது பற்றியும் சிந்திக்கவில்லை!
இன்றுவரை!
உன் மடியில்!
படுத்துறங்க!
இப்பொழுது தோன்றுகிறது!
பார்வைகளிலேயே முடிந்து போன!
என் காதலை!
இன்னொருமுறை!
சந்திக்கத் சொல்கிறது!
என் செங்வந்திப் பூக்களுக்கும்!
வழி நெடுக நிற்கும்!
பச்சை மரங்களுக்கும்!
நீருற்ற வேண்டும்!
என்று கைகள்!
கேட்கிறது!
ஒரே ஒரு முறை!
எங்கள் துலாவில்!
நீரள்ளிக் குளிக்கும் ஆவலில்!
வேர்வை ஊற்றெடுக்கிறது!
உன் கைக்கவளங்களை!
நினைக்கும் போது!
மட்டும்தான்!
இப்பொழுதெல்லாம் பசிக்கிறது.!
ஒரு நாள் உழைப்பையேனும் கொடுத்து!
அப்பாவின்!
வியக்கும் ஒற்றைப் புருவத்தை!
பார்க்கும் வேகம்!
காலம் கடந்து வருகிறது!
உன்னைக் கட்டிக்கொண்டு!
ஒரு இரவுத் தூக்கம்!
தூக்கு தண்டனை கைதியிடம்கூட!
கேட்பார்களாம்!
கடைசி ஆசை என்று...!
உன்னிடமிருந்து!
பதில் தேவையில்லை.!
இனி எனக்கு முகவரி இல்லை!
என்னுடனே புறப்பட்ட!
என் சினேகிதர்களை!
நாளை வேறுலகில் சந்திக்கலாம்!
நான்...!
முடிந்த மட்டும் அழாதே!!
மூடிய பிணக்குழிகளின் மீது!
நீர் ஆள்ளி உற்று!!
பிற போராளிகளுடன்!
ஒரே குழியிற் புதைக்கப்படுவேன்!
என் கண்களை திறந்தபடியே!
புதைய விடு!
இச் சாம்பல்!
புத்த பூமியில்!
ஒருநாள் பூக்கள் மலரும்!
அதையேனும் நான் பார்க்கவேண்டும்!!
!
பின்குறிப்பு:!
!
இது முடிவல்ல...!
நான் பிறப்பேன்!!
!
- கவிதா நோர்வே

யானை காடு திரும்பிய கதை

அரிஷ்டநேமி
அடர்ந்த பெருங்காட்டிலிந்து!
கனத்த சரீரத்துடன்!
பெரும் யானை ஒன்று!
பிளிரி ஓடிவந்தது.!
ஓட்டத்திற்காண காரணம் கேட்டேன்.!
'காட்டில் உணவு இல்லை' என்றும்!
'வற்றிய நீர் நிலைகளும்!
தனக்கானவை அல்ல' என்றும் கூறியது.!
பெரு நிலத்தில்!
வேளா வேளைக்கு உணவு என்றும்,!
தன் குளியளுக்கு பிற ஆள் எனவும்,!
வித விதமான மனிதர்கள் தினமும் எனவும்,!
வாழ்க்கை வசீகரமானது எனவும்!
பகன்றது.!
காலத்தின் சுழற்சிதனில்!
அதன் கடைநாளில்!
சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.!
மனிதத் தேவையில்!
விலங்குகளின் தேவைகள்!
வெகுதூரம் என்று கூறி!
காட்டை நோக்கிப் புறப்பட்டது

இளமைக் கோலங்கள்

பொன்.சிவகௌரி
உலகமெனும் மேடையிலே!
கலாச்சாரக் காட்சியிலே!
ஆடுகின்றார் சிலரிங்கே!!
அத்தனையும் வேடமன்றோ!!
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற !
உன்னதத்தைத் தொலைத்து விட்டு!
முறை கெட்ட வாழ்வு வாழும்!
நெறி கெட்ட மாந்தரிவர்!!
அங்கே ஊரெல்லாம் அழுகுரல்கள்!!
இங்கே இவர் தேடுவதோ இன்பத்தை!!
வாலிபத்தின் பசிக்கு தற்காலிக புசிப்பு!!
கரையற்ற இன்பம் வேண்டி!
சிறை பட்ட பூமியிலே!
முறை கெட்ட செயல்களிங்கே!!
உண்மை உலகம் ஒளிந்ததேனோ!!
மனச் சாட்சிச கூட மரணித்ததாலோ!!
பூஜைக்காக புதுமலர்கள் கூட!
நறுமணம் வீசுதிங்கே!!
வெள்ளாடுகளும் வேங்கைகள் ஆனதன்றோ !!
இளமைக் காலங்கள் ஏனோ!
அலங்கோல மானதிங்கே

இழவு

முத்தாசென் கண்ணா
ஒரு ஞாயிற்றுக் கிழமை !
கருக்கலில்!
பக்கத்து வீட்டுப் பாட்டி !
செத்துப் போனாள்!
எனக்குத் துக்கம் தாளவில்லை!
பாண்டியம்மாக் கிழவி !
ஒரு நாள் பொறுத்திருக்க கூடாதா!
நாளைக்கு அறிவியல் டீச்சர் !
ரெண்டாம் பாடம் !
ஒப்பிக்கச் சொல்லியிருக்காங்க!!
-முத்தாசென் கண்ணா

வெயில்

s.உமா
குழந்தைகளின் அதிகப்பிரசங்கித்தனம்!
பெரியவர்களின் பொறாமை!
அம்மாக்களின் சுயநலம்!
அப்பாக்களின் கஞ்சத்தனம்!
சான்றோரின் பொய்!
தொழிலாளியின் சோம்பல்!
பணக்காரனின் நீச்சத்தனம்!
ஏழைகளின் சுயவிரக்கம்!
ஆண்களின் அதிகாரம்!
பெண்களின் புலம்பல்!
பிச்சைக்காரர்களின் நச்சரிப்பு !
பொதுக்குழாயில் சச்சரவு!
இவைப்போன்று எரிச்சலூட்டக்கூடியது!
மே மாத கத்தரி வெயில்!
கண்ணங்குழிந்த குழந்தை முகம்!
பெரியவர்களின் அரவணைப்பு !
அம்மாவின் மடி!
அப்பாவின் கைப்பிடி!
ஆண்களின் நேசம்!
பெண்களின் புன்னகை!
இப்படி இதம் தரக்கூடியது!
தெருவோர ஆலமர நிழல்.... !
s.uma

கடைசி வரை யாரோ?

சுதர்மன்
கையும் காலும்!
முடங்கிப் போனால்!
உடலும் உயிரும்!
என்ன செய்யும்!
பரிவும் உறவும்!
முறிந்து போனால்!
பணமும் காசும்!
என்ன செய்யும்!
நாடும் வீடும்!
மறந்து போனால்!
பாடும் பலமும்!
என்ன செய்யும்!
கண்ணும் காதும்!
இருண்டு போனால்!
கனவும் நினைவும்!
என்ன செய்யும்!
பற்றும் பாசமும்!
காட்டி வாழ்ந்தால்!
கடைசி காலம்!
வரை அது தேடிவரும்!
!
கவிஆக்கம்: சுதர்மன்!
தொடர்புக்கு: 006567289683

தமிழிருக்கச் செய்வோம்

கரு. திருவரசு
கரு.திருவரசு !
எவருக்கும் எல்லாமே இரண்டிரண்டாய் இங்கே !
இருந்திடலாம்! செல்வரெனச் சிறந்திடலாம்! ஆனால் !
எவருக்கும் இருதாயார் இருப்பதில்லை! உன்னை !
ஈன்றெடுத்த தாய்த்தெய்வம் என்றென்றும் ஒன்றே! !
எவருக்கும் தாய்மொழியாய் இருப்பதொரு மொழியே! !
இன்தமிழே உனக்குத்தாய் மொழியாகும்! இதிலே !
எவருக்கும் இருகருத்தே இருக்க முடியாது! !
இருந்தாலோ அவனைவிடு, திருத்த முடியாது! !
பிள்ளைக்குச் செந்தமிழில் பெயரிடுவோம் என்றே !
பேசுவதும் அதற்கொருநூல் போடுவதும் என்ற !
எல்லைக்கு நம்தமிழன் எப்படித்தான் போனான்? !
இருந்தாலும் மறந்திடுவோம்! இனியேனும் செய்வோம்! !
பிள்ளைக்கு நம்தமிழில் பெயரிடுவோம்! இதிலே !
பேதமுறும் ஒருமகனைத் தமிழச்சி பெற்ற !
பிள்ளையவன் இல்லையெனத் தள்ளிடுவோம்! இனத்தின் !
பெயரிருக்க வேண்டுமெனின் தமிழிருக்கச் செய்வோம்! !
வெல்லத் தமிழினி வெல்லும்

நட்பு

முஜிமைந்தன்
“எப்பல ஊருக்குப் போற?“ என்பான்!
நண்பன்!
நான்!
ஊருக்கு போனதுமே!
வந்ததுமே துரத்துகிறானென!
வருந்துபவர்களுக்குத் தெரியாது!
அவன்!
கேள்வியினுள்ளிருக்கும் பொருள் !!
புரிந்துக கொண்டவர்களுக்குள்!
மட்டுமே!
புரிந்து கொள்ளப்படுகிற!
விசித்திரமான!
மொழிப்பரிமாற்றம்தான்!
நட்பு.!
விபத்தொன்றில் காலிழந்து!
முதுகுத்தண்டு செயலிழந்து!
ஓடியாடிய நண்பன்!
படுக்கையில்...!
ஓடினேன்!
வீடுவரை சென்ற கால்கள்!
படிதாண்ட பயப்பட்டன!
“எந்த முகத்துடன்!
எதிர் கொள்வது நண்பனை?“!
உணர்ந்துகொண்டதுபோல!
உள்ளிருந்து கேட்டது குரல்!
“சும்மா வாலேய்..!
நான் செத்தா போயிட்டேன்?“!
கசங்கிய துணியாய்!
கட்டிலின் மீது!
நண்பனின் உடல்.!
ஆறுதல் சொல்லவேண்டிய என்னை!
தேறுதல் செய்து!
அனுப்பினான் நண்பன்.!
ஓன்றல்ல!
இரண்டல்ல!
ஓடின ஆண்டுகள் ஆறு.!
இன்று!
கட்டில் மட்டும்!
நண்பன் இல்லை!
தாங்கமுடியாத!
சோகத்தில் மூழ்கிய எனக்குள்!
இன்றும்!
ஒலித்துக்கொண்டிருக்கிறது!
அழியாத ஒலியலையாய்..!
“எப்பல ஊருக்குப்போற..“

மரண அழைப்பு

ப.மதியழகன்
வாழ்க்கைப் புதிர்!
அவிழ்கிறது!
சுவாரஸ்யமற்ற பக்கங்களைப்!
புரட்டியபடி!
திரைச்சீலை அகன்றது!
கட்புலனாகாத காட்சிகள்!
கனவில் விரிந்தது!
ஆற்றுப்படுத்த எவருமின்றி!
உள்ளம் பொங்கி எழுகிறது!
நேர்பட்ட நெஞ்சகத்துக்கு!
எதுவும் தவறாகவே தெரிகிறது!
விடியல் வரை!
முள்படுக்கை தனில்!
உறக்கம் வராமல்!
புரள்கிறேன்!
கசங்கிய ஆடையுடனும்!
குளித்து நாளானதால்!
கவுச்சி நாற்றத்துடன்!
சுற்றித் திரிகிறேன்!
துரதிஷ்டம் துரத்தியடிக்கிறது!
என்னை!
துன்பக் கேணியில்!
காப்பாற்ற எவருமின்றி!
முழுவதுமாக!
மூழ்கிக் கொண்டிருக்கிறேன். !