தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மனிதநேயம்

லலிதாசுந்தர்
பணம் எனும் மந்திரச்சாவி கொண்டு!
வாழ்க்கையை திறக்க முற்படுகின்றோம்!
உயிர் எனும் குகைக்குள் அது!
புதைந்து கிடப்பதை மறந்து!
உலகெங்கும் வன்முறை!
கோரதாண்டம் ஆடிக்கொண்டிருக்கிறது!
எங்கே மனிதநேயம்?!
மனிதநேயம் சில அமைப்புகளுக்கு மட்டுமே!
சொந்தம் என எண்ணுகின்றோம்!
உலகம் நாளை இளைஞர்கள் கையில்!
இன்றே அதன் வம்சங்கள்!
அழிக்கபடுகின்றனவே - எங்ஙனம்!
நாளைய இளைஞர்கள்!
விழித்துகொள்வோம் வன்முறை!
நம் வாசலில் தீ வைக்கும்முன்!
புகட்டுவோம் பிள்ளைகளுக்கு!
மனிதநேயத்தை!
உருவாக்கிடுவோம் நாளைய நம்!
சமுதாயத்தை அமைதியாக!
- லலிதாசுந்தர்

இனியும் பொறுத்தல் இழுக்கு

அகரம் அமுதா
எலிகள் எதிர்த்தா இமயம் சரியும்!
புலியே விரைவாய்ப் பொருது!!
வாழ்வெண்ணி அண்டி வதைபடாய்; போரிட்டு!
வீழ்ந்திடினும் பேறாம் விரும்பு!!
சிறப்பே வரினும் சிறுமையுறாய்; சிங்களரை!
இறப்பே வரினும் எதிர்!!
இறுதி வரினும் எதிர்கொள்வாய்; ஈழம்!
உறுதி எனப்பொரு(து) ஊர்ந்து!!
நூற்றுவரை ஐவர் நுதிவென்றார்* சிங்களராம்!
கூற்றுவரைத் திண்மதியாற் கூறு!!
கனியும் பொழுதென்று காவாய்; துணிவாய்!
இனியும் பொறுத்தல் இழுக்கு!!
நஞ்சும் படையாய் நடைசெயினும் மோதா(து)!
அஞ்சும் படையா அவண்!!
கடுப்பைக் கிளப்பிக் களிக்கின்றார் கீழோர்!
இடுப்பை ஒடித்தல் இசை!!
கவலை அளிக்கிறதே! கண்ணிரொடு செந்நீர்த்!
திவளை தெரிக்கிறதே சேர்ந்து!!
செந்தமிழ் நூற்களைத் தீக்கீந்த சிங்கள!
மந்திகளின் மார்பிளத்தல் மாண்பு!!
!
-அகரம்.அமுதா!
----------------------------------!
அருஞ்சொற்பொருள்:-!
நுதி -அறிவுக்கூர்மை(நுதிவென்றார் -அறிவுக்கூர்மையால் வென்றார் (மூன்றாம்!
வேற்றுமை உருபாகிய ஆல் தொகைநிலை), அவண் -அவ்விடம், கண்ணிரொடு -கண்ணீரோடு!
(காய்ச்சீர் நோக்கிக் குறுகிற்று)

சகலமும் நான்

கவிதா. நோர்வே
நீ சூரியனா!
இருந்து கொள்...!
தூரம் என்றாலும்!
உன் கதிர்கள் என்னை!
உரசிக்கொண்டுதானிருக்கும்.!
நான் பூமி.!
நீ பறவையோ!
தூரம் போவாயோ...போவேன்!
நீ நிச்சயம் வருவாய்.!
உன் கூடு என் விரல்களில்.!
நான் மரம்.!
காற்றாக மாறு!
காணாமல் போ.!
ஒவ்வொரு நொடியும்!
என்னுள் நிரப்பிக் கொள்வேன்!
நான் சுவாசம்.!
மேகமாகி நீ!
அலைந்து திரி!
பொழிந்து கொட்டு!
எங்கோ வீழ்ந்து!
எங்கும் பாய்ந்து..!
நீராகி நதியாகி!
உன் இறுதி சங்கமம்!
என்னிடம் தான்!
நான் கடல்.!
பிரிதலும் சுகம்.!
பிரிந்து பின் கூடல்!
தவம்...!
பிரிந்து போ..!
தூரம் போ...!
உன்னால் முடியாது!
இது போர்களம்.!
வெற்றியும் எனக்கு!
தோல்வியும் எனக்கு!
காதலில் மடியில்!
சகலமும் நான்!
உனக்கு.!
- கவிதா. நோர்வே

அந்தக் கணம்

சத்தி சக்திதாசன்
நிசப்தமான பொழுதினிலே !
நீலக்கடலின் மத்தியிலே !
நிம்மதியான கணமொன்று !
நினவில் தடம் பதித்ததுவே !
!
அடிக்கும் அலைகள் !
அனைத்துமே !
அமைதியாக கரையைத் தழுவி !
அந்திப்பொழிதின் !
சாரத்திலே !
ஆசைமுத்தம் பொழிந்தனவே !
!
நேற்று எந்தன் உள்ளத்திலே !
நெருடிய நினைவின் !
உறுத்தல்கள் !
நீங்கின அந்த வெள்ளத்திலே !
நிர்மலமான ஆழியின் !
ஆழத்திலே !
!
ரீங்காரமிடும் அலைகளின் !
ஓசையில் !
நயமாகப் பிறந்திடும் !
மயக்கும் !
இசையினில் !
நெஞ்சத்தின் ஊஞ்சலை !
ஆட்டும் கீர்த்தனம் !
நிகழ்த்திய அற்புதம் !
நிகழ்ந்தது !
ஒரு கணம் !
!
மாலநேரத்து வெய்யிலின் !
மஞ்சள் !
மயக்கும் கடலின் அதிசய !
அமைதி !
மணக்கும் மகிழ்ச்சியின் !
தொடக்க !
நிகழ்ச்சி !
அந்தக் கணம் ..... !
என்னையே நான் !
மறந்த கணம் ..... !
!
கடற்கரையோரத்து வெண்மணல் !
கலகலப்பாய் ஆடும் !
கள்ளமற்ற குழந்தைகள் !
களிப்பு !
கணநேரம் நான் என்னையே !
இழப்பு !
!
என்னுள்ளத்தை உசுப்பிய !
கணங்களைச் சேர்த்து !
எண்ணத்து நாரினில் !
மாலை தொடுத்து !
ஏற்றமுடைத்த இயற்கையன்னை !
பாதங்களில் நான் !
படைத்தேன் காணிக்கை !
சக்தி சக்திதாசன்

கனவுகளைத் தொலைத்தவள்

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
!
கண்ணீரில் !
கரைந்ததினால் தொலைந்ததுவோ !
அவள் கனவுகள் ? !
காதலினை !
காயாகப் பார்த்திருந்து !
கனிந்து வரும் வேளையில் !
காசாக்க முனைந்த !
கயவனின் !
கல்மனத்தால் பாவம் அவள் தூக்கங்கள் !
கனவுகளற்ற பாலைவனமானதுவோ ? !
கன்னியாய்ப் பிறந்ததினால் !
கடைசிவரை சுமையாக !
கற்றோரும் !
கருதும் ஒரு சமூகத்தில் !
கயல்விழியாள் தொலைத்தாளோ !
கனவுகளைக் !
கவலை எனும் !
கானகத்தே ! !
காத்திருந்து !
காத்திருந்து !
கருவிழிகள் பூத்திருந்து !
கன்னிமகள் வாழ்வதனைக் !
காணாத !
காரணத்தால் !
கடலினுள்ளே நீர்த்துளிகளாய் !
கலைந்தனவோ அவள் !
கனவுகள் ! !
கண்களிலே கண்ட !
காட்சிகளைக் கோர்த்தெடுத்து !
காவியமாய் நெஞ்சினிலே !
கற்பனையால் யாத்தெடுத்து !
காலமெல்லாம் பார்த்திருந்த !
களிப்புமிகு வாழ்க்கையதும் !
கைமீறிப் போனதினால் தான் !
கற்சிலைபோல அழகுடைத்த !
கன்னியவள் கனவுகளும் !
காணமல் போயினவோ ? !
கண்டோரை வியக்க வைக்கும் !
கன்னியழகு கொண்டவள்தான் !
கல்வியிலே தேர்ச்சி பெற்ற !
கலைமகள் தான் !
கணத்திலே மயக்கிவிடும் பண்பதனைக் !
கற்றவள் தான் !
கனவுகளை இன்றவள் தொலைத்திட !
காரணமென்ன ? !
காளயவன் மனதினிலே பேராசை !
களியாட்டம் போடுவதால்; சீதனம் எனும் !
கொடுமைதனை எதிர்க்கத் திரணியற்ற !
கருத்துக் குருடர் நிறைந்த !
கல்தோன்றி , மண்தோன்றாக காலத்து சமுதாயம் !
கனவுகளைத் தொலைத்தவளின் !
கண்ணீரைத் துடைப்பவர் யார் ?

அந்த நாட்கள்

சிலம்பூர் யுகா துபாய்
மனிததொழிற்சாலை!
மாசு நீக்கம்!
செய்யப்படுகிறதா!!
மழலைவேண்டி!
கருவறை!
மையாய்!
மடலெழுதுகிறதா!!
மாதம் ஒருமுறை!
மலர்களுக்குள்ளும்!
ரத்தபலியா!!
என்!
கிராமத்து சகோதரி!
கிழிந்தபாவாடைக்காரி!
இப்படித்தான்!
எண்ணுவாள்!
இந்த நாட்கள்மட்டும்!
இல்லையெனில்!
ஒட்டுபோட்டபாவாடையில்!
இன்னும்!
ஓராண்டுகழித்திருப்பேன்

நட்சத்திரவாசி

நட்சத்ரவாசி
நட்சத்திரங்கள் ஒளிவீசி புனைவையும்இகற்பனையும்!
எழுதிசெல்கிறது இன்றைய என் வெறுமையில்!
மௌனமாய் வாழ்ந்தலையும் மேககூட்டங்களில்!
அவள் வருகிறாள் எனது உயிரை பிடித்திழுக்க!
அலைகடலின் ஆர்பரிப்புகளுக்கிடையில் நான் பயந்து!
சென்றொளிகிறேன் ஒரு சிறு மீனினை போல!
அவளின் குதிரையோ எதையும் ஊடுருவிபோக வல்லது!
நான் என் கனவின் பெருந்தழலை நீட்டுகிறேன்!
அவளது சூட்சுமங்களை குலைத்துபோட!
அதீத விளையாட்டுகளின் முடிவில் எனை அவள்!
சிறைப்பிடித்தாள் நட்சத்திரங்களுக்கு செல்வதை பற்றி!
ஆணையிட்டாள் நான் நட்சத்திரவாசியாகுகை குறித்து.!
எல்லா இயலாமைகளின் புதிர் வெளிச்சத்தில் எனை!
கடத்திக் கொண்டு போனாள் விண்னுலகிற்க்கு!
அவள் ஆளும் நட்சத்திர உலகில்!
இன்று நானொரு நட்சத்திரவாசி!
நட்சத்திரங்களுக்கிடையில் அவளின் அடிமையாக!
இருத்தல் குறித்து யோசித்தவாறிருக்கும்!
என்னை நாளை ஒரு நட்சத்திரம் உங்களிடம்!
சொல்லலாம் இரவின் ஒரு பொழுதில்

தோழர் பழனிவேல்

மாதங்கி
வங்கியிலிருந்து !
மாற்றலாகிப் போன அதிகாரிகள்!
எப்போதாவது !
வேறு வேலையாக வரும்போது!
நண்பர்களுடன் சாப்பிடப் போவார்கள்!
ஆபீஸ் பையன் பழனிவேல் கையில்!
காப்பிக்கு கொடுத்துவிட்டு!
நான்கு வருடங்களாக !
இது நடந்துவந்தது.!
தணிக்கைக்கு வந்த!
வசந்தா மேடத்தை!
பஸ் ஏற்றிவிடுவதற்கு முன்!
காப்பி சாப்பிட அழைத்தபோது!
நெளிந்தவாறே போனான்.!
சில்லரையை அவர் தேடியபோது!
கொடுக்க அவன் முன் வந்ததை!
ஏற்றுக்கொண்டார்.!
இன்றும் !
வங்கி ஊழியர்!
வியப்புடன் பேசிக்கொள்வர்!
எப்படி!
மூன்றே வருடங்களில்!
படித்து!
பழனிவேல்!
பதவி உயர்வு பெற்றுவிட்டார்!
என்று

மழைக்கால இரவின்

நிந்தவூர் ஷிப்லி
தேவதைக்கனவுகள்…!
-----------------------------------------------------------!
அடைமழை கிளறும் மண்வாச நுகர்ப்பொழுதில்!
கண்களில் விழுந்த தேனருவி தேவதை உன்!
புன்சிரிப்பின் நீள்வனப்பில் என்னுயிர் திடும்மென!
தொலைந்துபோனதாய் ராத்திரிக்கனவுகள் உளறித்திரிவதைப்பார்..!
நீல வானம் இருண்ட அந்த அந்திமாலையில்!
நீல வர்ண சேலைவழியே உன் எழில் தேகமதில்!
தவறிவிழுந்த மழைத்துளிகள் தீப்பற்றியெரிந்ததாய்!
மீண்டும் மீண்டும் கனவுகள் முணுமுணுப்பதையும் பார்..!
சேறும் சகதியும் விரவிக்கிடந்த சாலையில்!
தேவதையுன் கால்தடம் தேவலோகச்சிற்பமாய்!
என் விழிகளில் செதுக்கப்பட்ட கணங்களின்!
ஆனந்த வார்ப்புக்கள் பெருமழையாய் அதே கனவில் சொட்டுவதையும் பார்..!
உன் விரல் தீண்டிய குடைக்கம்பிகளில் ஒட்டத்துடித்த!
என் ஸ்பரிசத்தட்ப வெட்பம் அதிர்ந்ததிர்ந்து!
ஓய்ந்த மழையென ஓரமாகிப்போன கண்ணீர் நிகழ்வதை!
அன்றோடே விட்டெறிய ஏங்கிக்கிடக்கும் என் கைவிரல்களையும் பார்..!
இன்னும் உனக்காகத்துடிதுடித்து உன் பெயரை உச்சரித்து!
மெல்லவும் முடியாமல் விழங்கவும் முடியாமல்!
காத்திருப்பின் கடைசிமுனையில் தொங்கிக்கொண்டிருக்கும்!
உன்னுயிர் தாங்க ஏங்கி நிற்கும் என் மனதையும் பார்..!
காதலின் உற்சவம் நம் கண்களில் கலக்கட்டும்!
காதலின் மகோன்னதம் நம் உயிர்வெளியில் நிறையட்டும்!
காதலின் தாண்டவம் நம் இதழ் வழியே ஆடட்டும்!
காதலின் சங்கீதம் நம் குரல் வழியே பாடட்டும்..!
உன் கைரேகை என் கைகளில் படரப்போகும்!
உத்தரவாதமொன்றுக்காய் விழித்திருக்கும் என் ராத்திரிக்கனவுகளில்!
தேவதை மின்னலென சட்டென்று மறைந்துபோகாமல்!
மின்னலேந்தும் வானமென என்னுடன் உடனிருக்கச்சம்மதமா?

இலையேல் என் பெயரை வெட்டிவிடு

சுதா சுவிஸ்
என் பிரியமானவளுக்கு!!
பல பிரயத்தனங்களில் பிரசவமாகிய!
உன் மடல் என் கரத்தில்.!
சம்பிரதாயமாக நன்றி என எழுதிவிடவா?!
ஆயினும் நன்றிகள்!
!
நான் நலம் என்று எழுதிவிட!
நல்லவைகள் என்று அதிகமாய் எதுவுமில்லை.!
முன்பு எழுதியதைப்போலவே!
மிரட்டலாய் இடையிடையே தொலைபேசி அழைப்புக்கள்!
மனத்திற்கு அடிக்கடி தொல்லைகள் தந்தபடி.!
!
ஆயினும், நினைவுகளுக்குமட்டும்!
இன்னும் இறகுகள் முளைத்தபடி.!
உன் நினைவுகளும் என் இறகுகளாய்!
என்னோடு ஊர்வலம் வந்தபடி.!
நடை பாதைஓரத்தில் நாற்காலி,!
என் எண்ணங்கள் அடிக்கடி உட்கார்ந்து!
உன் சுவாசங்களை உள்ளிழுத்துக்கொள்கிறது.!
எதுவுமே வெறுமையாய் சிலவேளைகளில்!
அந்தக் கத்தாப்பு மரத்தின் பரந்தகிளைகளின் இடையில்!
நாம் களவுபோன கதைகள்!
ஒற்றைக்கிளையிற்குள் ஒழிந்துதிருந்தவைகள்!
மரத்தில் பட்டை உரித்து!
பெயர் வெட்டி அழகுபார்த்தவைகள்!
இன்னும் மனத்திற்குள் சுகமானவையாய்!
!
கத்தாப்பு மரத்திற்கு தண்ணீருடன்!
கண்ணீரும் ஊற்றுவதாய் கடிதம் துளிர்த்திருந்தது,!
என் மனதில் பனிப்பாறையாய் உறைந்து வளர்கிறது.!
என் மனப்பெருமூச்சின் சுவாலையில்!
உன் நினைவுகள் தென்றலாய் இடையிடையே!
என் வாசத்தில் வாசல்கதவுகளைத் திறக்கிறது.!
சமுத்திரத்தின் ஓரத்தில் அழகுதமிழ் எழுதிய பொழுதுகள்!
அலை எழுந்து அதை ரசித்து பொழுது!
நீ அழுது வடித்த கண்ணீர் என் விழியிற்குள்!
இன்னும் திரண்டு இமைகளின் இடுக்குகளில் இறுகியது.!
என் இதயத்தை இறுக்கியபடி!
இப்போதெல்லாம்.!
உன் அண்ணாவின் கனவுகளும் கடிதத்தில்..!
அவனின் கரங்களின் வலிமையை!
கனமான வார்த்தைகளில் விதைத்திருந்தாய்.!
என் விழுதுகளை மட்டுமல்ல வேரையும் விறகாய்!
காயப்பட்ட கதைகள் என் நினைவினில் முளைக்கிறது.!
!
முன்பு என் நண்பர்களுக்காய் வாகனம் ஓட்டிய!
உன் வீட்டின் எதிர் வீட்டு ராசன்!
கோரமாய் கொல்லப்பட்ட சேதியை!
சிறிதாய் எழுதியிருந்தாய், வெறும் செய்தியாய்.!
என் கனவுகளில் கறையான் முளைப்பது போல..!
உணர்வுகள் பிய்ந்து கந்தலாவதுபோல்..!
ஏதோ ஒன்று என்னுள் எழுந்து விழுகிறது.!
இழுத்து இழுத்துப்பிடிக்கிறேன்.!
இதயம் ரணவேதனையில் துடிக்கிறது.!
கலைத்து காயப்படுத்தியதும்!
வீதிகள் தோறும் அனாதைப்பிணங்களாய்!
கொல்லப்பட்டு கொழுத்தப்பட்டதும்!
மறப்பதற்கு வெறும் இரவுக் கனவுகளல்ல.!
மனத்தில் மாறாத வடுக்களின் தழும்புகள்!
முகத்தினில் ஓங்கி வீசப்பட்ட அவலட்சணங்கள்.!
!
இவைகள் அறிந்தும் மறந்து வாழும் மனிதரில்!
நீயும் ஒருத்தியென்றால்!
உன் அண்ணனின் கரங்கள்!
நியாயத்தின் நிதர்சனமென்றால்!
கொல்லப்பட்ட ராசன் தேசத்தின் துரோகியென்றால்!
நீயும் நானும் பேசிய வார்த்தைகள்!
அர்த்தங்கள் இல்லாத அஸ்திகள்.!
வாய்கள் மூடப்பட்டிருந்தாலும்!
நெஞ்சினில் நீதியைத்தான் எதிர்பார்த்தேன்.!
உன் பார்வை, கொடுமையை கொழுத்த வேண்டுமென்றேன்.!
வளர்ச்சியில் பொதுமையின் கருத்துக்கள்!
எழுச்சி பெற வேண்டுமென்றே நினைத்திருந்தேன்.!
என் காதல் என்பது!
வெறும் கல்யாணச்சடங்கிற்காய்!
எழுதப்படும் ஒப்பந்தமல்ல..!
கருத்துக்களுடனேயே கரத்தை இணைக்க விரும்புகிறேன்.!
ஏற்றுக்டகொணடால் இன்னொரு கடிதம் எழுது.!
இல்லையேல் கத்தாப்பு மரத்தில்!
என் பெயரை வெட்டிவிடு.!
சுதா சுவிஸ்