தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அன்னையும் நீயே

முருகேசு ஜீவா
வானத்தில் நிலவு காட்டி !
வளர்க்கப்பட்ட என் பிஞ்சு பருவம் !
பூவாய் மலர்ந்த வேளை !
வானத்தில் பம்பர் காட்டி !
தறி கெட்டு ஒட வைத்தது !
பிஞ்சுப் பாதம் பட்டு சித்து !
என் பெற்றோர் - கொழுத்தும் !
வெயிலில் வெந்து போன !
பாதத்தை பாத்து தடவக்கூட !
கைகளற்று போன போதுதான் !
என் மனமும் வெந்து பேனது. !
பள்ளிப்பாடப் புத்தகம் !
சுமக்கும் வயதில் என் !
பாசச்சுமைகளை சுமக்கும் !
நிலைக்கு உள்ளானேன் !
இறைவன் திறந்த கண்ணில் !
இரண்டு சுமையும் இறக்கப்பட்டது. !
வழிமாறிய என் பட்டு வாழ்க்கை !
சிட்டாக சிரித்து மீண்டும் கை வந்தது !
ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் அருளால் !
கருனை !
காட்டிய என்தாயே காப்பாயே !
என்றும் என்னை நீயே. !
!
முருகேசு ஜீவா !
***** !
அன்பகம் - திக்கற்றோருக்கான காப்பகத்திலிருந்து ஒரு குழந்தைக் கவிஞர்

எனக்கான காதல்

நீதீ
எழுத்து: நீ “தீ”!
அவள் வரும் பேருந்தில்!
அவளின் பின் இருக்கை!
எனக்கு எழுதி தரப்பட்டது!
நான் இருப்பது தெரியாமல்!
சத்தம் போட்டு பேசும் ரகசியங்கள்!
என் காதுகளால் களவாடபடுகிறது!
காற்றுக்கு பறந்து வரும்!
கரு நீல கூந்தல்!
கன்னத்தில் படும் போதெல்லாம்!
உள் இழுக்கும் மூச்சுக்காற்றுடன்!
எங்கோ பயணப்படுகிறேன்!
இருவருக்கும் ஒரே நிற உடை என்றால்!
எனக்கு இருபது ரூபாய் செலவு!
அவளுக்கு ஜந்து ஆறு சாக்லெட்!
பத்து நிமிட பயணத்தில்!
கல்லூரி கட்டிடம்!
அவள் கால்தடம் பிடித்து நடப்பதாலே!
எனக்கு முப்பது நிமிடம்!
அவளின் வகுப்பறையை!
கடந்து செல்லும் போதெல்லாம்!
கண்களின் துழாவலில்!
அவளின் கவனமெல்லாம்!
கரும்பலகை மீது!
எவரிடமிருந்தாவது!
செய்தி வரும்!
நூலகத்தில் அவள் என்று!
நூல்பிடித்து செல்வேன்!
அவளுக்காக அசைவத்தை துறந்து!
நான்கு மணி பேருந்தை துறந்து!
அடுத்த பெண்களை பார்பதை மறந்து!
துறவறம் மேற்கொண்டேன்!
துறவி என்று!
தெரிந்து விட்டதோ அவளுக்கு!!
அதிகமாய் அவளிடம்!
அளவளாடிய என் நண்பன்!
அடிமைப்பட்டு விட்டான்!
என்னை தனிமைப்படுத்திவிட்டு!
கருப்புக்கும் வெள்ளைக்கும்!
காதல் என்று!
இலை மறையாய் வந்து விழும்!
இருவரும் விரும்பும் செய்தி!
நான் கேட்காமலேயே!
நண்பர்களிடம் சொல்லியதாய்!
நான் கேட்ட செய்தி!
எனக்காக தூது போனானாம்!
வெற்றி அவனுக்கே!!!!
என் துன்பம் அறியாமலே!
என் எதிரே பேசி சிரிப்பர்!
என்னை சங்கடப்படுத்திய!
அவரிருவரின் சந்தோச துள்ளலால்!
(இன்று) சாதித்தது என்ன?!
ஒதுக்கபட்டதாய் உணர தொடங்கினேன்!
அவளுக்காக!
அலைந்த நாட்களை..!
அழுத நாட்களை எண்ணிக்கொண்டு!
இறுதி ஆண்டுகளில்!
அவளில்லா பேருந்துகளில் நான்!!
இன்னமும் கீறலாய்!
என் மனதில்.!
எழுத்து: நீ “தீ”!
தொடர்புக்கு:006582377006

நாற்காலிகளுக்கு நாலுவரிகள்

இப்னு ஹம்துன்
கிளைபரப்பி, நிழல்விரித்து!
கனியளித்து, பசிபோக்கி!
புன்னகைப்பூக்களால்!
அனைவருக்கும்!
ஆசியளித்தபடியிருந்த!
பெருமரம் ஒன்று!
தன்னுடல் தானமளித்து!
பின்னும் பரிணமித்தது!
கட்டிலாக ஆனபோது!
காதலின் கீதம் பாடியது.!
தொட்டிலாக ஆனபோது!
தாய்மையின் மொழி பேசியது.!
நடைவண்டியான போது!
இளங்கால்கள் சிலவற்றுக்கு!
நடை கற்றுக்கொடுத்தது.!
நாற்காலியானபோதோ!
செருக்குடன் நிமிர்ந்து!
செப்புமொழி சொன்னது.!
மெலிந்த அந்த நான்கு கால்களுக்கு!
முட்டுக்கொடுக்க பயன்பட்டன!
மூலையிற் கிடந்த சில புத்தகங்கள்.!
புத்தகங்களையே மிதித்திருப்பதாய்!
புது கர்வம் கொண்ட!
அதன் முதுகிலோ!
அலங்கார ஓட்டை.!
போகட்டும்,!
புத்தகங்களினும்!
நாற்காலிகள் நிரந்தரமானவையல்ல.!
!
- இப்னு ஹம்துன்!
--------------------------------!
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953

விந்தை உலகம்

ராமலக்ஷ்மி
வாட்டும் நோயினால்!
வருத்தத்தில் அவன்-!
இறுகிய முகமும்!
குன்றிய உள்ளமுமாய்...!
நலம் விசாரிக்க!
வலம் வந்த மருத்துவர்!
இவன் இருக்கும் இடம்!
வந்து நின்றார்-!
வெளிர் உடையும்!
பளீர் சிரிப்புமாய்...!
'கலக்கம் விலக்கிடு!
காலத்தே குணமாவாய்!!
பரிந்துரைத்த பயிற்சிகளைப்!
பழகச் சலிப்பதேன் ?!
படுத்தே இருந்தால்!
அடுத்துநீ எழுந்து நடப்பது!
எப்போதாம்?' கேட்டார்!
புன்னகை பூத்தபடி.!
மீண்டும் சொன்னார்:!
'மலர்ச்சியுடன் மருந்துகளை!
உட் கொள்வாய்,!
உற்சாகமாய் இருந்திட்டாலே!
தேறிடலாம் விரைவாய்!'!
நம்பிக்கை ஊற்றினிலிருந்து!
நன்னீர் வழங்கிய!
திருப்தியுடன்!
திரும்பி நடந்தார்.!
'மிடுக்காக வந்து!
துடுக்காகச் சொல்லிவிட்டாரே,!
பட்டால் அன்றோ புரியும்!
வலியின் ஆழமும்-!
கதிகலங்கி நிற்குமென்!
உள்மனதின் கோலமும்!'!
தெளிக்கப்பட்டது பன்னீர் என்ற!
தெளிவில்லாமல வென்னீரென்றே!
நினைத்துச் சலிக்கின்றான்.!
வாழ்வோடு வலியும்!
காலத்தோடு கவலையும்!
கலந்ததுதான் மானுடம் என்பது!
இறைவனின் கணக்கு.!
இதில் எவருக்குத்தான்!
தரப்படுகிறது விதிவிலக்கு?!
சொன்னவரும் மனிதர்தான்!
அவருக்கும் இருக்கக்கூடும்!
ஆயிரம் உபாதை என்பதனை!
ஏனோ மறக்கின்றான்.!
ஆறுதலாய் சொல்லப்படும்!
வார்த்தைகள் கூட சிலருக்கு!
வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்!
வேல்களாய்த் தோன்றுவது!
வேதனையான விந்தை!!
துயரின் எல்லை என்பது!
தாங்கிடும் அவரவர்!
மனவலிமையைப்!
பொறுத்ததே!!
ஆயினும் கூட...!
'பாவம் பாவம்' எனப்!
பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்!
உற்றார் பலர் உத்தமராகிறார்.!
விரக்தியை விடச் சொல்பவர்!
வேதனை புரியாதவராகிறார்!!
சோதனைமேல் சோதனையென!
சோர்ந்தவனின் சோகத்தை!
மென்மேலும் சூடேற்றுபவர்!
மனிதருள் மாணிக்கமாகிறார்.!
மனதைரியத்துடன் இருக்கும்படி!
மனிதநேயத்துடன் மன்றாடுபவரோ!
அடுத்தவர் அல்லல்!
அறிய இயலாத!
அற்பப் பதராகிறார்!!
அக்கறையை அனுபவத்தை!
ஆக்கப் பூர்வமாய்!
நோக்கத் தெரியாமல்-!
அன்பை ஆறுதலை!
இனம் புரிந்து!
ஏற்கத் தெரியாமல்-!
இருக்கத்தான் செய்கிறார்!
சிலர்...!
அத்தகு!
இடம் அறிந்து!
மெளனிகளாகத்!
தெரியாமலேதான்!
பலர்

மீண்டிடுமா

செண்பக ஜெகதீசன்
…!
----------------------!
01.!
போட்ட விதைதான் வருகுது!
புது வடிவில்,!
மண்ணில்-!
முளைத்துச் செடியாய்,!
பெண்ணில்-!
பேசும் மழலையாய்…!!
பாரிலுண்டு!
பல மொழிகள்,!
பல மொழிக்கும் முதல்மொழி!
பவளவாய் சிந்திடும்!
மழலைமொழி…!!
மகிமைகள் தெரிந்திருந்தும்!
மழலைகள் கிடக்குதே மண்ணில்,!
அது ஏதோ!
மௌனத்தில் மறைந்த உண்மை,!
மீண்டிடுமா இதிலிருந்து பெண்மை…!!
02. !
எண்ணி எண்ணி…!
நிலவே சாட்சி என்று!
சொன்னவன் சென்றுவிட்டான்!
என்!
நித்திரையைக் கெடுத்துவிட்டே,!
நித்தம் நித்தம்!
எத்தனை நாளைக்குத்தான்!
எண்ணிக்கொண்டிருப்பது!
மொத்தமாக!
இத்தனை நட்சத்திரங்களை…!!
ஏண்ணித் தீர்ந்தால்தான்!
அவன்!
என்னிடம் வருவானோ…!!
-செண்பக ஜெகதீசன்…

மாறும் உறவுமுறை

பாரதி அட்சயா
உணவினிடையே தாத்தாவுக்கு!
பேத்தியுடன் செல்லச்சண்டை.!
சுவாசக்குழலில் உணவுத்துகளோடி!
புரையேறித் திணறித் தவிக்கையில்!
இடது கையால் தலையைத் தட்டி!
வலது கையால் நீரை நீட்டி!
“சாப்பிடும் போது என்னப்பா பேச்சு”!
செல்லமாய் அதட்டி நிற்கும் மகளிடம்!
விழித்து நிற்கும் தந்தை..!
கணப்போதில்!
மகள் தாயாகவும்!
தகப்பன் மகனாகவும்

ஹேப்பி நியூ இயர்

s.கிருஷ்ணன்
பிறந்த நாள்!
கொண்டாடுகிறது காலம்!
மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து!
அதன் கை குலுக்கி!
வாழ்த்துச் சொல்லுங்கள்.!
அதைக் கொடு!
இதை நிறைவேற்று!
என்று காலத்திடம்!
கவிதையில் கோரிக்கை வைத்து!
சலித்து விட்டது எனக்கு.!
கேட்பதற்கு மிச்சம்!
ஏதும் இருக்கிறதா!
இங்கு...?!
மீண்டும் மறப்பதற்கு!
வசதியாக தள்ளுபடி விலையில்!
ஒரு புத்தாண்டு உறுதி மொழி!
கேட்டுப் பார்க்கலாம்.!
மீண்டும் எங்கோ!
ஒரு மூலையில்!
நிகழப் போகும்!
வன்முறையின்!
பல ரூபங்களை!
என்றோ சொந்த ஊருக்கு!
வரும் போர் வீரனை போல!
சந்திக்க எழுகிறது காலம்!
நம்பிக்கையை மட்டும்!
தனது வடுக்களில்!
மருந்தாய் பூசியபடி!
எங்கு செல்கிறாய் நண்பா!
மகிழ்ச்சியை எடுத்துக்கொள்!
காயப்படும் முன்!
மீண்டும் பிறந்த நாள்!
கொண்டாடுகிறது காலம்

ஆயுதப்போரும் அகாலமரணங்களும்

கவிதா. நோர்வே
தோற்றது தமிழர்!
என்றா நினைக்கிறாய்!
தன்னை இழந்தது!
விடுதலை போர் என்றா!
நினைக்கிறாய்!
ஓர் ஆயுத வரலாற்றின்!
அகால மரணமிது!
ஆயுதப் போர் தனது!
அகோரத் தோற்றத்தால்!
தனைத்தானே!
புதைத்துக் கொண்டது!
பூக்களுக்குப் பதில்!
ஆயுதங்கள் பறித்து வந்து!
தம் கல்லறைமேல் குவிக்கச்சொல்லி!
அழிந்து போன உயிரின்குரல்!
புதைகுழிகளெங்கும் அதிர்கிறதே !
உனக்கும் கேட்கிறதா? !
உயிர் பறித்த இழப்புகளில்!
முளைவிட்டு நாளையினி!
உயிர் பெற்று வருவோம் நாம் !
உன் வாள் உறைகளுக்குள்!
வார்த்தைகளை கூர்ப்படுத்தி!
எழுந்து வா! !
கொலைக்களத்தின் கத்திகளால்!
உயிர்ப்பலிகள் இனி வேண்டாம் !
வார்த்தைகளால் உரிமை பேசி!
கருத்துகளால் மோதிக்கொள்ளும்!
எம்!
இரண்டாம் யுத்தம்!
இனிமேல்த்தான்

அணுத்திமிர் அடக்கு

அறிவுமதி
அறிவுமதி!
கொடிமரம்!
ஒடி!
சிறைகள்!
இடி!
இராணுவம்!
அழி!
அரசுகள்!
அற்ற!
அரசினைச்!
செய்!
'!
கனவைச்!
சுருட்டு!
புனிதம்!
விரட்டு!
தீது!
செயற்கை!
காத்திருக்காதே!
கற்பு!
உடலுக்கு!
காதல்!
உயிருக்கு!
காதலி!
!
----------!
வெளியீடு:!
சாரல்,!
189.அபிபுல்லா சாலை,!
தியாகராயர் நகர்!
சென்னை-17

அப்பாவுக்காய் ஒரு கடிதம்

ரசிகவ் ஞானியார்
அயல்தேசத்திலிருந்து...!
அப்பாவுக்காய் ஓர் கடிதம்...!
இதய தேசத்தில் உன் நினைவுகள்!
நிறைய இருந்தாலும்!
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள் !!
அப்பா சௌக்கியமா...?!
நீ -!
என் தேவைகளை நிறைவேற்ற!
தகுதியை மீறி உழைத்தாய்!!
நானோ!
தியேட்டர் சுவரை மீறி!
செலவழித்தேன் அப்பா!!
நான்!
கேட்கத் தயங்குவேனெனத் தெரிந்து!
எனக்குத் தெரியாமல் ...!
என் பாக்கெட்டில் பணம் வைப்பாய் !!
ஆனால்!
நான்!
அதிகம் செலவழிப்பதாய் ...!
அம்மாவைத் திட்டுவாய்!!
நீ!
கோடையில் நின்றாலும் - எனக்கு!
குடை வாங்கிக் கொடுத்தாய்...!
உன்!
வியர்வை விற்ற காசில் - எனக்கு!
குளிர்சாதனப்பெட்டி!!
உன் சைக்கிள் சுழற்சிதான் - எனக்கு!
பைக் வாங்கிக் கொடுத்தது...!
நீ மிதித்த சுவடுகள்!
சைக்கிள் பெடலில் அல்ல !!
என் இதயத்தில்தான்!
அதிகமாய் பதிந்திருக்கிறதப்பா..!
வேலைசெய்து!
பணம் அனுப்புகிற வயசில்!
நான் வேலை தேட ...!
வேலைதேடிய எனக்கு!
நீ பணம் அனுப்பினாயே ?!
இப்படி!
இதய தேசத்தில்!
உன் நினைவுகள்!
நிறைய இருந்தாலும் ...!
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!!
உன் பாக்கெட்டில்!
பணம் திருடியது!
நான்தான் என தெரிந்தும் ...!
இதுவரை!
எனைக் காட்டிக்கொடுக்காமல்!
பணம் தொலைந்ததாய்!
நீ செய்த பாசாங்கு!!
இதுபோல!
கடிதம் சுமக்காத!
பல நிகழ்வுகள்!
உன்னுள்ளும் .........!
என்னுள்ளும் .........!
நிச்சயமாய் சொல்கிறேனப்பா!!
உன்!
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்!
நான் இப்பொழுது ·!
பாரானில் இருக்கமாட்டேன்!
ப்ளாட்பாரத்தில்தான்...!
ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா ?!
வீடு...!
நிலம் ...!
பணம் ...!
சொந்தம்...!
உலகக் காரணிகள்!
எவையும்!
நம்மைப் பிரித்துவிடக்கூடாது!
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!!
!
-ரசிகவ் ஞானியார்
-- !
K.Gnaniyar!
Dubai