செஞ்சோலைக் குஞ்சுகளே - கனிகை

Photo by engin akyurt on Unsplash

மனம் நிறைய மலர்கள்!
நெஞ்சுருக அஞ்சலிகள்!
கண்ணிரண்டும் குளங்கள்!
குமுறுகின்ற உணர்வுகள்!
யாவும் இருந்தென்ன?!
நீங்கள் இன்றில்லை !
எம்மிளம் சிட்டுக்களே!!
பல்லி சொல்லவில்லை!
பூனை போகவில்லை!
ஆந்தை அலறவில்லை!
ஆட்காட்டியும் சத்தமில்லை!
காகம் கூட உணர்த்தவில்லை!
யார் நினைத்தார்-பேடிகள்!
பிஞ்சுகளைச் சிதைப்பாரென்று!
உறுதிமிக்க உறவுகளே-எம்!
பட்டாம்பூச்சிக்கனவுகளே !
உங்கள் வாழ்வினில்!
எத்தனை நினைப்பிருக்கும்!
விடுதலைத்துடிப்பிருக்கும்!
கல்வித்திறனிருக்கும்!
பாசக்கரமிருக்கும்!
அத்தனையும் ஒடித்தாரோ?!
ஆறுதல் என்பது எமக்குக் !
கற்பனையாய் போயிற்று !
மீண்டும் மீண்டும் முயல்கின்றோம்!
இழப்பின் சோகம்- நெஞ்சில்!
குற்றிய முள்ளாய் வலிக்கிறது!
மழலைகள் மாதர் வயோதிபர் ஏதிலிகள்!
பேணிச்செய்வதே போர்தர்மம்-இதுதானோ!
பாதகர் புத்ததர்மம்?!
கேவலம் பிள்ளைகளே!
உமைக் குதறியது அவர்க்குக்!
கேவலம் பிள்ளைகளே!
மௌனித்துப் போன ஐரோப்பிய நாடுகளே!!
உல்லாசப் பயணிகள் அங்கிருந்தால்!
அலறிக் கதைத்திருப்பீர்!
ஆதரவற்ற தழிழரென்றே!
புறம் தள்ள நினைத்தீரோ?!
உமையொத்தே உயிரழிக்கும்!
அரசென்று இணை சேர்ந்தீரோ?!
கதறித்தான் நிற்கின்றோம்-ஆனால்!
சாம்பலிலும் உயிர்க்கின்ற பூக்கள்நாம்!
தழுவி வரும் மென்காற்றில்-எம்!
அஞ்சலிகள் நிறைந்திருக்கும்!
சாந்தியடைக குஞ்சுகளே!!
நாட்கள் எப்போதும்- இப்படிக்!
கலங்காது.!
கனிகை
கனிகை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.