தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நானும் நானும்

நீதீ
கண்ணாடி முன்னே!
கன நேர கண்சிமிட்டலில்!
நானும் நானும்!
என் எதிரே யாரினும்!
இருப்பது என்னவோ!
நானும் நானும்!
ஞாபக மறதியாய்!
நுடந்து செல்லும் போது!
நானும் நானும்!
ஞாயிறு வந்துவிட்டால்!
ஞாபகபடுத்தும்!
நானும் நானும்!
சில சமயம்!
தனிமையில் இருக்கையிலே!
நானும் நானும்!
!
இரவு நேர!
கனவுலாவில்!
நானும் நானும்!
இதயங்களை!
தேடும் பணியில்!
நானும் நானும்!
இறந்த காலத்தை!
இருக்கி பிடிப்பதிலோ!
நானும் ...!
கவி ஆக்கம்: நீ “தீ”

எங்கிருந்து வருகிறது.. காரணமில்லாமல்

சு.திரிவேணி, கொடுமுடி
01.!
எங்கிருந்து வருகிறது? !
---------------------------!
இந்த முறையும் !
நிகழ்ந்தே விட்டது. !
எப்படியோ ஒவ்வொரு !
தடவையும் தவறி விடுகிறது !
என் மகனுக்கான முதல் பரிசு. !
குழந்தை முகம் வாடிப் போகுமென்ற !
கவலை முள்ளாய்க் கீறியது. !
ஆதரவாய் அணைத்துக் !
கொள்ள வேண்டும். !
பூவை வருடும் தென்றலாய் !
மெல்லத் தலையைக் !
கோதி விட வேண்டும். !
நீ நன்றாகத்தான் செய்தாய் என !
மனம் தேற்ற வேண்டும். !
இரண்டாம் பரிசுக் கோப்பைதான் !
அழகாய் இருப்பதாகச் !
சத்தியம் செய்ய வேண்டும். !
சூழ்ந்து வரும் மலர் முகங்களில் !
என் மழலை முகம் தென்படுகிறதா !
எனத் தேடத் துவங்கினேன். !
சமாதான ஒத்திகைகளோடு !
தேடிய நான் திகைத்துப் போனேன்! !
இயல்பாய் அவன் தேற்றிக் கொண்டிருந்தான் !
மூன்றாம் பரிசுக் குழந்தையை!! !
குழந்தமையில் பெருந்தன்மையும் !
பெரியவர்களிடையே குழந்தைதன்மையும் !
எங்கிருந்து தான் வருகிறது??? !
!
02.!
காரணமில்லாமல்... !
---------------------------!
எப்போதும் வருவதில்லை மழை !
மழை வேண்டும் உழவர்கள் !
மனம் கனத்துக் !
காத்திருக்கும் சூழல்களில் !
அதன் சுவடே தெரிவதில்லை. !
நனையக் காத்திருக்கும்!
சிறுவர்கள் விருப்பமும் !
அதற்கொரு பொருட்டல்ல. !
தாகம் தீர்க்கும் நதி !
தாகம் கொண்ட பொழுதுகளில் !
அது தலை காட்டுவதுமில்லை. !
கட்டிடக் கூட்டுக்குள் !
பதுங்கித் திட்டும் !
மனிதர்களைக் காணவும் !
சாக்கடையோடு இணைந்து !
சாலைகளில் ஓடவும்!
கனத்த மழைக்கோட்டுகளில்!
ஒலியெழுப்பவுமே !
ஆசைகொண்டு எப்போதும் !
நகரங்களில் தன்னைக் !
கொட்டித் தீர்க்கிறது !
காரணமுமில்லாமல் !
காரியமுமில்லாமல்

காயமான கவிதைகள்

கீர்த்தி
கவிதையால்!
கையை சுட்டுக் கொண்டேன்.!
காயங்கள்!
ஆறாது வலித்தன.!
எழுத்துகள்!
சில எடுத்து மருந்திட்டேன்.!
கற்பனைகளோ!
கண்ணீராய் எட்டி பார்த்தன.!
ஒவ்வொரு கணமும்!
காயங்கள் கரைந்தே வந்தன.!
இருந்த கைகளில்!
இருப்பு ஏதுமின்றி முழுதும் கரைந்தன.!
இப்பொழுது!
காயமுமில்லை.!
கவிதைகளுமில்லை.!
கைகளுமில்லை

நீ நிழலாய்ப் படரும் வெளிச்சம்

எம்.ரிஷான் ஷெரீப்
விடிகாலைத் தூக்கம்,!
மழைநேரத் தேனீர்,!
பிடித்த செடியின் புதுமொட்டு,!
புதுப்புத்தகக் காகிதவாசனை,!
இமைதடவும் மயிலிறகு!
மேலுரசிடச் சிலிர்க்கும் !
ரோமமெனச் சுகமாய்!
எனை ஏதும் செய்யவிடாமல்!
நீ வந்து நிரப்புகிறாய்!
எனதான பொழுதுகளை !!
மூங்கில்களுரசிடக் !
குழலிசை கேட்குமோ...?!
உன் மொழியில்!
தினம்தினமொரு இசை!
எனைக்கேட்கச் செய்கிறாய் !!
புருவம் தடவப் பூஞ்சிரிப்பு!
தெற்றுப் பல்காட்டி மின்னும் ;!
சிவந்த அழகுக் கன்னமென்!
அழுத்தமான முத்தத்தில்!
நிறம் மாறி நீலம்பூக்கும் !!
விழிகளிரண்டும் மின்மினிப்பூச்சிகளென!
விழித்திருந்து அலைபாய!
என் தூக்கம் கரைத்துக்குடித்து!
நீ புதிதாய் தினம் வளர்வாய் ;!
உன்னிமையில் துயில் வளர்க்க!
என் பொறுமை சோதிப்பாய் !!
எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்!
அத்தனை பதற்றங்களையும்!
நானறியச் செய்தாயென்!
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்!
நீ வந்து அழுதாய் ;!
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...!!
-- எம். ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை.!
---------------------------------- !
M.Rishan Shareef,!
Hemmathagama road,!
Mawanella,!
Srilanka

சொல்ல.. நீ-நான்-அவர்கள்.. மனித நேயம்

மன்னூரான்
சொல்ல முடிந்திட்ட சொப்பனங்கள்.. நீ - நான் - அவர்கள்.. மனித நேயம் அது எங்கே?!
01.!
சொல்ல முடிந்திட்ட சொப்பனங்கள்!
-------------------------------------!
கண்களை மூடி நான்!
கட்டிலில் சாய்ந்திட!
கனவுகள் கோடியென்!
காலடி தேடும்.!
என்னவோ அறியேன்!
என் கனவில் மட்டும்!
எவரெவரோ வருவர்!
எங்கெங்கோ திரிவர்.!
ஆண்களும் வருவர்!
பெண்களும் வருவர்!
அர்த்தமில்லாமல் !
ஏதேதோ உரைப்பர்.!
ஏதும் பகராமல் !
என்பாட்டில் கிடக்கும்!
என்னையும் தம்முடன்!
எங்கெங்கோ அழைப்பர்.!
அண்மைக் காலமாய்!
அடியேன் கனவில்!
பெண்மைச் சாதிக்கே!
பெரும்பங்கு உண்டு.!
கறுப்புடை அணிந்தொரு!
காரிகை வந்தாள்!
பொறுப்புடன் ஏதேதோ!
புத்தியும் சொன்னாள்.!
மதிமுகம் கொண்டொரு!
மங்கை வந்தாள் - நான்!
மகிழ்வொடு நகைக்கையில்!
மாயமாய் ஆனாள்.!
வாழ்க்கை வாழத்தான்,!
வாழ்வோம் வா என்று!
வசனம் பேசினாள்!
வனிதையொருத்தி.!
எல்லாம் மாயை,!
இறப்பே உண்மை!
இரைந்து மறைந்தாள்!
இன்னொருத்தி.!
காதல் உறவது!
கன்னியமானது!
கட்டியம் கூறினாள்!
கோதையொருத்தி.!
காதல் என்பது !
கண்கட்டு வித்தை!
போதம் உரைத்தாள்!
பேதையொருத்தி.!
பாச பந்தங்கள்!
பலம் மிகக் கொண்டவை!
நேசம் விதைத்தாள்!
நங்கையொருத்தி.!
வேசத்தின் மறுபெயர்!
பாசம் என்று!
விளக்கம் தந்தாள்!
வேறொருத்தி.!
எதைத்தான் ஏற்பது!
எதை நான் மறுப்பது!
என் நிலை!
எனக்கே புரியவில்லை.!
இதுபிழை இதுசரி!
இப்படித்தான் என!
எடுத்துச் சொல்லவும்!
எவருமில்லை.!
நிஜ வாழ்க்கையில்!
நிம்மதி இழந்தவர்!
கனவினை யாசித்துக்!
கண்ணயர்வர்.!
கனவே கலகத்தின் !
கருவென்றானால்!
கதியற்ற மானுடர்!
எங்கு செல்வர்?!
02.!
நீ - நான் - அவர்கள்!
----------------------------!
கரைதொடும் அலைகளாய்!
அடிக்கடி என்!
மனதைத் தொட்ட வண்ணம்!
உன் நினைவுகள்!!
விட்டுப்போன அலையின்!
ஈர ஸ்பரிசத்தை!
சுமந்தபடி காத்திருக்கும்!
கடற்கரை மணலாய்!
நான்!!
அலைக்கும் கரைக்கும்!
நடக்குமிந்த ஊடலை!
வேடிக்கை பார்த்தபடி!
காற்றுவாங்கும் மனிதர்களாய்!
இந்த சமூகம்!!
!
03.!
மனித நேயம் அது எங்கே?!
---------------------------------------!
மனித நேயம் இங்கே!
மரித்துப் போனதோ?!
கால்நடை வேட்டைக்கே - அன்று!
கட்டுப்பாடு இருந்தது.!
மனித வேட்டைகூட!
மரபாகிவிட்டபோது...!
பெற்ற தாயின் அரவணைப்பில்!
பேதமின்றித் தான் வளர்ந்து!
உற்ற ஒரு நிலையடைந்து!
உறவுகளை உதறுகையில்...!
மாதா பிதா குரு!
மாண்பு மரியாதை நீங்கி!
வேதாந்தம் பேசுகின்ற!
வீணர்கள் வாழுகையில்...!
சட்டம் செய்யாததை!
தருமம் சாதிக்குமென்பர்.!
தாரணியில் தருமமது!
தலை கவிழ்ந்து நிற்கையிலே...!
”சாதி இரண்டொழிய!
வேறில்லை” என்ற ஔவை!
நீதிமொழி எங்கெங்கோ!
நிலைதவறிப் போனபின்னே...!
அஞ்ஞானம் போக்கிப் பல!
ஆக்கங்கள் கொண்டுவந்த!
விஞ்ஞானம் அழிவினுக்கே!
விதைவிதைக்கும் வேளையிலே...!
தகுதிகள் பெற்ற பல!
தக்கோரும் கதியின்றி!
அகதிகளாய் எங்கெங்கோ!
அவலமுற்று வாடுகையில்...!
சீதனக் கொடுமையினால்!
சீரழியும் மாதர் குலம்!
நீதி கேட்டு நாளுமிங்கே!
நெட்டுயிர்த்து ஏங்குகையில்...!
கொலை கொள்ளை கற்பழிப்பு!
குடி சூது குற்றங்கள்!
வலைபோல மாந்தர் தம்மை!
வளைத்திழுத்து வீழ்த்துகையில்...!
மனித நேயம் இங்கே!
மரித்துப் போனதோ?

இடைவெளி.. டீன் ஏஜ் கிறுக்கல்கள்

கி.அற்புதராஜு
01.!
இடைவெளி !
-------------------!
வெளியூரில் உள்ள !
கல்லூரியில் !
மகனை சேர்த்து !
ஹாஸ்டலில் !
விட்டு வந்த !
தாய், தந்தை... !
!
வீட்டுக்கு திரும்பியவுடன் !
நடந்தவற்றை தந்தை !
தன்னுடன் பணிபுரியும் !
அலுவலக நண்பருக்கு !
விலாவாரியாக !
விவரித்துக்கொண்டிருந்தார் !
தொலைபேசியில்... !
!
பேரனைப் பற்றிய !
உரையாடலை !
வராந்தாவிலிருந்த !
தாத்தாவும், பாட்டியும் !
கேட்டுக் கொண்டிருந்தனர்..! !
!
02.!
டீன் ஏஜ் கிறுக்கல்கள் !
---------------------------!
மின்சார ரயிலில் !
மார்கர் பேனாவால் !
கல்லூரி மாணவர்கள் !
எழுதியிருந்த .... !
!
Ranjith weds Nithya !
Vimal in love with Madhu !
Ravi loves Jamuna !
. !
. !
. !
வாசகங்களை வாசித்துத் !
தனது டீன் ஏஜ் கனவுகளுக்குள் !
நுழைந்த நடு வயதுக்காரர் !
கடைசி வரியைப் படிக்கும் போது !
அடி வயிறுப் பற்றி எரிந்தது .... !
!
தனது மகள் பெயரும் !
மகள் படிக்கும் கல்லூரியின் !
பெயரும் வாசகத்தின் !
கடைசியில்

மற்றுமொரு

அறிவுநிதி
ஒரு முடிவு பேரிரைச்சலாகிறது!
பிரிவு அல்லாது காலத்தின் கருணை!
சத்தங்களால் காயப்பட்டும்!
மெதுவாக படர்கிறது யாருமறியாத!
மௌனம்!
வாழ்க்கையை புறம் தள்ளி!
புன்னகையும் விசாரிப்புகளும்!
தொலைகிறது!
சோகங்களை விழுங்கிக்கொண்டு!
பரிச்சயமாகிறது இறப்பின் ஒத்திகை!
மலர்வளையங்கள் போதிக்கின்றன!
ஆத்மார்த்தங்களை!
இறந்தவனின் முன் காலம்!
நிதர்சனமாகிறது!
மரணம் நினைவுகூறுகிறது!
மற்றுமொரு மரணத்தை.!
கவி ஆக்கம்: “அறிவுநிதி”!
தொடர்புக்கு: 006590054078

நம் கவிதைகள்

புதியமாதவி, மும்பை
எப்போதும் கவிதை !
உன் வசம் !
எப்போதாவது !
கவிதை !
என் கண்வசம் !
தீயைத் தொட்டவுடன் !
துடிப்பது மட்டுமே !
என் கவிதை !
தென்றலின் !
தீண்டலில்கூட !
உன் கவிதை !
எல்லாமே !
கவிதையாகிப்போனது !
உனக்கு !
எதுவுமே !
கவிதையாகாமல் !
நழுவுகின்றது !
எனக்கு !
கவிதை !
உனக்கு !
விருந்து !
கவிதை !
எனக்குப் !
பசி !
கவிதை !
உனக்கு !
காதல் !
கவிதை !
எனக்கு !
போர்க்களம் !
நீ !
உன் !
கவிதைகளில் !
வாழ்ந்துகொண்டிருக்கின்றாய் !
நான் !
என் !
கவிதைகளுக்காகப் !
போராடிக்கொண்டிருக்கின்றேன். !
எல்லாமே !
கவிதையாகிப்போனது !
உனக்கு !
எதுவுமே !
கவிதையாகாமல் !
...... !
எனக்கு.. !
*** !
உன் !
கவிதைமகளுக்கு !
தாய்ப்பாலின் !
தாலாட்டு !
என் !
கவிதைமகளுக்கு !
கள்ளிப்பாலின் !
தொட்டில் !
!
உன் !
கவிதைவானில் !
கோடானக்கோடி !
நட்சத்திரக் காதலிகள் !
என் !
கவிதைமண்ணில் !
ஒரேஒரு !
சூரியன் !
!
உன் !
காதல் கவிதைகள் !
உன் !
ஆண்மைக்கு !
அங்கீகாரம் !
என் !
காதல்கவிதைகள் !
என் !
பெண்மைக்கு !
கேள்விக்குறி !
நீ !
எழுதினால்தான் !
கவிதை !
நான் !
எழுதாமல் !
இருப்பது !
எல்லாமே !
கவிதை. !
***** !
உன் கவிதை !
காதலின் !
அணைப்பு !
என் கவிதை !
தாய்மையின் !
பிரசவம் !
நினைக்கும் !
போதெல்லாம் !
காதலிக்க !
உன்னால் முடியும் !
நினைத்தவுடன் !
பிரசவிக்க !
என்னால் முடியுமா? !
******* !
நீ !
பனித்துளியை !
சேறாக்கி !
விளையாடுகின்றாய் !
நான் !
பசிச்சேற்றில் !
சோறாக்கி !
விளையாடுகின்றேன் !
***** !
கண்ணன் !
உன் !
காதலின் சின்னம் !
கண்ணன் !
என் !
காதலின் அவமானம் !
********* !
!
நீ !
கண்ணகிக்கு !
கோவில் கட்டுகின்றாய் !
நான் !
கண்ணகிக்கு !
வீடு கட்டுகின்றேன் !
***** !
தீயில் !
நீ !
குளிர்காய்கின்றாய் !
தீயில் !
நான் !
அடுப்பெரிக்கின்றேன் !
தண்ணீரில் !
நீ !
நீந்துகின்றாய் !
தாகத்தில் !
நான் !
வாடுகின்றேன் !
ஆகாயம் !
உன் !
கோட்டை !
ஆகாயம் !
என் !
கூரை !
மண் !
உன் !
சொத்து !
மண் !
என் !
வயல் !
காற்று !
உன் தோட்டத்தின் !
தென்றல் !
காற்று !
என் குடிசையில் !
புயல் !
!
நீ !
கவிதைகளைப் !
படைக்கும் !
பிரம்மா !
நான் !
கவிதைகளைத் !
தேடும் !
மனிதன். !
நீ !
படைத்துக்கொண்டே !
இருக்கின்றாய்.. !
படைப்பின் !
பிரம்மத்தைப் !
படைக்கும்வரை !
உன் !
கைகள் !
ஓயப்போவதில்லை !
!
பிரம்மனின் !
படைப்புகளை !
வாழவைக்கும்வரை !
என் போராட்டம் !
ஓயப்போவதில்லை. !
******* !
உன் !
கவிதைப்புறா !
சிறகடிக்கின்றது. !
என் !
கவிதைக்குயில் !
காக்கையின் !
கூட்டிலிருந்து !
கண்விழிக்கப்போகும் !
தன் குஞ்சுகளுக்காக !
காத்திருக்கின்றது. !
நாளை... !
புதுக்கவிதையின் !
விடியலில் !
என் !
குஞ்சுகளின் !
குயில்தோப்பு... !
!
- அன்புடன், !
புதியமாதவி, !
மும்பை 400 042

மணல் நினைவுகள்

கொ.மா.கோ.இளங்கோ
திருப்தியளிக்கத்தான் !
செய்கிறது !
புது வீடு கட்டும் சூழல் !
சிவப்பு,சிவப்பாய் !
உழைப்பின் இரத்த ஓட்டத்தை !
நினைவில் கொணரும் !
ஒட்டு மொத்த !
செங்கற்களில் நடு நடுவே !
பக்குவமாய் பிடித்தத்தில் !
பற்றிக் கொள்கிறது !
நிம்மதியின் சாந்து கலவை! !
வெளிப்புற பூச்சுக்கென !
கொட்டி வைத்த ஆற்று மணலில் !
'கிச்சா''கிச்சா' தாம்பூலம் !
விளையாடி மகிழ்கிறது !
கூழாங் கற்கள் தொய்வின் துணையில் !
இன்னமும் உயிர்பித்திருக்கும் !
மீன் குஞ்சொன்றின் நினைவு

இதயம் எனும் குழந்தை

அன்பின் நாயகன்
ஆசைப்பட்ட பொருளுக்காக!
அடம்பிடித்து!
அழும்!
குழந்தையைப் போலத்தான்!
என் இதயமும்.. !
உன் காதலுக்காக!
ஏங்கி அழும்!
அந்த குழந்தையிடம்!
என்ன சொல்ல?..!
சொல்..!
என்னயிரே