தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தாமரைக்குளத்தில் இறந்த மனிதனும்

கருணாகரன்
தாமரைக்குளத்தில் இறந்த மனிதனும் பூத்த தாமரைகளும்!
!
தாமப்பா குளிக்கப்போனபோதும்!
தாமரைக்குளம்!
பூத்திருந்தது!
மருத மரநிழலில்!
தண்ணீரும் படு குளிராக இருந்தது!
பகல் முழுதும்!
தாங்கொணாச் சூரியன்!
நெருப்பையவிழ்த்தபோதும்!
தாமரைக்குளத்தில்!
தண்ணீர் குளிராகத்தானிருந்தது.!
தாமப்பாவுக்கும்!
தாமரைக்குளத்துக்கும்!
கோடி சம்மந்தம்!
எந்த ரகசியங்களையும்!
தாமரைக்குளத்திடம்!
மறைத்ததில்லை!
அவர்!
முப்பது வருசமாய்!
காலைக்குளியல்!
மாலை நீராடல்!
கண்ணன் கோயில் தீர்த்தத்தில்!
கரையெல்லாம் தாமரைகள்!
பூக்களும் மொட்டுகளுமாய்!
தாமப்பாவோடு!
ஒரு பின்னேரம்!
தாமப்பா மட்டும்!
தாமரைக்குளத்தில்!
குளம் அவரைக் கொன்று விட்டதா!
தாமப்பா குளத்தில் மூழ்கி இறந்தாரா!
- கருணாகரன்

இன்றைய பள்ளிகூடங்கள்

இரா. மேகநாதன்
மூட்டையாய் மூட்டையாய் பாடங்கள்!
மற்றவர்கள் சிந்தித்து சென்ற சிந்தனைகள்!
பலப்பலப் புது படங்கள்!
தகவல் கூடங்கள்!
பணம் தரும் பாடங்கள்!
பயன் தருன் என்றென்னி!
பசிலன் சிங்கங்கள்!
பயீன்று பயீன்று சலிப்படைந்த பாடங்கள்.!
கற்கபனைகும் சுயசிந்ச்தனைக்கும்!
இடம் தரா இடங்கள்.!
மாற்று சிந்தனை!
தவரேன நினைக்கின்ற பாடத்திட்டங்கள்!
கற்றல் கற்றல் போய்!
தினித்தல் தினித்தல்கள்!
கேள்விகள் போய்!
பதில்கள் மட்டுமே வேண்டும் இட்ங்கள்!
'கல்வி' போய்!
தாகவல்களின் உறைவிடங்கள்!
ஹைரியம் தொலைந்து!
வீரியம் உழர்ந்து!
நிமிர்ந்து நிற்ப்பது போய்!
குனிந்து குனிந்து!
குழைந்து !
கூனிகுருகவைக்க்கும் இடங்கள்.!
!
-இரா. மேகநாதன்!
விரிவுரையாளர்-மொழிக்கல்வி!
மெழிகள் துறை!
தேசிய கல்வி ராய்ச்சி பயிர்ச்சி நிறுவனம்(NCERT) !
புது தில்லி 100 0016

மண்

காருண்யன்
ஈழம் எங்கள் கனவு தேசம் !
பொன் விழைக்கும் செம்மண் பூமி !
கருப்பனீர் சுவையோடொக்கும் !
கூவல்கள் நிறைந்த நாட்டின் !
முடிசூடா மன்னர் நாங்கள் !
ஆனாலும்.................. !
நாமங்கு ஆண்டு சுகித்திருக்க !
குறு நிலமும் இருந்ததில்லை !
குழி நிலமும் வாய்த்ததில்லை !
முன்றிலில் தோடை பலா !
கிணற்றண்டை இளங்கமுகு !
வேலியில் நெடும் பனைகள் !
வட மேற்கில் அரிநெல்லி !
பின் வளவில் கப்பல் வாழை !
காய்த்ததென்ற கதையில்லை !
சம்பாக்கதிர் விளையும் பசும் !
புலங்கள் பார்க்க சுகம் !
புகையிலை குடை விரிக்கும் - அதுவும் !
ஆண்டான் 'தறை’ யிலல்லோ !
புசித்தோர் புசித்திருக்க !
பசித்தோர் பசித்திருந்தோம் !
மாங்குயில் கூவுஞ்சோலை !
கனவுகளில் மட்டும்வரும் !
கமக்காரன் காணி பின்னால் !
புறம்போக்கில் ஒரு குடிசை !
!
வீறோடு வெள்ளெருக்கு !
சடைத்திருக்கும் நன்னிலத்தில் !
முன்னாலே பிரண்டைக்கொடி !
பின்பக்கம் விடத்தல் மண்டி !
நீக்கமறத் தரை யேகம் !
பூத்திருக்கும் நெருஞ்சிப் பூக்கள் !
நுனிவிரலில் சம நிலையில் !
பார்த்து நடக்க வேணும் !
கப்பல் கட்டி ஆண்டோமில்லை !
கால்நடைகள் கொண்டோமில்லை !
நினைத்த நேரந்தான் குளிக்க !
கிணறுதானும் இருந்ததில்லை !
தரிசினில்தான் பிழைத்தோம் !
வளமெல்லாம் வாழ்ந்தோர் கையில் !
இப்பரதேசி நாடகன்று !
ஆண்டுகள் பலவுமாச்சு............ !
இருந்தும் என் சிந்தையிலே !
எதற்கின்னும் புதைந்திருக்கு !
அப்பொட்டல் கரம்பன் புலம் ? !
- காருண்யன்

தீட்டு

சூர்யா
தாழம்பூக்களிலெழுந்தாடும் அழகுஅசைவுகள்!
நாகங்களையும் வசீகரித்துவிடுகின்றன.!
மகரந்தகளில் பாம்புகள் மயங்கும் அகாலத்தில்!
தேன்வண்டுகள் துளிவிஷத்தை அருந்தலாம்.!
கவர்ச்சிகளிலெழும் ரசனைகளுக்கென்று!
அருவருப்பு எல்லைகள் குறிக்கப்படவில்லை இன்னும்.!
வெள்ளைப்பன்றிக்கு மூக்குத்தி அணிதலையும்!
கருவாட்டுக்கூடைக்கு முல்லைச்சரம் புனைதலையும்!
சிந்தை புதுமையென அலங்கரிக்கையில்!
சேற்றில் புரண்டெழும் தலைவீங்கி சர்ப்பங்கள்!
கங்கை பிரவாகிப்பைத் தீட்டு என்றழைக்கக்கூடும்.!
!
- சூர்யா

விதிமுறைகள் வீழ்த்தப்பட்டன

முத்தாசென் கண்ணா
ஒரு ராத்திரி!
ஒரு கோடி இரவுகளாய்!
கடினப்பட்டு என்னைக் கடந்தது!
மெல்லமாய் விழித்துப் பார்த்தேன்!
விடியல் தூங்கிக் கொண்டிருந்தது!
இதயம் விதிமுறை மீறி!
வலது பக்கமாய்த் துடித்தது!
சுவர்க் கடிகாரம் மட்டும்!
எனக்குத் துணையாய் விழித்திருந்தது!
ஆனால் ஒவ்வொரு முறை!
நகர்ந்தபோதும்!
அதன் நொடி முள் என்னைக் குத்தியது!
பிறந்தபோது என் தாய் கண்ட வலி!
இறப்பன்று நான் காணப்போகும் வலி!
ஒன்றாய் இரண்டையும் சேர்த்து!
அனுபவித்துக் கொண்டிருந்தது!
என் நெஞ்சம்!
காலையில் சந்திக்கப் போகும்!
கணக்குப் பரிட்சையை எண்ணி

பார்வை

பா.அகிலன்
மெல்லிய சாம்பற்படிவாய் !
கொட்டுகிறது மழை... !
வயல், !
ஓரங்களில் தயிர்வளை !
பறக்கிற கொக்கு, குடையுடன் மனிதரும் !
மெல்லிய சாம்பலின் படிவாய்... !
காற்று வீச்சில் !
வெண் முத்தென முகம் நனைத்த நீரொடு !
அழுவது உன் குரலா... ? !
போ !
போவதுமில்லை... !
பின்னர் வா !
வருதலுமில்லை... !
கொட்டுகிறது மழை !
மெல்லிய சாம்பற் படிவாய்... !
பா.அகிலன் !
1990 !
தயிர்வளை- மழைக்காலத்தில் தெருவோரம் வளரும் சிறு பூக்களை உடைய பூண்டு

மறக்க முடியவில்லை

சீலன் நவமணி
பத்து வருடம் ஆகியும் பாழாய் போன!
காதலின் பழைய நினைவுகளை!
அன்று நீ சொன்ன காதல்!
எனக்கு தெயரியவில்லை!
இன்று என் நெஞ்சம் சொல்லும்!
காதல் உனக்கு புரியவில்லை!
அன்று நீ காதல் என்றாய் உன் உணர்வை!
இன்று என் உணர்வை நீ!
காமம் என்கிறாய்.!
நியாயம் தான்,!
பலமுறை ஈமெயில் செய்தோம்!
சிலமுறை போனில் பேசினோம்!
ஆனால்!
ஒருமுறை தானே சந்தித்தோம்!
நீ மட்டும் இதை வாசித்தால்!
என்னை ஒரு முறை மட்டும்!
பேச விடு!
கொட்டி விடுகிறேன்!
என் ஆதங்கத்தை!
குற்ற உணர்வை!
ஏன் காதலை கூட!
நீ அதை குப்பையில் போட்டாலும் போடு!
அதில் தப்பே இல்லை!
நீயோ இன்று பூமியோடு!
நான் இன்று தண்ணீரோடு!
இதை புரிந்து கொண்டால் போன் போடு. !
-சீலன் நவமணி

நான் ஏற்கனவே செயித்துவிட்டேன்

துரை.ந.உ
ஓட்டு எண்ணும் முன்னரே!
ஒருதுளி சந்தேகமின்றி!
எனதுதொகுதித் தேர்தலில்!
ஏற்கனவே செயித்துவிட்டேன்!
சனநாயகத்தில் மக்கள்தாம்!
முடிவுக்காகக் காத்திக்கவேண்டும்!
பணநாயகத்தில் வீட்டு வாசலில்!
முடிவு எனக்காகக் காத்திருக்கும்!
எனது கட்சிக்காரருக்கும்!
எதிர் கட்சிக்காரருக்கும்!
என்கணக்கில் பாதியும்!
காந்திகணக்கில் மீதியுமாய்!
தேர்தல்நிதியாகப் பணத்தை!
தண்ணீராய் இறைத்திருக்கிறேன்!
எனது பணத்துடன்!
எனது பணம் மோதி!
எனது பணம் செயித்து!
என்னையும் செயிக்கவைக்கும்!
எட்டாவது அதிசயமிதை!
எங்கேனும் கண்டதுண்டா !!
எவர் செயித்தாலும் கிரீடம்!
என்தலைக்கு வந்து சேரும் !!!
செயித்த அணியிலேயே இருந்தவன்!
செயிக்கும் அணியில்தான் இருக்கிறேன்!
செயிக்கப்போகும் அணியில்தான் இருப்பேன்

தழைப்பாய் நீயும் ஓர் நாள்

சுப்பிரமணியன் ரமேஸ்
அன்றலர்ந்த தோட்டத்துப் பூவின் மணம்!
விடியற்காலை காவிரி ஆற்றின் குளிர் சிலிர்ப்பு!
முற்கால சோழ காற்றூளிகளின் விசாலம்!
மோனத்தில் தவித்திடும் கருங்குயிலின் கவிதை!
கனவுகளை விரித்திடும் வயல்வெளி விண்மீன்கள் எனக்கு!
இசைவட்டில் தாலாட்டும் ”வெஸ்ட் லைப்”!
வேக ரயில் பயணத்தில் சாய்ந்து கொள்ள அம்மாவின் தோள்!
திவலைகள் படர்ந்த குளிர் கதவில் பிம்பம்!
பூச்சாடிகளில் துலிப் மலர்களின் புன்னகை!
துல்லிய நீலப் படுகைகளில் பவழப் பாறைகள் உனக்கு!
சினேகத்தை உணர்ந்துகொள்ள!
மெல்ல இறுகிக் கொள் உனக்குள் என்னை!
மொழிகளின் சிடுக்குகளிலிருந்து விடுபட்டு!
குறியீடுகள் உருகி விலகும்!
ஆனந்த மௌனத்தில்!
ஆழ்ந்து கரைந்து உயிர்ப்புருவோம்!
!
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨!
!
பனிசிகரத்தின் ஆழ்குகையிலிருந்து!
வசீகரத்தின் மர்ம அழைப்பென!
கானக குரலொன்று நகர்ந்து வருகிறது!
மெல்லிய காற்றின் சுகந்தத்தில்!
கால்கள் பொடிந்து மணலாகி!
திசைகளின் வெளிகள்!
கரைந்து கொண்டிருக்கின்றன!
தருணமில்லை!
விடுபட்டுப் பறக்க வேண்டும்!
அவநம்பிக்கை தொனிக்கும்!
உந்தன் விழிகளில் கவிழ்ந்திருக்க விருப்பமில்லை!
உன் காருண்யத்தால் மட்டுமே!
விரியக் காத்திருக்கும்!
வனங்களை மலரச்செய்ய!
வாய்க்கும் தருணத்தில்!
பொன்னொளிரும்!
சிகரத்தின் அழைப்பால்!
தழைப்பாய் நீயும் ஓர் நாள்

தீயாக நீ

புதியமாதவி, மும்பை
புதியமாதவி. !
* !
நாடக மேடையில் !
அச்சம் தரும் !
அய்யனார் வேடத்தில் !
அரிவாளூடன் ஆடும் !
உன் வேஷம் !
எப்போதும் !
புன்னகைத் தவழும் !
உன் முகத்துடன் ஓட்டாமலேயே !
அழிந்துப்போகிறது !
என் விழித்திரைகளில். !
* !
மழையில் ஒளிரும் !
சிற்பங்கள் !
தூறலில் அழியும் !
ஓவியங்களுக்காய் !
வருந்ததுவதில்லை. !
உன்னைப் போலவே. !
* !
கழிப்பறைக்கும் !
கட்டிலுக்கும் !
நடுவில் என் பயணம். !
சன்னல் கம்பிகளில் !
தொங்குத்தோட்டமாய் !
என் வானம். !
எப்போதாவது !
நலம் விசாரிக்கும் !
உறவுகள் !
எப்போதும் !
எனக்காக காத்திருக்கும் !
மாத்திரைகள் !
செத்துப்போன கனவுகளுடன் !
பாடை ஏறாமல் !
படுத்திருக்கிறது !
மூத்திரவாடையுடன் !
என்னுடல். !
தீயாக !
நீ மட்டுமே !
என்னைத் தீண்ட வேண்டும் !
என்பதால்