தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

போய்வா 2007, வா வா 2008

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
கனத்த நினைவுகள் ஒருபுறம்!
கலைந்த கனவுகள் மறுபுறம்!
சுவைத்த நிகழ்வுகள் ஒருபுறம்!
சுரந்த உணர்வுகள் மறுபுறம்!
தயங்கித் தயங்கி மறையுது!
இரண்டாயிரத்தி ஏழு!
உலுப்பிய நிகழ்வுகள் அனைத்தும்!
உலுக்குது நெஞ்சை வாட்டியே!
வருடிய நாட்களின் வாஞ்சை!
வருத்துது ஆண்டின் மறைவால்!
ஆண்டொன்று போனால் !
அத்தோடு வயதொன்றும் போகும்!
மகிழ்ந்திடும் நெஞ்சு எமை!
வாட்டிய கணங்களின் மறைவால்!
வாடிடும் இதயம் நெஞ்சினில்!
விளைந்த இன்பம் முடிந்ததினால்!
ஆண்டின் முடிவு தந்திடும் பாடம்!
அவனியில் இன்பமும் துன்பமும்!
அடைவது சகஜம் என்பதுவே!
கண்ணீர் காயாத முகங்கள்!
கண்ணீரைக் காணாத முகங்கள்!
விரும்பியோ விரும்பாமலோ!
விலகுது இரண்டாயிரத்து ஏழு!
எத்தனை பேரின் வாழ்வில்!
எத்தகைய மாற்றங்கள் கொடுத்தது!
அத்தனை வலுவுள்ள காலங்கள்!
அதற்கும் காண்கிறோம் முடிவுதனை!
போ .. போ.. இரண்டாயிரத்து ஏழு!
பொக்கிஷமாய் ஓரிடத்தில் வைப்பேன்!
நீ தந்த மகிழ்வான கணங்களை!
கரைந்திடும் மேகம் பொழியும்!
கனத்த மழையில் கரைத்திடுவேன்!
உன்னால் விழைந்த சோகமிகு!
உள்ளத்து நிகழ்வுகளை!
அதோ ...கதவோரத்தில் ஒரு காலை!
முன்வைத்து புன்னகைக்கிறது!
இரண்டாயிரத்து எட்டு என்முன்னே.....!
நினைவுகளைச் சுரப்பாயோ நீ!
கனவுகளைக் கலைப்பாயோ!
காத்திருந்த உள்ளங்களை!
கண்ணீரில் கரைப்பாயோ!
எதுவந்த போதும் துணிவாக!
உன் வரவை எதிர்பார்த்து!
உலகமே காத்திருக்கிறது!
விதையாகிப் போன உயிர்கள்!
விலையாக அமைதியை கேட்கிறார்!
வினையான வாழ்வுக்கு உன் வரவால்!
விடிவொன்றைக் கேட்கிறார் என்!
உழைப்பாளித் தோழர்கள்!
காசுப்பெட்டிக்குள் தன்னுடைய!
கல்யாண வாழ்வைத் தேடும் சகோதரிகள்!
காத்திருக்கிறார்கள் உன் வரவால்!
செழிக்கப் போகும் தம்வாழ்வையெண்ணி!
இரண்டாயிரத்து எட்டே இன்னும்!
இரண்டடி எடுத்து உள்ளே வா .....!
!
தெருவோரம் நடைபாதைக் கட்டிலில்!
தூங்கும் அந்தச் சிறுவனுக்காய்!
பள்ளிக் கதவுகளைத் திறந்துவிடு!
நாளைய உலகுக்கு பாவம் அவன் தான்!
பாதை காட்டப்போகும் தலைவன்!
அடுக்குமாளிகைக் கட்டிடத்தில்!
வீசியெறியும் எச்சிலைக்காய்!
போட்டிபோடும் உயிர்கள் வாழும்!
அந்தக் குடிசை வீடுகளுக்குள்!
ஒரு மண்குப்பி விளக்காவது ...!
எரியட்டுமே... கொஞ்சமாய்!
நம்பிக்கையை மட்டுமாவது கொண்டு!
உள்ளே வந்து விடு!
ஆமாம்....!
இரண்டாயிரத்து எட்டே .....!
உனது மூத்த சகோதரம் இரண்டாயிரத்து ஏழு!
உலகில் விட்டுச் சென்ற எதிர்பார்புக்காளால்!
ஏங்கி நிற்கும் மக்கள் கூட்டம்!
உன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்!
காத்துக் கொண்டே.....!
நீயென்ன !
கொண்டு வந்திருக்கிறாய்?!
நம்பிக்கையா ? நப்பாசையா ?!
நயவஞ்சகமா ?!
பாவம் அவர்கள் களைத்துப் போய்!
தூங்கி விட்டார்கள்...!
வரும்போது!
மெதுவாய் வா... ஏனெனில்...!
அவர்கள் கொஞ்ச நேரம்!
தூங்கட்டுமே

யார் நீ

லலிதாசுந்தர்
இடியானாலும் மழையானாலும்!
சுட்டெரிக்கும் சூரிய!
வெயிலானாலும் !
உன்னுடன் நான் இருப்பேன்.!
நீயின்றி நானில்லை!
நானின்றி எப்பொருளும் இல்லை.!
ஒட்டிபிறவா இரட்டையர் நாம்.!
சாதி மத பேதமில்லை!
கருப்பு வெள்ளை நிற வேற்றுமில்லை!
ஏழை பணக்காரன் வித்தியாசமில்லை!
யாவருடனும் நான் இருப்பேன்.!
மரணத்தின் வாசலிலும் உன்னுடன்!
உடன்கட்டை ஏறிடுவேன்.!
நானே உன் நிழல்.!
!
-லலிதாசுந்தர்.!
(குறிப்பு: நிழலுடன் ஓர் உரையாடல் )

மழை வெள்ளம்

கணபதி
வற்றாத கடல் சிற்றாறாய்!
ஆனதொரு காட்சி உண்டா?!
மூன்றில் இரண்டு நீருக்கென‌!
தாரை வார்த்த பின்னும்!
தரையை கையகப் படுத்தலாமோ!!
கண் பட்ட இடமெல்லாம்!
வெள்ளம் தொட்ட நீர் நிலை,!
ஊரும் பயிரும் நீருக்குள்.!
நட்ட பயிரும் மனித உயிரும்!
நட்டப்பட்டது.!
விளை நிலமெல்லம் வீடானதால்!
எழுந்து வந்த வெள்ளம்!
ஊருக்குள் ஒண்டிக்கொண்டது.!
விரட்டப்பட்ட மக்களோ!
கண்ணீருடன் தண்ணீரில்.!
குடித்துவிட்டு தெருவில் கிடக்கும்!
மனிதர்களைப்போல்!
நீயும் குடித்து கிட‌ப்ப‌து முறையோ!!
இந்திய‌ நாடாளும‌ன்ற‌ம்!
முட‌க்க‌ப் ப‌டுவ‌துபோல்!
க‌ல்விக்கூட‌ங்க‌ளை முட‌க்குகிறாயே!
நீ எதிர‌ணியா? இல்லை நீதித் த‌வ‌றியதா?!
இருக்கும் குடிசையை இடித்துவிட்டு!
கான்கிரீட் வீடு க‌ட்டித்த‌ருவ‌தாய்!
த‌மிழ‌க‌ அர‌சு சொன்ன‌தினால்!
நீ இருந்த‌ குடிசைக‌ளை இடித்தழித்தாயோ!!
இருண்ட‌ மேக‌ங்க‌ள்!
பாரி வ‌ள்ள‌லாய் வாரிக்கொடுத்தாலும்!
துய‌ர‌ங்க‌ள் தொட‌ர்வ‌தால்!
அன்றாட‌ங்காய்ச்சிக‌ளின் ப‌ட்டினியால்!
தூற்றல் தான் காணும்

செய்யுங்கள்! பெறுவீர்கள்

வேதா. இலங்காதிலகம்
வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள்!!
விமர்சியுங்கள் விமர்சிக்கப்படுவீர்கள்!!
மதியுங்கள் மதிக்கப்படுவீர்கள்!!
அதியன்பை, அக்கறையைக் கொடுங்கள்!!
அதையே திரும்பப் பெறுவீர்கள்!!
வாய்மலர்ந்து வாழ்த்தாத ஒருவர்!
ஆய்தலுடன் விமர்சிக்காத அன்பர்!
வாய்நிறைந்த வாழ்த்தை, விமர்சனத்தை!
கொய்திட விரும்புவது, மனிதரை!
மெய்யாக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.!
வெளியாகும் ஆக்கங்களை வாசிக்கும்!
வேலையற்றோரின் விமர்சனமென்ற!
வெகுளியான சிந்தனை வீச்சை!
வெளித்தள்ளுங்கள்! உள்ளே ஆழமான!
அர்த்தமுடை நட்பும் இருக்கலாம்

கதை சொல்லிகள்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
எப்பொழுதுமே உணர்வுகளற்ற உருவங்களின்!
மாயத் தோற்றங்களில் மறைந்து கொண்டே!
உரையாட வேண்டியதிருக்கிறது கதை சொல்லிகளிடம்!
நயமாய் சேகரப்படுத்தப்படும் வார்த்தை நயங்களில்!
இலகுவாய் அமிழ்த்து விடுகிறார்கள் தங்கள் பாத்திரங்களை!
கரு சேருமிடங்களின் மையப் புள்ளிகளையும்!
அக் கருவைப் பேசும் உள்ளடக்கிகளையும்!
சுலபமாய் அவர்கள் கணித்து விடுவதும்!
தோற்ற மெலிவும் வாட்டப் பொலிவுமாயொருத்தனை!
அசகாயச் சூரனாய்ச் சித்தரிப்பதும்!
கதையின் நிகழாக்கத் தோற்றங்களிலிருந்து!
போற்றச் செய்கின்றன அக்கதை சொல்லிகளை!
மேற்காய் உதிக்கும் சூரியனை!
உச்சிப் பகலில் சில விண்மீண்களை!
மார்கழிப் புயலை!
ஆடிப் பனியை!
இப்படியான எல்லா அடிப்படையில்லா மூலக் கூறுகளும்!
அபரிமிகு சாத்தியங்களாகிப் போகின்றன அவர்களுக்கு மட்டும்!
சில வேளை அவர்களுடன் கதை கேட்டுக் கிடக்கையில்!
திடீரென்று கக்கங்களில் முளைத்த சிறகுகளில்!
பறந்து விடும் அவர்களைத் தேட வேண்டியதிருக்கிறது!
அவர்களில் ஆயப்படும் நிஜங்களைப் போன்றே

வானம் உமிழ்கிறது..காதல் கொண்ட

கிருஷ்ணா, யாழ்ப்பாணம்
பேதையின் பாடல்!
01.!
வானம் உமிழ்கிறது..!
---------------------------!
யாரோ முத்துக்களை கொட்டுகிறார்கள்!
அவை எல்லாம் கட்டிவைத்தஅணைகளுக்குள்!
ஆயிரம் ஆயிரமாய் விழுந்தவைகள் ஒன்றாகி!
தாகம் தீர்க்க ஒரு சங்கமிப்பு!
ஆனந்தமானது எம் வயல்களும் வாழ்வுகளும்!
திடீரென!
இடைவிடாத!
வருகை!
அமிழ்ந்து போனது வீதிகளும்!
நகரங்களும்!
அரவணைத்து வர வேற்ற!
பலர்!
ஆத்திரத்துடன் பேசுகிறார்கள்!
போதும்!
காணும்!
வானம் நிறுத்தட்டும் என்று!
02.!
காதல் கொண்ட பேதையின் பாடல்!
-------------------------------------------!
எவனோ ஒருவன் பாடல் கேட்டு!
மயன்கிநின்றேனே -அவன்!
காதல் என்ற மொழியிட்க்காக!
கனவு கண்டேனே!
காகிதமெல்லாம் அக் கணவன் பெயராய்!
கருத்தில் கொண்டேனே!
நன் கட்டிடும் துணைவனை மாற்றி விட்டதால் -மனம்!
கதறி நின்றேனே!
பெண்ணாய் பிறந்த காரணத்தினால் -என்!
பேச்சை கேட்பார் யார் ?!
தன்னலம் கருதி என் மனம் புரியா!
முடிவுகள் செய்தார் பார்!
ஆயிரம் கனவுகள் மனதில் விதைத்தேன்!
ஆசை பயிர் வளத்தேன்!
அன்னையும் அப்பனும் அதிலே புகுந்து!
அத்தனையும் பிடுங்கி விட்டார்!
கட்டி அணைத்திட வந்தவனை!
என் மனம் ஏற்க தயன்குதடி-ஆனால்!
தட்டிவிட்டால் அவன் சிந்தை கலங்குமே!
அவனுக்காக நன் வாழ்வது என்ன பிழை?!
கன்னியர் பேச்சு எப்போது தான் கேட்கும்!
கற்றறிந்த இவ் உலகத்திலே

தியாகம்

ஆனந்தன்
வியர்வையை இரத்தமென சிந்தி !
உடலை வில்லாய் வளைத்து !
நிலம் உழுதவர் சிலர் !
உலி அடிக்கும் கனத்தில !
விரலை நசுக்கிக்கொள்ளும் !
தட்டர்கள் சிலர் !
தன் பசி அடைக்க !
மாட்டின் பசியடைத்த !
மயக்கத்தில் சிலர் !
உண்மையில் !
தலைக்கு மேல் வேலை !
செய்தவர்கள் சிலர் !
மாடு கட்டி அதே !
இடத்தில் சுற்றி சுற்றி !
செக்கடித்தவர்கள் சிலர் !
அங்கங்கு சிலர் சேர்ந்து !
பலராகக் கூடி இருந்தனர் !
அந்த மாலைப்பொழுதில் !
நான்கு பல்லாங்குத் தாண்ட !
மிதி வண்டி மிதித்து !
வந்து சேர்ந்தார் !
அடுத்த கிராமத்து !
ஆசிரியர் !
அங்கு நடக்கப் போவது !
மாலை வகுப்புக்கள் !
முதியோருக்காக !
அரசியல் வாதிகள் !
படிக்காவிட்டால் என்ன !
நம் கிராமமாவது படித்திருக்கட்டுமே... !
நூறு சதவிகித கல்விக்கு !
என அவர் சொல்லக் !
கேட்டிருக்கிறேன் !
தன் கடமை செய்ய !
கையூட்டுக் கேட்கும் !
காலத்தில் !
தன் நேரத்தை !
செலவு செய்து !
பலனையும் எதிர்பாராமல் !
தியாகத்தை கடமையாக !
செய்பவரை எதில் சேர்ப்பது ?

காத்திருப்பின் நிழல்

கருணாகரன்
உருகிச்சிதறும் நிமிடத்தின்!
ஒவ்வொருதுளியும் சேமிக்கின்றன!
நம்முகத்தின் பிரதிபலிப்புகளை.!
பகிர்ந்து கொள்ள முடியா!
முத்தத்தின் ஈரம்!
வானவில்லாகி மிதக்கிறது!
இந்த மாலையில்.!
நீ பருக மறுத்த பானத்தை!
முழுவதுமாக!
நான் பருகுகிறேன்!
கசப்போடும் இனிமையோடும்.!
திரைகளின் பின்னுள்ள!
பள்ளத்தாக்குகளில்!
மாயப்பறவையின் வினோதம் நிகழ்கிறது.!
இன்னும் காலியாகாத பானம்!
மீதமிருக்கிறது!
உன்னை நினைவூட்டியபடி;!
எப்போதும் பேசாமல் சேமித்திருக்கும்!
எனக்கான உன் சொற்களின் ரகசியத்தில்!
திரண்ட மகரந்தத்தில்!
அமர்ந்திருக்கிறதென் வண்ணத்துப்பூச்சி.!
மலையின் உச்சிச் சிகரத்தில்!
மீதிப்பானத்தோடு!
ஒற்றைச் சிறகில் நடனமிடுகிறது!
ஞாபகங்களும் கனவும்; நிரம்பிய!
என் மனம்;!
!
காத்திருப்பின் நிழல்!
வீதியாய் நீண்டு கடலாகி!
வானத்தில் சேர்ந்து விரிகிறது.!
நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசைக்கப்பால்!
சுழன்று கொண்டிருக்கும்!
முடிவிலிப்புள்ளியின் காய்ந்த மலர்!
இன்னும் வற்றாத ஞாபகங்களின் ரேகைகளோடு!
படபடக்கிறது ரகசியங்களுக்காக.!
இப்போது!
காலியாகிவிட்டது பானம்.!
வானவில்லில் தெரியும்!
அன்பறிந்த சொல்லை!
மொழிபெயர்க்க முடியுமா உன்னால்?!
ஆயின்!
என் காய்ந்த மலரிலும்!
நடனமிட்டுக்கொள்ளும்!
வாசனையையும் தேன்துளியையும்!
அறி.!
- கருணாகரன்

சிறகுகள் தீய்ந்த துயரம்

சித்தாந்தன்
கரிக்குருவி!
நெடுமரத்தில் உட்கார்ந்திருக்கிறாய்!
உன் பஞ்சுச் சிறகுகள் உதிர்ந்த!
ஒரு பெரும் உலர்ந்த பொழுதின் பின்!
வெள்ளிகள் வற்றிய!
இருண்ட வானத்தில்!
நிறமறியாத கண்களால்!
எறிந்துகொண்டிருக்கிறாய்!
திசைகளின் மீது குருட்டுப்பாடலை!
ஊழித்தீ மூண்ட காட்டின் வெம்மையில்!
உதிர்ந்த உன் சிறகுகளையள்ளி!
காற்றுத்திசைகளில் கொட்டிற்று!
கதறிய உன் குரல்!
வானம் முழுவதிலும் மோதிக் கரைந்தது!
சொற்களற்ற இ;ருள் வெளியில்!
தனித்துப்போனாய் நீ!
கரிக்குருவி!
அலை மடிப்புக்களில் அழிவுற்றது!
உன் நிழல்!
என் கண்ணாடிச் சட்டத்தில்!
காற்றுவாய் ஊதிச் சடசடக்கிறது!
உன் பஞ்சுச் சிறகுகள்!
ஞாபகங்கள் வறளாத!
வெள்ளையொளிப் பொழுதுகளில்!
காடுகளின் விசித்திரங்களில்!
ஒலித்தது உன் குரல்!
சொற்களில் உடைவுகளேது!
நதி நீரில் பிரதிபலித்துக்கொண்டிருந்தது!
முதிய உன் மனம்!
கரிக்குருவி!
உடைந்து சிதறிய வார்த்தைகளோடு!
வந்து நிற்கிறாய் ஜன்னலில்!
என் மனதை நொருக்கியபடி!
உன் சிறகடிப்பில் விரிந்த உலகம்!
சூனியமாகிவிட்டது இப்பொழுது!
பூச்சியக்கணங்களின் மேலே!
மூங்கில்த்தீ மூழ்கிறது!
கரிக்குருவி!
எப்படி மீட்கப்போகிறாய்!
நொருங்குண்ட என் மனதிலிருந்து என்னை!
உதிர்ந்த பஞ்சுச் சிறகுகளிடையிருந்து!
வனப்பொளிரும் உன்னை!
-சித்தாந்தன்

விலகல்!

கருணாகரன்
இன்றும் நான் பேச நினைத்தேன்!
வார்த்தைகள் சலிப்பூட்டின!
ஒளி அதிக சங்கடத்தைத் தந்தபோது!
வெளியே!
சுவரினோரம்!
நிழலும் இருளும் கலந்திருந்த !
அறையில் ஒதுங்கினேன்!
உள்ளே!
இசையின் உக்கிரமும்!
நடனத்தின் ஆவேசமும்!
சுவர்களிலும் நிழல்களிலும் பிரதிபலித்தன!
யாரும் என்னைக் கவனிக்கவில்லை.