தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சர்ப்பங்கள்.. ஒருவனின்.. ஊது குழல்கள்

ரோஷான் ஏ.ஜிப்ரி
சர்ப்பங்கள் நெளியும் மண்!..ஒருவனின் கடைசிப் பக்கத்திலிருந்து...ஊது குழல்கள்!
01.!
சர்ப்பங்கள் நெளியும் மண்!!
----------------------------------!
பட்டங்கள் ஏற்றி தும்பிகள் பறந்து!
இறகுலரா எங்கள்!
பட்டாம் பூச்சிகள் பாடி,ஆடி!
மகிழ்ந்துலவிய மலர் வெளிகள்!
புடையன்கள் உலவும் புதராய்,!
கறையான் களிடமிருந்து!
காப்பாற்றிய காணி,பூமிகள் எல்லாம்!
இன்று சர்ப்பங்களின் புற்றாய்!
யாராலும் எளிதில்!
விளங்கிக் கொள்ள ஏதுவற்ற முறையில்!
சமாதான பட்சிகளின் வாழ்வின் மிச்சம்!
பீதிகளால் மொழி பிரித்திருக்கின்றன!
சுதந்திரத்தை அச்சப் படுத்தியவாறு!
விரிபுடையன்கள்!
மலைப் பாம்புகளின் சாயலில்!
மண் பற்றி,விஷத்தை பீய்ச்சியபடி!
வழி நெடுகிலும்.................,!
புழுதி உறுஞ்சி நெளிகின்றன!
முறையற்று பிறப்பித்த!
“ஹறாம்”குட்டிகளாய்!
மசூதி,மாட்டிறைச்சிக் கடை,!
மையவாடி,தெருக்கோடி என..!
எங்கும் இனி..இப்படித்தான்!
பாம்புகள் ஊரும் ஊருராய்..!
நாட்காலிகளை நகர விடாமல்!
தன் இருப்பை தக்க வைப்பதில்!
குறியென இருக்கும் ஒரு!
சமுகத்தின் குரல்கள் மௌனித்து!
பிணமாய் இருக்கும் நாட்களில்!!
02.!
ஒருவனின் கடைசிப் பக்கத்திலிருந்து...!
--------------------------------------------!
நெஞ்சுரங் கொண்டு நிலம் பற்றி!
நிமிர்ந்து நடந்தவன் நீள் துயிலில்!
அவனின் பிறப்பிலிருந்து மொழிபிரித்த!
வாழ்வின் கடைசிப் பக்கத்தை இன்று!
வாசித்து முடித்திருந்தது காலம்!
பரீட்சயங்களை மீறிய பரபரப்பாய்!
பெரும் பரப்பை தன் பிடிக்குள் வைத்து!
கோலோச்சியவனால்!
மரணத்தை எதிர்கொள்ள முடியவில்லை!
அது வென்றுபோனது அவனை வீழ்த்தி!
இடுவம்புகளால் வளர்ந்த நெடு வாழை!
கொழுகொம்பு இன்றி குலை முறிந்து!
ஆறடிக்குள் அடங்கும் கூடாய் இந்நொடி!
ஒரு காலத்தில் குகைகள் ஏகி!
சிங்கத்தை கர்ஜித்து சீண்டிப் பார்த்தவன்!
இன்று ஈயை விரட்ட இயலா ஜடம்!
உருகி,உருகி கரைந்தன அவனை சுற்றியிருந்த!
மலைகளும்,கூழாங்கற்களும்!
ஊர் குருவிகள் அவனால் நேர்ந்த கதிகளின்!
இலாப,நஷ்ட்டங்கள் பற்றி சிலாகித்தன!
பேசாதிருந்தவனும் தன்பங்குக்கு!
உடைந்து போய் நிற்கிறான் கால்மாட்டில்!
அவனின் கடைசிப் பக்கத்திலிருந்து!
பின் குறிப்புகள் தலை நீட்ட!
நிஷப்தம் கலைய வேண்டும் என்றே!
பிரளையம் முடக்கி விடப் படுகின்றது!
அவன் உள்ளவரை!
தெவதூதர்களை போலும்,!
தாசில் தாரர்கள் போலும் இருந்தவர்கள்!
ஆனால்;இப்போது!
மேல் சொன்ன எதிலும் இல்லாத!
“களிசடைகளாய்”வசைகளால் வாழ்த்த!
அவர்களின் முழுப் பக்கங்களும் விரிகின்றன!
சொத்தை பங்கிடும் பட்சா தாபங்களில்!!
ஏலவே தெரிந்திருப்பின் அவன்!
எப்போதோ இறந்திருக்கலாம்!!!
03.!
ஊது குழல்கள்!
------------------------!
ஊது குழல்களினுடே!
யாரோ ஒருவனின்!
ஏவலிலிருந்துதான் புறப்படுகிறது!
அமைதியை குலைக்கும் மகுடி!
இதிலிருந்து அறிய முடிகிறது!
பாம்புகளுக்கு உரித்தான!
பாடுபொருள் கொண்டு!
மான்களை வேட்டையாட!
நாணேற்றப் படுகிறதென்று!
பரீட்சய முகத்தோடு!
காவிகளுக்குள் பேயாய்!
அலைகின்ற ஆவியை!
விசுவாசமுள்ள மிருகங்களுக்கு தெரியும்!
ஆயினும்;!
வால் குழைத்து!
கிடக்க வேண்டியிருக்கிறது!
அவன் வீசும் எச்சில்களுக்காக

காணிக்கை

சஞ்சீவி சிவகுமார்
தூறல் மழையில்!
உன் நினைவுகளில்!
நனைந்தபடி!
இதயம்!
ஈரமாயிருந்தது.!
ஒரு பிறந்த நாளுக்கு!
முதல்நாள்!
கடைத்தெருவுக்கு!
அழைத்தாய்.!
அடுத்த பிறந்த நாளில்!
எங்கிருப்பேனோ!
என்ற!
கண்கலங்கலுடன்….!
நின்று!
நிமிர்ந்து!
வழியனுப்ப!
முடியாதபடி!
சமூக மேடையில்!
நான்!
இறுக்கிப் போர்த்திய!
கேளரவ வேடம்.!
அன்று!
உன்னை நான்!
முழுமையாக நிராகரித்த!
அந்த பஸ் கோல்டும்!
கருக்கலில்!
யாரும் கவனிக்காதபடி!
காட்டிவிட்டுப் போன!
என் நிஜமும்!
நிட்சயம் உனக்கு!
ஞாபகமிருக்கும்!
நீ!
எதிர்பார்த்ததற்கு மாறாக!
என் இருட்டு!
நிஜம்!
உனக்கு!
அதிசயமாக இருந்திருக்கலாம்.!
ஆயினும்அதுவே நிஜம்.!
தோழி!
உன் ஆசிர்வதிக்கப்பட்ட!
அன்புக்காக!
நான்!
அழவேண்டிய!
ஒரு நாள் வரும்!
அப்போது நீ!
என் கைகளுக்கு மட்டுமல்ல!
கண்களுக்கும்!
எட்டாத தூரத்திருப்பாய்!
நினைவுகளில்!
தூர்ந்து போகாத!
இதே வாசத்துடன்!
அப்போதும்!
உன் வாசல் கதவுகள்!
எனக்காகத் திறந்திருக்கும்!
ஆனால்!
நான் மட்டும்!
வரமுடியாதவனாய்!
வீதியில் நிற்பேன்.!
இந்திர ஜாலப் பூவாகும்!
உன்!
புன்னகைக் கண்களை!
பிரியாவிடைக்கான!
கறுப்பு ரோஜாவாக!
வாங்கிக் கொள்கிறேன்.!
இது காவல் கோடுகளால்!
மறிக்கப்பட்ட!
நம் அன்புக்கு!
காணிக்கையாகட்டும்

அதிகாரங்களும் அப்பாவிகளும்

செம்மதி
வெடிகுண்டின் ஓசைகள்!
இடியின் ஓசையாய்!
குண்டுச்சிதறல்கள்!
மழைத்துளிகளாய் போயிற்று!
மூலைக்கு மூலை!
முளைக்கின்றகோயில்களில்!
வேளைக்கு வேளை!
பூசைகள் நடக்குது!
ஒரு வேளை உணவே!
உருப்படியாய் இன்றி!
எலும்பும் தோலுமாய்!
பல சனங்கள்!
அலைந்துதிரியுது!
அயலில் கேட்கும்!
நட்டுவ ஒலிக்கு!
பக்கவத்தியமாய்!
வேட்டொலிகள் கெட்கிறது!
அதனால்!
செத்தவர் வீட்டு!
மரண ஓலத்திற்கு!
ஒப்புப் பாடுவதாய்!
நாதஸ்வர இசை!
இதமாய் இசைக்கிறது!
ஒவ்வோரு காலையும்!
விடிகின்றபோது!
வீதிகளில் கிடக்கும்!
அப்பாவிப்பிணங்களின் நடுவே!
பயணங்கள் நடக்கின்றது!
அங்கும் இங்கும்!
மக்களை ஏற்றி!
அலைந்துதிரியும்!
பேரூந்துகள்குண்டுகளால்!
சல்லடையாக்கப்பட்டு!
சிதைந்து கிடக்கிறது!
உயிரற்றுக்கிடக்கும்தாயில்!
பால் தேடுகின்றது!
குழந்தை!
சிறு குழந்தை!
பல்குழல் பீரங்கிக்கு!
பயங்கரவாதியாக!
தெரிந்ததனால்!
அளுகின்றாள் தாய்!
கையில் தசைத்துண்டுகளுடன்!
வெடிகுண்டால்!
வயிறு பிளந்து!
இரத்தத்தில் மிதக்கிநாள்!
கற்பிணி ஒருத்தி மூச்சிழந்து!
வெடிகுண்டால்!
பிரசவிக்கப்பட்ட குழந்தை!
என்னசெய்யும்??!
மக்கள் பிரதிநிதிகள்!
செல்லாக் காசாய்!
செயலிழந்து போயினர்!
பாவம் அவர்கள்!
அதிகம் வாய்திறந்தால்!
உயிரிழந்தும் போகலாம்!
முன்நோரைப் போல!
மானிடக்குருதியில்!
பயணிக்கிறதுமாங்காய்த் தீவு!
அதிகாரங்களின்இயக்கம்!
சூடான இரத்தத்தில்!
!
-செம்மதி!
மின்னஞ்சல்

கல்லாகிப் போன கவிஞன்

அல் அமீனுல் தஸ்னீன்
உயிருள்ள அரூபம் !
நீண்ட எதிர்பார்ப்பின் தாகத்தை !
உணர்வெங்கும் மழையாக்கி!
இரவுகளில் குடை பிடிக்க!
கண்களை நோக்க சக்தியற்ற மனதிடம் !
யுத்தமின்றி சரணடைகையில் !
தேம்பியழுகிறது அனாதையாய் !
ஒற்றை முத்தம்.!
குற்றுக்கோலமெங்கும் பதிலற்ற ம் இட்டு !
கைசேதப்பட்டவனிடம் ஏந்தப்படுகிறது!
கைவேண்டி ஓர் வரம்.!
அழுகையை அரவணைக்க !
அன்பை மொழியாக்க !
கல்லாகிப் போன கவிஞனை !
மீண்டும் செதுக்குகையில்!
கவனம் !
உளிகளிலொட்டும் மென்னீரம்!
யார் மீதும் தெறிக்கப் படாதிருக்கட்டும்.!

தூக்கத்துக்கு கனவே சாட்சி

சேயோன் யாழ்வேந்தன்
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி!
!
தூக்கம்!
தினமும் வருகிறது!
இரவைப்போல்!
தூக்கம்!
படுக்கையைப்போல்!
இருக்கிறது!
நான் அதில்!
கனவாய்ப் புரள்கிறேன்!
தூக்கம்!
கரும்பச்சைப் புல்வெளியாய்!
படர்கிறது!
புல் நுனிகளில்!
அங்கங்கே!
பனித்துளிகளாய்!
கனவுகள் அமர்கின்றன!
தூக்கம்!
இருண்ட!
மா மரமாய் எழுகிறது!
மின்மினிகளாய்!
கனவுகள்!
அதன் கிளைகளில் அமர்கின்றன!
நள்ளிரவு வானமாய்!
தூக்கம் இருள!
விண்மீன்களாய்!
கனவுகள் பளிச்சிடுகின்றன!
தூக்கம்!
கருமுகிலாய்க் கூடுகிறது!
கனவு!
மின்னலாய்த் தெறிக்கிறது!
தூக்கம்!
உன்னைப்போல்!
என்னிடமிருந்து!
விலகியே இருக்கிறது!
கனவு!
என்னைப்போல்!
என்னுடனே இருக்கிறது!
தூக்கம்!
மேல் போர்வை தேட!
கனவு!
என்னையே துகிலுரிக்கிறது!
தூக்கம்!
என்னைப் படுக்கையில்!
வீழ்த்தப் பார்க்கிறது!
கனவு!
என்னை!
வானில் பறக்கவைக்கிறது!
இருளறைக்குள்!
தூக்கம்!
கருக்கொள்கிறது!
பின்!
கனவுக் குழந்தைகளைப்!
பிரசவிக்கிறது!
தூக்கம்!
நிழலாய் வருகிறது!
அந்த நிழலுக்கே!
காரணமான வெளிச்சமாய்!
கனவு மேலே இருக்கிறது!
கனவுதான்!
நான் தூங்கினேன்!
என்பதை நினைவூட்டுகிறது!
தூக்கம்!
இருளடர்ந்த கானகத்துக்குள்!
என்னை இட்டுச் செல்கிறது!
ஆங்கே!
நெடுமரமாய் நிற்கும்!
கனவுகள் மீதே!
மோதி விழுகிறேன்!
தூக்கத்திலேயே!
நான் செத்துவிடவில்லை என்பதை!
கனவுகள் மூலமே!
உறுதிசெய்துகொள்கிறேன் -!
கனவுகள் இல்லாத தூக்கம்!
மரணம் மட்டும் தானே?!
தாயின் அணைப்பே!
என்னைத் தூங்கவைத்துவிடுகிறது!
அவள் தாலாட்டு!
என்னை விழிக்க வைக்கிறது!
நினைவு!
புகைப்படமாய்!
என் அழகைக் காட்டுகையில்!
கனவு!
எக்ஸ்-கதிர்ப் படமாய்!
என் உள் அசிங்கங்களைக் காட்டுகிறது!
கனவில்!
சிலப் போழ்தில்!
ஆள் மாறாமல்!
என் பால் மாறுகிறது!
மற்றைச் சில கணங்கள்!
உரு மாறாமல்!
என் திணை மாறுகிறது!
தூக்கம்!
எப்போதாவது!
தூக்கம் போல்!
வருகிறது!
ஆனால்!
கனவைப் போல்!
வெகுவிரைவில்!
கலைந்துவிடுகிறது

அடுப்பிலே போடப்பட்ட அமைதி

சித. அருணாசலம்
வானத்தில் சத்தம் கேட்டு!
மழை வரப் போகிறதென்று!
மனம் மகிழ்ந்துவிட முடியாது.!
இடி இடிக்கும், குண்டு மழை பொழிய.!
இனம் துடிக்கும், வேதனையை அறிய.!
பதுங்கிப் பாயும் கூட்டமொன்று!
பாதுகாப்பென்று நினைத்ததெல்லாம்!
பாதியிலே போன கதையானது.!
பார்த்துக் காத்தவர்களுகே இன்று!
பாதுகாப்பு தேவைப்படுகிறது!
புல்லுருவிகளின் புகலிடமும்,!
புகுந்து விளையாடும்!
நரிகளின் நயவஞ்சகமும்!
தமிழின் செல்வர்களைத்!
தலை தெறிக்க விரட்டுகிறது.!
உழுது விவசாயம் பார்ப்பதெல்லாம்!
உறக்கத்தில் வரும் கனவாகிப் போனது.!
பாசத்தை மனங்களில் பதிப்பதற்கு!
பக்கத்தில் உறவைத் தேடவேண்டியுள்ளது.!
பாதத்தை மண்ணில் பதிப்பதற்குப்!
பயப்பட வேண்டிய நிலைமையானது.!
அமைதியை அடுப்பிலே போட்டுவிட்டு,!
புறாவைப் பொசுக்கித் தின்றுவிட்டு,!
சமாதானப் பேச்சில்லை என்று!
சட்டையைத் தூக்கிவிடுவோ ரெல்லாம்!
அட்டையாக அரசு இயந்திரங்களில்!
ஒட்டிக் கொண்டிருக்கும் போது,!
மனிதாபிமானம் தழைத்திடுமா - அதில்!
மனித உரிமைகள் மலர்ந்திடுமா?!
-சித. அருணாசலம்

சதா மௌனம்

நவஜோதி ஜோகரட்னம்
சுழிப்புகள் படர்ந்த முகத்தால்!
நுகர்ந்து எழும்புகின்றது உலகம்!
இதற்குள்!
ஒரு குழந்தை போன்ற மனதை!
எப்படி திறந்து வைப்பது?!
இரும்பின் வாசனை படர்ந்து!
பேதங்கள் தொனித்து!
ஒரே இனத்துக்குள் நகைப்பு!
மயக்கமுறும் பகலில்!
மனிதனை நினைத்து!
கவிதை எழுதுகையில்!
கருமையிருள் கவ்விப்பிடிக்கிறது!
வஞ்சம் வைத்து!
ஆபாசங்களும்!
வெறுக்கின்ற முகங்களும்!
பொய்யாய் தொத்திக் கால்களோடும்!
அடுக்கப்படுகிறது ஒரு தவம்!
அடிக்கடி உடைமாற்றும்!
உலகைப் பார்த்து!
பேச வலுவற்ற ஊமையாய்!
சிரிக்க விளைகையில்!
வெட்கம் வருகிறது!
விரும்பாத ஒரு இயற்கைக்குள்!
பரவசங்கள் சிதறுகின்றது!
ஒரு தரமான உலகத்தை!
தேடி அலைகிறது என் மனம்!
சிரிப்பைப் பற்றியவளாய்!
சதா மௌனத்துடன்!
என் கண்கள!
பூமியெங்கும்!
தொங்குகிறது!!
15.8.2009

காலம் ஒரு கணந்தான்

ஜே.ஜுனைட், இலங்கை
மெழுகுவர்த்தியாய் !
உருகி !
வெளிச்சங்கொடு… !
“சோனாமாரி”யிலும் !
அணையாதே!!
மேக கணங்களாய் !
உழை… !
மழைத்துளிகளாக !
சேவை செய்…!
பூமியைப்போல !
பொறுத்திடு… !
அகழ்வாரை !
அன்போடு நோக்கு…!
மின்னலிடம் !
வெளிச்சங் கேள்… !
இடியைத் தாங்கும் !
இதயம் பெறு… !
காற்றிலே !
கீதம் அமை… !
கைப்பிடிக்குள் !
உலகம் எடு…!
கால வெள்ளத்தோடு !
கல்லாக உருளாதே, !
பாறையாய் நில்லு., !
சந்தோஷச் சிறகில் !
பறவையாய்ப் பற…!
பனித்துளியாய் வாழ !
இலையிடம் !
இடங்கேள்… !
சூரியன் சுட்டாலும் !
அழியாமல் வாழ்…!
தேனீயாய் சுற்று… !
எறும்பாய் உழை… !
தென்றலாய் வீசு… !
மழையாய்ப் பொழி…!!
02.!
கனவு !
-----------!
வெகு தூரப் பயணம்.. இது… !
ஆனால்!
ஒரே இடத்தில் இருந்து கொண்டே !
பயணம் செய்யும் வினோதம்!!
இங்கு தான் -!
கண்கள் இரண்டை மூடினாலும்!
பார்வை வரும்…!
ஒளி முதல்கள் இல்லாமலே!
வெளிச்சம் வரும்…!
வாய் கூடத் திறவாமலே!
வார்த்தை வரும்…!
ஓராயிரம் குண்டுகள் வெடிக்கும்!
ஆனால்!
ஒரு சலனமும் இருக்காது…!
ஒரு மொட்டு மலர்ந்து விட்டால்!
எத்தனை கோடி சப்தங்கள் இங்கே!!
தொலை தூரப் பயணம்.. இங்கே!
தொடுவானில்!
தொங்கு பாலம் தொங்கும்… அதிலே…!
“குதி”யிலாமல்!
உடல் மட்டும் நடைபோடும்…!!

நினைவும் இன்னொன்றும்

டீன்கபூர்
பச்சையாகவே என்னில் படர்ந்தவைகளில் !
பூச்சிகளும் புழுக்களும் பிடிக்கத் தொடங்கிவிட்டன.!
சிறு காற்றும்!
சில சில மனத்திற்குப் பிடித்த குருவிகளும்!
பச்சைகளில் தங்கிச் செல்லும் என எண்ணினேன்.!
மஞ்சள் நிறப் பூக்களும்!
அதில் புதுமைகளும் தோன்றும் என கனவினேன்.!
வெள்ளைகளெல்லாம் கறுப்பாகிவிட்டன.!
இருண்ட வானத்தை தடுக்கமுடியாததால்!
நிலத்தின் கண்முண்டை வீங்கத் தொடங்கிவிட்டது.!
எது பொய்!
எது மெய்!
என்ற கேள்வியில் நித்திரை தெரிகெட்டுப் போகிறது.!
இருளைக் கிழிக்கின்ற!
இருளைச் சபிக்கின்ற!
இருளை மெச்சுகின்ற தூக்கம்!
ஒரு காலத்தில் தொட்டிலின் சுதந்திரமாகக்கிடந்தது!
என்பது !
நினைவும் இன்னொன்றுமாகும்.!
-டீன்கபூர் !
இலங்கை

பூம்

சித்தார்த்
இதோ இன்னொன்று. !
மிக அருகில். !
மிக மிக அருகில். !
சதை கருகும் வாசம் தலையை கனக்கவைக்கிறது. !
மனதையும். !
இது நரகம். !
உண்மை. நாங்கள் குறிபார்க்கப் படவில்லை. !
விழும் குண்டுகள் எங்களுக்கானவை அல்ல. !
ஆனாலும் இது நரகம். !
நரகத்தில் மரணம் இல்லை. !
அங்கு வாழ்வும் இல்லை. !
நரகத்தில் இழப்பே மிஞ்சும். !
அல்லது இழப்பின் அச்சம். !
நாகரீகம் வளர்த்தவர்கள் நாங்கள். !
இன்று காட்டு மிராண்டிகளாய் சித்தரிக்கப்படுகிறோம். !
இருப்பவனுக்கு பதவி வேண்டும். !
வருபவனுக்கு பணம் வேண்டும். !
இடையில் உருளும் பகடைகள் நாங்கள். !
உண்மை. நாங்கள் குறிபார்க்கப் படவில்லை. !
விழும் குண்டுகள் எங்களுக்கானவை அல்ல. !
எங்கள் மேல் விழுந்தால் தான் என்ன? !
இரண்டு வரி மன்னிப்பும், !
ஒரு நிமிட மௌன அஞ்சலியும் (நேரம் இருந்தால்) !
செலுத்தினால் போகிறது. !
வாழ்க மானுடம்