தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மழை எனும் பெண்.. பொருள்வயிற் பிரிதல்

அ.ரோஸ்லின்
01.!
மழை எனும் பெண்!
------------------------------------!
மழை எனும் பெண்!
பொழிந்து கொண்டிருக்கிறாள்..!
அவள் மனதின்!
ஈரம் படிந்த பக்கங்கள்!
மழைத்துளிகளாகி!
மண்ணை நனைவிக்கின்றன..!
மழைத்துளிகளின்!
ஒவ்வொரு முகத்திலும்!
வலியும்,துயரும்!
படிந்திருக்கிறது.!
மரங்களற்ற!
வெளியான பூமியில்!
அளவின்றியும்,ஆக்ரோசமாயும்!
இழப்பினைக்கொட்டித்தீர்க்கிறது,,!
மழை.!
நகரெங்கும்!
நிராகரிப்பின்!
பாதைகளில்!
வழிந்தோடுகிறது..!
மழை நிறைவுற்ற!
தொடரும் நாட்களில்!
நகரெங்கும்!
தகித்துக்கிடக்கிறது!
நிலம்,,!
தணியாத வெம்மையின்!
வேட்கையுடன்,,!
!
02.!
பொருள்வயிற் பிரிதல்!
-----------------------------------------------!
மூங்கில்களுக்கிடையே!
வெளிச்சப்புள்ளியென நீ கடந்து சென்றதைக்!
கண்களில் நிறைத்து,!
முகிழ்த்து இயம்புகிறது என் திசைவழி,!
வயல் வெளியின் பசுமையொத்து,!
நிர்பந்தித்தலுடன் கிடக்கிறது என் மௌனம்,,!
பிரிவின் ரேகை படிந்த வார்த்தைகளை,!
நம் சேய்களோடு முணுமுணுத்தபடி,!
கடந்து செல்கிறது களிப்பற்ற பொழுது,,!
நீயற்ற நம் நிலத்தினை,!
நீயற்ற நம் நதியினை,!
நீயற்ற் நம் இரவினை,!
அழித்தொழிக்காமல் பிணைத்திருக்கிறது,!
எமக்கு உணவாகும் உன் பிரயாசத்தின் குருதி,,!
நீ கடந்து சென்ற ஸ்தலமெங்கும்,!
முளைத்தெழும்பிப் படர்கிறது!
உன் விளைவித்தல்,,!
ஒரு நீரோட்டத்தினைப்போல்!
நிகழ்ந்திருக்கும் உன் நகருதலில்,!
கானல் வரிப்பாடலொன்றை இசைக்கும்,,!
தன் மீட்பின் அனுமானங்களுடன்!
இடும்பை விழையாப் பறவை

கரு சொன்ன கதையிது

ஜெஸ்வந்தி
நானுதித்த நாள் முதலாய் !
வானிடிந்து போனதுபோல் !
உன்னுயிர் துடிப்பது -என் !
மனதுக்குக் கேட்கிறது. !
கண் விழிக்க முடியாமல் !
உன் தரிசனம் கிடையாமல் !
கறுப்பறை ஒன்றில் நான் !
சிறைப்பட்டுக் கிடக்கிறேன். !
அள்ளி அணைக்க மாட்டாயா? !
பிள்ளை நான் ஏங்குகையில் - உன் !
விம்மி அழும் சத்தம்- என்னை !
எம்பி எழ வைக்கிறது. !
நான் ஓடி வரவேண்டும். !
உன் கண்ணைத் துடைக்க வேண்டும். !
என் அம்மா முகம் பார்த்து !
நான் என்னை மறக்க வேண்டும். !
அன்று நீ டாக்டரிடம் !
சென்றபோது நானறிந்தேன் !
என் உயிரைப் பறிப்பதுதான் !
உன் உயிர்காக்க வழியென்று. !
பிள்ளை என்று நீயுருக !
நாளை எண்ணி நானிருக்க !
விதி செய்த சதியென்ன ? !
மதி கலங்கி மாய்கின்றேன். !
வாய் விட்டுச் சொல்லாமல் !
சேய் நான் இணங்குகிறேன். !
அம்மா நீ கலங்காதே! !
சும்மா எனைக் கலைத்துவிடு. !
இன்னொரு பிறப்பெடுத்து !
உன்வயிற்றில் உருவெடுப்பேன். !
இக்கணத்தில் இழந்ததையும் !
அப்போ நான் அனுபவிப்பேன்

அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம்

சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி
கரங்களைக் கோர்த்து இரு வரிசையில்!
முகத்துக்கு முகம் பார்த்தபடி!
ஏழெட்டு வீடுகளையேனும் ஒழுங்காகக்!
கட்டிட முடியாத நிலமொன்றில்!
நெருங்கியடித்துத் தம்மை நுழைத்துக் கொண்ட !
அறுபது வீடுகள்!
அவற்றின் மத்தியால் செல்லும்!
முச்சக்கர வண்டியொன்றேனும் பயணித்திட முடியாத!
குறுகிய ஒழுங்கையின் இருமருங்கிலும்!
இரண்டு வரிசைகளில் போடப்பட்டுள்ளன !
ப்ளாஸ்டிக் கதிரைகள்!
ஒரே விதமாகத் திறந்தே கிடக்கின்றன !
எல்லா வீடுகளின் யன்னல்களும் கதவுகளும்!
அமர்ந்திருக்கின்றனர் எல்லா வீட்டு முற்றங்களிலும்!
வருபவர்கள் எல்லோரும்!
அறுபதாம் தோட்டத்தில் வசித்த மூத்த குடியவள்!
எவர்க்குப் பசியெனினும் உண்ண உணவு கொடுத்து!
எல்லோரது துயரத்துக்கும் ஒன்றுபோலவே செவிமடுத்தவள்!
முழு அறுபதாம் தோட்டத்துக்கும்!
அம்மா அவள்!
பாட்டியவள்!
எண்பத்தைந்து வருடங்களாக!
துயரத்தை மட்டுமே அனுபவித்திருந்தாலும்!
விழிகளிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் வழியவிடாது!
எந்த நோய் நொடியும் தீண்டிடாது!
ஒரு மலை, ஒரு பெருவிருட்சம் போன்றிருந்த!
ரத்து மார்கரெட் நோனா!
வீட்டுக்குள்ளே வந்துபோகும் !
எவர் குறித்தும் அக்கறையற்று!
சிறிய வரவேற்பறையின் மத்தியில்!
மாமரப் பலகையால் செய்த !
பெட்டியில் உறங்குகிறாள்!
தன் பாட்டில் சுதந்திரமாக!
ஓரிடத்திலிருந்து !
மாஜரீன் பூசப்பட்ட பாண்துண்டுகளைக் கொண்டு வருகையில்!
மற்றோர் இடத்திலிருந்து கொண்டுவருவர்!
தேனீரையும் பிஸ்கட்டையும்!
ஒரே வீடு ஒரே குடும்பமென!
எல்லா விழிகளிலும் கண்ணீரேந்தி!
ஒன்றாக எல்லோருமே விழித்திருப்பார்கள் !
இன்று அறுபதாம் தோட்டத்தில்

அப்பா ஏன் கொல்லப்பட்டார்?

நிர்வாணி
ஈழப்போரின் ஆரம்பம்!
இனத்தை இனமே கொல்வதில்!
பலமும் வீரமும் பறைசாற்றப்பட்டது!
இப்படித்தான்!
நள்ளிரா வேளையில்!
ஊரோடு நானும் கூடிநின்று!
வேடிக்கை பார்க்க!
தாயும் சகோதரியும் கதறக் கதற!
எங்களின் உலகம் இழுத்துச்செல்லப்பட்டது!
எங்களோடு மழையும் !
மண்ணில் விழுந்து புரண்டு புரண்டு அழுதது!
விடிந்தது!
விடிவற்ற இரவுகளாய் மாறியது வாழ்க்கை!
மீண்டும் ஊர் கூடியது!
வேடிக்கை பார்த்தது!
சடங்கு முடித்து !
எரித்துச் சாம்பலாக்கி கடலில் கரைத்தோம்!
மீண்டும் மீண்டும் நிறைய அப்பாக்கள்!
கொல்லப்பட்டார்கள்!
'துரோகிகள் ஆக்கப்பட்டார்கள்!
யாரும் கேள்வி கேட்கவில்லை!
நான் உட்பட!
இன்று!
துப்பாக்கிகள் மௌனமாகிவிட்டன!
கொலையாளிகள் காணாமற்போயினர்!
அப்பா ஏன் கொல்ப்பட்டார்!
யார் கொன்றார்கள்!
கேள்விகள் தரும் வலியோடு!
நகர்கிறது வாழ்க்கை!
!
26-மாசி-2011

நிழலும் நிஜமாகும்

விஷ்ணு
நீண்ட!
நேரமாய்!
மௌனம் எனை!
விழுங்கிக்கொண்டு ..!
அறையின்!
வலது மூலை!
திறந்த ஜன்னலில்!
என் தேடல்களின்!
தொடக்கமாய்!
பகல் உதிர்கிறது!
பழுத்த இலையாக ...!
உன் விழிகள்!
என் கனவுகளுக்கு!
மருதாணி வைத்து!
அழகு பார்த்த நாட்கள் ..!
உன்!
இளம்பிறை!
விழிக்கதிரில்!
உறக்கத்தை மறந்து!
ஒளி வீசிய!
என் இரவுகள் ...!
ஒரே வினாடியில்!
நிசப்தமான!
நெஞ்சின் தாளமும்!
ஓலமிட்டு அழ வைத்த!
உன் பிரிவும் ..!
நரகக்கோட்டையின்!
மதில்கள் முட்டி!
சிதைபட்ட ஆத்மாவுமாய் ..!
இரவுகளை தேடுகிறேன்!
எனை அழைக்க!
நீ வருவாய் என ...!
நேரமாகிறது!
இந்த பகலுக்கு ...!
கதிரவனே!
கண் மறைந்திடு ...!
நிழலும் நிஜமாகும்!
நேரமிது ..!
- விஷ்ணு

வீழ்ந்தபின் ஞானம்

இமாம்.கவுஸ் மொய்தீன்
மரங்கள் நிறைந்த!
பரந்த தோட்டம்!!
குயில் மைனா!
புறா சிட்டு கிளி!
காக்கை கௌதாரி!
அணில் பட்டாம்பூச்சிகளின்!
கானங்கள் கொஞ்சல்கள்!
ஆட்டம் பாட்டங்களின்!
நிகழ்விடமாய்!
எப்போதும் கலகலப்பாய்!!
தென்னை பனை!
மா பலா முந்திரி!
சீதா பப்பாளி யென!
இருக்கும் பல்வகை மரங்களுடன்!
இல்லாத பேய்களையும்!
பாம்புகளையும் சேர்த்து!
வளர்ப்பதால்!
வளம் கொழிக்கிறது!
தோட்டமும்!
முதலாளிப் பையும்! !
தன்னால் தான்!
தோட்டம்!
வளம் கொழிக்கிறது !
என்றெ ஒவ்வொரு மரமும்!
நினைக்கத் துவங்கியதால்!
மரங்களுக்கிடையே!
விளைச்சலுக்குச் சமமாய்!
அகந்தை ஆணவம்!
பொறாமை பூசல்களும்!
வளமாய் செழிப்பாய்...! !
தம்மோடு வாழும்!
புற்பூண்டுகளை!
அற்பமாய் நினைப்பதிலும்!
ஏளனம் செய்வதிலும்!
இளக்காரம் பேசுவதிலும்!
மட்டும்!
தழைத்தோங்கி இருந்தது!
மரங்களுக்கிடையேயான!
ஒற்றுமையும்!
ஒருமைப்பாடும்!!
இயற்கைக் கென்ன!
சீற்றமோ?!
திடீரெனப் பேய்மழையும்!
புயலும் வீச!
வெள்ளம் சூழ்ந்ததெங்கும்!!
வெள்ளம் வடிந்தபின்!
வந்து பார்த்தார்!
உரிமையாளர்!!
நொடிந்து போனார்!
வயிற்றிலும் வாயிலும்!
அடித்துக் கொண்டார்!!
வேரோடு வீழ்ந்துகிடந்தன!
மரங்களனைத்தும்!!
உடன் அவற்றின்!
அகந்தையும் ஆணவமும்!
பொறாமையும் பூசல்களும்!!
புற்பூண்டுகள் மட்டும்!
எப்போதும் போல்!
பாதிப்பு மிகையின்றி! !
வீழ்ந்தபின் ஞானம் வந்து!
என்ன பயன்? !
-இமாம்.கவுஸ் மொய்தீன்

இது தான் காதலோ?

மன்னார் அமுதன்
உனக்கும் எனக்கும் !
இடைப்பட்ட பொழுதுகள்!
எப்போதும் அழகாய் விடிகின்றன!
கவிதையாய்!
கோவப்படுகையில்!
நீ அடிப்பாய்!
வலிப்பதில்லை – இன்றோ!
மெளனம் காக்கிறாய்!
வலிக்கிறதே!
ஒத்த கருத்தோடும்!
சிந்தனையோடும்!
மாற்றுக் கருத்தில்லா!
மாணிக்கங்களாய் மிளிர!
நாமென்ன!
கொள்கைக்காய் கை கோர்த்தவரா?!
குடும்பச் சமையலில்!
குழப்பங்கள் தானே குழம்பு!
ஊடல்கள் தானே உப்பு!
உன்னை நான் அனுசரிக்க!
என்னை நீ தினம் சகிக்க!
முரண்பட்ட கருத்துகள்!
முதிர்வடையும் வரை!
நிலாவொளியில் கதை பேசி!
முடிவெடுக்காமலேயே!
தூங்கிப்போவோமே!
இது தான் காதலோ?

தமிழ்! தமிழ்! தமிழ்!

சத்தி சக்திதாசன்
துள்ளி நான் புவியில்!
துளிர்த் தநாள் முதலாய்!
எழுந்த மோகமிது!
பள்ளி படித்த வேளையிலும்!
தமிழ் நினைத்து வேகும்!
மொழியின் தாகமிது!
தள்ளி வைத்து போகும்படி!
தனிவிதி சொன்ன போதும்!
தாளாது வளர்ந்த பாசமிது!
எள்ளிப் பகைவர் நகைத்தாலும்!
என்றும் தணியாத தாகமிது!
எந்தன் மொழிமீது கொண்ட மோகமது!
முள்ளி ல்கட்டியெனை வதைத்தாலும்!
முற்றத்தில் பணத்தை யிறைத்தாலும்!
முடியாது யாராலும் மூடிவிட இத்தீயை!
கிள்ளி பார்க்கும் உணர்வல்ல!
உதிரத்தில் உறைந்த நிறமிது!
உயிரோடு கலந்த தமிழிது!
கள்ளி யவள் மீது கொண்ட காதல்!
சொல்லிக் கவிபாடும் போதும்!
நல்ல தமிழ் வந்து மோதும்!
புள்ளி போல நான் மறைந்து!
தொலைதூரம் போனாலும்!
தமிழ் மெல்லினக் குற்றாவேன்!
சொல்லி நான் முடிக்கும் வேளை!
தமிழ் அன்னை அடிபணிந்து!
தமிழ் தமிழ் தமிழெனச் சுவாசிப்பேன்!

சக்கரை ரஹஸியம்

ஜோதி - த.ஜெயபால்
''சக்கரை விலை ஏறிக்கிடக்கு!
உனக்கு மட்டும் தாராளம்!
சக்கரையை வைக்க வேண்டிய இடம் !
சிறுநீர் அல்ல''!
இதுபரம்பரை வியாதிப்பா!
டாக்டர் தமாஷ் செய்தார்...!
பரம்பரை!
என்றதும் தாத்தா ஞாபகம்!
பறங்கிப்பேட்டைஅல்வா அவருக்கு உசிரு.!
கடலூர் டியூட்டி விட்டு!
அல்வாவுக்காக ஆறு மைல் சுற்றுவழி!
கொத்தட்டை நேர்வழி விட்டு!
பறங்கிப்பேட்டை வழி பஸ் பிடிப்பேன்!
திருநெல்வேலி எட்டாத தூரம்.!
எங்க பரம்பரையில் பெஞ்சாதி அதிகம் உண்டு!
சக்கரை தட்டுப்பாடுதான் டாக்டர்!
டாக்டர் அசரவில்ல.!
என்னவேலைப் பாக்கிறேகேட்டார்!
பேங்கில வேலை ராஜா வாட்டம்!
கார்த்தால எப்ப எழுவே!
ஏழரை ..விட்டா எட்டு!
எழுந்தவுடன் என்ன செய்வே!
டாக்டர் கேட்டார்!
பாத்ரூமில் புகை விடுவேன்!
வராத போது பேப்பர் கூட படிப்பேன்!
சாப்பாட்டுப் பழக்கம் எப்படி!
டாக்டர் கேட்டார்!
காலையில் இட்லி சாம்பார் வெட்டுவேன் !
காபி, டீ நாளைக்கு எட்டு!
மணி தவறாது சிகரெட்டு!
மதிய சாப்பாடு முனியாண்டியில!
மாலை டிபன் !
கேசரி(அ) அல்வா கட்டாயம் உண்டு!
ராத்திரி சொல்லட்டா....கேட்டேன்!
உட்கார்ந்து தின்னும் உன்மத்தன்!
டாக்டர் முணுமுணுத்தார்.!
சரி .. உன் பாட்டன் எப்படி ?!
சொல் பார்க்கலாம்!
தாத்தாவுக்கு எண்பது வயது கிழம்!
விடியலில் துயில் எழும்!
வயல் வரப்பில் கடன் கழிக்கும்!
காலையில் கேப்பக்களி!
மதியான சாப்பாடு மரக்கறி தான்!
தோட்டத்துக் காய்கனி, கீரைகள் ஏராளம்!
ஆனாலும்!
அவரோட மண்புழு 'பாடு'க்கு!
இவையெல்லாம் எம்மாத்திரம்?!
'போதும் உன் சங்கதி'!
புகன்றார் டாக்டர்!
'சக்கரை உனக்குப் பரம்பரை இல்லை;!
சாப்பிட்ட சக்திய உடம்பு கிரகித்துக் கொள்வது!
கற்க கற்ற பின் நிற்க அதற்கு தக போல!
எஞ்சிடும் சக்கரை புத்திரர் போல;!
அதிகம் சேரக்கூடாது!
மாத்திரை போடு.!
டயட் முக்கியம்;!
இதற்கும் மேலாக !
இன்னொன்று முக்கியம்!
உன் பாட்டன் செய்கிற!
எண்பது வயதிலும் மண்புழு உழப்பு.!
என் டயபடிக் ரஹஸியம்!
புரிய தொடங்கியது

ஈழ‌ நாய‌க‌ன்

ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்
தியாக‌ வீர‌னே பிர‌பாகரா!!
தன் ந‌ல‌ம் பாராம‌ல்!
ஈழ‌த்தைக் காக்க‌ போராடும்!
புலிக‌லின் த‌லைவ‌னே !!
தன் ந‌ல‌த்திற்காக‌!
சுர‌ண்டுவ‌த‌ற்கே நேர‌மில்லை!
இங்கு சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு...!
நீயோ!
பிறர் ந‌ல‌த்துக்காக‌!
போராடிக்கொண்டிருக்கிறாய்...!
உன் முடிவை!
இந்த‌ உல‌க‌மே!
உற்றுப் பார்க்கிற‌து!
விடிய‌ல் எப்பொழுது!
போராடும் உன‌க்கு...!
எட்டுப்புலிக்காடு!
ரெ.வீர‌ப‌த்திர‌ன்!
துபாய்