தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தூயவள்

வல்வை சுஜேன்
தூயவள் எனக்கோர்!
தூது விட்டாள்!
கலந்தேன் காதலில்!
காமுறவில்லை !
என் வாசல் அழைத்து!
வாழ்வளித்தேன்!
வசந்த ஊஞ்சலில்!
ஆடுகிறாள் !
வஞ்சியிவள் சொந்தம் என்று!
அந்தி நேரப் பொழுதெல்லாம்!
யார் யாரோ இவளிடத்தில்!
இதழோடு இதழ் சேர்த்து!
இழந் தேன் மது அருந்தி!
இன்ப ராகம் பாடுகிறார்!
யார் இவர்கள் !
நாலு கால் பந்தலிட்டு!
நான் வைத்த மல்லிகையே!
எத்தனை உறவுகள் !
இறக்கை விரிக்கின்றன!
உன்னிடத்தில்!
மலர் செண்டாக நீ இருக்க!
வண்டாக நான் இல்லையென!
வருந்துகிறேன் !
வெள்ளை மலரே – நீ!
என்றும் தூயவளே!
நானும்!
உன் நாளாந்த காதலனே

அது

இளந்திரையன்
சிறு ஒளி !
சிறு துகள் விளக்கம் !
கால காலமான !
காத்திருப்பு !
வழி அளந்த !
விசுபரூபம் !
வரட்சி செழுமை !
வாழ்க்கையாய் !
பிரபஞ்சத்தின் !
கொடியிடைத் !
தொடர்பு !
பொருள் !
அறிந்த !
அறியத் துடிக்கும் !
எத்தனம் !
அறிய முடியாத !
அயர்வு !
மனித வாழ்வு !
மண்டியிட்ட !
கணங்கள் !
வியாபிதமாய் !
அறிந்தும் !
அறியாமலும்... !
-இளந்திரையன்

நிழலின் அருமை

ஜெ.நம்பிராஜன்
ஆட்டு மயிர் வாடையுடன் வந்த !
அழுக்குச் சட்டைச்சிறுவன் !
மேசையைக் கழுவிய தண்ணீரில் சிறிதே !
மேலேயும் தெறிக்கிறான் !
தண்ணீர் தருபவன் !
தன் விரல் அழுக்கையும் !
சேர்த்துத் தருகிறான் !
ஆர்டர் செய்து !
அரை மணி கழித்து வரும் !
இட்லியோ அரைவேக்காடு !
அன்பளிப்பை வாங்க மறுத்த !
சிப்பந்தி சொல்கிறான், !
ஒரு ரூபாய்க்கு !
ஒரு சிகரெட் கூட கிடைக்காது !
மனைவியின் அருமை!
ஓட்டலில் புரியும்!
-ஜெ.நம்பிராஜன்

கலங்கும் பார்வைகள்

நவஜோதி ஜோகரட்னம்
சிவக்கின்ற, கலங்குகின்ற, குழம்புகின்ற!
பார்வைகள் அவை!
ஆகாயத்தின் அலட்சிய விரிவு!
அடிவானத்தை தேடும் அலைவு!
சாம்பல் நிறைந்த சலனம்!
தேடும் நீலமேகம்;!
தேன்நிலவு!
அமைதியற்ற சஞ்சலம்!
இதுவரை சந்திக்காத சத்தங்கள்!
சிலிர்ப்பூட்டி கூச்சலிட வைக்கும்!
கட்டிட உச்சிகள்!
தீவிர வெறியோடு!
இரை உண்ணத் துடிக்கும்!
குளிர்காற்றில் நெளியும் மரங்கள்!
விசைக் காற்றில் பிசுபிசுக்கும் -அவை!
கண்களிலிருந்து குருதி ஒழுகுவதுபோல்!
செந்தணலாய் சிந்தும்!
உணர்வுகள் துடிப்புகள்!
வெறும் சதைத்துணுக்குகளாகும்!
மின்னல்களால் உச்சந்தலை!
வெப்பி வெடிக்கும்!
மரணத்தின் குரூரம்!
மரணத்தின் கொடுமை!
மரணத்தின் மௌனம்!
மரணத்தின் வஞ்சம்!
புகைந்து திணறவைக்கும்!
மரணங்கள் கருகி!
புதுமலர்போல் வாழ்வு!
பிம்பமாய்த் தெரியும்!
நொறுங்கும்!
நரம்புகளின் உட்புறத்தில்!
!
-நவஜோதி ஜோகரட்னம்!
லண்டன்.!
25.2.2009

முறியடிப்போம் முன்னேறுவோம்

லலிதாசுந்தர்
சூறாவளி சுழலில் மரங்கள்!
துவண்டுபோவதைப் போல்!
பொருளாதார சுழலில் நிறுவனங்கள்!
துவண்டாலும்!
மரங்களின் கிளைகளில் தளிர்கள்!
துளிர்விடும் என்பதற்கு சாட்சி!
வேலைவாய்ப்பு முகாம்கள்.!
வாழ்க்கை சுழற்சியில் இழப்பும் ஏற்பும்!
உறுதி என்பதை உணர்த்தும் சூழல்.!
கல்வியும் திறமையும் மூளையின்!
உயிர்செல்கள்!
புதுபிக்கபுதுபிக்க அபாரசக்தி கொல்லும்.!
துவண்டுபோகமல்!
புதுபித்துக் கொள்வோம்.!
முறிடிப்போம் இந்த!
பொருளாதார சூழலை!
முன்னேறிடுவோம்!
புதியனவற்றை நோக்கி

எது கவிதை ?

நிர்வாணி
கவிதை !!
எது கவிதை ?!
நீயும் நானும் பேசிக்கொள்வது ?!
பேசிக் கொண்டதை நீயும் நானும்!
புரிந்துகொள்வது ?!
எது கவிதை ?!
நீயும் நானும் பேசிக்கொள்வது ?!
பேசிக் கொண்டது உனக்கு மட்டுமே!
புரிந்தது ?!
எது கவிதை ?!
நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்!
என்னை உறுத்திக் கொண்டால்!
அது கவிதை ?!
எது கவிதை ?!
சொல்லத் தெரியவில்லை!
சொல்ல அனுபவமில்லை!
இதுதான் கவிதையென்று தெரியும் நேரம்!
நீயும் நானும் இன்றைய இன்பமான!
பொழுதுகளை இரைமீட்போம்

வதையின் மொழி

வேந்தன்
வதைபடும் !
மொழியொன்றின் !
வார்த்தைகள் !
மரணதண்டனைத் !
தீர்ப்பில் !
மருண்டு போனது!
ஆயினும் !
இன்னும் மரணமின்றி !
வதைபடுவதையே !
சொல் கொண்ட !
விதியாகி !
மரண தண்டனைக் !
காலம்!
நீண்டு கொண்டே!
செல்கின்றது!!
வதைபடுவதே !
விதியாகி!
விடையின்றி !
நதியோடு கலந்து!
கடலோடு சேர்வதோ!
வதையின் மொழி?

பட்டப்பெயர்

அனாமிகா பிரித்திமா
எத்தனை ரகம் !!
எத்தனை விதம் !!
குச்சி பொம்மை...!
சோடாபுட்டி...!
ஜடைமாட்டி...!
தேங்காமுடி...!
ராட்டணம்...!
ஊசி வெடி...!
ஏன்... !
சாப்பாட்டின் பெயரை ...!
கூட விட்டுவைகவில்லை !!
சுட்ட அப்பளம்...!
பஞ்சுமிட்டாய்...!
தயிர் சாதம்...!
குண்டு பணியாரம்...!
காரகத்திரிக்காய்...!
கோனல் தோசை...!
அழைக்கும் போது...!
கோபமும்...!
சிணுங்கலும்...!
வேட்கமும்...!
வழிசலும்...!
பார்ப்பதற்கு ...!
எத்தனை அழகு !!
தனி சுகம் !!
!
எனக்கும்...!
பட்டப்பெயர்கள் உண்டு...!
ஆனால், அந்த ஒரு...!
பட்டப்பெயரை ...!
எவர் அழைத்தாலும்...!
கோபம் வரும்...!
அவரை தவிர...!
அதை, அவர் ஒரு முறை...!
மேடையில்...!
ஆம்... மேடையில்...!
நன்றி நவிலும் போது...!
என் “.........”!
என கூறும் போது...!
எனக்கு எல்லையில்லா...!
மகிழ்ச்சி !!
அந்த...!
பட்டப்பெயருக்கு...!
காரணமாய் இருப்பதை...!
நான் ...!
பல் துலக்கும் போது...!
காய் நறுக்கும் போது...!
கரண்டி பிடிக்கும் போது...!
பரிமாறும் போது...!
பாத்திரம் தெய்க்கும் போது...!
ஏன்... நான் ...!
எழுதும் போதும் கூட...!
பார்த்திருக்கிறாரே !!
சாப்பாடு தயாரா?!
“நொட்டாங்கை”...!
என்பார் சில நேரங்களில்...!
அட... !
சொல்லிவிட்டேனே !!
ஆனால்...!
எவரும் அழைக்க...!
அனுமதியில்லை...!
அவரை தவிர !!
!
-அனாமிகா பிரித்திமா

உன்தனில்

ரம்சின் நிஸாம்
இருள் சூழ்ந்த மனவெளியில்!
கலக்கங்கள் கனதிகளாய்.!
பலயீனப் பயிகளது!
விதைத்திட விரும்பாதே!!
நாவூதனில் நளனில்லை!
எல்லைதனை கடக்கையில்!
முட்டாளின் மூலதனமது!
முடிந்தவரை முடக்கிக் கொள்!!
பார்வைதனை பரிகொண்ட!
என்னொல்லா ஜாஹிலியம்!
சாத்தானின் ஈர்ப்பு அது!
விலகிக் கொள் தவறாதே!!
செயல்கள் அனைத்திற்கும்!
நிச்சயம் கூலியுண்டு!
எண்ணங்கள் தூய்மையெனில்!
செயல்களும் தூய்மைப்படும்!
!
உன்தனில் நீயாயிரு!
உண்மைதனில் தீயாயிரு……

தொலைத்த வசந்தம்

மாலியன்
“ இலைகள் தூவி அழைத்த !
மரங்களுக்கு இணைங்கி !
தடங்கள் பதித்த வசந்த காலங்களையும், !
சிறு வயதில் !
நான் ரசித்த குயில் பாட்டுக்களையும், !
தென்னை மரப் பொந்துகளில் !
தலை நீட்டிடும் சிறு கிளிக்குஞ்சுகளையும், !
மழைத்துறல்களில் வரும் !
என் மண்ணின் மணத்தையும், !
மீண்டும் எப்போது நான் ரசிப்பேன்? !
இப்போதும் வசந்தகாலஙகள் வருகின்றன !
ஆயினும் மரங்கள் !
தான் இல்லை !
இன்றும் குயில்கள் பாடுகின்றன !
ஆம் குஞ்சுகளை இழந்த !
சோகத்தில் ஒப்பாரியாக !
இன்றும் பட்ட தென்னையில் !
பொந்துகள் உள்ளன கிளிகள் !
இல்லை !
ஆயினும் !
இன்றும் மணக்கின்றது !
மழைத்தூறல்களில் நம் தேசத்து மண் !
- உடன் - !
காய்ந்து போன குருதியின் வாடை! ” !
--மாலியன்