தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எதிர்ப்பாட்டு

கோ.புண்ணியவான், மலேசியா
சிட்டுக்குருவியைப்பற்றி!
கவிதைஎழுத முனைந்தான்!
ஒரு சிட்டுக்குருவி...அதன் பட்டுச்சிறகு!
என தொடங்கியது......எனத்தொடர்ந்ததும் ம்ஹம்....உயிர்க்கவில்லை!
சிறகுகள் விரிப்பில்!
மனசு லேசானது.....!
அதுவும் வரவில்லை!
ஆழமாக யோசித்ததில்!
அழுத்தமான வரியொன்று தட்டுப்பட்டது!
காற்றின் மறுபிம்பம்!
கடவுளின் சிறுவிரல்.......!
என எழுதியதும் சற்று நேரத்தில்!
சலிப்பூட்டியது கவிஞனுக்கு!
அப்போது!
சன்னல்வெளியில்!
மரக்கிளையின் இலைகள்சிலவற்றை!
இசைத்து கீச் கீச்சென்றது!
நிஜப்பறவை!
-கோ.புண்ணியவான்

ஒளி

வேதா. இலங்காதிலகம்
ஓளியில்லாப் பாதை தரும் அச்சம்.!
ஓளி நோக்கிய பயணம் தரும் உச்சம்.!
ஓளி தரும் துணிவு அதிட்டமச்சம்.!
ஒளியெனும் துணிவில் துயரமும் துச்சம்.!
விரிவான் நோக்கு மனதிற்கு ஒளி.!
சொரியும் கானம் சோகத்தில் ஒளி.!
0000!
அருவியின் சொரிவு ஆனந்த ஒளி.!
குருவியின் குறுநடை குனகல ஒளி.!
மருவிடும் வாசைன மனதிற்கு ஒளி.!
தங்கிய இருளில் மின்னலும் ஒளி.!
பொங்கிய காதல் வதனத்தில் ஒளி.!
தங்கிய அகதிக்குப் பணமன்றோ ஒளி.!
0000!
இருண்ட வாழ்வில் கல்வி ஒளி.!
சுருண்ட மனதில் நட்பு ஒளி.!
உருண்ட உலகில் தாய்மண் ஒளி.!
வெருண்ட மனதிற்கு ஆதரவு ஒளி.!
வரண்ட மனதிற்கு தமிழ் ஒளி.!
திரண்ட மனிதநேயம் வாழ்வில் ஒளி.!
0000!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ் டென்மார்க்

அபலை பெண்ணே

மின்னல் இளவரசன்
ஓ அபலைப் பெண்ணே!
இந்த பாலையில் வந்து!
ஏன் பயிர் செய்ய நினைக்கிறாய்.!
நானோ பாறையாகிப் போனவன்!
என்னுள் ஈரமில்லை!
வேர்விட நினைக்காதே!
வேறு இடம் பார்.!
வாழ்வின் ஓரங்களிலும்!
உணர்வுகளின் எச்சங்களிலும்!
சதா பயனித்து கொண்டிருக்கும்!
ஒரு சமாளியனிடம்!
நீ எதை எதிர்பார்க்கிறாய்.!
நீ தருவதற்கு அதிகம் உள்ளது!
ஆனாலும் சொல்கிறேன்!
என்னிடம் நீ பெறுவதற்கு!
ஒன்றுமில்லை.!
கண்ணீரின் கண பரிமானம்!
என்னை சுற்றி இருக்க!
இந்த கனத்த இதயத்துக்கு!
காதலின் அருமை புரியாது.!
உதிர்ந்துவிட்ட பூக்களுக்கும்!
ஒரு காலத்தில் அஞ்சலி!
செலுத்தியவன்தான்!
இறுதிகட்ட பயணத்திற்கு!
என்னை தயார்படுத்தியபோது!
நீ ஏன் என்னை!
வாழ்வின் ஆரம்பத்திற்கு!
அழைக்கிறாய்.!
ரணம் படுவதற்கு!
இனி இதயமில்லை!
புறப்படு பெண்ணே!
புதிய புகலிடம் தேடு

அர்த்தமற்ற விடியலிற்காய்

மித்திரன், கொழும்பு. இலங்கை
தூரத்து விடியலுக்கய்!
இன்னமும் நாம்!
பயணித்துக்கொண்டிருக்கின்றோம்!
பாதையற்று...!
குந்தியிருக்க!
குடிநிலமின்றி!
கூப்பாடுபோடும்!
மந்தைக்கூட்டமாய்!
தொலைந்துபோனதாக நாம்!
நினைத்த நிம்மதியும் நிலவொளியும்.....!
கட்டிய கோவணமும்!
உருவ உனக்கு நாள்!
குறித்த பின்னர்!
எதற்கு!
அலங்காரமும் அபிசேகமும்...!
விதைநிலங்கள் எங்கும்!
விஷங்களின்!
விதைகள் இனி!
உனக்கெதற்கு விளைநிலங்கள்?!
உறவிழந்தபோதும் உன்!
விண்ணப்பங்கள்!
விடையறியாமலே!
விழுதொடிந்து போகிறது.....!
எனினும் உன்னுள்!
உறங்கிக் கிடக்கிறது!
விடுதலையின்!
வினாத்துளி.....!
தினம்தினமாய் நீ!
காண்பது உன்!
விடுதலையின்!
உதயங்களை அல்ல.......!
அஸ்த்தமனங்களையே

மேலுமொரு விருந்தாளி

கருணாகரன்
வாருங்கள்!
கைதுசெய்யப்படுவோனின் வரவேற்பில்!
ஒரு ருஷியுண்டு!
முழுப்பணிவுடைய வரவேற்பல்லவா இது!
கைதி குற்றவாளியா இல்லையா என்பது!
யாருக்கும் முக்கியமல்ல!
அவன் கைதியென்பதே போதுமானது!
கைது செய்யப்படுவோனின்!
நிழல்கூடச்சந்தேகிக்கப்படுகிறது.!
யாராலும் அனுமதிக்கப்படாத!
அவனுடைய கனவு!
அவனைக்கொண்டுபோகிறது!
அவனுடைய வெளிகளுக்கு!
கைதி!
கண்காணிக்கப்படும் வலயங்களில்!
நிழலுக்கும் அனுமதியில்லை!
தனிமைப்படுத்தப்படுதலில் தொடங்குகிறது!
அவனுக்கான தண்டனை!
இருள்!
அவனுடைய நிழலையும்துண்டித்து விட்டது!
அல்லது சிறைப்பிடித்து விட்டது.!
இப்போதவன் கலவரங்களிலிருந்து விடுபட்;ட!
அமைதிப்பிராந்தியத்தின் பிரதிநிதி!
திரளும் எண்ண அலைகளில்!
உருவாகிறது அவனுடைய!
ஒளிவெளி!
தளமாற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது!
அவனுடைய இன்னொரு மண்டலம்!
நெல்சன் மண்டேலாவுக்கு வாழ்த்துகள்!
இருளிலும் தனிமையிலும் வாழும் ரகசியத்தின்!
விதையைத்தந்தவரல்லவா நீர்

நடுநிசி

ஒளியவன்
மழையின் குளிரில்!
மெல்ல மெல்ல நடுங்கியது தேகம்!
வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது!
வெள்ளிநிலா மறைத்த மேகம்!
சில நாய்களின் சத்தம்!
சில்வண்டுகளின் இரைச்சலோடு!
கூடிச் சேர்ந்து மேலும்!
குரூரமாக்கிக் கொண்டிருந்தது!
கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு!
யாருமில்லை எனினும்!
திரும்பிடும் பக்கமெல்லாம்!
யாரோ நிற்பதாய் ஒரு எண்ணம்!
ஆந்தையின் இரைச்சலும்!
வரதட்சணைக் கொடுமையால்!
அடித்துத் துரத்தப்பட்ட என்னுடைய!
உறுத்தலும் அடங்கிவிடும் விடியலில்!
அப்பா வரக்கூடும் அதிகாலையில்!
பணத்தோடோ அல்லது பயணச்சீட்டோடோ.....!
-பாஸ்கர் (எ)ஒளியவன்

அஜந்தனின் 7 கவிதைகள்

அஜந்தன் மயில்வாகனம்
வரம்! !
குழந்தை வரம் !
கொடு ங்கள் சாமி !
என்றாள் அவள் !
சரியான இடத்துக்குத் தான் !
வந்திருக்கிறாய் !
என்றார் சாமியார் !
இந்து மதம் !
மிருகங்களைத் தெய்வமாக்கி !
மனிதார்களை மிருகமக்கி !
இறந்தவருக்கு கோயில்கட்டி !
இருப்பவர்களைப் போட்டு த்தள்ளி !
மாட்டு மலத்தை !
திருநீறாக்கி !
மனித மண்டையில் !
நாமம் போட்டது. !
எமது பண்பாடு !
பாம்பிற்கு பாலுற்றி !
கும்பிடு வோம் !
பச்சைப்பெண்ணிற்கு கள்ளிப் !
பாலூற்றி !
கொன்றிடு வோம்! !
சோழியன் குடு மி !
பணக் கஸ்ரம் தீர !
என்ன வழி என்றான் !
ஆசாமி! !
ஒரு பத்து ரூபாய் கட்டி !
பூசை செய் என்றான் !
பூசாரி! !
அவசியமா? !
குடிசைத் தாயின் முலையில் பாலில்லை !
அழிகின்றது மழலை! !
கோபுரக் கோயிலில் பாலாபிஷேகம். !
தலைவர்கள் !
தமிழன் நடிகர்களையெல்லாம் !
தலைவர்களாக்கினான் !
அதனால் !
தலைவர்கள் எல்லாம் !
நடிகர்கள் ஆனார்கள் !
!
சமூகம் !
நேற்று வரை !
நானும் அவனைத் !
தேசத் துரோகியென்றே !
எண்ணியிருந்தேன் !
ஆனால் !
அவன் தான் உண்மையான !
தேச பக்தன் !
என்று நான் !
உணர்ந்த போது !
இன்று அவன் !
உயிருடன் இல்லை! !
உண்மைகள் வதந்திகளாகவும் !
வதந்திகள் உண்மைகளாகவும் !
உலாவரும் !
எமது சமூகத்தில் !
சாக்கடையில் !
அனாதரவாக !
மிதக்கின்றது !
அவனின் பிணம்

அந்த ஒரு சொல்மட்டும்

கவிதா. நோர்வே
ரணங்களை கிள்ளி!
விளையாடுகிறாய் என்னோடு.!
வாதங்கள் செய்வது!
வழமையென்றாலும்!
வலிக்கிறது!
அந்த ஒரு சொல் மட்டும்!
வார்த்தைக்குண்டானா சக்தியா!
இல்லை!
நீ சொன்னதால் வந்த விரக்தியா!
விளையாடிக்கொண்டிரு நீ.!
எனக்குள்ளே!
இறுகி இறுகி!
ஆகிவிட்டேன்!
உன் கைப்பொம்மைபோல நான்.!
வருகிறது கோபம்!
கோபக் கனைகளை வீச வீச!
திரும்பி விடுகிறது என்னிடமே!
வடிந்து போகிறது!
கண்ணின் ஓரம்!
என் ஆணைகளை மீறய வண்ணம்!
உயிரைப் பிழிந்து!
கசக்கி எறிவதென்பது!
இதைத்தானோ?!
இதயத்தில் அறைந்து!
பாராமல் போவதென்பதும்!
இதுதானோ!
!
“சில வேளைகளில்!
சில மனிதர்கள்” என்றில்லை!
உயிரான மனிதர்கள்!
உரசிப் பார்க்கையில்!
உதிர்ந்து போகிறது!
எனது உயிரும்...உணர்வும்!
கவலைப்பட்டதில்லை நான்!
எதும் இல்லை!
எனக்காக இவ்வுலகில் என்றபோதும்.!
நீயுமா?!
!
- கவிதா நோர்வே

கறவை

ஹெச்.ஜி.ரசூல்
அள்ளக் குறையாத பாலூற்றின் !
அமுத சுரபிகள்-காம்புகள் !
மூக்குத் துவாரங்களில் !
மூக்கணாங் கயிறுகள் !
விரிக்கும் உதடுகளில் வாய்கூடுகள் !
வைக்கோல் கன்றுகளை !
கண்களில் காட்டி !
கறவை நடக்கும் கள்ளத்தனமாய். !
தாக இளைப்பொடு !
கன்றின் வயிறுகள் !
நீர்த்துப்போகாத மௌனம் !
பசுமடியின் காம்புகளில் !
இப்போது கசிகிறது ரத்தம்

ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்

இளங்கோ -கவிதைக்காரன் டைரி
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகலை!
வேரோடு கிள்ளி எறிய!
தேடவேண்டியிருக்கிறது!
நேற்றைய இரவின் சிறு விரல்களை!
அது தன் மீது எழுதிச் செல்லும்!
தருணங்களை கைப்பிடி நிழலுக்குள்!
ஒளித்துவைப்பது சாத்தியமில்லை!
கண் கூசி..!
மன இடுக்குக்குள் பதுங்கிக்கொள்ளும்!
சாமர்த்தியத்தை பழகி வைத்திருக்கின்றன!
கொடும் பகல்கள்!
மழையற்ற நகரத்து வெறிச்சோடுதல்!
நம்பும்படியான ஒரு ஈரத்தை!
எப்போதும் வழங்குவதில்லை!
அன்றாடம் தீவுகளிலிருந்து புறப்படும்!
இரண்டு கால் பிராணிகளின்!
வால்கள்!
நூற்றாண்டுகளுக்கு முன் நறுக்கப்பட்டும்..!
ஆயாசத்துடன் மலரும் இந்த இரவையும்!
துண்டித்து வீச..!
தேடவேண்டியிருக்கிறது!
நேற்றையப் பகலில் நிகழ்ந்த!
ஒரு!
கூர்மையான உரையாடலை