தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தனிமை

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
வாலிபத்தை தின்று தீர்த்து!
வயோதிபத்தின் !
நுழைவாயிலில் நின்று!
வரவேற்புசெய்கிறது!
தனிமை!
ஞாபகச் சிறகசைத்து!
அண்டங்கள் தாண்டி!
பறக்கத் தொடங்கி!
விட்டது அது!!
நிழலின் கரம்பிடித்து!
நெடுந்தூரம்!
போனபின்னும்!
இளைப்பாற மரம் தேடி!
ஏக்கத்தில் தவிக்கத்!
தொடங்கியும் விட்டது.!
துயரங்களின்!
சுரம் பிரித்து!
துக்கங்களால்!
இசையமைத்து !
தோல்வியின் !
பாடல்களும் பாடிக்கொள்கிறது!!
இதயத்தை சுட்டெரிக்கும்!
வாழ்வின் அவஸ்தைகளோடு !
விடைகள் இல்லாத!
கேள்விகளின் பாரத்தோடு !
புன்னகை தொலைத்து!
நாளையைப் பற்றிய!
போராட்டங்களோடு!
புறப்பட்டு போகிறது!!
மௌனத்தின் புலம்பல்களோடு !
மயானத்தை !
தழுவத்துடித்து !
ஊமையாய் ஊர்வலம் !
போகிறது ஒரு!
ஊதாரித் தனிமை

குயில் அண்ணன்

முருகடியான்
வேரை மறந்த!
விழுதுக லாகி!
வீணே கழிக்கின்றார் நாளை! -சில!
விளைச்சல் சுண்ணாம்புச் சூளை! -தமிழ்த்!
தேரை இழுத்திடுந்!
தாம்புக ளானால்!
தமிழ்,மலர்ப் பூத்திடுஞ் சோலை! -அதில்!
தங்குந் தமிழ்க்கதிர் காலை!!
!
வண்ணம் படித்திட!
எண்ணம்வந் தால்கவி!
அன்னம் நடந்திடும் பாட்டில்! -குயில்!
அண்ணன் பிறப்பானின் நாட்டில்! -புதுத்!
தென்னங் குரும்புகள்!
முற்றிக் கனிந்திடத்!
தேவன் திருக்குறள் ஏட்டில்! -கற்றுத்!
தேர்ந்திருப் போம்கவிக் கூட்டில்!!
!
என்னை நன்றாய்!
இறைவன் செய்தனன்!
தன்னைத் தமிழ்செயு மாறாம்! -அந்தத்!
தத்துவ மேதமிழ் வேராம்! -தமிழ்!
அன்னை நிலைப்பதும்!
அழியா திருப்பதும்!
அவளுக்கு நம்கை மாறாம்! -இதை!
அறிந்தால் தமிழ்பெறும் பேறாம்!!
!
-பாத்தென்றல்.முருகடியான்

மே 17 விடுதலை வேட்கை தீ

பட்டுக்கோட்டை தமிழ்மதி
மே 17!
விடுதலை வேட்கை தீ!
------------------------------------------!
எரிந்த சாம்பலில்!
எஞ்சியவர்கள் நீங்கள்!
குற்றுயிரும் கொலையுயிருமாய்!
குவிக்கப்பட்ட குவியலிலிருந்து!
கொஞ்சமாய்!
உயிர்த்தவர்கள் நீங்கள்!
நந்திக் கடலேரியில்!
நாதியற்றவர்களாய்!
மிதந்தவர்களின் மிச்சம்!
நீங்கள்!
முள்ளிவாய்க்காலில்!
உங்களின் குருதியாறு பாய!
கொட்டும் குண்டுகளோடு!
தீக்குளித்தேறியவர்கள்!
நீங்கள்!
உற்றாரை!
பற்றிய கைகளோடு!
பறிகொடுத்தவர்கள் நீங்கள்!
நின்ற இடத்தில்!
கால்களை விட்டுவிட்டு!
நினைக்கா ஓரிடத்தில்!
இழுத்துப் போடப்பட்டவர்கள் நீங்கள்!
ஆலாயிருந்து!
அலைத் துரும்பாய்!
அடித்துப் போடப்பட்டவர்கள் நீங்கள்!
நாற்பதாயிரம்!
இறந்த உடல்களுக்கு மேல்!
எழுந்து நிற்கிறீர்கள்!
நீங்கள்!
உடற்குறையும் மனக்குறையும்!
உங்களுக்கு மட்டுமல்ல!
தமிழை!
உச்சரிக்கும் ஒவ்வொருக்கும்!
பெற்றோர்களை!
பெற்ற பிள்ளைகளை!
அண்ணன் அக்கா!
அன்புறவுகளை இழந்து!
இழந்தவர்களுக்காக இன்றைக்கு!
ஏற்றுகிறீர்கள் தீபங்கள்!
இனத்தையே கொளுத்தியவன் முன்!
இன்னும்!
இருக்கிறோமென்று!
தன்!
இருப்பை!
நெருப்பாய்!
ஏற்றுகிறீர்கள் தீபங்கள்!
உங்கள்!
கண்ணீரில் எரிகின்றன!
கண்களின் தீபங்கள்!
அழுது அணைந்திடாமல்!
அழுதும் எரிகின்றன!
தீபந்தங்களாய்!
உங்கள்!
விழிகளில்!
விடுதலை வேட்கை தீ

இரண்டு கவிதைகள்

எஸ். ஷங்கரநாராயணன்
01.!
தெப்பக்குளத்தில்!
கிரிக்கெட் மேச்!
பல் இல்லா வாய்க்குழிபோல்!
ஊர் நடுவே தெப்பக்குளம்!
ஊருக்கே அடையாளம் ஆச்சு!
தெப்பக்குள பஸ் நிறுத்தம்!
அரசியல் பொதுக் கூட்டம் -!
தெப்பக்குள சந்திப்பில்!
தாத்தா காலத்தில்!
தண்ணீர் ததும்பும்!
குளிக்கவும் குடிநீருக்கும்!
பொதுமக்கள் நாடுமிடம்!
விழாக்காலம் தெப்பம் விட்டு!
ஊரார் மகிழ்வர்!
நடுவில் ஒரு மண்டபம்!
கோபுரத் தொப்பி!
கோபுரத்து பொம்மைகள்!
ஓகோவென அழகு!
குபுக்கென குதிப்பதற்காய்!
கோபுரத்தில் ஏறினவோ!
தாத்தா காலம் ஆச்சு!
தெப்பக்குளம் இப்போது!
குப்பை கூளம் என்றாச்சு!
தெப்பக்குளம் தாத்தாவின்!
வாய்போல ஆச்சு!
சாமியேறும் கொலுமண்டபம்!
சோம்பேறி ஆண்டிமடம்!
மீசைவெச்ச தொந்திக்கார!
அசுர வம்ச பொம்மை!
இறக்கிவிட ஆள்தேடி!
பதறியழும் கதறித்தொழும்!
பள்ளிக்கூடம் லீவு விட்டால்!
பட்டாடைச் சிறுமியாட்டம்!
படபடத்த கும்மாளம்!
வாலிபத்தின் ஜாலிபால்!
படியிறக்கம், காலரி!
பார்வையாளர், 'பிஸ்லெரி'!
கட்சிகட்டி கிரிக்கெட் மேட்ச்!
கைதட்டல் ஆர்ப்பரிப்பு!
மட்டையடி மொட்டை பாபு!
து¡க்கி விட்டான் சிக்ஸர்!
கிட்டவில்லை சக்ஸஸ்!
கோபுரத்து பொம்மை!
கேட்ச் பிடித்து பாபு அவ்ட்!
எட்டாம் மாடி city பாபு!
எட்டிப் பார்த்து பந்து கண்டான்!
பந்து அல்ல!
தூங்கும் பந்துகள்!
மழைநாள் வந்தால்!
மீண்டும் விமோசனம்!
பந்துகள் உருளும்!
புரளும் தரைக்கு வரும்!
சிறியவர் பெரியவர் காத்திருந்தார்கள்!
விளையாடலாம், தெப்பமும் விடலாம்!
யாவர்க்கும் எக்காலத்தும்!
வேண்டும் வேண்டும் மழை!
!
02.!
கவிதை இரண்டு!
பின்னிரவு கதவு தட்டி!
சடசடக்கும் மழை!
து£க்கம் கெடும்!
வாசலில் நிற்கும்!
வாகனம் நனையும்!
இடி!
பல்கடிப்பு!
மிருகஉருமல்!
வான ஓநாய்!
ஒளிமுள்!
குழந்தைகள் அழுவர் நடுங்கி!
சிறு மழை வியாதி கொணரும்!
மின்சாரம் நின்று போம்!
சாத்திய வீடு சாத்தான் கூடு!
படையெடுக்கும் கொசுக்கூட்டணி!
தொப்பி து¡க்கி வணங்கும் சாக்கடை!
நாற்றம்!
கால்வைக்கக் கூசும் நடை!
சுவர் ஈரம் மின்சாரம் கசியலாம்!
வீதி வயர் அறுந்து ஊசலாடலாம், உ யி ர்!!
ஒண்ட இடம் தேடி ஓடிவந்த காகம்!
மல்லாந்து வீழ்ந்து பட!
சுற்றமும் நட்பும் சிறகடித்த ஒப்பாரி!
நகர எல்லை தாண்டி!
பொழிகவே வானம்!
ந க ரி ல்!
வேண்டாம் வேண்டாம் எந்நாளும்!
!
-எஸ். ஷங்கரநாராயணன்!
--------------------------------------------!
எஹ். ஷங்கரநாராயணனின் கவிதைத் தொகுதி!
ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்)

காலமும் நானும்

ந.மயூரரூபன்
நான் பார்த்த மரங்களெல்லாம்!
நன்றாய் வளர்ந்துவிட்டன.!
இலைகள் மஞ்சளடித்து...!
இறந்து... மீண்டும் மீண்டும்!
பச்சைகளாய்த் துளிர்த்தும் விட்டன.!
துளிர்க்கவும் தொடங்குகின்றன.!
காலம் கடந்து செல்கிறது...!
நான் மட்டும் அப்படியே என் நினைவுகளுடன்.!
தூரத்தேகேட்டு!
என்னைத் தேடிக் கசிந்துவரும்!
சங்கொலியில் என் காலடிகள் மிதந்து!
மண்ணொழுங்கையில் ஏறிச்செல்கின்றன.!
முழுக்கைச் சட்டைகள் சினமூட்டும்!
மார்கழிக் குளிரில் அதிகாலைக்கு முன்னே!
விழித்துவிட்ட களிப்புடன்!
எம் நடையோடசைந்து லாம்பும் எம்முன்னே!
தொடர்ந்து வரும்.!
வைரவர் கோயில் வாசலில்!
திருப்பாவைப் பாட்டும்!
ஒழுங்கை நாய்களின் குரைப்பும்!
சங்குடன் ஓடிக்கலக்கும்.!
காலைகள் இப்படிக் கலைய!
அப்போதும் காலம் கடந்து சென்றது என்னுடன்.!
மணலொழுங்கை கடந்து!
மதகேறி மிதக்க வரும் எனது பள்ளியும்!
குச்சொழுங்கை முழுதும் குவிந்து கிடக்கும்!
எனது காலடிகளும்!
மீண்டும் மீண்டும் கனவாய்ப் படிகின்றன.!
நீண்ட பொழுதுகள் என் நடைபோல் கழிகின்றன.!
முழுதாய் என்னைத் தன்னுள்ளே நிறைத்து!
மூச்சுக்களால் நிறைந்து!
மகிழ்வால் முட்டிய எங்கள் வீடு...!
அப்போதும் காலம் கடந்து சென்றது என்னுடன்.!
நம்பிக்கையூட்டும் பொழுதுகளைக் காவிக்!
காலம் நடந்து செல்கிறது.!
மரங்களின் பருவமாற்றம்!
என்னிலும் படர்ந்து செல்கிறது.!
மணலொழுங்கையின் தவிப்பு!
தன்மூச்சினை என்மீது!
எறிந்துகொண்டேயிருக்கிறது.!
இப்போது காலம் கடந்து செல்கிறது...!
என்னைத் தனியே விட்டு

ஒரு மழைநாள் நினைவுகள்

சுதா சுவிஸ்
மாடியின் யன்னலினூடு விழிகள்!
இருள்கவிந்த பகலொன்றில்!
மழைத்துளிகள் இல்லை!
மழைக்கீறல்களில் மனம் விறைக்கிறது.!
எப்போதும்போல!
வானவில் காணாது மழை பெய்தபடி!
மனம் அதில் நனைந்தபோதும்!
உடல் மறுக்கும்.!
ஐரோப்பிய மழைக்குளிர்!
அப்படியொன்றும் இதமானதல்ல!
வீதிகளின் கால்வாய் துவாரங்களில்!
மழை நீர் வழிந்தோடியபடி!
நினைவுகள் மட்டும்!
உறைந்து ஓடமறுக்கும்.!
மேகக்கூட்டங்களை இருள் கவ்வும்!
மனம் நிசப்த அமைதியில்!
இது சோகமா? மகிழ்ச்சியா?!
புதிய உணர்வு கோலமிடும்!
குளிர்கவ்வி காற்றுவீசும்!
சருகுகளுக்கு செட்டைமுளைக்கும்!
முகில்கள் உரசி முழக்கமிடும்!
மின்னல் தெறிப்பில்!
முகங்கள் விழிக்கும்!
மழைத்துளிகள் பூமியை முத்தமிடும்!
ஆனந்தமழையில் சிறுவர் நனைவர்!
தாழ்வாரங்களும் பீலிகளும்!
தற்காலிக சவர்களாய்!
கூரை ஒழுகி ஏழையை நனைக்கும்!
நனைந்த விறகை அடுப்பு மறுக்கும்!
கூலி வயிறுகள் பசியில் புகையும்!
ஆலமரங்களும் அரசமரங்களும்!
அங்கங்கே குடைகளாகும்!
கால் முளைத்து குடைகள்!
சைக்கிள் ஓடும்!
சிலவேளைகளில்!
வாய்க்கால் வெள்ளத்தில்!
சைக்கிள் நிறுத்தி!
சிறுவர் கூட்டம் நீரை இறைக்கும்!
கொப்பி ஒற்றைகள் கப்பலாய் திரியும்!
பதுங்கு குழிகளை மழைநீர் நிரப்பும்!
பயத்தில் விழிகள் பிதுங்கி முழிக்கும்!
நாளைய அறுவடைக்காய்!
நம்பிக்கையோடு!
ஏரின் கூர்கள் பூமியைக் கிழிக்கும்!
ஒழுகும் குடிலில்!
ஓட்டைப் பாத்திரங்கள்!
சதுரங்கம் நடத்தும்!
உடம்புக்கொடியில்!
ஏழையின் சீலைகாயும்!
பசித்த வயிற்றோடு!
ஏழைக் குடும்பங்கள்!
ஏங்கி விழிக்கும்!
வானத்தின் வளைவில்!
வாழ்வைக் காட்டி நிற்க்கும்!
நிறங்களின் கீறல்கள்!
யன்னல்களு£டு பார்வை!
இன்னும் நீர் வழிந்தோடியபடி!
அந்த நினைவுகள் மட்டும்!
வடியாது!
என்னுள் உறைந்த படி.!
சுதா சுவிஸ்

சொல்லித் தீராத சங்கிலி

எம்.ரிஷான் ஷெரீப்
எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று!
வர்ணத் திரைச்சீலைக்கப்பால்!
சமையலறையில் உறைகிறது!
வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள்!
யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு!
ஏறிச் செல்லப் பாதங்களில்லை!
கூடத்தில்!
வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது!
பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று!
காலணி தாங்கும் தட்டு!
தடயங்களைக் காக்கிறது!
ஒரு தண்ணீர்க் குவளை!
தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று!
வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி!
வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு!
என்னவோர் எழில் சேர்க்கின்றன இவை!
பிரகாசிக்கும் கண்கள்!
செவ்வர்ணம் மிகைத்த ஓவியமொன்றென!
ஆகாயம் எண்ணும்படியாக!
பலகை வேலிக்கப்பால் துள்ளிக் குதித்திடும்!
கறுப்பு முயல்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்!
எந்த விருந்தினரின் வருகையையோ!
எதிரொலிக்கிறது காகம்!
அவர் முன்னால் அரங்கேற்றிடவென!
வீட்டைத் தாங்கும் தூண்களிரண்டின் இதயங்களுக்குள்!
ஒத்திசைவான நாடகமொன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது!
இரவின் அந்தகாரத்துக்குள் ஒளிந்துபோன!
காதலின் பெருந்தீபம்!
சொல்லித் தீராத சங்கிலியொன்றோடு!
மௌனத்தைப் பிணைத்திருக்கிறது!
என்னிலும் உன்னிலும்

எல்லோர்க்கும் பெய்யும் மழை

அ. விஜயபாரதி
குடையெடுத்துப் போகாததற்காய்!
திட்டிக் கொண்டே!
முந்தானையில் தலைதுவட்டி!
வெதுவெதுப்பாய்த் தருவாள்!
ஒரு கோப்பைத் தேநீர்!
பின்னிரவில் நடுக்கமேறி!
தகிக்கும் உடலை!
கனத்த போர்வையால் மூடி!
அரைத் தூக்கத்துடன்!
விடியலுக்காய் காத்திருந்தாள்!
உழுது கொண்டிருந்த!
நிலத்திருந்து வெளியேறும்!
புழு பூச்சிகளை!
அங்குமிங்கும் பறந்தபடி!
மைனாக்களும் காக்கைகளும்!
மேய்ந்து கொண்டிருக்க!
மரத்திலிருந்த கரிச்சான் குருவிகளோ!
அவ்வப்போது பறந்து பறந்து!
தாழப் பறக்கும் தட்டான்களை!
இலாவகமாய்ப் பிடித்துண்பதையும்!
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே!
சுணக்கத்தோடு நடப்பேன்!
அம்மாவுடன் அரசு மருத்துவமனைக்கு

போர் தொடங்கும் குழந்தைகளின்

தீபச்செல்வன்
கனவுகள்!
--------------------------------------------------------!
01!
போராளிகள் மடுவைவிட்டு!
பின் வாங்கினர்.!
நஞ்சூறிய உணவை!
தின்ற!
குழந்தைகளின் கனவில்!
நிரம்பியிருந்த!
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து!
போர் தொடங்குகிறது.!
நகர முடியாத இடைஞ்சலில்!
நிகழ்ந்து!
வருகிற!
எண்ணிக்கையற்ற!
இடப்பெயர்வுகளில்!
கைதவறிய!
உடுப்புப்பெட்டிகளை விட்டு!
மரங்களுடன்!
ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.!
போர் இன்னும் தொடங்கவில்லை.!
02!
போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு!
பின் வாங்கினர்.!
பயங்கரவாதிகளை!
துரத்திக்கொண்டு வருகிறது!
அரச யுத்தம்.!
மரத்தின் கீழ்!
தடிக்கூரைகளில்!
வழிந்த!
மழையின் இரவுடன்!
சில பிள்ளைகள்!
போர்க்களம் சென்றனர்.!
யுத்தம் திணிக்கப்பட்டதை!
பிள்ளைகள்!
அறிந்தபோது!
பரீட்சைத்தாள்கள்!
கைதவறிப் பறந்தன.!
ஓவ்வொரு தெருக்கரை!
மரத்தடியிலும்!
காய்ந்த!
உணவுக்கோப்பைகளையும்!
சுற்றிக்கட்டியிருந்த!
சீலைகளையும்!
இழந்த போது!
ஜனாதிபதியின்!
வெற்றி அறிக்கை!
வெளியிடப்பட்டிருந்தது.!
03!
போராளிகள் விடத்தல்தீவை விட்டு!
பின்வாங்கினர்.!
யுத்த விமானங்களிடமிருந்து!
துண்டுப்பிரசுரங்கள்!
வீசப்பட்ட பொழுது!
வறுத்த!
கச்சான்களை தின்கிற!
கனவிலிருந்த சிறுவர்கள்!
திடுக்கிட்டு எழும்பினர்.!
எல்லோரும் போர்பற்றி!
அறியவேண்டி இருந்தது.!
04!
போராளிகள் முழங்காவிலை விட்டு!
பின்வாங்கினர்.!
கைப்பற்றப்பட்ட கிராமங்களை!
சிதைத்து எடுத்த!
புகைப்பபடங்களை!
வெளியிடும்!
அரச பாதுகாப்பு இணையதளத்தில்!
சிதைந்த!
தென்னைமரங்களைக் கண்டோம்!
உடைந்த!
சமையல் பாத்திரங்களைக் கண்டோம்!
தனியே கிடக்கும்!
கல்லறைகளை கண்டோம்.!
யுத்தம் எல்லாவற்றையும்!
துரத்தியும்!
எல்லாவற்றிலும் புகுந்துமிருந்தது.!
05!
மல்லாவியையும்!
துணுக்காயையும் விட்டு!
சனங்கள் துரத்தப்பட்டனர்.!
ஒரு கோயிலை கைப்பற்ற!
யுத்தம் தொடங்கியபோது!
வணங்குவதற்கு!
கைகளையும்!
பிரார்த்தனைகளையும்!
இழந்தோம்.!
அரசு அகதிமுகாங்களை திறந்தது.!
இனி!
மழைபெய்யத்தொடங்க!
தடிகளின் கீழே!
நனையக் காத்திருக்கிறோம்!
தடிகளும் நாங்களும்!
வெள்ளத்தில்!
மிதக்கக் காத்திருக்கிறோம்.!
வவுனிக்குளத்தின் கட்டுகள்!
சிதைந்து போனது.!
கிளிநொச்சி!
அகதி நகரமாகிறது!
இனி!
பாலியாறு!
பெருக்கெடுத்து பாயத்தொடங்கும்.!
நஞ்சூறிய உணவை!
தின்ற!
குழந்தைகளின் கனவில்!
நிரம்பியிருந்த!
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து!
போர் தொடங்குகிறது.!
-தீபச்செல்வன்!
20.08.2008

பிரிவு உபச்சார விழாவில்

தென்றல்.இரா.சம்பத்
11.03.1995 கல்லூரி விடுதி & வணிகவியல் துறை பிரிவு உபச்சார விழாவில் :!
--------------------------------!
கவி எழுதச்சொல்லி!
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய!
என் காதலர்கள்!
உறவா! பிரிவா!என!
வழி சொல்லாமல்!
வழி மாறியதால்!
இரண்டைப்பற்றியும்!
எனக்குப் பழக்கமான!
எளிய தமிழில்!
எழுதி வந்திருக்கிறேன்!!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....!
எத்தனையோ!
கவி எழுதக் காத்திருக்கும்!
என் எழுதுகோலுக்கு!
என்ன வந்ததோ!!
உங்களுக்காக !
எழுத ஏடெடுத்தவுடன்!
கண்ணீரையல்லவா!
காணிக்கை கேட்கிறது..!
உறவு...!
இனிமையானதுதான் !
பிரிவு - நமக்கு!
புலப்படாத நாள்வரை!
நட்பு...!
நல்ல சொல்தான்!
நாம்- இந்த!
கல்லூரி இறுதிநாளை!
கடக்காதவரை!
சீசனுக்கு வந்துபோகும்!
பறவைகளைப்போல!
படிப்புக்கு வந்துபோகும்!
நமக்கு!
இந்த கல்லூரியும்!
ஒரு வேடந்தாங்கல்தான்...!
சீசன் முடிந்துவிட்டது!
சல்லாபித்த நாம்!
சிறகு விரித்துத்தான்!
ஆக வேண்டும்.!
சிந்துவது கண்ணீரானாலும்!
உன்மேல் விலுவதெல்லாம்!
பன்னீராகட்டும்...!
பிரிவை எண்ணி!
ஏன் வருந்துகிறாய்!
பிரிவு உனக்கொன்றும்!
புதியதல்லவே...!!
பிரிவுக்குப் பிறகுதானே !
ஓர் உறவும் இருக்கிறது...!
ஓர் உயர்வும் இருக்கிறது...!
தகப்பனிடமிருந்து பிரிந்து!
தாய் வயிற்றில் உறவு கொண்டாய்!
தண்ணீர் வடிவத்திலே!
அங்கே- உனக்கு!
உறவும் கிடைத்தது!
கரு என்ற !
உயர்வும் கிடைத்தது...!
தாய் வயிற்றிலிருந்து பிரிந்து!
தரையோடு உறவு கொண்டாய்!
சிசுவின் வடிவத்திலே!
அங்கே- உனக்கு !
உலகோடு உறவும் கிடைத்தது!
குழந்தை என்ற !
உயர்வும் கிடைத்தது...!
இப்படி!
உன் ஆரம்பமே பிரிவில்தானே !
அரங்கேறியிருக்கிறது!
அப்புறம் ஏன் வருந்துகிறாய்!
இப்பிரிவிற்க்காக...!
சந்தோசப்படு!
மூன்றாண்டுகளுக்குள்!
எத்துனை நல்ல உள்ளங்களை!
நட்பாக்கிக்கொண்டோம் என!
சந்தோஸப்படு...!
வருத்தப்படு!
மூன்றாண்டாய்!
இன்னும் இத்துனை!
உள்ளங்களை!
அறிய முடியவில்லையேவென!
வருத்தப்படு...!
இப்படியெல்லாம் எழுதி!
எனக்கே நான்!
ஆறுதல் சொன்னாலும்!
என் அடிமனம் மட்டும்!
அழுகையை நிறுத்த மறுத்து!
அடம்பிடிக்கிறது!
ஆம்!
கையடிந்த பின்னாலே!
கை வளை கேட்பவளாய்!!
பிரிவை வெளியே !
நிறுத்திவிட்டு!
உறவோடு இங்கே!
புலம்பிக்கொண்டிருக்கிறேன்...!
!
விரல்போன நேரத்தில்!
வீனை வாசிக்க !
ஆசை வந்தவனாய்!!
பிரிவு வரும் வேளையிலே!
உறவுக்காக ஏங்குகிறேன்...!
விடுதி நாள் !
எனச்சொன்னபோது!
என் விலாஎலும்புகளும்!
விழாக்கோலம் பூண்டது!
அதுவே நமக்கு!
பிரிவுரை நாள்!
என நினைக்கும்போது!
நெஞ்சத்தில் !
நேறிஞ்சி முள்ளல்லவா!
நிமிடத்திற்கொருமுறை!
மோதிச்செல்கிறது...!
இரயில் சிநேகமாய்!
நம் உறவு இருந்திருந்தால்!
நயமோடு சொல்லியிருப்பேன்!
நட்பின் அடையாளங்களை..!
இங்கே நம் இதயங்கள்!
சிநேகமானதால்!
என்னவென்று எடுத்துரைப்பேன்...!
மூன்றுநாள் !
கல்யாணவீட்டு நட்பென்றால்!
நட்பை நளினப்படுத்தி!
பாட்டெழுதலாம்!
ஆனால் மூன்றாண்டு!
கல்லூரி நட்பானதால்!
வெட்க்கத்தோடு !
ஒப்புக்கொள்கிறேன்!
நம் காதலைச் சொல்லி!
கவி எழுத - எனக்குத்!
தெரியவில்லையென்பதை...!
என் உள்ளங்களே !!
மரங்களுக்கு மரணம்!
இலையுதிர்க்காலமல்ல...!
உரசுவதால் அவமானம்!
தங்கத்திற்கல்ல...!
ஆம்...!
வீழ்ச்சியுற்ற அருவிதானே !
நதிகளானது...!
விதை விழுந்துவிட்ட பிறகுதானே!
செடிகளானது...!
காய்ச்சப்பட்ட இரும்புதானே !
ஈட்டியானது...!
கரும்பு கசக்கப்பட்ட பிறகுதானே!
வெல்லமானது...!
!
அப்படித்தான்!
நம் உறவுக்கு மரணம்!
இந்த பிரிவுமல்ல...!
இந்த சின்னப் பிரிவுக்குப்பின்னே!
நமக்கு உயர்வும் வந்து சேரும்..!
நம் உறவும் தொடர்ந்து வரும்...!
என !
என் வார்த்தைகளை!
முடிக்கும்முன்!
இன்னுமொருமுறை!
உரக்க உரைத்துக்கொள்கிறேன்!
மரங்களுக்கு மரணம்!
இலையுதிர்க்காலமல்ல...!
நம் உறவுக்கு மரணம்!
இந்தப் பிரிவுமல்ல