தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வேண்டுவன

மன்னூரான்
சாதி அறியாத!
சனனம்!
நீதி தவறாத!
நெஞ்சம்!
தொல்லை தராத !
தோழன்!
இல்லை என்னாத!
இறைவன்!
அள்ளக் குறையாத!
அறிவு!
கள்ளம் இல்லாத!
காதல்!
சத்தம் எழுப்பாத!
சமுத்திரம்!
யுத்தம் இல்லாத!
யுகம்!
ஒன்றும் எதிர்பாரா!
உறவு!
என்றும் விடியாத!
இரவு!
வியாதிகள் காணாத!
யாக்கை!
வயோதிபம் வாராத!
வாழ்க்கை!
உழைத்து உண்ணும்!
இரணம்!
உறங்கும்போதே!
மரணம்

வெளியில்

துர்கா
உடல் சூட்டின் வெளியில்!
பாகங்களுக்கு இடையில் மாற்றங்கள்!!
தொந்தரவின்றி ஆர்பாட்டம் செய்யும்!
போது,!
மனதில் தொந்தரவுகள் ஏக்கமாய்...!
எப்பொழுது வெளிவருவாய்!
வலிகள் நித்தமும் ஆட்கொண்ட!
நிலையில்...!
வெட்கத்துடன் கருமுட்டைகள்!
வெளி வருகின்ற கணங்கள்!
ரணங்களாய்

மண் மணம்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
கல்லும் மண்ணும் !
மறுபிறவி யெடுத்து !
சுயவடிவம் பெற்றதுபோல் !
ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது. !
எங்கள் வீடுகளெல்லாம் !
வீதிக்கு வந்து !
மாதங்கள் பலவாகிவிட்டன !
வீதியாய்மாறிவிட்ட பல !
வீடுகளும் உண்டு. !
தரை கரையெல்லாம் வெறிச்சோடிக் !
கவனிப் பாரற்றுக் கிடக்கிறது !
அலைகள் மட்டும் !
மீண்டும் மீண்டும் !
சீண்டிப் பார்க்கிறது !
கரையை நக்கி நக்கி. !
ஆயிரம் ஆயிரம் உயிர்களை !
அப்படியே ஏப்பமிட்டும் !
அமைதியாய் அடங்கிக் கிடப்பது !
அந்த ஆழி மட்டும்தான். !
மெல்ல மெல்ல அடியெடுத்து !
மணற்பரப்பை நோக்கி நகர்கிறேன். !
வாசனை - மண்ணின் வாசனை !
வாரி நெஞ்சில் தடவிக்கொள்கிறேன் !
இன்னும் மாறவில்லை !
இந்த மண்ணின் வாசனை மட்டும்

அசைவின்றி ஒரு பொழுது

றஞ்சினி
ஞாயிற்றுக்கிழமை!
நேரம் நான்கு மணிதான்!
மனிதர்கள் இருப்பதாக!
தெரியவில்லை !
காற்றுடன் !
போராடிக் கொண்டிருக்கும்!
மரங்களும் !
குளிரும் மழையும் !
நானும்தான்.. !
அயல் வீடுகளில் !
இருள் குடிவந்திருக்கிறது!
வாகனங்களுக்குக்கூட!
இன்று ஓய்வுபோலும்!
தொலைபேசி அடிக்கடி !
சிணுங்கிக்கொண்டிருக்கிறது!
எப்பவோ நான் !
மறந்துபோன!
காதலன் இன்றும்!
அழைக்கிறான்!
நண்பியின் சலிப்பான !
வார்த்தைகள் !
ஒலிப்பதிவு நாடாவில்!
யாருடனும் !
பேசவேண்டும்போல் !
இல்லை!
எதைப்பற்றியும் அறியவோ!
சிந்திக்கவோ!
ஆசையும் இல்லை!
போர்வையின் !
கணகணப்பான !
அணைப்பிலிருந்து!
உடல் அசைய மறுக்கிறது

மூன்றாம் காதல்

நெப்போலியன் சிங்கப்பூர்
பத்தாம் வகுப்பு !
படிக்கையில் !
பக்கத்தில் !
அமர்ந்திருந்தவளுக்காய் !
எழுதிய காதல்கடிதத்தை !
அவள் அப்பாவை ? !
படிக்கவைத்துப் !
பார்த்த...... !
முதல்காதல்! !
வேலைக்குச் செல்கையில் !
ரயில்வண்டியில் !
எதிர் இருக்கையில் !
இரண்டுவருடத்திற்கும் மேலாய் !
அடைகாத்து ? !
சொந்தவாகனம் உடையவன் !
அறிமுகம் கிடைத்ததும் !
பரிதவிக்கவிட்டுப் !
பறந்துபோன...... !
இரண்டாம்காதல்! !
மூத்தவன் வலதுகையிலும் !
இளையவள் இடதுகையிலும் !
என் விரல்களைக் கோர்த்தபடி !
நடந்துகொண்டிருக்க...... !
கடைக்குட்டியை !
அவள் !
வயிற்றில் சுமந்தபடி !
முற்றுப்பெற்ற? !
மூன்றாம்காதல்

மின்னல்.... மின்னல்

பட்டுக்கோட்டை தமிழ்மதி
எங்களூர் இருட்டு வீதியில் !
எரிந்தும் எரியாமலும் !
இமைக்கும் !
குழல் விளக்கின் குளிரொளியா? !
இல்லை !
வானமென்ன உடைந்தாவிட்டது? !
அங்கே !
ஒட்டவைக்க !
மின் பற்றவைப்பா? !
இல்லை !
நிலம் பார்க்கும் !
நிழற்படக் கருவி !
வானிருந்து படமெடுக்க !
வரும் ' பளிச் ' ஒளியா? !
இல்லை !
சூரியன் இழுத்துப்போன !
வெளிச்சம் கொஞ்சம் !
இருட்டில் ஒளிந்ததா? !
அதை யாரோ கண்டுபிடுத்துவிட !
அந்த வெளிச்ச குதிரை விரைந்தெங்கோ !
ஓடுவதின் சுவடொளியா? !
இல்லை !
ஊருக்கு !
கருப்புமேகத்தை கடந்துபோகும் !
வெள்ளை விமானமா? !
இல்லை... இல்லை... !
மேகக் கூடையில் !
பூந்தேனாய் சேர்ந்திருக்கும் !
நீர்த்துளி துளிகள் !
நேர் எதிர் மின்னூட்டம் பெற்று !
நிகழும் !
மின்னோட்டச் சந்திப்பே !
மின்னல்... மின்னல்

நவீன ஆசான்கள்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
வகுப்பிலொரு ஆசான்!
வரும் பதவியுயர்ப்!
பரீட்சைக்காய் விழுந்தடித்துப்!
படிக்கின்றார் பாலகர்முன்.!
இன்னுமொரு ஆசான்!
இன்சிரியூட் பாடங்களை!
இதமாய்த் திருத்துகிறார்!
இதுவும் வகுப்பறையில்தான்.!
சொந்த வேலையென்று!
சோலிகளைக் கவனிக்க!
சென்றிடுவார் இன்னொருவர்!
சோக்குக்கட்டிகளை எறிந்துவிட்டு.!
செல்போனைக் கையிலெடுத்து!
சேதி அறிந்திடுவார்!
'வருகிறேன் இதோ' என்று!
பைக்கை முறுக்கிடுவார் வேறொருவர்.!
அதிபரும் பிள்ளைகளும்!
அமைதியாய் இருப்பதுகண்டு!
ஆச்சரியப்படுவர் மற்றைய!
ஆசான்கள் ஆத்திரத்துடன்.!
ஆத்திரப்படும் ஆசான்கள்!
அல்லா ஹ்வுக்குப் பயந்தவர்களாம்!
அப்படியும் ஒருகதை!
அங்கு உலவுகிறது.!
பிள்ளைகளின் பள்ளிவிட்ட!
பின் படிப்பும் (ரியூஷன் கல்வி)!
அதிபரின் 'ஷசைட்' வருமானமும்!
அந்த ஆசான்களின் கையில்தானாம்.!
!
-எஸ்.ஏ.ஹப்பார்

கேள் , இஸ்றேல்

எறிக் பிறைட் (Erich Fried)
( Höre , Israel )!
!
நாங்கள் அழிக்கப்பட்டபோது!
நான் உங்களில் ஒருவனாக இருந்தேன்!
எப்படி நான் அப்படியே இருக்கமுடியும்!
நீங்களும் அழிப்பவர்களானபின் ?!
!
உங்கள் தவிப்பாக இருந்தது!
உங்களைக்கொன்ற இனம்போல் ஆவதற்கு!
நீங்களும் அவர்கள்போலாகிவிட்டீர்கள் !
இப்போது!
!
நீங்கள் தப்பிவிட்டீர்கள்!
குரூரமானவர்களிடமிருந்து!
அவர்களின் குரூரம் !
வாழ்ந்து கொண்டேயா இருக்கிறது உங்களிடம் ?!
!
அடிபட்டவர்களிடம் கட்டளை இட்டீர்கள் !
'கழட்டுங்கள் உங்கள் பாத அணிகளை'!
பழிசுமத்தப் படட்டவர்களைப்போல் !
அவர்களை பாலவனத்திற்குள் விரட்டினீர்கள்!
!
சாவின் பெரிய பள்ளிவாசலுக்கு!
அவர்களின் மண்ணிலான பாத அணிகளுடன்!
ஆனால் !
அவர்கள் பாவங்களை ஏற்கவில்லை!
நீங்கள் சுமத்த முயன்றதுபோல்!
!
பாலைவன மணலில் !
நிர்வாண பாதங்களின் அடையாளங்கள் !
நீடித்தன!
உங்கள் குண்டுகள் !
கவசவாகனங்களின் சுவடுகளைவிட .!
!
ஜேர்மன் மொழியில் இருந்து , தமிழுக்கு றஞ்சினி!
!
Erich Fried 1921 – 1988 வாழ்ந்தவர்!
விமர்சகர், கவிஞ்ஞர். Erich Fried யூதர் என்பதாலும் இவரது எதிர்ப்பு எழுத்தினாலும் தான் பிறந்த இடமான வீன் (Wien) இருந்து துரத்தப்பட்ட்டார், அங்கிருந்து தப்பி லண்டனில் புகலிடம் ,இவரது தந்தையும் நாசிகளால் கொல்லப்பட்டார் .2ம் மகா யுத்தத்தின்பின் ஜெர்மனிக்கு திரும்பி 1946 லிருந்து சுதந்திரமான எழுத்தாளரானார். இவரது தீவிர விமர்சனங்களும், தொடரான பேச்சுத்திறனும் இவர் ஆபத்தானவர் என்பதை பலரும் அறிந்திருந்தனர், இவரின் காதல் கவிதைகள் இவருக்குள் இருக்கும் இழகிய மனதையும் காட்டியது . யூதனாக யுதர்களுக்கு நாசிகளின் ஆட்சியில் நடந்த கொடுமைகளை எழுதிய அதே நேரம் யூதர்கள் பலஸ்தீனத்தைப் பிடித்து பாலஸ்தீன மக்களுக்கு செய்யும் கொடுமைகளை விமர்சித்தும் எதிர்த்தும் பல கவிதைகள் எழுதியுள்ளார்

சின்னபாரதி கவிதைகள் 28-10-07

சின்னபாரதி
சுவடு!
சேயாக எனைவளர்க்க!
தாயாக - உன் !
அடிவயிறு வாங்கிய !
அடையாளக் கோடுகள் .!
!
அம்மு பாப்பா!
முகமுள் குத்தாமல்!
முத்தத்ததை வாங்கித் தந்தாலும் !
எச்சில் படா முத்தம்.,!
இனிப்பில் ஏனோ பஞ்சம். !
!
அன்னை தெரசா!
நீ!
தாயாகவில்லை என்றாலும்,!
உன் சேய்., நான்.!
எழுத்து: சின்னபாரதி

தோள்களில் அமர்ந்தி. . மழைப்பாடல்

எம்.ரிஷான் ஷெரீப்
தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்.. மழைப்பாடல் ..!
!
01.!
தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன் !
--------------------------------------------------------!
தோட்டத்துக் காவல்காரன்!
நித்திரையிலயர்ந்த கணமொன்றில்!
தனித்துவிழும் ஒற்றை இலை!
விருட்சத்தின் செய்தியொன்றை!
வேருக்கு எடுத்துவரும் !
மௌனத்திலும் தனிமையிலும்!
மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்!
வந்தமர்ந்து காத்திருக்கிறான்!
இறப்பைக் கொண்டுவரும்!
கடவுளின் கூற்றுவன் !
நிலவுருகி நிலத்தில்!
விழட்டுமெனச் சபித்து!
விருட்சத்தை எரித்துவிடுகிறேன் !
மழை நனைத்த!
எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்!
இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது!
ஈரத்தில் தோய்ந்த!
ஏதோவொரு அழைப்பின் குரல் !
02.!
மழைப்பாடல் !
-------------------!
தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க!
சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும்!
இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி!
என்னை சிறையிலிட்டுக் கொண்டேன்!
வெளியேற முடியா வளி!
அறை முழுதும் நிரம்பி!
சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில்!
மூடியிருந்த யன்னலின் கதவுகளைத்தட்டித் தட்டி!
நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை