தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நிலைக் கண்ணாடி

முத்துசாமி பழனியப்பன்
சுய நினைவுள்ள எந்தவொரு!
அந்திப் பொழுதிலும் உனைப்!
பார்க்கத் தவறியதில்லை - நான்!
அழைத்த குரலுக்கு இசையும்!
என் குழந்தைக்கு அடுத்து - நீ!
என்னைக் கேட்காமலேயே வழி!
பற்றிக் கொள்வாய் - எங்கு!
சென்றாலும் பின் தொடர்வாய்!
உன்னை மறைத்த குற்றத்திற்காய்!
வழக்கு மன்றம் வந்து போய்க்!
கொண்டிருக்கிறது மேகம் இன்னமும்!
உன் பிறப்பும் இறப்பும் நீயறிவாய்!
ஒரு நாள் துக்க தினம் வானத்தில்!
கைமாறு என் செய்வேன் நான்!
களை பறித்து நீர் பாய்ச்சியிருக்கிறேன்!
காவல் இருந்திருக்கிறேன் - களத்து மேட்டில்!
தொலைத்த காலணாவைக் கண்டிருக்கிறேன்!
ஒற்றையடிப் பாதையில் ஒருவனாய் நடந்திருக்கிறேன!
தேர்வுக்குத் தேவையான அளவு படித்திருக்கிறேன்!
வீட்டுப் பாடம் எழுதி நோட்டுக்களோடு தூங்கியிருக்கிறேன்!
நீ கொடுத்த இலவச மின்சாரத்தில்!!
உன்னை முதல் நாளே பார்க்க!
பல முறை பல நாள் தவமிருந்திருக்கிறேன்!
கரும்புகை குறைவாக்க வேண்டி!
ஆலைகளுக்கு ஓலை அனுப்பியிருக்கிறேன்!
களத்து மேட்டுக் கனவிலும் நீ வருவாய்!
கண் விழித்துப் பார்த்தாலும் நீ தெரிவாய்!
காவலுக்குக் காவலிருப்பாய் எனக்கு நேராக!
உன்னோடு ஓட்டப் பந்தயம் வைத்து!
ஓடைக் காட்டில் எத்தனையோ முறை!
இடறி விழுந்திருக்கிறேன்; சிரித்திருக்கிறேன்!
நடந்தால் நடப்பாய்; நின்றால் நிற்பாய்!
உனையென் நிலைக் கண்ணாடி என்பதோ?!
தீராத காதல் கொண்டிருக்கிறேன் உன் மீது!
அனுதினமும் உன் முகம் காட்டு

மெளன ராகம்

வல்வை சுஜேன்
பாடும் புல்லாங்குழல் ஒன்று!
ஊமை யாவதேன்!
இந்தக் குழலுக்குள்!
இன்னும்!
பூபாளம் இருக்கிறது!
மரணித்த மணவாளனும்!
அதை எடுத்துச் செல்வதில்லை!
வசை பாடும் வலியோரே!
தேய்ந்த குழல் அல்லவே இவள்!
தென்றல் தொட்டாடுகின்ற!
அந்த கீற்றுனை கேளுங்கள்!
இவள் பாடும் ராகங்களை!
அது அறியும்!
அழியாத ராகங்கள் எத்தனையோ!
இந்தக் குழலுக்குள்ளே!
தாள நயங்களோடு!
நூல் வேலிக்குள் நின்று!
மெளன ராகம்!
இசைத்துக்கொண்டே இருக்கிறது!
மனசுக்குள் ஏன் இன்னும் மத்தாப்பு!
புதுமை படைத்திட!
எத்தனை நாள் காத்திருப்பீர்.!

என்றும் காதலனாய்.. காய்ச்சல்

ரஞ்சினிமைந்தன், திருப்பூர்
என்றும் காதலனாய்...!!
---------------------------!
கன்னியாய்க் கண்டேன் - பின் உன்னை!
கல்யாணப் பெண்ணெனக் கண்டேன் !!
இன்று...!
கருவுற்ற இளமயிலாய் காண்கிறேன்;!
நாளை...!
கருணைப் பாலூட்டும்... தாயென்றும் !
காண்பேன் !!!
என்றும் மாறாத...!
காதலனெனும் நிலையிலிருந்து...! !
!
02.!
காய்ச்சல் வேணும்...!!
-------------------------!
அன்று வந்த காய்ச்சலே...!
பல முறை வர வேணும் எனக்கு!!
முடியாமல் போன போது....!
என் அம்மாவே எனக்கு ஊட்டி விட்ட!
அப்பரிஸம்...!
பல முறை நிகழ்வதற்கு...!
அன்று வந்த காய்ச்சலே...!
பல முறை வர வேணும் எனக்கு

பெருநகரப் பூக்கள்

எம்.ரிஷான் ஷெரீப்
தனித்தனியாகப் பிரிந்துசெல்லும்!
பாதைகள் வழியும்!
அடர்காட்டுக்குள்ளும்!
பூத்துக்கிடக்கின்றன!
சில வனாந்தரப்பூக்கள் !
வாசத்தைப் பரப்பும்!
பூக்களை ரசிக்கவோ!
பூசைக்கென்று கொண்டாடவோ!
யாருமற்ற வெளியிலும்!
இயல்பினை மறக்காமல்!
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக!
பூத்துக்கொண்டே இருக்கின்றன !
இயற்கையின் பன்னீர்த்தூவல்!
ஒளிக்கீற்றின் களி நர்த்தனம்!
இலை மிகுக்கப் பச்சையங்கள்!
வட்டமிட்டபடியே சுற்றிவரும் தேன்குருவி!
அனைத்தும் மிகைத்துக் கிடக்க!
காட்டுப் பூக்களுக்குக் கவலையேதுமில்லை !
ஒளி மறுக்கப்பட்டுக்!
குளிர்விக்கப்பட்ட அறையில்!
பூ மலர்ந்தபொழுதில்!
தொட்டிச் செடிக்கு மனதும் வலித்தது!
மூன்றாவதாகப் பிறந்ததும் பெண்ணாம் !

நான்

கவிவள்ளி
அனைவரும் சுவாசிக்கும்!
காற்றாய் இருப்பேன்.!
மென்மையான தென்றலாய்!
மட்டுமல்ல...!
முகமூடி மனிதர்களின்!
நிஜத்தைக் கண்டால் !
சீறிவரும் !
சூறாவளியுமாய்...!
எப்போதும் புன்னகையே !
சிந்தும் மலராய் இருப்பேன்.!
மனம் மயக்கும் !
மணம் வீசுவதற்கு!
மட்டுமல்ல...!
புறஅழகை மட்டுமே !
விரும்பி வரும் !
வண்டுகளுக்கு!
உயிரோடு விழுங்கும் !
நெப்பந்தஸ் மலராய்...!
அனைவரையும் தாங்கும் !
பூமியாய் இருப்பேன்.!
தன்னைத் தோண்டுபவரை !
தாங்கும் நிலம் போலல்ல...!
ஜாதிமத ஏற்றத்தாழ்வுகள் !
அதிகமாகும் போது !
வெடித்துச் சிதறும் !
பூகம்பமுமாய்...!
மொத்தத்தில் பாரதி கண்ட !
புதுமைப் பெண்ணாய் அல்ல!
பெண் பார்வையில் !
பெண்ணாய்...!
- கவிவள்ளி!
புதுச்சேரி

மனம்போன போக்கில்

அகரம் அமுதா
கட்டுப்பா டொன்றில்லாக் காட்டாறாய் ஓடுகிறாய்!
கவின்நெஞ் சே!மார்!
தட்டிப்போர் வீரனெனத் தாவிக்கு தித்தாடித்!
தருக்கி யேசீர்!
கெட்டுப்போ எனஎன்னைச் சிலநேரம் தூண்டிப்பின்!
கிளர்ந்தெ ழுந்து!
சுட்டுப்போ கின்றாயே! தொடருமுன் விளையாட்டால்!
தூக்கங் கெட்டேன்!!
அகமெனும் பெயரினிலே அமர்ந்தென்னுள் நாளும்நீ!
ஆடு கின்ற!
நிகழ்பட ஆட்டத்தில்* நீயியக்குப் பிடியானேன்;!
நினைவ கத்தில்!
தகவுடன் காட்சிகளைத் தக்கபடி சேமிக்கும்!
தரவு மாகி!
நிகழ்படக் காட்சிகளாய் நிதம்காட்டும் ஒளிச்சுருளே!!
நீதான் நானா?!
மேனியெனும் வன்பொருளில்!
விரும்பியிறை வன்நிறுவும்!
மென்பொ ருள்நீ!
தீனியென எனைத்தின்னும் தீநுண்மி ஆகின்றாய்!
சிலநே ரத்தில்!
மேனியினைக் காக்கின்ற நச்செதிர்ப்பி யாயறிவு!
மிளிர்ந்த போதும்!
நானிதுநாள் வரையுன்றன் நல்சூதம் முழுதறியேன்!
நவிலு வாயோ?!
ஆய்ச்சியர் தம்மிருகை அன்னவறி வும்நீயும்!
அமர்ந்தி ழுக்க!
தேய்புரிக் கயிறானேன்; தேரியநல் வழியிலெனைச்!
செலுத்த வேண்டி!
ஆய்ந்திறை வன்னென்னுள் அமைத்திட்டான்; ஆனாலும்!
அறிவும் நீயும்!
வாய்க்கிற பொழுதெல்லாம் வாய்ச்சண்டை புரிகின்றீர்!
வலியைத் தந்தீர்!!
நன்னூல்கள் பலநாடி நான்கற்க நல்லறிவு!
நவின்ற போதும்!
கண்ணாளன் முன்போகக் கண்ணாட்டி பின்செல்லும்!
காட்சி போல!
முன்னாலே நீபோக நானுன்னைப் பின்தொடர்தல்!
முறைமை ஆமோ?!
உன்னாலே என்னுயர்வு தாழ்வெல்லாம் என்பதனை!
உணர்ந்த துண்டா?!
மான்போன போக்கிலிரா மன்போக, மனம்போன!
வழியில் சீதை!
தான்போக நேர்ந்ததனால் நிகழ்ந்ததன்றோ! மாரீச!
தார்வேந் தென்னும்!
மான்சாக இராவணன்தன் மனம்போன வழிபோன!
வகையா லன்றோ?!
ஆன்போன வழிபோகும் அதன்கன்றாய் நானுன்பின்!
அலைந்தேன் கெட்டேன்!!
ஓருருவம் இல்லாத உள்ளுணர்வே! நீயென்னுள்!
ஒளிந்து கொண்ட!
பேருருவம் என்பேனா? பெரும்பிழைகாண் என்பேனா?!
பிழைபொ றுத்து!
நீருருவம் காட்டுகிற நினைச்சரியே என்பேனா?!
நீயென் னொத்த!
நேருருவம் கொண்டதனால் நெருங்கியுற வுறுவேனா?!
நீங்கு வேனா?!
பொறை,காதல், மகிழ்ச்சி,யிரண் டகம்,வெகுளி, ஆசை,யன்பு!
பொருந்தப் பெற்ற!
நிறைகுடமே! உன்னுள்தான் நிறைந்தவுணர் வுகள்பலவாம்!!
நின்னால் நானும்!
நிறைகுடமாய் நிமிர்கின்றேன்; நேரெதிராய்ச் சிலநேரம்!
நின்னால் தானே!
குறைகுடமா னேனென்னுள் குறைகுறைய நிறைநிறையக்!
குறிக்கோள் ஏற்பாய்

மனித நேயக் கிரீடம் அணியுங்கள்

வேதா. இலங்காதிலகம்
குழந்தைச் செல்வங்கள், குமுதமலர்க் கொத்துகள்.!
குடும்ப விளக்குகள், குளிர் தென்றல் அலைகள்.!
உவகைமிகு சர்வதேச உயிர்ச் சிலைகள்.!
உயிர் அதிசயங்கள், உணர்வுக் காவியங்கள்.!
தாழ்வது வந்தாலும் தைரியம் தருகின்ற!
வாழ்வுக் கடலின் வைரத் தெப்பங்கள்.!
!
உலகத்து உதடுகள் உணர்ந்து புகழும்!
உன்னத தீபங்கள் உளி செதுக்காச் சிலைகள்.!
மனவாதை இருளின் ஒளி தேவதைகள்.!
மனங்கவர் புன்னகை, மழைமின்னற் கீற்றுகள்.!
வாழ்க்கைச் சுவடுகளின் காலடித் தடங்கள்.!
வாழும் கவிதையாய் நடமிடும் மழலைகள்.!
பெற்ற செல்வங்களைப் பேணத் தவறிடில்!
சுற்றம் தொலைந்திடும், பற்று அறுந்திடும்.!
குற்ற உணர்வுடன் வெற்றி தொலைப்போம்.!
மற்றவர் போற்றிடும் நிலை விலகிடும்.!
காற்றுள்ள போது கறைகளைத் தூற்றாவிடில்,!
ஆற்றில் வெள்ளமாய் சேற்றோடவர் புரள்வார்.!
கற்ற அறிவாலெவரும் கொற்றம் பெறலாம்,!
நற்றமிழ் வானில் துருவ நட்சத்திரமாகலாம்,!
பண்பு மேடையில் அன்பு வாழ்வமைக்கலாம்,!
இன்ப நகரத்துச் சரித்திர நுழைவாயிலாகலாம்,!
மழலைப் பூக்களை மதித்து அணைத்தால்.!
மனிதநேயக் கிரீடம் மகிழ்ந்து அணியலாம்.!
!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ் டென்மார்க்

பாதத்தோடு ஒட்டாத நிழல்

வசந்த் கதிரவன்
சாபமிட்டு எறிந்தாலும்!
பாதத்தோடு ஒட்டாத நிழலாய்!
தொடர்கிறது!
உறங்கும் போது!
இருளின் இருளாய்!
ஒட்டிக் கொள்ள முயல்கிறது!
தாழிட்டு இறுக்கி!
ஓரத்தில் வைத்தாலும்!
பலகுரலிசை!
நாய்க்கு ஊற்றப்பட்ட பழங்கஞ்சியாய்!
என் ...அது!
அது இல்லாமல் அலைகிறேன்!
புதிதாய் தேடி

எனக்கான ஒரு வரவு

பொன்னியின் செல்வன்
மனது முழுக்க!
ததும்பி வழியும்!
கேள்வி முடிச்சுகள்..!
உறங்கும் புத்தியில்..!
ஓராயிரம் எண்ணங்கள்..!
அனைத்திற்கும் தீர்வாய்..!
தனிமையில் நான்...!
வேண்டியது வேண்டி!
வினைதேடும் காத்திருப்புகள்..!
கனவிலும் விரட்டும்!
கடிவாள நிருபணங்கள் ..!
விடைகளே அறியா!
வினாக்களின் விரட்டல்கள்.!
எனக்குள்ளே இரைச்சலாய்..!
புத்திமுழுக்க உரசல்கள்..!
உடல்முழுக்க தழும்புகள்.....!
தனிமையில் ... அதற்கான!
மௌனத்துடன் காத்திருக்கிறேன்..!
எனக்கான ஓர் வரவிற்காக...!

உறவு ஒன்று புதிதாய் உருவாகும்

கத்துக்குட்டி
உருவங்கள் உணராமலும் கருத்தா¤க்கும்!
வேறெவரும் உ£¤மைபெற உள்ளம் மறுக்கும்!
எமக்கு மட்டும் சொந்தமானது!
என்றெண்ணி மனம் பெருமிதம் கொள்ளும்!
எமைவிட்டு பிரிந்து செல்லும் நிலைவா¤ன்!
ஏன் ? என்று பலவகை வினாக்கள் எழும்!
விடைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும்!
விதி என்று வெளி வார்தை பேசும்!
கோபம் வராமல் பொய்யாய்!
கோப வார்த்தை பரிமாறும்!
உள்ளம் அழும்!
மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி!
தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும்!
முதற் காதலின் வெறுமை இதயத்தின்!
ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக!
மேடையில் வாழ்க்கைத் தொடா¤ன்!
அடுத்த காட்சி அரங்கேறும்