தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அன்பின் பெருநாள்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
இதயத்தில் சுரக்கும்!
அன்பின் ஊற்றாய்!
இருட்டை அகற்றும்!
அறிவு விளக்காய்!
ஆசையெனும் நிழலை!
விரட்டும் ஆதவனாய்!
வையகத்தின் வரலாற்றில்!
வரமாய் ஜொலித்திடும்!
தேவமைந்தன் பிறந்தநாள்!
அன்பிற்கோர் திருநாள்!
தன்னைப் போலே!
பிறனையும் நேசி!
தவறாத உண்மையை!
வேதமாக ஒப்பித்தான்!
மனிதர்களை ரட்சிக்க!
மண்ணிலே ஒருயிராய்!
மனிதர்கள் மத்தியில்!
மாபெரும் ஜோதியாய்!
ஞானத்தின் வழி நின்று!
வானமாய் விரிந்தவன்!
மதங்களின் பெயராலே!
மனிதர்களை பிரிப்பது!
மனிதாபிமானம் அற்றவர்களே!
மாபெரும் உண்மைதனை!
மறக்காமல் இருக்க!
மற்றையோரையும் !
தன்னைப்போல்!
மதிக்கச் சொன்னவன்!
மேரிமாதா மைந்தனாய்!
பாரினிலே விழுந்தவன்!
வாடிநின்ர உள்ளங்களை!
மாரியாய்ப் பொழிந்து !
நனைத்தவன்!
ஏழைகளின் காவலனாய்!
நாளைகளின் ரட்சகனாய்!
நேற்றைகளின் நினைவுகளில்!
சுகந்தமாய்க் கலந்தவன்!
கிறீஸ்துமஸ் திருநாள்!
கிறீஸ்தவர்களுக்கு மட்டுமல்ல!
அன்பை மதிக்கும் உள்ளங்கள்!
அனைத்துக்கும் பெருநாளே!
இனிய இத்திருநாளில்!
இதயத்தால் ஒன்றுபட்டு!
அனைவரும் மனிதர்களே!
அதிரவே கோஷமிடுவோம்!
தேவன் யேசுவின் போதனைகள்!
மனிதர் அனைவர்க்கும் பொதுவே!
அனைத்து நண்பர்களுக்கும்!
அன்பான கிறீஸ்துமஸ் வாழ்த்துக்கள்

அவசரம்.. அலுக்காத வசீகரம்

வேதா. இலங்காதிலகம்
01.!
அவசரம்!
----------------!
அவசரம் ஒரு குறை வரம்,!
அவலம் பெருக்கும் அந்தரம்.!
அவதி அவதியாய்ப் படும் அவசரம்!
அவஸ்தையான மன நெரிபாடு.!
அவசரம் மனிதனுக்கு அவசியமற்ற!
அவப்பொழுதை உருவாக்கும்.!
அவசர காரியம் சிதறிப் போகும்.!
அவசர உணவும் புரையேறிப் போகும்.!
தேகம் படபடத்து நிதானமிழக்கும்.!
நாகரிகமின்றி வார்த்தைகள் நழுவும்.!
வாகாக வேலைகள் வாகை பெறாது.!
தேகாரோக்கியமும் அவசரத்தால் நழுவும்.!
அவதானமாய்ச் செய்யும் செயற்பாடு – மனம்!
உவகையாய்க் கொள்ளும் சுகப்பாடு.!
பத்திரமான நிதானமும் நிறைவும் ஒரு!
மொத்தமான பூரண பலன் தரும்.!
!
02.!
அலுக்காத வசீகரம்….!
---------------------------!
பரந்து விரிந்து, விழிகளுக்கு விருந்தாகி!
பரவசம் தந்து பளிச்சிடும் கோல எழில்.!
பிரமிப்பூட்டும் அழகிய வானமே நீ!
இரகசியம் நிறை தரவல்லவோ! உலகிற்கு!!
மின்னும் சூரியக் கதிர் சோபையில்!
உன்னைச் சூழ்ந்த நட்சத்திரத் தேவதைகள்!
என்னவாகிறார்கள் சொல்! பயணத்தில்!
என்னோடு தினம் ஓடும் வானமே!!
என்னுள்ளமள்ளும் கடல் நீலக்குடையே!!
உன் தவசியான மோனம் ஊருக்கும்!
என் மன அமைதிக்குமொரு தானம்.!
கண்களுக்குத் தினம் அலுக்காத வசீகரம்

தமிழ் சுகந்திரம்

மன்னார்.பி.அமல்ராஜ்
ஒட்டறை போர்த்திய!
ஒரு முளம்!
கயிறு - இந்த!
தமிழ் சுகந்திரம்..!
அடிவிளுகையில்!
குனிந்தே நின்றதால்!
பையிலிருந்த!
சுகந்திரம் - பத்திரமாய்!
காப்பற்றப்பட்டது.!
ஓடியபோதும்!
ஒட்டியே வந்தது!
நம்!
ஓடுகாலி சுகந்திரம்..!
என்னவோ,!
உயரத்திலிருந்து!
விழுந்ததால்!
பட்ட அடி!
கொஞ்சம் அதிகம்.!
சூம்பிப்போன!
கனவுகளோடும்,!
நாறிப்போன!
லட்சியத்தோடும்,!
எம் - கிழிந்த!
பைகள் தாங்கும்!
தமிழ் சுகந்திரம்!
இன்னும் மரிக்கவேயில்லை.!
காவடி தோளேற!
தமிழ் கர்வம்!
தலைக்கேறும்!
மீண்டும்

செண்பகபாண்டியன் கவிதைகள் 2

செண்பகபாண்டியன்
1.சிறுத்த இருத்தல் !
செண்பகபாண்டியன் !
!
செக்க சிவந்த வானம் !
சிறுவண்டு சங்கீதம் !
பருத்த அகம் பாவம் !
இருத்தலின் சிறுகுறி !
கருத்து உறுத்தும் மேகம் !
உரத்த இடிமழையுடன் !
சிறுத்த தடி மனம் !
புலம் பெயர்ந்தமையாலே !
2.கெட்ட மானுடம் !
செண்பகபாண்டியன் !
விழித்தேறி வெளிப்புக !
சலித்தேறி மனம்புக !
கலிப்பேறி கனம்சுக !
வெட்டவெளி தவம்சுட !
சிவப்பேறி யுகம்புக !
தவஒளி சுடர்விட !
கெட்ட மானுடம் !
சுட்டு விட !
உவப்பேறி உள்கொண்டேன் !
உள்கொண்டு பின்பும் !
உள்கொண்டேன்

கண்திருஸ்டி வினாயகர்

கவியோகி வேதம்
(சந்தம்)!
பட்ட “த்ருஸ்டி” போகவே!
பாய்ந்து வந்து தோன்றினான்!!
துட்டர் கண்ணைப் போக்கவே!
சூலம் கையில் ஊன்றினான்!!
கட்டி வைரம் மண்ணுள்ளே!
கண்படாமல் போயினும்!
வெட்ட வெட்ட மின்னலாய்!
வெளியில் வந்த(து) ஒப்பவே!
அகத்தியர் முன் நின்றவன்!
அவரோடு உள்ளே போனவன்!
சகத்தின் மக்கள் துன்பத்தைத்!
தாங்கொணாது வந்தனன்!
சுகத்தை ஊட்டி நின்றனன்!!
தூய நிலவாய்ப் பரவினன்!!
அகத்துள் வந்த கணபதி!!
அகக்கண் ”த்ருஸ்டி” கணபதி!!
விஷ்ணுவைப்போல் சக்கரம்!!
வேலனைப்போல் ”ஆயுதம்”!!
இஷ்ட ஆஞ்ச நேயன்போல்!
இடது கையில்பெருங்கதை!!
துஸ்டர் அஞ்சும் “காளி”போல்!
”சூலம்” ”அங்குசத்துடன்!
கஸ்டம் போக்கும் கணபதி!!
”கண்” ஆம் “த்ருஸ்டி” கணபதி!!
முடித்து வைப்பான் செயல்களை!
மோதகத்தைப் படையுங்கள்!!
பிடித்து வைப்பான் வரங்களை!!
”பிட்டு” தந்தே துதியுங்கள்!!
கடித்தே உங்கள் வினைகளைக்!
களைய ”கரும்பு” தாருங்கள்!!
துடித்தே சொல்லும் என் ”மந்திரம்”!!
தும்பிக்கையின் தந்திரம்

மீண்டும் வருவாய் என

கோகுலன்
கண்ணீர் நீங்கலாக !
எனதன்பின் எச்சங்கள் உகுத்து!
கூட்டுப்புழுவையொத்து!
சுற்றிலும் வலை பின்னுகிறேன்!
இங்கே இயல்பாயிருத்தல் !
இயலாதெனினும்!
அதை கிழித்து அப்புறத்தில் !
பறந்துபோகும் ஆசையோ!
பிறிதொரு வண்ணச்சிறகுகள் பற்றிய!
கனவுகளோ ஏதுமில்லை !
காற்றில் கரையும் உயிரை !
தேடித்தேடி சேகரிக்கிறேன்!
அள்ளிக்கொஞ்சவோ!
அணுவணுவாய்க்கொல்லவோ!
என்னைத்தேடிவரும் காலையில்!
உனக்கது உபயோகமாயிருக்கும்

இதயமே இல்லாத இரத்த உறவுகள்

அரசி
இதயமே இல்லாத இரத்த உறவுகள்!!.....அடங்கி போக... அடிமைகள் இல்லை நாம்!!!!
!
01.!
இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!!
----------------------------------------!
பணத்திற்கும் பகட்டிற்கும்!
பல் இளிக்கும் கூட்டம்...!!
பந்தா காட்டி பழகுவதும்..!
பச்சோந்தி தனமாய் உரு மாற்றுவதும்!
முதன்மை குணங்களாம்..!!!
இமயமாய் இடுக்கண் வருங்கால்..!
இழிமொழி கொண்டு வைய்ந்திடும்!
இரு வேடமிட்ட இரத்த உறவுகளாம்!
இவர்கள்...!!!!
இரத்தத்தினை உறிஞ்சிடும் உறவுகள்!
இரத்த உறவுகள் தானோ...!
இரு வதனம் கொண்டு!
இன்பமாய் மலர்ந்து பேசி,,!
இரண்டகம் செய்து குந்தகம் விளைவிக்கும்!
இரணியர் கூட்டமன்றோ..??? !
நெஞ்சத்திலே வஞ்சம் சேமித்து - எமக்கு!
பஞ்சம் வரும் போது கொஞ்சம்!
இனம் காட்டிடுவர் - தம்!
இரும்பு நெஞ்சமதை!
இருப்பதை கொடுத்தாலும்...!
இல்லாததை இல்லை என்றாலும்,,!
இடித்து பேசிடும் பொல்லாத கூட்டம்...!!!
இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!!
இப்படி ஒரு உறவு!
இருந்தால் என்ன...???!
இறந்து தான் போனால் என்ன...???!
!
02.!
அடங்கி போக... அடிமைகள் இல்லை நாம்..!!!!
------------------------------------------------------!
நாலாம் மாடியில்!
நான்கு திங்களாய்!
நா வறண்டு கிடக்கின்றோம்..!!!
நாயினை ஒத்து.... இல்லை!
நாய் கூட சுதந்திரமாய்..!!
!
நாதியற்று(சொந்தங்களின்றி)!
நாமில்லை..!!
நாதியற்ற(கேட்பாரற்ற) இனமென்பதாலோ..??!
நான்கு சுவருக்குள் நாம்..!!!
நாட்டினை ஆளும் இனம்!
நாலா புறமும் சேவையில்..!!
நாளை விடியுமா - நீண்ட!
நாளாக இதே ஏக்கம்..??!
!
அடைத்து வைத்து!
அழகு பார்க்கின்றார்கள்..!!!
மோத விட்டு எம் வீரத்தை பார்க்க..!
மோதி வெற்றி வாகை சூட..!
வீறு இல்லை இந்த!
வீணர்களுக்கு...!!
நிர்வாணத்தை எத்தனை நாட்களுக்கு!
நின்று நின்று ரசிப்பாய்..??!
!
பொங்கி வரும் உதிரம்...!
பொத்தி இறுக்கும் எம் கரங்களால்,,!
பொறுமையாய் அடங்கி போகின்றது..!!!
கொப்பளிக்கும் கோபம்... !
அதரங்களை(உதடுகளை) துண்டிக்கும் - எம்!
கொலை வெறிப்பற்களின் நற நறப்பால்!
கொஞ்சம் தூரமாய் பயணிக்கின்றது..!!!
!
அரக்கர்களே..!!!
அதிகமாய் !
அடங்கி போக...!
அடிமைகள் இல்லை நாம்..!!
அடங்க மாட்டோம்... !
அதிக தினங்களுக்கு..!!
அதனால்..!
அப்புறமாகி போய் விடுவீர்..!!
அரவமின்றி(நிசப்தமாய்)...நீவிர்

வாழ்க்கை என்பது…

செண்பக ஜெகதீசன்
காதல் தோல்விகளும் !
கடன் தொல்லைகளும் !
கயிற்றை மாட்டவைக்கின்றன !
கழுத்தில்.. !
காலம் முடியுமுன்னே !
காலனை வரவைப்பது !
கையாலாகாத்தனமல்லவா.., !
ஊனம் உள்ளவன்கூட !
உயிர்வாழும்போது !
தானே உயிரை மாய்ப்பது !
தலைகுனிவல்லவா !
உன்னைப் படைத்தவனுக்கு.. ! !
விலைமதிப்பில்லா உயிரை !
விடைகொடுத்து அனுப்பவேண்டாம், !
கடமையைச் செய்தால் !
கலங்காது செய்தால்.. !
விலங்கல்ல வாழ்க்கை, !
விபரம் புரிந்தால் !
விலகும் திரைகள், !
இலகுவாய் வெற்றி !
இனிதாய் உனக்கு, !
இல்லைநேரம் சாவை நினைக்க.. !
வாழ்க்கை என்பது !
வாழ்ந்திடத்தானே…!!
காத்திருந்து… !
இந்த !
ஜன்னலோர ஜானகிகள் !
காத்திருக்கிறார்கள், !
வருவான் ராமன் !
வரதட்சணை வில்லை !
உடைப்பானென்று…! !
வரும் ராமர்களெல்லாம் !
தேடிக்கொண்டிருக்கிறார்கள் !
தங்க வில்லை…!!
--செண்பக ஜெகதீசன்…!
()

தலையைத் தொலைத்தவர்கள்

கே.பாலமுருகன்
மீண்டும் மீண்டும்!
தலையைத் தொலைத்தவர்களைத்தான்!
சந்திக்க நேர்கிறது!!
அவர்கள்!
தலைகளைத் தேடிக்!
கிளம்பியிருக்கிறார்கள்!!
போர் கத்தியின்!
முனைகளில்!
தலையைத் தொலைத்த!
போர் வீரன் போல!
பாசாங்கு செய்து கொண்டு!
தனக்கான தொலைந்த தலைக்கு!
முகமூடி போடுகிறார்கள்!!
அவர்களின் உடலெல்லாம்!
தலைகள் முளைத்துக் கொண்டு!
வருகின்றன!!
தற்செயலாக!
என் வீட்டு அலமாரியில்!
அவர்களுடைய!
தலைகள் வரிசையாக!
அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு!
வியக்கிறேன்!!
அவர்களுடைய!
தலைகள் பேசுகின்றன!!
அழுகின்றன!!
திரும்பிச் செல்ல!
மனமில்லாமல்!
முகத்தை மறைத்துக்!
கொள்கின்றன!!
தலையற்ற!
அந்த உடல் செய்த!
பாவத்திற்காக!
தலைகளைத் தண்டிக்க மறுத்து!
நான் சேகரித்த தலைகளை!
அலமாரியில் பத்திரப்படுத்துகிறேன்!!
கே.பாலமுருகன்!
மலேசியா

கவிதை! இன்பக்கவிதை

தமிழ் ராஜா
கவிதை ! இன்பக்கவிதை !!
கவிதை எழுத வருமா !!
என் மனது முழு அமைதி!
இன்று பெறுமா!!
சோர்வில் மிதந்து கிடக்கும்!
என்னுள்ளம் இன்ப குளியல் கொள்ளுமா!!
காற்று சுகமிருந்தால் உள்ளே!
சுவாசத் தடங்கலிருக்கு!
சுவாசம் ஒழுங்கடைந்தால்!
வெளியே காற்று அடங்கி இருக்கு !
மலர்ந்த கனவுக்கெல்லாம் என்!
மனம் வாடகை கேட்டிருக்கு!
இன்று மனமே வாடகையாய்!
கனவில் புழூங்கியிருக்கு..........!
தூக்கம் எனக்கிருந்தால்!
இப்படி ஏட்டில் கிறுக்கலில்லை!
ஏட்டில் கிறுக்குவதால் என்மனம்!
தூக்கம் கொண்டதில்லை !
துக்கம் எனக்கிருந்தால் அதை!
ஏட்டில் இறக்கியிருப்பேன்!
மன வாட்டம் போக்கியிருப்பேன்!
விழி தூக்கம் கொண்டிருப்பேன்!
துக்கமில்லை! தூக்கமில்லை!!
எதுவுமின்றி நான் சோர்ந்து கிடக்கிறேன்!
நெஞ்சம் வேர்த்துக் கிடக்கிறேன் !
கண்ணீர் கோர்த்து கிடக்கிறேன்!
கவிதையில் பூத்துக் கிடக்கிறேன்!
சோற்று பருக்கைத்தனை வாயில்!
போட்டுக் கொண்டப் பொழுது!
உழவன் வாட்டம் என் மனதில்!
தாக்கம் கொள்கிறதே!
வாழ்வு முழுவதிலும்!
மன புழுக்கம் எதுவுமின்றி !
வாழ நினைக்கையில்!
வருத்தம் வாசல் முன் வருதே!
தேடி திரிகையில் அன்பே!
முதலென முடிவும் தெரியுதே!
காத்துக் கிடக்கிறேன் அன்பினை!
சுவாசம் நுழைக்ககவே!!
அதில் இன்பம் தெரியவே!
ஏட்டில் கிறுக்கல் நிறையுதே!
சொல்ல நினைத்ததை ஏட்டில் !
கிறுக்கிப் பார்க்கிறேன்!
சோர்வு எனக்கிருந்தால் அதனுடனே!
கொட்டித் தீர்க்கிறேன்--!
நிறைவில் வருவதையே கவிதை !!
இன்பக்கவிதை! என்கிறேன்....... !
-- தமிழ் ராஜா