தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

துப்பாக்கிகுழல்களுக்குள்

ஈழநிதி
துப்பாக்கிகுழல்களுக்குள்!
குடியிருக்கின்றோம் நாங்கள்!
இன்றுவரைக்கும்!
அழுவதற்கும் சுவாசிப்பதற்கும் மட்டுமே !
அனுமதிதேவைப்படவில்லை.!
நாளையோ,மறுநாளோ!
காற்றையும் பரிசீலித்தே!
சுவாசிக்கவேண்டியிருக்கும்!
இதைப்போல அது அதைப்போல இது!
ஒன்றினுடாக இன்னொன்று!
இன்னொன்றினூடாக வேறொன்று!
அதுக்காக இது இதுக்காக அது!
எதுக்காக நாமென்று ஏதுமறியா நாளின்று!
காற்றினூடாக க் கடத்தல் !
தீயினூடாகத்திருட்டு !
அரசியலில் சமயம்!
சமயத்தினூடாகச் சாதீயம்!
சாதீயத்தினூடாக அரசியல்!
அரசியலால் அழித்தல்!
பக்தி பயமுறுத்தும் பயம் உயிர்கொல்லும் !
உயிரழிவில் பேய்மகிழும் !
பேய்களேகடவுளாகிவர பிரயத்தனப்படும், !
துப்பாக்கிகுழல்களுக்குள்!
நாங்கள் குடியிருக்கும்வரை

உன்னை நீ அறிவாய் !

ச இரவிச்சந்திரன்
உன்னை நீ அறிவாய் தோழா !
உன் உயரம் தெரியாதவரை !
சின்னஞ்சிறு மேடும் பெரு மலையே !
உயரம் அறிந்தவர்க்கோ !
பெருமலையுஞ் சிறுமேடே!
நீண்ட இரவின் இருள் கூட !
சிலமணித்துளிகளில் கலையும் போது !
உன் இயலாமை இருள்தானா மறையாது ?!
உன்னை பற்றி தெரிந்துகொள்ளாதவரை !
உலகின் கடைகோடியில் நீ !
உன் உயரம் தெரிந்துகொண்டால் !
உன் திறம் தெரிந்து கொண்டால்!
உலகம் உன் கைகளில் !
இருள் கிழிக்கும் பகலவனாய் !
இயலாமை இருள் அகற்றி வா !
உன் பார்வை!
வான் தாண்டியும் போகும் !
உன் விரல்கள் ஆதவனையும் உருட்டிவிடும் !
எழுந்து வா !
உன்னை எதிர்பார்த்து இந்த உலகம்!
உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறது !
உன் இமை திறப்பிற்காக !
ஒட்டு மொத்த மனித சமுதாயமே !
விழி முன் தவம் கிடக்கிறது!

அயல் பிரிதிபலிப்புகள்

ஸ்ரீமங்கை
இந்நடைபாதையில் !
கூவிக்க்கூவி கண்ணாடிகள் !
விற்பவனே! !
சிரிக்காதே.. !
நாங்கள் இப்படித்தான். !
ரசம் தேய்ந்த மூலைகளில் !
இறந்தகால பிம்பங்களைத் !
தேடும் எம்கண்கள். !
கண்ணாடியில் புழுதிபடிந்திருக்க !
சட்டங்களைத் துடைத்து வைப்போம் !
தன்முகம் கண்டதாக !
உண்மை எவரும் இதுவரை !
உரைத்ததில்லை. !
இருப்பினும் கண்ணாடிகளின் மேல் !
எமது மோகம் இன்னும் தீர்ந்தபாடில்லை. !
ஒருமுறையேனும் உன் கோணல் கண்ணாடியில் !
விகாரமாக மற்றவர் முகம் கண்டு சிரிக்கும் ஆசையில் !
உன்கடையருகே எத்தனை கூட்டம்? !
பண்டமாற்றாக கண்களையே !
கேட்கும் உன் விகார வியாபார !
தந்திரங்களில் அதிர்கிறேன். !
அன்றைய வியாபாரம் முடிந்ததும் !
உன்னுள்ளே நீ உரக்கப் பேசிய பேச்சென்ன? !
இருட்டியபின் முகம்பார்க்க எத்தனிக்கும் !
எம் முயற்சிகளை எள்ளிநகையாடினாய். !
காலக்காற்ரில் முகத்தில் படிந்த புழுதியை !
கண்ணாடியின் அழுக்கென !
குறைசொல்கிறோமென !
நீ கேலிசெய்தது நெருடுகிறது !
இனியும் என் வாசலில் !
கண்ணாடி விற்கக் கூவாதே. !
உன் கூவல்களில் நிரம்பி வழியும் !
என் செவிகளையும் எடுத்துச்செல் !
குருடனாக மட்டுமல்ல !
செவிடனாகவும் இருப்பதில் !
எனக்கு ஒரு கவலையும் இல்லை. !
அன்புடன் !
ஸ்ரீமங்கை !
கவிஞர் எண்: 90

க‌ன‌வே க‌லையாதே

ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்
இன்ப‌மான‌ ப‌ள்ளி நாட்க‌ள்!
இணைகின்ற‌ சிறு வ‌ய‌தின் ஆட்க‌ள்!
சிரிப்பொலியும் பேச்சொலியுமாய்!
இருந்த‌போது!
எங்கிருந்தோ வ‌ந்த‌!
பீர‌ங்கி தோட்டாக்க‌ள்!
ப‌ள்ளி சுவ‌ர்க‌ளை சுக்கு நூறாக்கிய‌து...!
கை கால் இழ‌ந்து த‌விக்கும்!
என் இன‌ குழ‌ந்தைக‌ளை!
நினைகும்போது!
குறுதி கொப்ப‌ளிக்கிற‌து!
இத‌ய‌த்தில்...!
தாயின் க‌ற்பை சூறையாடிவிட்டு!
த‌ந்தையையும் அடித்து!
இழுத்து சென்ற‌ கொடூற‌த்தை க‌ண்ட‌!
ம‌க‌னும்,ம‌க‌ளும்!
புத்த‌க‌ப் பையைத் தூக்கி எறிந்து விட்டு!
புல்ல‌ட்டுக‌ளை தூக்க‌ துணிந்த‌னர்!
விடுத‌லை புலிக‌ளாய்...!
இற‌ப்ப‌து ஒருமுறைதான்!
எப்ப‌டி இற‌ந்தோம் என்ப‌தை விட‌!
எத‌ற்காக‌ இற‌ந்த‌ம் என்ப‌தை!
வாழ்வின் கொள்கையாக‌க் கொண்ட‌!
த‌மிழ்நாட்டு ஈழ ஆத‌ர‌வாளர்க‌ள்!
போர் முழ‌க்க‌மிட்ட‌தால்!
ஈழத்தில் வெடிக்கும் போர் ஓய்ந்த‌து...!
ப‌ள்ளி,க‌ல்லூரிக‌ளும்!
ம‌ருத்துவ‌ ம‌னைக‌ளும்!
புதிதாய் முளைக்க‌ ஆர‌ம்பித‌ன்..!
சாதி,ம‌த‌ இன‌ பாகுபாடுகளை ம‌ற‌ந்து!
க‌ல‌ப்பு திரும‌ண‌ம் செய்து கொண்ட‌ன‌ர்!
க‌ண‌வ‌னை இழந்த‌ பெண்க‌ளுக்கு!
ம‌றுவாழ்வு கொடுத்த‌ன‌ர் இளைஞர்க‌ள்.!
அய‌ல்நாடுக‌ளில்!
அக‌தியாய் அவ‌திப‌ட்ட‌!
அனைத்து இன‌ ம‌க்க‌ளும்!
த‌மிழ் ஈழம் வ‌ந்து குவிந்த‌ன‌ர்...!
அனைத்து ந‌ட்டு நிறுப‌ர்க‌ளும்!
போட்டா போட்டி எடுக்க‌!
உல‌கத் த‌லைவர்க‌ளின்!
வாழ்த்துச்செய்தி!
வ‌ந்த‌ வ‌ண்ண‌மிருக்க‌!
ஈழ‌ விடுத‌லைக்காக‌!
த‌ன்னுயிரை இழ‌ந்த‌ மாவீரர்க‌ளுக்கு!
ஈழ ம‌க்க‌ளுட‌ன்!
வீர‌ வ‌ண‌க்க‌ம் செலுத்திவிட்டு!
ஆட்சி பீட‌த்தில் அம‌ர்ந்தார்!
ஈழ நாய‌க‌ன் பிர‌பாக‌ர‌ன்!
விடியும் போது நான் க‌ண்ட‌!
க‌ன‌வே க‌லையாதே....!
!
-ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்!
எட்டுப்புலிக்காடு

என்ன செய்ய.. குழந்தைக் கேள்விகள்

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
என்ன செய்ய.. குழந்தைக் கேள்விகள்.. முகமூடிக் கவிதைகள்.. புறக்கணிப்பு !
!
01!
என்ன செய்ய..?!
--------------------!
இன்ன பிற விஷயங்களென்றால்!
இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க!
பெண் காதல் காமம் என்றால்!
பெருக்கெடுத்து ஓடி வரும்!
இந்த கவிதை வரிகளை!
என்ன செய்ய?!
02!
குழந்தைக் கேள்விகள்..!!
----------------------------!
ஏன்!
வீடு திரும்ப வேண்டும்?!
ஏன்!
சக்கரங்கள் சுழல்கின்றன?!
ஏன்!
அம்மா வேலைக்கு போவதில்லை?!
எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்!
எல்லோரும் இத்தனை வாகனங்களில்?!
வளர்ந்த பின் தான்!
வேலைக்கு போகணுமா?!
சாலையோர பூனைகளுக்கு!
யார் சாதம் தருவா?!
குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை!
எப்போதும்!
குழந்தைகளின் கேள்விகள். !
03!
முகமூடிக் கவிதைகள்!
--------------------------- !
சூழல்கள் வேண்டும் முகங்களை!
சுலபமாய் தரிக்கும்!
இவனைப்போல்தானே இருக்கும்!
இவன் கவிதைகளும்.!
04!
புறக்கணிப்பு!
----------------- !
இவன் பற்றிய புறக்கணிப்பு!
இருக்கட்டும் ஒருபுறம்.!
இவர்களின் குழுச்சண்டையின்!
இடையில் சிக்கித் தவிப்பது!
இரண்டாயிரமாண்டு!
தமிழ்க்கவிதை அல்லவா?!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

பயனில்லை

A. தியாகராஜன்
இது என் கவிதையில்லை-!
இதனுள் என்னை அடையாளம் காணவேண்டி!
படிப்பதில் பயனில்லை-!
வாய் எது!
பேசுமுகமெது!
என்றறியா!
இருதலை மிருகம் போலவே!
இதுவும்-!
எனக்குத் தெரியாது!
எனவே நான் உள்ளேன்-!
எனக்குத் தெரிந்திருந்தால்!
நான்இங்கில்லை,!
இப்போது உங்களுடன்-!
ஆக!
நான் சொல்லுவது!
நீங்கள் கொடுத்ததுவே!
யாரோ சொன்னது போல!
(ஏன் ஒரு பெண்ணிடம்?!
ஏவாள் இல்லையேல்!
இரண்டாவது இல்லை என்பதாலா?!
ஏன் முதலும் கூடத்தானில்லை-!
நான் உண்டென்று சொல்ல!
நீ அவசியம் தானே!
ஆக!
நான் சொல்லுவது!
நீங்கள் கொடுத்ததுவே!
இதில் ஏதாவது!
நீங்கள் தராதது இருக்கிறதா-!
அப்பாவாகவோ, அம்மாவாகவோ!
நண்பனாகவோ, ஆசிரியராகவோ,!
எதுவாகவோ-!
எனக்குத் தெரியாது!
எனவே நான் சொல்லமுடியாது..!
ஆக!
இதைப் படிக்கவேண்டாம்!
இது என் கவிதை அல்ல-!
- A. தியாகராஜன்.!
-------------------------------!
A.Thiagarajan!
A-504 Dosti Aster!
Wadala East!
Mumbai 400 037

நிழல் வலி

சாமிசுரேஸ்
என்னுள் ஓர் நிலம் உருக்கொள்கிறது!
ஊமையாய் முறிந்து போன புற்களை!
மெல்லத் தடவி வார்த்தேன்!
பதுங்கித்திரிந்த மரங்களுக்கு இறகுகள் பொருத்தினேன்!
என் மூச்சை ஆழப்படுத்தி காற்றைப் பதியஞ் செய்தேன்!
கண்கள் விரியத்தொடங்கின!
இனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை!
யாரிடம் கேட்பது!
வாழ்வின் சுவடுகளில்லை!
ஒரு சமூகத்தின் பிறப்பை மூழ்கடித்த!
பிரளயம் அரங்கேறி முடிந்து!
மௌனமும் கதறலுமே எதிரொலியானது!
உயிர் மட்டும் துடித்து எரிகிறது!
மயான தேசத்தின் துர்நாற்றம் தீர!
இன்னும் எத்தனை ஆண்டுகள் கரையும்.!
கேள்விகளைக் கைப்பிடித்தபடி நகர்ந்துகொண்டிருக்கிறேன்!
நுகங்களால் நிலம் தோண்டிச் சுவாசித்தேன்!
ஏமாற்றங்களும் சந்தேகங்களும் கதறிக்கொண்டிருந்தன!
எம்மை நாமே புண்ணாக்குவதைத் தவிர யாதறியோம்!
உடலின் பாகங்களில் கலந்து நகரைப் பிரசவித்தேன்!
மேகங்கள் மழையைச் சொரிந்தன!
அழகிய பறவைகளின் வரவிற்காய்!
என் மனவெளியினுள் கூடுகட்டினேன்!
என் நிலம் வளரத்தொடங்கியது!
மனிதர்களை பிறப்பிப்பதற்காய் கருக்கொள்ளத்தொடங்கினேன்

அறிவியலும் முன்னேற்றமும்

தமிழ்நம்பி
ஒளிவிளக்கு மின்விசிறி ஓயாத கைப்பேசி!
ஒழிச்சல் இன்றி!
களிக்கஅழச் செய்யுதொலைக் காட்சியொடு சமைக்கபல!
கருவி கண்டோம்!!
குளிப்பதற்கு வெந்நீரும் குடிப்பதற்குக் குளிர்நீரும்!
கொடுப்ப தற்கும்!
எளிதாகப் பலகருவி எல்லாஊர் கடைகளிலும்!
இன்று உண்டே! !
உடனடியாய்க் கணக்கிடற்கு ஓர்கருவி! எதுகுறித்தும்!
உங்கள் ஐயம்!
உடனேயே தீர்த்திடற்கு உண்டுகணிப் பொறிமேலும்!
உழவு செய்ய!
நடவுநட கதிரறுக்க நன்றாய்நெல் பிரித்தெடுக்க!
நாட்டில் இன்று!
மடமடெனப் பலபொறிகள் மலிந்தனவே! மிகவிளைய!
மண்ணுக் கேற்ற!
பல்வேறு உரங்களொடு பயிர்கெடுக்கும் பலவகையாம்!
பூச்சி கொல்ல!
வல்லபல வேதிகளும் வகைவகையாம் நச்சுகளும்!
வந்த திங்கே!!
செல்லபல இடங்கட்கும் சிறப்பான விரைவூர்தி!
செய்துள் ளாரே!!
நல்லபல வசதிகளும் நாம்பெற்றோம் அறிவியலால்!
நன்மை யுற்றோம்!!
விண்வெளியில் திங்களிலே வேறுபல கோள்களிலே!
வியக்கும் வண்ணம்!
நுண்ணியபல் லாய்வுகளும் நொய்ப்பமுற செய்கின்றார்!
நோக்கில் ஒன்றி!!
எண்ணிலவாய் முன்னேற்றம் எழுந்துளது மருத்துவத்தில்!
எல்லா நோய்க்கும்!
ஒண்ணலுறும் மருந்துகளும் உருவாக்கி உள்ளநிலை!
உணர்ந்தே உள்ளோம்!!
இவ்வளவும் அறிவியலில் இனும்பலவும் முன்னேற்றம்!
இருந்தபோதும்!
செவ்வையிலாச் செயற்கையினால் சீர்குலைவால் நீர்காற்று!
செம்மை கெட்டும்!
ஒவ்வாத பல்வேறு உரங்களினால் மண்வளமும்!
ஒழிந்து போக!
நொவ்வுற்றோம்! அறிவியலை நொய்ம்மையிலா முன்னேற்ற!
நோக்கில் ஆள்வோம்

உடைந்த நட்சத்திரம்

ஆதி பார்த்தீபன்
அந்த !
இருள்தோய்ந்த!
நிலவொளியில் !
விட்டில்களை !
வதம் செய்யும் !
முடிவொன்றை எடுத்திருந்தாய்!
நான் ஜனநாயகம் !
என்பதை உணரா !
சர்வாதிகாரி -நீ !
எனக்கான!
சுதந்திரத்தை !
மறுத்திருந்தாய்!
நமக்கான !
இன்பக் குவளை!
நிரம்பியிருந்தது!
அதிஷ்டங்களை !
பருகிவிட்டு !
துரதிஷ்டங்களை !
விட்டுச்சென்றாய் !
குவளையையும் மிச்சம் !
வைக்கவில்லை நீ !
முத்தம் தருகையில் !
விசேடமாகத் தெரிந்த !
உன் உதடுகளில் !
விஷமம் தடவப் !
பட்டிருந்தது !
மீண்டும் -நடுவானில் !
அந்த !
உடைந்த நட்சத்திரங்கள் !
நமக்கான !
இடைவெளியை !
மின்னியபடி

தீர்ந்து போனது காதல்

பாண்டித்துரை
கவி ஆக்கம்: “பாண்டித்துரை”!
!
திருமணத்திற்க்கு முன்!
எப்போதும் - எனை!
சுற்றும் உன் கண்கள்!
ஆ, தலை வலிக்குது!
என்னடா ஆச்சு என்னை விட!
வலியை நீ உணருகிறாய்!!
மணிக்கணக்காய் பேசுகிறாய்!
மௌனமான என்னிடம்!
எனை பார்த்தபின் உன்விடியல்.!
தேடி வருகிறாய்!
புரியாத மொழி பேசி!
பிறக்கிறாய்!
புதிதாய் தினமும்!
நான்இ நீ என சொல்லி!
இருபத்திநான்கு மணி நேரத்தை!
தினமும் இரட்டிப்பு ஆக்குகிறாய்!
!
திருமணத்திற்க்கு பின்!
உன் கண்கள்!
எதையோ தேடுகிறது!
எனை தவிர்க்க ஓடுகிறது!
மௌனமாக இருக்கிறாய்!
ஆ, தலை வலிக்குது!
காதில் வாங்காதவனாய்!
கண்மூடி கனவு காண்கிறாய்!
தினமும் கோபப் பார்வை!
திராவயமாய் உன் வார்தைகள்!
கடமைக்காக நீ வாங்கிய மல்லி!
காய்ந்து போய் கட்டில்மேல்!
விடிவதும் தெரிவதில்லை!
நீ வீட்டில் இருப்பதும்....!
!
கவி ஆக்கம்: “பாண்டித்துரை”