தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நாம் நாமாக

றஞ்சினி
தயவு செய்து!
நாம் காதல் செய்வோம்!
என் உதடுகள் இரண்டும்!
உன் உதடுகளை முத்தமிட்டும்!
அடிவானம் கரைந்து மறையும் வரை!
நாம் திருப்தியுறாதவர்களாக!
எமக்காக!
இந்த உலகம் விரியட்டும்!
நீ!
என்னிடத்தில் இருக்கும்போது!
ஆணாக இராதே!
என்னை!
நீயாக மாற்ற முயலாதே!
நான் நானாகவும் நீ நீயாகவும்!
இருப்போம்!
எமக்கு இப்போது பலம்!
பற்றிய பிரச்சனை வேண்டாம்!
நான் பெண்!
ஆணின் பார்வையில்!
வெற்றிடங்களும் ஓட்டைகளும்!
நிறைந்தவள்!
நீ உன் ஆண்புத்தி ஜீவத்தால்!
என்னை நிரப்பி ஒட்டி சீர் செய்ய!
நினைக்காதே!
பின்!
எமது உதடுகள் இரண்டும் ஒட்டாது!
எமது காதல் இன்பம் பெறாது!
தயவுசெய்து நாம் காதல் செய்வோம்!
நாம் நாமாக இருந்து.!
!
நன்றி : இந்தியா டுடே

ஆதவன் வரவை

வல்வை சுஜேன்
பிறப்புக்குள் பிறப்பை வைத்து!
இறப்பில்லா ஈகை வளர்த்து!
ஊருக்கொரு வாசம் இன்றி!
உலகத் தமிழனுக்காய் உதித்தவனே!
நீ வாழி!
பரந்த உலகிற்கு விண்ணில் உதையவன்!
வருந்தும் தமிழர்க்கு நீயே சூரியன்!
உன் விழிகளிரண்டும் சிவக்கச் சிவக்க!
கதிரொளி கண்டோம் கானகத்தில் !
உன் வேழ்வி உபாச விரத நோண்பில்!
உலைக்களம் தணித்தோம் !
தமிழீழத்தில்!
புரட்ச்சிக் கனலின் ஊற்று நீ!
புதிய வார்ப்புகளின் சிறப்பி நீ!
எழுச்சி மலையின் உயர்ச்சி நீ!
தமிழீழ மலர்ச்சியின் !
தேசியத் தந்தை நீ !
நீ வாழும் காலமே எமது பொற்காலம்!
நீ தந்த வாகைகளே தமிழரின் !
முடி ஆட்ச்சி காலம்!
பிரபஞ்ச ஒளியே பிரபாகரா!
போற்றுகிறேன் உன்னை!
உனக்கு இன்று அகவை ஐம்பத்தாறு!
சுதந்திரச் சுடர் நீ நிரந்தர ஒளிகொடு!
வாகைகள் சூடி வாழ்வான் தமிழன்!
வையகத்தில் தனக்கொரு நாடெனும்!
தமிழீழத்தில்.!

திசைகளை அசைபோடுதல்

அ. விஜயபாரதி
நிழல்களை!
வெவ்வேறு பொழுதுகளில்!
எதிரெதிர்த்திசைகளில் வீழ்த்தும்!
கிழக்கும் மேற்கும்!
திசைகளைத் தொலைக்கும்!
உருமத்தின் சூரியன்!
சுயநிழல் சுமக்கச் செய்யும்!
தற்காலிகத்தின் கடிகாரத்தை!
கிழக்கு மேற்கை!
செங்கோணத்தின் திசையில் வெட்டிப் !
பறக்கும் பறவைகள் - அதிகாலை!
வடக்கின் கூடுகளிலிருந்து தெற்கிற்கு!
பெரும்பொழுதுகளில் முகில்களீனும்!
நிறமற்ற மழைத்துளிகள் !
அரிதாரம் பூசிக்கொள்ளும்!
தென்மேற்கையும் வடகிழக்கையும்!
இரவும் தன் முதுகில்!
பச்சை குத்தியிருக்கிறது!
பகலின் திசைகளை - இருப்பினும்!
திசைகள் எட்டல்ல இரண்டுதான்!
-அ. விஜயபாரதி!
அறை எண் - 53!
முதுநிலை மாணவர் இல்லம்!
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்!
மதுரை – 625 104

நீ வேண்டும்.. குறையாத‌ நேசம்

கா.ரமேஷ், பரமக்குடி
01.!
நீ வேண்டும்...!!
---------------------!
இரவு நேரத்து பவுர்ணமி போல்!
இதய தேசத்தில் நுழைந்தவளே...!
ஒற்றை அன்றில் பறவை என்னை!
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...!
வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் என‌க்கு!
வெளிச்ச புள்ளியாய் வ‌ந்த‌வ‌ளே.!
குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்!
கூடி நீ என்னோடு தவள வேண்டும்!
உன் வாய் ஒழுகும் சிறு உண‌வெடுத்து!
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...!
இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்!
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.!
என் வாழ்க்கை முடியும் வரை!
என்னில் பாதியாய் இல்லை!
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!!
02.!
குறையாத‌ நேசம்....!
----------------------!
கையளவு உணவைகூட‌!
கைகள் ஒன்றுகூடி!
களிப்போடு உண்டு முடித்து!
பசியை!
அன்பால் நிரப்பிக் கொள்ளும்!
அற்புதம் நிறைந்ததுதான் நட்பு...!
சில்லரைகள் பெருகிபோனதால்!
சேர்த்து வைத்த‌ நேசங்கள்!
சிதறுகின்ற போதும்!
கல்லரை சேரும்வரை கூட‌!
கைகோர்த்து வரும்!
கள்ளமில்லா நேசம்தான் நட்பு.... !
இன்பத்தை இரட்டிப்பாக்குவதும்!
இதயத்தை தித்திப்பாக்குவதும்!
துன்பத்தை துடைத்து போடுவதும்!
துயரங்களை சருகாக்குவதும்தான்!
தூய்மை கொண்ட நட்பு...!
தேவைகள் நிறைந்த‌!
வியாபார உலகத்தில் புதியதாய் பல‌!
பொய்கள் சொன்னாலும் - நட்பெனும்போது!
உண்மையை மட்டுமே!
உரக்கச் சொல்வது நட்பு...!
காலங்களின் சூழ்ச்சியில்!
கண்பார்க்க முடியாவிட்டாலும்!
உறவுகளின் நேச‌ சுழ‌ற்ச்சியில்!
உற‌வாட‌ முடியாம‌ல் போனாலும்!
இதய க‌ருவ‌ரையில்‍ எப்போதுமே!
இருக்கும் குழ‌ந்தைதான் ந‌ட்பு...!
நேற்று இன்று நாளை என‌!
நெடுந்தூரம் சென்றாலும்!
காற்று வாங்கி களைத்திருக்கும்!
கருமைமிகு வானம் க‌ளைந்தாலும்!
சேர்த்து வைத்த‌ உற‌வுக‌ள்!
சித‌றியே போனாலும் நமக்கு!
குறையென்று தெரிந்தால்!
கூடவே வரும் கோடி ந‌ட்புக‌ள்தான்!
என்றுமே நமக்கு குறையாத நேசம்

பூனையின் நிழல்

கருணாகரன்
நான் நினைக்கவில்லை!
ஒரு போதும்!
ஒரு பூனை இத்தனை கவர்ச்சியான தென்றும்!
இவ்வளவு பயங்கரமானதென்றும்!
என் படுக்கையில்!
அதன் உறக்கம்!
பன்னெடுங்கால அமைதியின்!
ஊற்றைப் பிரவாகித்தபடி இருந்தது.!
திகிலூட்டும் படியாக!
பூனையின் உறக்கத்தைக்!
காவல் காத்தவாறு!
ஒரு போர்ப்படையாக!
அதன் நகங்கள்!
வேட்டையின் ருசியையும்!
வெற்றியின் நம்பிக்கையும்!
உறுதிப்படுத்தியபடி!
பூனையின் குரலுக்கும்!
அதன் கண்களுக்கும்!
அதன் நடைக்கும்!
அதன் உறக்கத்துக்கும்!
ஏதேனும் தொட்ர்பிருக்கிறதா?!
கவர்ச்சியாயும்!
மிகப்பயங்கரமாயும்!
பூனை சுழன்று கொண்டிருக்கும்!
நிழலில்!
பூனையின் குரல்!
வன்மத்துக்கும் சினேகத்துமாக!
ஒலிக்கிறது!
அதன்!
உடுருவும் கண்களில்!
இன்னும் தீராதிருக்கிறது!
பசி!
!
-கருணாகரன்

கனிமொழி கவிதை

கனிமொழி
அப்பா சொன்னாரென !
பள்ளிக்குச் சென்றேன் !
தலைசீவினேன், சில !
நண்பர்களைத் தவிர்த்தேன், !
சட்டைபோட்டுக்கொண்டேன், !
பல்துலக்கினேன், வழிபட்டேன், !
கல்யாணம் கட்டிக்கொண்டேன், !
காத்திருக்கிறேன் !
என்முறை வருமென்று. !
-கனிமொழி !
நன்றி: கருவறை வாசனை

வலி நிறைத்துப்போன வித்யா

அக்மல் ஜஹான்
வித்யா..!
நாங்கள் பார்த்து கொண்டிருந்தோம்..!!
ஆத்மார்த்தமாய்!
வலித்து செல்லும்!
ஒருபெரிய நெருடலின் பின்னான!
வலி..!
எப்போதும் இடித்து கொண்டிருக்கிறது..!
நீ அழுதிருக்கக் கூடும்..!
அது வலிகளின் கடைசி வலியாக!
இருந்திருக்கக் கூடும்..!
மனிதனை தின்னும்!
தியரியில்!
நீ சோதனைப் பொருளானாய்..!
பாதங்கள் இல்லை..!
பாதைகள் இல்லை..!
பாதுகாப்பும் இல்லை..!
யுத்தம் தின்று!
துப்பிய வாழ்கையின்!
எல்லா புலம்பலும் தாண்டி!
உன் சித்திரம் சிதைந்து விட்டது...!
பதினெட்டு வருடங்கள்!
பத்திரப்படுத்திய!
வாழ்வின் மெல்லிய பொழுதுகள்..!
உலகத்துக்கு சொல்லாத!
உனது கனவுகள்...!
வகுப்பறைகளுக்கு மட்டுமே!
சொந்தமான வரலாறுகள்...!
புத்தகத்துக்கும் புது செருப்புக்குமான!
உன் வாழ்வுப்போராட்டங்கள்..!
எங்கிருந்து தொடங்கியது!
உனது அழிவின்!
அகரம்..?!
கடைசி நிமிடங்களில்!
வாழ்வின் மீதான அதீத விருப்புக்களை!
எப்படி துடைத்தழித்தாய்!
கண்மணீ...?!
ஆத்மார்த்தமாய்!
வலித்து செல்லும்!
ஒருபெரிய நெருடலின் பின்னான!
வலி..!
எப்போதும் இடித்து கொண்டிருக்கிறது..!!!
கிருசாந்தி முதல்!
உன் கடைசி எழுத்து வரை!
நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம்!
சலனங்களேதுமற்று....!!!

(இலங்கையில் அண்மையில் (2015) கொடூரமாய் படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி வித்யாவுக்காக....)!

காத்திருப்பு

அபூர்பக்கர்
ஒரு கமராக் காரனைப் போல்!
உன்னை பதிவு செய்து வைத்துள்ளேன்..!
என் சேமிப்பு பெட்டகம் முழுவதும்!
நீதானிருக்கிறாய்........!
ஒரு வாடகைக் கமராக்காரனைப் போல்!
ஒற்றைக் கண்ணால்!
உன் அழகை ரசிப்பதற்காய்!
வழி நெடுகிலும் விழி வைத்து காத்திருக்கிறேன்!
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்!
என் விழிகள் விம்முகின்றன..!
உனக்காய் காத்திருந்த வழிகள் இருளாகிப் போகின்றன........!
என் இதய அறைகளுக்குள்!
குடியேறிய உன்னை!
தங்கத் தட்டில் தாலாட்டி மகிழ!
ஒரு நகைக் கடையை தேடித் திரிகிறேன்..!
அந்த தங்கக் கடை தூரத்தில் வாடகைக்காய் காத்திருக்கிறது..!
அந்த இட வெளிக்குள் என் மனக் கோட்டையை தகர்ப்பாயா..!
அல்லது என்னை மறந்து!
இன்னுமொருவரின் இல்லறத்தை!
உன் தங்க மனதால் அலங்கரிப்பாயா.....?!
என் பெட்டிகள் முழுவதும்!
பட்டுச் சேலைகளால் நிரம்பியுள்ளன!
பூவாய் இருக்கும் உன்னை!
போர்த்திக் கொள்ள வண்ண வண்ண சேலைகள் காத்திருக்கின்றன!
சோலை வனமாய் மணம் பரப்பும் உன்னை!
ரசிப்பதற்காய் நான் வண்டாய் காத்திருப்பேன்.!
இப்படியெல்லாம் காத்திருக்கும் என்னை!
நீ பாலை வனமாய் மாறி!
சில நேரம் சுட்டெரிப்பாயோ!
என மனம் பதை பதைப்பதுமுண்டு......!
உன்னை என் மனதுக்குள் பதிவு செய்து!
ஒரு வாடகை கமராக் காரனைப் போல் காத்திருக்கிறேன்..!
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்!
என் விழிகள் விம்முகின்றன!
தற்காலிகமாய் வாடகைக் கமராக்காரனாய் மாறியுள்ள என்னை!
நிரந்தர வாடகை கமராக்காரனாய் !
வீதியெல்லாம் அலைய வைப்பாயோ.....?

நான்

நளாயினி
காதல் துய்த்து காதல் துய்த்து!
காதல் தோய்த்த பலாச்சுழையாகி!
உணர்வுகளை எல்லாம் ஒன்றாய்குவித்து!
காதல் நோயில் கிறங்கிக் கிடப்பேன்.!
கோபக்கனலை!
மென்று விழுங்கி!
என்னை நானே!
வதைத்துக்கொள்வேன்.!
போட்டி பொறாமை!
வஞ்சம் பொய்மை!
கணையாய் வந்தால்!
போதி மரத்துப் புத்தனாவேன்.!
அன்புச் சிறையுள்!
என்னைப் பூட்டி!
அணுவணுவாய்!
ரசித்து மகிழ்வேன்.!
விடுதலை உணர்வை!
மென்று தின்று!
மனிதநேயம்!
வளர்த்துக்கொள்வேன்.!
தனிமைச்சுவரை!
எனக்குள் அமைத்து!
கிழமைக்கணக்காய்!
அழுது சிரிப்பேன்.!
மௌனம் மௌனம்!
நன்றே என்று!
மாயச் சிறையுள்!
புகுந்து கொள்வேன்.!
மழையில் நனைந்து!
பனியில் உறைந்து!
உணர்வுகள் சாக!
மரத்துக்கிடப்பேன்.!
நிலத்தில் நீந்தி!
நீரில் நடந்து!
வெற்றிப் படிகள்!
ஏறிமகிழ்வேன்.!
காதல் நோய் என்னை வதைத்து!
வெறுமை என்னை துரத்தம் போது!
கழுவில் ஏற்றி என்னை மாய்த்து!
மீண்டும் மீண்டும் புதிதாய்ப் பிறப்பேன்.!
நளாயினி தாமரைச்செல்வன்!
சுவிஸ்.!
11-2-2007

ஏனிந்த வஞ்சனை.. படைகள் இல்லாத

கிரிகாசன்
(இலங்கையில் அகதிகள் முகாம் என்ற பெயரில் முள்வேலி நாற்புறமும்!
போட்டு துப்பாக்கி பிடித்த இராணுவக் காவல்சிறைக்குள்ளே இருக்கும் !
ஒரு தமிழ் சிறுவன் பாடுகிறான்)!
!
01.!
ஏனிந்த வஞ்சனை இறைவா?!
----------------------------------- !
ஏனிந்த வஞ்சனை இறைவா?!
சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே - உன்னை!
கட்டிவைத்து கால்விலங்கு போட்டவர் உண்டோ!
நெற்றிமீது பொட்டுபோன்ற வட்ட நிலாவே - உன்னை!
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ!
சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே - எம்மை!
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே!
விட்டுஇதை வெளியில் சென்று கத்திகூவியே!
நாமும்பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே!
வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டுமாமாவே!
வாழ்க்கைஎன்ன வென்றுசற்று சொல்லி போங்களே!
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே!
விட்டது யார் வெளியிலென்று சொல்லிதாங்களே!
எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே - உங்கள்!
செட்டைதன்னை எங்குபெற்றீர் எனக்கும் தாங்களே!
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் - இந்த!
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்!
கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை!
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை!
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது!
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது!
இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கு இன்பம்!
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்!
குடிகெடுத்து பார்ப்பதிந்த கயவருக் கின்பம்!
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த துன்பம்!
மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்!
மாலைகாலை என்றுவெளியில் மேயச் செய்கிறார்!
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும் அன்றி!
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்!
அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்!
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே!
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்!
பார்த்துஇந்த பாலன்தந்த சேதி சொல்லுவீர்!
கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்!
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்!
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்!
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?!
விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்!
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ!
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள்இன்றியே!
போனபோக்கில் உலகைசெய்து சுழலவிட்டாயோ!
தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு!
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா!
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் - உன்!
உடல்முழுக்க பரவிஇந்த மோசம் செய்ததோ!
!
02.!
படைகள் இல்லாத ஊரொன்று வேண்டும்!
-----------------------------------------------!
(இராணுவக் காவல்சிறைக்குள்ளே இருக்கும் ஒரு தமிழ் இளைஞன் பாடுகிறான்)!
படைகள் இல்லாத ஊரொன்று வேண்டும்!
இலைமீது தழுவி குளிரோடு இழைந்து!
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை!
அலையாது நில்லு எனக்கூறி வேலி!
தடைபோட்டு மறித்தாரும் இல்லை!
கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்!
கடல்மீது ஒருவேலி கட்டி!
உருளாதே என்று ஒருநீதி கண்டு!
தடுத்தாரும் எங்கணுமில்லை!
மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து!
உலகோட சுழன்றோடும் நிலவே!
கருவானில் யாரும் கரம்நீட்டி உன்னை!
சிறை போட்டு கொண்டதோ சொல்லு!
ஒருபாவம் அறியா தமிழான என்னை!
ஓடாதே என்று கால்கட்டி!
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து!
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு!
விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி!
எனவாகிப் பறந்தோட வேண்டும்!
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்!
முழுதான சுதந்திரம் வேண்டும்!
குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு!
புவிமிது உலவிடும் வண்டும்!
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்!
காண்கின்ற அகிலமே வேண்டும்!
ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்!
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்!
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்!
நிற்காத ஊரொன்று வேண்டும்!
வயலோரம் சென்று கதிர்நீவி நின்று!
பயமின்றி மகிழ்தாட வேண்டும்!
இரவாகி வந்தும் எழிலான மங்கை!
தனியாக அகம் திரும்பவேண்டும்!
தருவார்கள் என்று தனிஈழ அரசு!
அமைகின்ற திசைநோக்கி நின்றோம்!
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு!
விடியாதோ என் ஏங்கி நின்றோம்!
உலைபோன அரிசி சோறாகி எங்கள்!
இலைமீது விழுகின்ற வரையில்!
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று!
பிணமாகா விதிஒன்று வேண்டும்