தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வழிகாட்டி

மின்னல் இளவரசன்
அறிவுக்கு நூலகமும்!
ஆக்கத்திற்கு உழைப்பும்!
உயர்வுக்கு உள்ளமும்!
என்றென்றும் வழிகாட்டிகள்.!
அன்று அண்ணல் காந்தி!
அஹிம்சைக்கு வழிகாட்டி!
இன்று அறிவற்ற மதவாதி!
ஹிம்சைக்கு வழிகாட்டி!
அன்று கண்கள் சொன்னது!
காதலுக்கு நான்தான்!
வழிகாட்டியென்று!
இன்று காதல் சொன்னது!
கண்ணீருக்கும் அதே கண்கள்தான்!
வழிகாட்டியதென்று!
சுதந்திரம் வழிகாட்டியானது!
ஜனநாயகத்திற்கு!
அரசியல்வாதி சொன்னான்!
ஜனநாயகம் வழிகாட்டியது!
என் பண நாயகத்தக்கு!
வெளிச்சத்தை இருட்டும்!
இருட்டை வெளிச்சமும்!
ஓன்றையொன்று தொடர்கிறது!
காலமெல்லாம் வழிகாட்டியாக!
ஆதிமுதல்!
அந்தம் வரை!
அறிவுதான் வழிகாட்டி!
பகுத்தறிவுதான்

எல்லை.. ஒலிக்காத ஒலி

தஸ்லீமா நஸ் ரீன்
எல்லை!
-----------!
பிரக்ஞைக்கு திரும்பியதும்!
உலகை பார்க்க, நுகர, !
உணர, கேட்க வேண்டி !
வாசலைக் கடக்கையில்!
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள்!
இந்தச் சுவர்களே உனது வெளி!
இந்த மேற்கூரை உனது வானம்!
இங்கே, சலனமற்ற மதிய வேளையில்!
இந்தத் தலையணைகள்!
இந்த வாசமிகு சோப்!
இந்த டால்கம் பவுடர்!
இந்த வெங்காயங்கள்!
இந்த ஜாடி, இந்த ஊசி!
மற்றும் இந்த நூல்!
மற்றும் பூ வேலைபாடுடை!
தலையணை உறைகள்!
இவைகள்தான் உனது வாழ்க்கை!
அடுத்தப் பக்கத்தில் !
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை!
எங்ஙனம் பார்ப்பது?!
பின்கேட்டை திறந்து கொண்டு !
போகும் அவள் !
போகாதே என தடுக்கப் படுகிறாள்.!
தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள்!
இந்த கீரையை, இந்த கொடியை!
அடிக்கடி கவனித்துக் கொள்!
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை!
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை!
இந்த தூய்மையான பசுமை பரப்பை!
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை!
இந்த மணம் வீசும் மண்ணை!
இவையணைத்தும் தான் !
உனது உலகம்.!
-----------------------!
ஒலிக்காத ஒலி!
!
எத்தனையோ பொருட்கள் ஒலிக்கின்றன!
உடலின் செல்கள்,!
நடனமாடுகையில் கொலுசுமணிகள்!
மணிக்கட்டில் வெள்ளி வளைகள்!
ஜன்னலில் மழைத்துளி விழவே!
தாளத்தோடு ஒலிக்கும் கண்ணாடிக் கதவுகள்!
மேகத்துடன் மேகம் மோதுகையில்!
மின்னல் ஒலிக்கிறது!
கனவுகள் ஒலிக்கிறது!
அவைகளின் தாள் நேரத்தையும் கவனிக்கிறது!
உள்ளுக்குள் அதிர்வேற்படுத்தும்!
தனிமை ஒலிக்கிறது!
எனது வீட்டில்!
பொறுத்தப் பட்டிருக்கும்!
அழைப்பு மணியைத் தவிர !
எல்லாம் ஒலிக்கிறது.!
------------------!
மொழிபெயர்ப்பு மதியழகன் சுப்பையா

நினைவுப்பூக்கள்

க.அருணபாரதி
க.அருணபாரதி!
வானத்தில் சிறகடிக்கும்!
நட்சத்திர பூக்களாக!
வாழ்வில் பூக்கின்றன!
நினைவுப்பூக்கள்...!
வாசம் மட்டுமல்ல!
அதில் தேனும் !
கண்ணீராய் இருக்கும்..!
பாசக்கரங்கள் தொட்டால்!
மெல்ல அத்தேனை!
சுரக்கும்...!
வாசம் உணரும்!
போதெல்லாம்!
மனம் இறந்து!
பிறக்கும்..!
மாசங்கள் கடந்தும்கூட!
மனசெல்லாம் !
வாடாமல் சிரிக்கும்..!
பூக்களின் புன்னகை!
பார்த்து நம் மனதும்!
அதனுடன் போகும்...!
தீக்கிரை ஆக்கினாலும்!
அதன் நினைவுகள்!
சருகாய் சாகும்..!
நீருற்றி வளர்க்காமல்!
விட்டாலும் - அது!
தான்தோன்றித் தனமாக!
வளரும்..!
வேறினை பிடுங்க !
நினைத்தால் - அது!
முள்ளாய் கைகளில்!
மிளிரும்..!
-----------------------------------------------------------!
பாதையை தேடாதே.. உருவாக்கு !
- புரட்சியாளர் லெனின் -!
-----------------------------!
தோழமையுடன்

அழுக்குக் குறிப்புகள்!

மன்னார் அமுதன்
கிழிசல் உடைகள்!
வெட்டாத நகங்கள்!
மூக்கு முடிகளென!
எங்கும் அழுக்கு!
பெருவிருட்சத்தின் !
விழுதுகளாய்!
தொங்கிக் கிடக்கிறது !
சடையும் தாடியும்!
வெட்டப்பட்ட விரல்கள்!
சீழ் வடியும் புண்களென!
நெளிந்து கிடக்கிறது!
அவன் அன்றாடம்!
குடலைக் குமட்டும்!
அழுக்குகளின் !
திரட்சியாய் அவன்..!
விலகிக் !
கடந்து செல்கையில்!
அழுக்காகி விடுகிறது மனசு!
காவிப்பல் தெரிய !
நட்பாய் சிரிக்கையில் !
அழகாகிவிடுகிறான் அவன்...!

என் பாவம் கடவுளுக்கு

ரசிகவ் ஞானியார்
ப்!
பிடித்திருக்கிறது!
----------------------------------!
நான் பாவப்பட்டவனா?!
புனிதப்பட்டவனா?!
புனிதங்களின் பாவத்தோற்றம்!
உன்!
உணர்வுப்பிழையே!
உனக்குப் பாவம்!
எனக்குப் புனிதம்!
பாவத்தின் சம்பளம்!
என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்!
ஒவ்வொரு குளியலும்!
என்னை புனிதமாக்கிவிடும்!
மெல்ல ஊடுருவும்!
பேய்களோடும் சிலநேரம்!
போராடவேண்டியதிருக்கின்றது!
என்னை பாவம் செய்யவிடாமல்!
பாவம் செய்துவிடாதே!
என் பாவம் கடவுளுக்குப்!
பிடித்திருக்கிறது!
!
- ரசிகவ் ஞானியார்

பரிதவிப்பு .. எச்சரிக்கை

கல்முனையான்
பரிதவிப்பு .. எச்சரிக்கை !
01.!
பரிதவிப்பு !
---------------!
காமத்தின் ருசி அறியா காரிகையை!
கல்யாணம் என்று சொல்லி அவசரமாய் மணமுடித்து!
அஞ்சாறு நாளிலேயே அமெரிக்கா!
போய்விட்டான் ஆறாத வடுவுடனே !
அவனுக்கும் அவளுக்கும் இப்போது!
தொலை பேசியில்தான் தாம்பத்யம்!
காலை எழுந்தவுடன் உள் வீட்டு கூரை பார்த்து!
ஏக்கத்துடன் பெரு மூச்சில் இவள். !
சாப்பிட மனமில்லை எதற்கு சமைக்க!
அவள் உள் மனம் பேசுகிறது!
சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டான் ஆசாமி!
ரெண்டு வருஷம் காத்திருக்கணுமே... !
வெளியிலே சிரித்துக் கொண்டு!
உள்ளுக்குள் அழுகிறாள் இம் மாது!
இவளின் உணர்வுகளை எங்கோ சாக்குப்பையினுள்!
ஒளித்துவிட்டு ஒட்டடை அடிக்கிறாள் வீட்டுக்கு.. !
பாவம் அவள் பரிதாபம் அவள் உணர்வுகள்!
சந்தோசம்,அன்பு,பாசம் எல்லாமே!
வெறும் நான்கு சுவருக்குள்ளே!
நர்த்தனம் ஆடுகிறது நிர்வானத்துடன்...!
!
02.!
எச்சரிக்கை !
----------------!
கண்ணிலே கருணையும்!
வாயிலே அன்பையும் கொண்டு!
இதயத்தை பரிமாறவென்று!
ஒரு கூட்டம் புறப்பட்டு விட்டது... !
கவனமாய் இருங்கள்...!
உங்கள் இதயத்தையும் வாடகைக்கு!
வாங்குவதற்கு வரலாம்!
சொல்லி அனுப்புங்கள் அவர்களை!
இங்கே இதயம் இத்துப் போய்விட்டது என்று.. !
சில வேளை சிரிப்பார்கள் அவர்கள்!
உங்களை நல்லவர் என்பார்கள்!
நீங்கள் ஏழு கொலைகள் செய்திருந்தாலும்..!
நம்பாதீர்கள் அவர்களை!
உங்களை தின்று உணர்வுகளை துப்பி விடுவார்கள். !
உங்கள் இதய அறைகளில்!
பன்னீர் நிறப்புவார்கள் முழுமையாக!
ஆறேழு மாதங்களின் பின்!
அவைகள் வற்றிவிடும் அந்த!
முரண்பாடுகள் என்ற வெப்பத்தால்.. !
ஆதலினால் அன்பானவர்களே!
வேண்டாம் என்று சொல்லுங்கள்!
உங்கள் இதயத்தை கொடுக்காதீர்கள்!
கொடுத்து விட்டால் கெடுத்துவிடும்!
உங்கள் மூளையை ஹா ஹா என்னைப்போல்

சிதைவுகள்

சூர்யா
பானை உடைந்து !
சுடுபருக்கைகளாய் சிதறுகின்றன.!
யோசனைக்கு உவப்பாயும்!
காயங்களுக்கு களிம்புமாயுமில்லை.!
வியர்த்தமாய் காத்திருந்த விளைநிலங்களை !
விழுங்குகின்றன தரிசுகள்.!
முகம் மறைத்து வெக்கை கொட்டுகின்றன!
தோட்டத்து சூரியகாந்திகளும்.!
உண்டதும் உமிழ்ந்ததும்!
அவிழ்ந்ததும், அவிழாததுமானவைகளுக்கு!
அடையாள்ம் தேவையற்றதாகிறது!
குப்பைக்குவியலில்

விண்ணும் மண்ணும்

வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன்!
விரிந்து கிடக்குமிந்த விசும்பு!
ஓர் உளவியல் நிபுணரைப் போல்!
பலருக்கு அறிவுரை பகரும் அதிசயத்தினைப்!
பார்த்து ஒவ்வொரு முறையும்!
அதிசயித்துப் போகின்றேன்.!
'வானத்தைப் போல்.....'!
அப்பொழுதெல்லாம் இவ்விதம் நான்!
எனக்குள்ளேயே அடிக்கடி கூறிக்!
கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சியில்!
பூரித்துப் போகின்றேன்.!
இவ்விதமான வேளைகளில் ஒரு மாபெரும்!
நூலகத்தினைப் போல் இந்த வானம்!
எவ்வளவு விடயங்களைத் தன்னுள்!
தாங்கி வைத்திருக்கின்றதென்பதை!
உணர்ந்து கொள்கின்றேன்.!
கற்பதற்கெவ்வளவு உள.!
கற்பதற்கெவ்வளவு உள.!
காலவெளி நூலகத்தில்தான்!
கற்பதற்கெவ்வளவு உள.!
அளவுகளுக்குள்ளிருந்து!
ஆகாயம் பார்க்கும் மண்பார்த்து!
அப்பொழுதெல்லாம் இந்தவான்!
தனக்குள் நகைத்துக் கொள்ளுமோ!!
அப்பொழுதெல்லாம் கீழ்க்கண்டவாறு!
நினைத்துக் கொள்வேன்:!
'படைகளுக்குள்ளோரிருப்பு! மேலும்!
படையெடுப்பெதற்கு?'!
ஆகாயத்தின் இயல்புகளில் சில:!
அகலம்! விரிவு!!
அவை கூறும் பொருளெம்!
அகம் உணர்தல் சாத்தியமா?!
'அகத்தின் விரிவில், அகலத்தில்!
மண்ணிலின்பம்! அட மானுடரே!'!
தன்னியல்பினுள் விடைபொத்தி வைத்திருக்கும்!
விசும்பு மண்ணின் கேள்விகள்!
அனைத்துக்கும்.!
விண்ணிலிருந்து மண்!
கற்பதற்கு நிறைய உள.!
கற்பதற்கு நிறைய உள

சொந்தங்களிடமான சொந்தம்

மு. பழனியப்பன்
சொந்தங்கள் எரிச்சலைத் தருகின்றன !
விசயம் கேட்கும் காதுகள் !
கூர்ந்து நோக்கும் கண்கள் !
எப்போது சிரிக்கலாம் என நம் !
சருக்கலை எதிர்பார்த்து நிற்கும் குரோத மனம் !
தான் மட்டுமே உயர்வு !
மற்று எவர் செய்தாலும் சரியே இல்லை !
எனப் பேசும் பொறமைக் குணம் !
இவர்களை நம்பி செய்யாமல் இருக்கவும் !
முடியாது !
செய்தும் தொலைக்க முடியாது !
என்ன செய்வது !
இவர்களுடான பந்தம் !
பாதியில் நின்றுவிடக் கூடாதே !
சொல்லியும் சொல்லாமலும் !
விசேஷத்தை முடித்துவிட்டோம் !
இனி அவர்கள் விசேஷம் வரும் !
அதுபோது நாம் வைத்துக் கொள்வோம்

மாலியனின் கவிதைகள்

மாலியன்
ஏழையின் தேர்தல் நாள் !
“ வாக்குரிமையை எண்ணி மகிழ்ந்தது !
ஏழை மனம் !
தேர்தல் நாளில் றேசன் காட்டாய் வாக்குச் !
சீட்டு ” !
!
3-92 India !
!
ஏழ்மை !
!
“ சூரியகிழவன் தனது முதிர்ந்த கரங்களால் !
இருளைக் கிழித்து, காற்றை முகர்ந்தது !
பரந்த உலகில் - ஆங்கோர் தாயின் சாபம் ஏற்ற !
வண்ணம், !
என்றும் அவள் இரவையே வேண்டுகின்றாள்: !
ஆம், அவள் குழந்தைகள் பசியை மறந்து !
உறங்கும் என்பதற்காக ” !
1-93 - India !
!
அசைவு !
!
“அசைவுகள் அசைவின்றி !
அசைந்த வண்ணம் !
பிரபஞ்ச வெளிகளில் ” !
!
1992 !
!
இறப்பு !
!
“மனித நகர்வின் படிப்படி வளர்ச்சிகளின் !
இயக்கக் கட்டுப்பாடு !
ஆயினும் ஆன்மாவின் சிறை !
மீட்புப் போலும் ” !
1992 !
!
புகலிடம் !
“ இலையுதிர் காலத்து பறவைகள் போலே !
புகழிடம் தேடிபறந்தவர்கள் நாஙகள் - !
ஆயினும் புகலிடம் என்பது அடிமைத்தனம் !
போலும், !
ஏனெனில் சிறைக்கதவுகளும் அடைக்கலம் !
கொடுத்தன! ” !
!
5-3-1992