தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பணமும் ! குணமும்

க‌வித்தோழன்
பணமும்! குணமும்!!!
-----------------------------!
மனிதனிடமிருந்து!
பணத்தைப் பிரிப்பது குணம்!
குணத்தைப் பிரிப்பது பணம்!
உலகில்!
மதங்கள் ஆயிரம்!
ஜாதிகள் கோடியென உலவினும்!
சமுதாயத்தில் மனிதன்!
ஏழை பணமுடையான் எனும் !
இருவகையில் தான்!
பார்க்கப்படுகிறான்!
தன் இருப்பிடத்தில்!
மகிழ்வையும் மதிப்பையும் கொடுப்பதன்றி!
வேற்றொரு குணமில்லை பணத்திற்கு!
அதைக் கொண்ட மனிதன் தான்!
தீ வைத்துத்கொள்கிறான்!
தன் குணத்திற்கு!
இரத்தச் சொந்தங்கள்!
பால்ய நண்பர்கள்!
யாவரும் விலகிடுவர்!
பணம் கொண்ட நேரத்தில்!
ஆணவம் கொண்ட மனிதனை விட்டு !
பணம்!
சில மனிதரின் மனதை!
கொடை உள்ளமாய் மாற்றுகிறது !
பல மனிதரின் மனதில்!
கோடையாய் அவர் குணத்தை!
வற்றவைக்கிறது!
பொதுநலவாதி கூட!
சுயநலவியாதி பிடித்து அலைவார்!
பணத்தை அவர் மணந்துகொன்டால்!
பணம் மாற்றுகிறதா குணத்தை?!
இல்லை!
குணம் மாறுகிறதா பணத்தால்?!
இவ்விடை தெரியா வினவுகள்!
உலகில் உலவுகின்றன !
இன்றும் கொடை மன மனிதர்கள் !
சில‌ர் வாழ்ந்து கொண்டிருப்பதால்! !
உலகில் யாரும் தினம்!
பார்க்க போவதில்லை பணம்!
மனிதருக்கு மிக முக்கியம்!
நல்ல குணத்தோடு ஓர் மனம்

அது ஒரு கனா காலம்

பாரதிமோகன்
இன்னொரு பிறவி எடுப்பார்கள் இவர்கள்..!!
பட்டடினி அறிந்து!
பசி உணர்ந்து!
பரி தவிப்பதற்காகவே!
இன்னொரு பிறவி எடுப்பார்கள்!
பகலென்றும் இரவென்றும் காணாது!
போராடி பொடி பொடியாய்!
சேர்த்ததெல்லாம்!
பசிக்கும் வயிற்றுக்கு போக!
வெற்று கையில்!
விரலே மிச்சமென்று!
ஜென்மம் முழுக்க!
ஏங்கி தவித்திருப்பார்கள்!
கொளுத்தும் வெயிலோ!
கொட்டும் மழையோ!
உழைத்துக் களைத்தாலும்!
மிச்சம் தேடி…!
உறக்கம் அறியாது!
உயிர்த்திருப்பார்கள்…!!
ஒரு நாள் வலி கொண்டு!
விழி துடித்து!
துயில் கொள்ளும் போது…!
கனவு வந்து நினைவுபடுத்தும்!
முன் ஜென்மத்து நிகழ்வுகள்…!
அரசு ஊதியம்!
வெட்டி அரட்டை!
அதிகார தோரனை!
இவற்றுக்கிடையே..!
ஆயிரமாயிரம் சலுகைகளோடு!
எட்டிப்பார்த்த பணி…!
மிச்சப்பட்டது!
கேள்வி குறியோடு!
இன்னொரு பிறவியில்…

சிறுமீனாய்

கிண்ணியா பாயிஸா அலி
நீலப்பச்சையாய் நீளப்பரவிய!
பசுமைகளின் ஆழங்களூடே!
உலோகக் கலவைகளின் குழம்புகள் குமிழியிட !
மிகப் பாந்தமாய் சுழல்கிற பந்துகளிடையே !
தீப்பாறைகளின் இறுக்கங்களுக்குள் !
சில்லெனும் குளிரோடை மறைத்தபடி அனல் சொரிகிறாய்!
எரிந்து பிடித் தூசாவோமெனப் பயந்தொதுங்குமிவர்!
கால்தடம் விலக்கி விலக்கிப் பயணப்படுகிறேன்.!
கிரகங்கள் தனித்தியங்கத் தொடங்கு முன்பான!
ஆதிக்கனலில்!
இழை திரித்து சிறகு முடித்தே!
காலத்தைச் சுருட்டிக் கைப்பைக்குள் புதைத்தபடி!
ஏழுபூமி ஏழுவானம்!
தாண்டித் தாண்டிப் பறக்கிறேன் !
ஒளிந்திருக்குமக் குளிரோடைக்குள்!
செட்டைகள் விறைக்க விறைக்க நீந்திக் களித்தபடி !
என்றென்றைக்குமா யதில்!
தங்கிவிடத் துடிக்குமொரு சிறுமீனாய்

சாக்கடை

தென்றல்.இரா.சம்பத்
எனது பேனாமுனையை!
சுத்தம் செய்து!
பத்திரமாய் எடுத்துச்சென்றேன்..!
சமுதாயத்தைச் சாடி!
கவி எழுதச் சொன்ன !
கவியரங்கத்திற்கு....!!
எழுத அரம்பித்த !
சற்று வினாடியில்!
சாக்கடை வாசம்!
அரங்கமெங்கும்...!!
அதனால்!
எழுந்து வந்தேன்!
எழுதச்சொன்ன இடத்திலிருந்து...!
ஆனாலும்!
சாக்கடை வாசம்மட்டும்-என்!
சட்டைப்பையில் ஒட்டியிருந்தது!
என் பேனாமுனையை!
மீண்டும்-நான்!
சுத்தம் செய்யாததால்.!

புள்ளடி.. பல முயற்சித்து..முதன் முதலாய்

முல்லை அமுதன்
01.!
புள்ளடி!
இட்டுவிட்டோம் என்பதற்காக!
அங்கீகரித்ததாய்!
அர்த்தம் இல்லை..!
நீலம் அல்லது பச்சை..!
வலிகள் ஒன்றுதான்...!
உனகுள்!
நாங்கள்!
உன்னிடம்!
பிச்சைப்பாத்திரம் !
ஏந்தி வந்திருப்பதாய்..!
தவறு..!
புள்ளடி இடும் !
விரல்களே!
விசைகள் அழுத்தும் நாட்களாய்!
அந் நாளில் இருந்தது..!
மீண்டும்!
உருவாகாமல்!
பார்த்துக்கொள்..!
தாங்கமாட்டீர்கள்..!
ரணங்கள்!
ஒவ்வொன்றாய் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன..!
02.!
பல முயற்சித்து!
இன்று ஒருவாறாக!
என் தற்கொலை நடந்தேறியது!!
அறையைப் பூட்டி யாருக்கும்!
அசுமாத்தம் தெரியாமல்!
என்னை நானே !
கொலை செய்தேன்..!
கொலை!
என்றாலே!
நடுங்கும்!
என்னிடம்!
இப்படி!
ஒரு ஆசை..!
பல தடவை!
தவறிப்போயினும்!
சாத்தியமாக்கினேன்..!
நாலு !
நாட்கள் கழித்தே!
காவல்படை!
வந்து!
கைது செய்தது..!
குற்றப்பத்திரிகை!
தாக்கல் செய்யமுன்னரே!
நையப்புடைத்தனர்..!
ஏன் செத்துதொலைத்தாய் என்று..!
கறுப்பு!
மீசைக்கார அதிகாரி முறுக்கி!
நின்றான்..!
அங்காங்கே!
சாராய நெடி..!
பெண்களின் முனகல்...!
இவனை!
எப்படி மீண்டும்!
கொல்லலாம்..!
ஆலோசித்தனர்..!
மனித உரிமை மீறல்!
சட்டத்தின் கீழும்!
வழக்கைப் பதிவு செய்தனர்..!
எனி என்ன!
செய்வது?!
எனித் தற்கொலை செய்யமாட்டேன்!
என்று கதறலாமோ?!
அவன் -!
ஓங்கி அறைந்த போது தவறி வீழ்ந்தேன்...!
கனவின் எரிச்சல் தீரவில்லை..!
03.!
முதன் முதலாய்!
தன் வறுமை மறந்து!
அம்மா!
மிட்டாய் வாங்கித் தந்தது !
இன்றே என ஞாபகம்.!
அக்கா விமான சாகசம்!
பார்க்க கூட்டிசென்றதும் ஞாபகம்.!
வளர..வளர!
சித்தப்பா!
லெனின் பற்றியும்,!
மார்க்ஸ் பற்றியும்!
சொல்ல ஆரம்பித்ததும் ஞாபகம்.!
தலைமையாசிரியர் முன்னால்!
தலைகுனிந்து நின்ற போது கேட்டாரே!
களிசானுக்குள்!
குண்டா வைத்திருக்கிறாய் என..!
அப்போதும் சொல்ல வறுமையே விடவில்லை...!
கல்லூரிக் கீதம் முடிந்ததும்!
மேடையில் செருப்பணிந்து !
வரவில்லை என முழங்காலில் !
நிற்கவைத்ததும் ஞாபகம்.!
சித்தப்பா!
அறிமுகம் செய்த நண்பனும்!
கைக்குண்டு பற்றியும் சொன்னான்!
கூடவே,!
சுதந்திரம் பற்றியும் சொல்லிப்போனான்.!
இடையில்!
சந்தேகத்தின் பேரில்!
கைது செய்யப்பட்ட அக்காவும்!
திரும்பி வரவேயில்லை...!
சித்தப்பா!
தலை மறைவு வாழ்க்கையையே !
கடைசிவரை வாழ்ந்தார்.!
அப்பா!
சுதந்திரன் வாசகராகவும்,!
அரசியல்!
ரசிகராகவும் இருந்தே இறந்து போனார்..!
தேவாலயத்துள் விழுந்த ஷெல் !
மகன் மீதும் விழுந்ததை!
இன்றுவரை மறக்கமுடியவில்லை...!
வடக்கெனவும்,கிழக்கெனவும்,தெற்கெனவும்!
இனைத்தும்,பிரித்தும்!
பேசியவர்கள் இன்றுவரை விடைதரவே இல்லை...!
எல்லையில்!
நின்ற தோழனை!
தலைப்பாவுடனும்,தாடியுடனும்!
வந்தவனே கொன்றான்...!
இன்றும்!
மேடையேறி!
அரசியல் நடத்துவோரும்,யாசகம் செய்வோரும்!
அதிகரித்தனரே அன்றி!
எது சுதந்திரம் என்று !
உண்மையை உரைப்பவர்கள் !
யாரும் இல்லை..!
!
04.!
அப்பாவின்!
மரணம்!
என்னை உலுப்பிவிட்டிருந்தது.!
யார் யாரோ வந்தார்கள்.!
போனார்கள்.!
கூட்டமாய்!
பெண்கள் அழுதனர்...!
ஆண்கள் அப்பா!
பற்றிய கதைகளை!
தங்களுக்குள்!
பேசிக்கொண்டனர்.!
தலைவிரி கோலமாய்!
அம்மா!
அழுதுகொண்டிருப்பது !
துல்லியமாய் தெரிந்தது.!
அப்பாவின் மரணம்!
நிகழ்ந்திருக்கக்கூடாது.!
ஆனா !
சொல்லித்தந்த விரல்கள்...!
அடிக்காடி!
தலையில்!
வைத்து!
நல்லாய் இரு !
என்கிற கைகள்..!
கட்டியணைத்த படி!
தூங்குகையில்!
நெஞ்சின் மயிர்க்காட்டை!
துளாவியபடி!
தூங்கிப்போகிற சுகம்...!
கதைகள் பல!
சொல்லி!
நல்லவளாய் இரு!
என்று சொல்லி!
மகிழும் அவரின்!
புன்னகைத்த முகம்...!
கணக்கில்!
எப்போது!
கேள்வி கேட்டாலும்!
அமைதியாய் சொல்லித்தரும்!
அப்பாவின்!
மரணம் !
நிகழ்ந்திருக்கக்கூடாது.!
ருதுவான போது!
கைகளில்!
அள்ளி!
என் மகள்!
என்று சந்தோசித்த பொழுதுகள்...!
நிறையவே பிடிக்கும்...!
அவரின் நெருக்கம்!
எனி...!
யாரோ இருவரின்!
சண்டையில்!
குறுக்கே வந்த!
அப்பாவின்!
கழுத்தை!
பதம் !
பார்த்த அந்த!
யாரோவின் கத்தி!
என் அப்பாவை!
மரணமாக்கியது..!
என் அப்பா!
எனக்கு வேண்டும்..!
யாரும்!
அண்ணனாகலாம்..!
யாரும்!
யாருமாகலாம்.!
அப்பா..!
என் அப்பா

தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்

கே.பாலமுருகன்
10வயதில்!
தேவாலயத்தின் வாசலில்!
அடிக்கடி நின்று!
மேரி மாதா சிலையை!
வெறித்துவிட்டுப் போவேன்!
மேரி மாதா!
ஆசிர்வதிப்பாள்!
எனக்கே எனக்கு மட்டும்!
கேட்கும்படியாக!
மாலையில்!
மீண்டும் தேவாலயத்தின் பக்கமாக!
போய் நின்று கொள்வேன்!
மேரி மாதாவின் !
முகத்தில் !
வெயில் இறங்கியிருக்கும்!
மரங்களைத் திட்டிக் கொண்டே!
நடக்கத் துவங்குவேன் வீட்டிற்கு. . . !
அருகிலிருந்தும்!
சருகுகளைக் கஞ்சத்தனமாக!
வைத்துக் கொண்டு!
மாதாவின் முகத்தில்!
வெயில் படர!
இந்த மரங்கள்!
என்ன செய்துக் கொண்டுருக்கின்றன?!
சருகுகள்!
கட்டிப் போட்டாற் போல!
மரத்தில் உதிர்ப்பதற்கு!
உத்தரவின்றி!
காத்திருக்கின்றன!!
இந்த மரங்களுக்கு!
அப்படியென்ன கஞ்சத்தனம்?!
மாதாவின் முகத்தில்!
வெயிலை அப்படியே விட்டுவிட்டு!!
கே.பாலமுருகன்!
மலேசியா

வருகிறபோது வரட்டும்

நண்பன்
சாத்திய கழிவறையினுள் !
சிகரெட் புகைத்தாயிற்று - !
ரகசியமாக. !
குடுவை நிறைய !
மசாலா டீயும் ரெடி... !
மெல்லிய இசையும் !
படர்ந்து இழைகிறது... !
எல்லா விளக்குகளும் !
அணைக்கப்பட்டு விட்டது !
கூடவே மனிதர்களும் தான்... !
கணிணி திரையும் !
ஒளிர்ந்து !
காத்திருக்கிறது. !
இனி எழுத வேண்டியது தான் !
பாக்கி... !
எழுத்துகளை !
வார்த்தைகளை !
வாக்கியங்களை... !
கவிதை !
வருகிறபோது வரட்டும்........... !
- நண்பன். !
நன்றி:

நாளைய நட்சத்திரங்கள்

இமாம்.கவுஸ் மொய்தீன்
அன்று....!
தலையைப் படிய வாரி!
எண்ணெய் முகத்தில் வடிய!
சீருடை முழுதாயணிந்து!
சுமக்க முடியாமல்!
புத்தக மூட்டையைச் சுமந்து!
கூட்ட நெரிசலிலும் இடிபாடுகளிலும்!
சிக்கித் தவித்துப்!
பேருந்தில் பயணம் செய்து!
பள்ளிக்குச் சென்றபோது!
பரிகாசம் பேசியோருண்டு!!
பரிதாபம் கொண்டோருண்டு!!
விமர்சித்தோரும் பலருண்டு!!
இன்று....!
படிப்பு முடிந்துவிட்டது!
பட்டம் பெற்றாகிவிட்டது!
பணியும் கிடைத்துவிட்டது!
கை நிறையச் சம்பளம்!
வளங்கள் வசதிகள்!
வாகனங்கள் ஏவலாட்களென!
சொந்த வாழ்வில்....!
என்னுடன் புத்தகம் சுமந்த பலரும்!
என்னைப் போன்றே!
வசதிகள் வளமுடன்....!
பணிக்குச் செல்லும் நேரம்!
பள்ளிக்குச் செல்வோரைப்!
பார்க்கிறேன்!!
முதுகில் புத்தக மூட்டை....!
அதில் புத்தகங்களுடன்!
அவரவரின் எதிர்காலம்!
பெற்றோரின் கனவுகள்!
கற்பனைகள் உழைப்பு!
நம்பிக்கையென அனைத்தையும்!
சுமந்து செல்லும் சிறார்கள்!!
இதயம் பூரிக்கிறது!
நம் நாட்டின்!
நாளைய மன்னர்களைக்!
காண்கையில்!!
இன்று நாம் ஒளிர்வதைப் போல்!
நாளை ஒளிர இருக்கும்!
இந்தியாவின்!
நம்பிக்கை நட்சத்திரங்கள்!!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

துணை

ஆ.முத்துராமலிங்கம்
ஆதியில் அன்பு போதித்தாலும்!
அதன் பின் அடுப்பெரிக்கவோ!
அல்லது நடுநிலைப்பள்ளி!
வாத்தியார்களின் கையில்!
பிரம்பாகவோ போய்விட்டன!
போதிமரங்கள்.!
பாழடைந்த கோயிலின் உடைந்த!
இடுக்குகளுக்குள் அடைப்பட்டுக்!
கிடக்கும் ஆயிரமாயிரமாண்டு!
ரகசியங்களைப்போல்!
உண்மைகள் யாவும் குண்டடிப்பட்டு!
உடலெங்கிலும் கேலிச்சித்திரமென!
ஊமையாய் படிந்துக் கிடக்கின்றன.!
தூரத்து வெடிச்சத்தம் கேட்டு!
கலைந்து பறக்கும் மரக்கிளைப்!
பறவையின் மனநிலையில் கழிகின்றன!
நாட்கள்,!
!
நாரைகள் வந்தமரும்!
குளங்களும் வற்றி போய்விடினில்!
தேரையன குழிக்குள் அமிழ்ந்து!
உயிர் மீட்ட பழகிக்கொள்ளுதல் சித்தம்.!
!
நாளைய விடியல் சாத்தியமற்றவை!
என்றாலும் இவ்விரவை கடக்க!
நட்ச்சத்திரங்கள் துணையுண்டு

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

கவி.செங்குட்டுவன், ஊத்தங்கரை
மக்களின்மனதில் மாற்றம்தனைக் கொண்டுவரவே!
மாற்றங்களின் மூலமே வாழ்க்கையின்!
ஏற்றங்களை கற்றுத்தரவே புதிதாய்பிறக்கும்!
விக்ருதிஆண்டே வருகநீ ஏற்றம்பல தருகநீ!!
கல்லாமை கடன்வறுமை இல்லாமையாகிட!
எல்லாமும் வழங்கியே ஏற்றம்தந்திட!
நல்லார்மட்டுமே இவ்வுலகில் நடைபயில!
நல்லாசிகள் வழங்கிடவே வருகநீ!!
அப்பழுக்கற்ற அரசியல்வாதிகள் அரசாள!
அனைவரும் போற்றும் அதிகாரிகள் வழிகாட்ட!
அனைத்துலக நாடுகளில் நம்பெருமை நிலைநாட்ட!
சித்திரைத் திருநாளே வருகநீ!!
கணினிஉலக யுத்தத்தில் எனதினிய!
கனித்தமிழும் காலூன்றி கோலோச்ச!
கண்ணிமைக்கும் பொழுதினிலே உலகமெலாம்!
கற்கண்டு வாழ்த்துகூறவே வருகநீ