தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தசம் ரசம்

நீச்சல்காரன்
[லிமரைக்கூ] !
வறுமையால் கல்லைக்கட்டி !
விழுந்தப் பின் தெரிந்தது !
கிணற்றுக்குள் தங்கக்கட்டி!
ரேஷன் அரிசி விலை சரிவு!
மூட்டைக் கடத்துபவர்கள்!
வாழ்வு இனி உயர்வு.!
வேற்றுமையில் ஒற்றுமை கொஞ்சம்!
எங்கு சென்றாலும் இந்தியாவில்!
புரிந்துகொள்ளும் ஒரே மொழி லஞ்சம்!
சந்தோசமாக விலங்குகள் சரணாலயம்!
பார்வையாளர்கள் குறைந்ததால் !
வருத்தத்துடன் மனிதரின் முதியோராலயம்!
எங்கள் சார்பாக அனுப்பினார்கள்!
பதினேழு கோரிக்கைகள்.!
எங்கள் சார்பாகவே அமுக்கினார்கள்.!
பட்டுடுத்தும் அந்தக் குழுக்கள் !
ஆடையைப் பிச்சை வாங்குமிடம் !
அம்மண பட்டுப் புழுக்கள் !
மழைநீரை சேமிப்போம்!
மண்தரையை மாசாக்கி!
இப்பதாகையை மட்டும் காமிப்போம்!
குழந்தைகளுக்கு மூச்சு சிக்கும்!
காரணம் எரிக்கப்படும்!
பிளாஸ்டிக் விஷத்தை கக்கும்!
இழக்கவில்லை எந்தவொரு சேதாரம்!
மீனவர்களை எண்ணிப்பாருங்கள் !
யாருமில்லை உயிருடன் ஆதாரம்

மாதே

வண்ணைவளவன்
இது தெரிந்தவனுக்கு!
அதுதெரிவதில்லை!
அது தெரிந்ததவனுக்கு!
இது தெரிவதில்லை!
முன் தெரிந்ததவனுக்கு!
பின் தெரிவதில்லை!
பின் தெரிந்ததவனுக்கு!
முன் தெரிவதில்லை!
எல்லாம் தெரிந்ததவனுக்கு!
எதுவுமே தெரியவில்லை!
எதுவும் தெரிந்தவனுக்கும்!
எல்லாம் தெரிவதில்லை!
இங்கே!
புத்திசாலி என்று!
யாரும் இல்லை!
முட்டாள் என்றும்!
எவருமே இல்லை மாதே

நதிபாய்ந்த தடம் நோக்கி

ந.பரணீதரன்
நதிபோல பாய்ந்து !
கரையின்றி தவித்த நாட்கள் !
கடல் கண்டபின்னாளும் !
நதி பாய்ந்த தடம் நோக்கி !
கண்ணீர் விட்ட நாட்கள் !
எத்தனை எத்தனையோ ? !
புதிய உறவிற்காய் !
பழையவற்றை விலக்கிய நாட்கள் !
புதிய உறவே புதிரான போது !
பழையவற்றை எண்ணி வேதனித்த நாட்கள் !
அன்று புரிந்திருந்தும் புரியமனமில்லை !
இன்று அது வேதனிக்கின்றுது !
அம்மா தந்த இறுதி முத்தத்தை !
இன்றும் எண்ணியெண்ணி !
விழிவழி நீரால் பூமி கழுவுகின்றேன் !
முகமறியாதவன் பாசம் கொட்டுகின்றான் !
பாவி மனதோ தாயன்பிற்காய் !
என்னைப்போல் எத்தனை எத்தனை !
பிரிவு என்பது நரகசுகம் !
கவிஞன் சொல்லிவிடலாம் !
அனுபவிக்க முடியாது பிரிவு !
என்பது விசம் சிறுக சிறுக !
எம்மை தின்றே கொண்றுவிடும் !
!
- ந.பரணீதரன்

காதல் வரலாறு

தென்றல்.இரா.சம்பத்
1. காதல் வரலாறு!
-----------------!
உலகின் !
எந்தக் காதலிலும்!
கர்வப்பட ஏதுமில்லை...!
ஆண் பெண்ணை ஏமாற்றுவது..!
பெண் ஆணை அலையவிடுவது..!
அதனால்!
அவளோ,அவனோ !
உயிரைவிடுவது!
இதுதானே வரலாறு...!
கடந்த காலத்தின் காதல்!
தோல்வியில் துவண்டிருக்கலாம்!
அல்லது!
கண்ணீரால் கரைந்திருக்கலாம்!
இதுதானே வரலாறு...!
இப்போது!
இருபாலுக்கும்!
காதலின் நாகரீகம்!
கனிசமாய் மாறியிருக்கிறது!
காமம் ஒரு!
கவர்ச்சிப் பொருளாய்!
புகுந்திருக்கிறது..!
காதலைச்சொன்ன !
கருவிழிக்குள் இப்போது!
காமமும் !
கலந்து கிடக்கிறது!
கடந்த காலத்தில்!
இதயத்தில் சுமந்து!
அழுதவருண்டு..!
இப்போது வயிற்றில் சுமந்து!
அழிப்பவரே உண்டு !!
அழுபவரும் உண்டு !!
காதலின் நாகரீகம் !
புதியதாய் இருக்கலாம்!
ஆனால் வரலாறு ஒன்றுதான்...!
- தென்றல்.இரா.சம்பத் ஈரோடு-2

ஏய் மனிதா

எதிக்கா
தத்தித்திரிந்த பருவம் போதுமினி!
உனக்காக படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில்!
கால் தடம் பதித்து மெதுவாய் நடைபழகு!
நேற்றுவரை நீ ஒரு ஏமாளி!
சுய சிந்தனை அற்ற முட்டாள்!
மனித வாழ்க்கையை அலட்சியம் செய்த!
ஓரு ஞானி!
எதுவாக நீ இருந்திருந்தாலும் பறவாயில்லை!
வேகமாய் விடிந்து கொண்டிருக்கும் இந்த!
விஞ்ஞான உலகத்திற்கு ஒப்பாய் நீயும்!
ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவா!!
பிறந்தோம்!
வாழ்க்கையை நன்றாய் ருசித்து!
வாலிபப் பருவத்தை ஓட்டி முடித்தோம்!
துணையொன்று தேடி இனிதாய்!
இல்லறம் நடத்தினோம்!
குடும்பத்தை விஸ்தரித்தோம்!
குறையேதும் இல்லாத நிறைவான வாழ்வு!
என மிகவும் பெருமையாய்ப் பேசி!
மரணித்தவர்களைப் பார்..!
கடைசியில் என்ன?!
மண்ணோடு மண்ணாய்!
உளுத்துப் போய்விட்டார்கள்!
பறவாயில்லை!
மாண்டபின்னாவது இவர்கள் மண்ணேடு நல்ல!
உரமாய்ப் போனார்கள் - ஆனால் நீ!
மாண்ட பின்பும் பிரயோஐனமற்றுப் போவாய்!
நவீன முறையில் மின்சாரம் பாய்ச்சியல்லோ!
உன் வெற்றுடலை அழித்துவிடுவார்கள்!
ஒரு பிடி சாம்பலாய்!
பின்பு நீ..!
மண்ணுக்கும் உதவாய்!
அதனால் தான் சொல்கிறேன்!
குறுகிய வட்டத்தில் தத்தி நடந்தது போதும்!
விடிந்துகொண்டிருக்கும் இவ்வுலகிற்குள்!
உன் பங்கு தொடர மெல்ல நடந்து வா!
உன்னால் முடிந்ததொன்றை அழகாய்!
இந்த பூமிக்காய் சித்தரித்துவிடு!
அது போதும்

வேரை நோக்கிய‌

ராம்ப்ரசாத், சென்னை
வேரை நோக்கிய‌ ப‌ய‌ண‌ம்.. !
வேரை நோக்கிய‌ ப‌ய‌ண‌ம்!
---------------------------------!
பூவொன்றின் காம்பை!
ஊடுறுவி வேரை நோக்கி!
பயணிக்கும் வாய்ப்பு!
கிட்டியது...!
பாலின சமத்துவத்தின் ஈரத்தில்!
அது மண்ணை முட்டிக்!
கொண்டிருந்தது...!
மண்ணோ முட்டும் !
வேரைச் சுற்றி!
இறுகிக்கொண்டிருந்தது...!
நான் இளகிய சேற்று நீரில்!
என் தின்மையை!
சோதித்துக்கொண்டிருந்தேன்

தமிழ் வாழ்த்து

பாண்டூ
கத்துங்கடல் ஒத்த முதிர்வினை !
முத்துமணி சிந்தும் எழிலினை !
பெற்றதொரு செம்மைத் திருமொழி - தமிழ்வாழ்க !
குள்ளமுனி கொஞ்சி மகிழ்ந்ததும் !
நல்லபல சங்கம் வளர்த்ததும் !
சொல்லிலுயா அன்னைத் தவமொழி - தமிழ்வாழ்க !
தக்கச்செறி வுற்ற இலக்கணம் !
மக்கள்வியந் திட்ட இலக்கியம் !
மிக்கதொரு நம்மின் உயிர்மொழி - தமிழ்வாழ்க !
சொட்டுஞ்சுவை கல்லைக் கரைத்திடும் !
கொட்டும்மழை உள்ளம் நிறைத்திடும் !
எட்டுத்திசை எங்கும் விரிந்தநல் - தமிழ்வாழ்க !
அங்கமதில் முற்றும் புதுமையும் !
சங்கமதில் கண்டச் செழுமையும் !
தங்கிவரும் எங்கள் திருமகள் - தமிழ்வாழ்க !
செப்பும்மொழி சற்றும் இதற்கொரு !
ஒப்புமிலை மற்ற அயல்மொழி !
மூப்புமிலா ஒற்றை முதுமொழி - தமிழ்வாழ்க !
அன்றுமுதல் இன்று வரையிலும் !
என்றுமுள இன்பக் கனிமொழி !
கன்னித்தமிழ் என்று விளங்கிடும் - தமிழ்வாழ்க !
பள்ளிதனில் கல்வி பயில்வதும் !
உள்ளதொரு எந்த அலுவலும் !
தௌ¢¢ளுதமிழ் தன்னில் கொணா¢ந்திட - தமிழோங்கும்! !
-- பாண்டூ ... !
சிவகாசி.
+91 98436-10020

பசி

பாரதிமோகன்
பிச்சை புகினும் புசி!
விடிந்தாலும்!
அடைந்தாலும்!
உண்டு உறங்கி!
எழுந்தாலும்....!
உண்கிறேன்.. உண்கிறேன்..!
பசியோடு நாளும் உண்கிறேன்..!
உண்டது செரித்து மீண்டும்!
பசிக்கும் வயிற்றுக்கு தேடி அலைந்து!
உண்கிறேன் ..!
இப்போது என்னோடு ..!
என் மனைவியும் பிள்ளைகளும்...!
அடங்காத பசிக்கு!
தீனி தேடி அலைந்தே ...!
தீர்ந்து போனது ..!
என் வாழ்நாள்!
என் பசி மட்டும்!
இன்னும் தீராமல்

தூங்காத நினைவுகள்

ஹயா ரூஹி, மாவனல்லை
மெல்லிய தாலாட்டாய்….!
விம்மி விம்மி!
வெளிவராது…!
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது!
பெருமூச்சு!!!!
விழி கீறி!
குபுக்கென வெளிவரப்பார்க்கும்!
நீர்த்துளி!
தணிக்கை செய்யப்படுகிறது!!!!
ஒட்ட வைத்த‌!
சிரிப்பு…!
உலர்த்தி!
வைத்த!
விழியோரங்கள்…!
என்ன!
வாழ்க்கை இது!!
இன்னும்!
ஏற‌ வேண்டிய‌!
இல‌க்குக‌ள்!
இத‌ய‌ம் பிராண்டும்!!!!
`நான்`!
என‌க்கில்லாத‌!
அவ‌ல‌ம்!
அவ‌சர‌மாய்!
நினைவுக்கு வ‌ரும்!!!!
என் நேற்றுக்க‌ள்….!
என் இன்றுக‌ள்….!
என் நாளைக‌ள்….!
யாரிடம்!
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???!
என்!
மெளனமே…!
என் செவிக‌ளுக்கு!
இரைச்சலாயிருக்கிற‌து!!!
இறைவா!!!
எனக்கேன்!
இத்த‌னை `சிற‌குக‌ள்`த‌ந்தாய்!
த‌ங்க‌க் கூண்டில்!
அடைத்து விட்டு???!
!
-ஹயா ரூஹி!
மாவனல்லை, இலங்கை

உள்வெளிப்பயணங்கள்.. தொலைந்து

ப.மதியழகன்
போன நிழலைத் தேடி!
01.!
உள்வெளிப்பயணங்கள் !
------------------------------!
வான்வெளியில் மேகங்களின்!
அணிவகுப்பைப் போன்றது!
மனதில் நினைவலைகள்!
உற்றுப் பார்த்தால்!
வெவ்வேறு உருவங்கள் புலப்படலாம்!
அம்முகில் கூட்டங்களில் !
கடிவாளமில்லாத புரவியென!
ஐம்புலன்கள், திசைக்கொன்றாய்!
மானிடனை இழுத்துச் சென்று!
சகதியில் அவனை விழவைத்து!
சுற்றத்தார் கைகொட்டிச் சிரிப்பதை!
சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும்!
மனப்பரப்பில் எரியும்!
ஆசையெனும் வேள்வித்தீயில்!
ஆகுதியாகும்!
விட்டில் பூச்சியைப் போல்!
மனித உடல்கள் !
காலைக் கதிரொளி!
பனிப்போர்வையை விலக்கியது!
பறவைகள் ‘கீச்’சென்று சத்தமிட்டு!
சிறகடித்துப் பறந்தன!
மாலையில வாடிப்போய்விடுமோமென்று!
வருத்தம் கொள்ளாமல்!
மலர்கள் மலர்ந்து நின்றன!
தென்றலின் பாடலை!
மரங்கள் தலையசைத்து!
ரசித்தன!
தான் கரையில் ஒதுக்கிய கிளிஞ்சல்களை!
வந்து பொறுக்கும் அரும்புகளைக் காண!
கடலலை காத்திருந்தது!
வைகறை மெளனத்தில் கீதம் பாட!
தேவக்குயில் ஓடோடி வந்துவிட்டது!
கருமேகத்தில் குமரக்கடவுளைக் கண்டது போல!
தோகை விரித்தாடியது மயில்!
வண்டுகள் அன்றுதான் முதல்முறையாக!
தேனை சுவைத்தது போன்று!
ரீங்காரமிட்டன!
புல்லிதழ்களின் மீது படிந்திருக்கும்!
பனித்துளி பிரியாவிடை பெற்றுச்சென்றது !
இன்றைய பொழுது!
நமக்கு இறைவன் அளித்தது!
இயற்கை அதனை நன்குணர்ந்துள்ளது!
மனித மனம் ஆதியிலிருந்தே அதனை!
மறந்து வந்துள்ளது. !
!
02.!
தொலைந்து போன நிழலைத் தேடி... !
----------------------------------------!
பால்யத்திலிருந்து!
எனைத் தொடர்ந்து வந்த நிழல்!
இன்று தொலைந்து போய்விட்டது! !
எனது பாதத்தடங்கள்!
கடந்துவந்த பாதையை உளவறிந்து!
எங்கு போய்ச் சொன்னதோ? !
உணவின்றி, நீரின்றி, காற்றின்றி கூட!
ஒருவன் இப்புவியில் வசிக்கலாம்!
நிழலின்றி இருக்கமுடியுமா? !
மற்றவர்களின்!
நிழல்களைப் பார்க்க நேரும்போதெல்லாம்!
விசாரிக்கிறேன்!
எனது நிழலின் நலத்தைப் பற்றி